Powered By Blogger

Monday, 3 December 2012

கல்வெட்டுக் காவியம்!!


ள்பாதி ஆடைபாதி
என்றார்கள்!
புரியாமல் விழித்தேன்!
அரையாடை மனிதன்
என்றார்கள்!
பொருள் விளங்காது தவித்தேன்!
என்னிரு விழிகளிலே
உன்பிம்பம் விழும் வரை!!றுமைக்கோடு என்பதற்கு
உன் குறுக்கெலும்புக் கோடுகளை
விழியேற்ற பின்தான்
அருஞ்சொற்பொருள் விளங்கிற்று!!ங்கிய சுத்தியலால்
ஓராயிரம் கற்கள் பிளந்தும்
உன் வாழ்நிலை மாறிட - அதன்
வெம்மை தாழ்ந்திட
காலம் கனியவில்லையோ?!!
னியுமென்று காத்திருந்து
கவளமுனக்கு இறங்கவில்லையோ?!
பணிகொடுத்த பண்பாளரும்
உன்னிலை ஏற்றிடுவேன் - என
பொய்யை மட்டுமே உரைத்த
வெள்ளை வேட்டி மைந்தர்களும்
நட்டாற்றில் விட்டனரோ??!!

றம் தவறியும்
அரசியல் பிழைத்தும்
கையூட்டுக் காசில்
கடைவாய் தெரிய
சிரித்தும் பிழைப்போர்கள்
உன் காலடியில் கிடக்கும்
கற்களின் தூசிக்கு
இணையாம் போ!!


ன் வாழ்நாள் மாறும்
ரு நாள்!
உன் சந்ததியினர்
படித்து வருவர்!
உன்னுடல் தந்த  உழைப்பையும்
உன் உயிர் தந்த தியாகத்தையும்
நீ வெட்டிய கற்களிலேயே
கல்வெட்டாய்
பதித்து வைப்பர்!!


அன்பன்
மகேந்திரன்

Wednesday, 28 November 2012

காதலால் கசிந்துருகி....!!!விழிகள் இரண்டும்
வியர்த்துப் போகின்றன
வயங்கு நகைபூக்கும்
விழுநிதியாம் உன்னழகை 
வியந்து நோக்கையிலே!!
 
 
யக்கமற்றுப் போன 
இதயத்தின் செல்கள் கூட 
இயல்பு நிலைமாறியதே - உன்
இறும்பூது வடிவினை
இவணம் காண்கையிலே!!
 

 


செயல் பூர்த்தி செய்யும் 
சுரைக் கரங்கள் இங்கே - உன்
சிலம்பும் அழகு கண்டு
சித்தம் தழுவிட
சிந்தையில் துடிக்கின்றதே!!
 
 
லந்த வெப்பக்காற்றினை 
விருப்பமின்றி சுவாசிக்கும் 
விரிந்த நாசியிங்கே - உன் 
வீறுசால்  சித்திரம் கண்டு 
வெண்குளிரென  நினைத்ததுவே!!
 
 
குளிர்காற்றின் வேகத்தில்
கொள்ளியின் இதம் தேடும்  
குருதியின் தன்மை கூட - உன்
கிளர்மிளிர் வடிவம் கண்டு
கொதிநிலை ஏகியதே!!
 
 
ஞர் என்னைத் தீண்டிடினும்
ஆரணங்கே உனைக்கண்டால்
அரந்தை கைவிடுத்து - என்றும்  
அளவிலாத ஆனந்தமதை
அவயமெங்கும் உணர்கின்றேன்!!
 
 
றுப்புகள் சோர்ந்திருக்கும்
உலர்ந்த பொழுதினிலே - உன் 
உருவகம் கண்டாலோ 
உக்க நிலையெனக்கு 
உச்சியில் நிலைகொள்ளும்!! 
 
 
ணம் தோறும் கணம் தோறும்
கவின்மிகு அழகுருவாய்
களிநடமிடும் மயிலுனை
கண்ணுற்று நோக்கிடுகையில்
காதலால்  கசிந்துருகுகிறேன்!!
 
 
முகிழ்ந்த மலராய்
மகிழ்ந்து விரிகின்றேன் 
மங்காத புகழ்கொண்ட
மதுரத்தேன் சுவைகொண்ட
மாதவமே உனைக்கண்டு!!

னத்த  வில்லினின்று - இன்பக்
கணையொன்று பாய்ந்ததுபோல்
களிநகை புரிகின்றேன்
கன்னித்தழிழே உனைக்கண்டு
கணமொன்று மீதமின்றி - உன்மேல்
காதலால் கசிந்துருகுகிறேன்!!!

 
 
 
சொல்லுக்கான பொருள் விளக்கம்:
==============================
 
விழுநிதி -------------------- சிறந்த செல்வம் 
வயங்கு --------------------- ஒளியுடைய  
இறும்பூது ------------------  வியப்பு (அல்லது) அதிசயம்
இவணம் -------------------   இங்கே
சுரை ------------------------   வலிவுடைய
சிலம்பும் ------------------   ஆரவாரிக்கும்
கடுங்கண் -----------------  கொடூரமான
வலந்த --------------------    பரவிய 
வீறுசால் -------------------  மதிப்பிற்கு உரிய
கிளர்மிளிர் ---------------    மிகுந்த ஒளியுடைய
அஞர் ------------------------  மனவருத்தம்
அரந்தை -------------------   வருந்துதல்
உக்க ------------------------  தெளிவு   
 
 
 
அன்பன்
மகேந்திரன் 

Saturday, 24 November 2012

விடியாமலா போய்விடும்!!


