துன்பத்தை நேசி
நண்பா
துன்பத்தை நேசி!
நண்பா
துன்பத்தை நேசி!
துவண்டு துயில்வதை விட்டு
தூவான வீதிக்கு
துள்ளி வா வெளியே!
வெள்ளிப்பந்து நிலவு கூட
தேய்ந்துதான் வளரும்!
இருளை நேசித்துப்பார்
வெயிலை நேசித்துப்பார்
நிழல் உனக்கு குடையாகும்!
மூச்சுவாங்க மேட்டில் ஏறிப்பார்
இறக்கம் உன்னை இளைப்பாற்றும்!
விழித்தவுடன் தேடாதே
வீழ்ந்து எழுந்தால் தான்
வெற்றி உனக்கு!
இன்பம் வெகுதூரமில்லை
நண்பா
இதோ தொடும் தொலைவில் தான்!!
அதற்கு முன்
துன்பத்தை நேசி
நண்பா
துன்பத்தை நேசி!!
அன்பன்
ப.மகேந்திரன்
4 comments:
தன்னம்பிக்கை கவிதை :)))
துன்பத்தை நேசித்தால் தொடர்ந்து கொண்டே இருக்கதா? துன்பம் :(
அன்பு நண்பர் சாய்
தங்களுக்கு முதலில் இனிய வணக்கம்.
துன்பத்தை நேசித்து அதை அனுபவித்த பின்னர்
நமக்கு அது பெரிய சுமையாக தெரிவதில்லை.
அதற்கு பின்னர் வரும் இன்பத்தை நாம்
குதூகலமாக அனுபவிக்கலாம்.
என்பதே என் கருத்து.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
துன்பம் நேசித்து வாழ்வை நேசிக்கச் சொல்லும் கவிதையின் புதுமை அழகு.
அன்பு தோழி கீதா
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
Post a Comment