ணல்மேட்டில் நின்றிருந்து
மலைமுகட்டைப் பார்த்திருந்தேன்!
தலைதூக்கி நான்பார்த்து
கழுத்து சுளுக்கிப் போயிருந்தேன்!!

ங்கங்கே சிதறிப்போன
சின்னஞ்சிறு துகள்களை
முதுகிலே சுமந்த நான்
சிறுமரக்கட்டை ஏந்தியங்கே 
மலையேற துணிவுடன்!!


சிகரத்தில் ஏறத்துணிந்த 
சிற்றெறும்பு எனைப்பார்த்து
சிறுமதி கொண்டாயோ - என
ஏளனமாய் பார்த்தனர்
சுற்றத்துப் பெருமக்கள்!!


முடியும் என்பது - எனக்கு
விடியாமலா போய்விடும்!
முயற்சி என்பதை
முதுகெலும்பு வேர்த்திட
முகிலிறக்கி கொண்டுவந்தேன்!!


ம்பிக்கை எனும்
நயமான கருப்பொருளை
நடுநெஞ்சில் உருவேற்றி
நானூறு முறை சறுக்கி
நானும் முயன்றுவந்தேன்!!


தயத்தில் ஆரம்பித்தேன்
உச்சிப்பொழுதிலும் இயலவில்லை
உதயனன் நீயோ
அரூபமாகும் வேளையிலே
வடிவான முகடேறி
வாகைமாலை சூடிவிட்டேன்!!


அன்பன்
மகேந்திரன்

Thursday, 22 November 2012

சிற்றிறகு விரித்துவிடு !!


சிற்றலைகள் சிரித்திருக்கும்
சிற்றாற்றின் கரைதனிலே!
சிறப்பாக நடைபோடும்
சின்னஞ்சிறு பறவையே!!
 
 
ங்கே என்ன தேடுகிறாய்?
அலகினில் ஏந்திவந்த
இரை ஏதும் வீழ்ந்ததுவா?!
சிறுகூட்டின் சிற்றடுக்கிற்காய்
வெகுதூரம் தூக்கிவந்த
சிறுகுச்சி வீழ்ந்ததுவா?!!


தொலைத்த பொருளதை
தீர்க்கமாய் தேடுகிறாயோ? 
கொளுத்த மீன்கள் வருமென்று
கொடிநடை போடுகிறாயோ?!!


தேடல்கள் ஒருபோதும்
தேங்கி நிற்காது!
தொலைந்தது
தொலையட்டும்!
சிற்றிறகு விரித்துவிடு
சிட்டாகப் பறந்துவிடு!
அடுத்த நொடியின்
நம்பிக்கையை தேடிடு!!அன்பன்
மகேந்திரன்

Monday, 19 November 2012

சில்லறை தான் என் வாழ்க்கை!!சித்தாரக் கள்ளி போல 
சிரிச்சிருக்கும் வெங்காயத்த 
சந்தையில வாங்கிவந்தேன் 
சீமைத்துரை வாங்கிடத்தான்!!
 
 
சுங்குடிச் சீலைகட்டி
செவத்த தோல மேல்பரப்பி
சிவந்திருக்கும் தக்காளிய
உமக்காக வாங்கிவந்தேன்!!
 
 
தொண்டைத்தண்ணி வத்திப்போக
தொரதொரன்னு கூவினாத்தான்
எனக்குத் தொழில் ஆகுமின்னு
எண்ணத்தில வைச்சுக்கோய்யா!!
 

 


விற்றபின்னே வந்துவிழும்
சிலுசிலுன்னு சிரிச்சிருக்கும்
சில்லறை மட்டும்தானே
எனக்கு இங்கே வருமானம்!!
 
 
சில்லறை வியாபாரத்த
வந்தவனுக்கு தாரைவார்த்து
என் வயித்தில் அடிப்பதுதான்
உனக்கு இங்கே வேலையாய்யா!!
 
 
வியாபார நோக்கத்தில
வந்தவன் தான் ஆங்கிலேயன்!
வந்தவனோ குந்திகிட்டு
வக்கனையா இருந்த கதை
உனக்கு இங்கே தெரியாதாய்யா?!! 
அன்பன்
மகேந்திரன்

 

Saturday, 17 November 2012

தலைகீழ் விகிதங்கள்!!


னக்குள்ளே
வேர்விட்டு வளர்ந்த!
எனக்குள்ளே
வியாக்கியானம் செய்த!
எனக்குள்ளே
எனக்குத் தெரியாமலேயே
என்னை எடைபோட்டு
என் மதிப்பெண்ணை
உணர்த்திட்ட விகிதங்கள்!!

வியாக்கியானத்தின்
விவரிப்பு விளிம்பில்
நினைத்ததை தவிர்த்திட்டு!
எதையிங்கே செய்வித்தால்
நிழல்கூட தொடருமோ
அதையே செய்வித்தேன்!
கட்டவிழ்ந்து வந்த
காட்டாற்று உணர்வுகளை
மீண்டும் மீண்டும்
கட்டிப்போட்டு வைத்து!!

ன் உள் குணங்கள்
தடை நீக்கிடத் துடிக்க!
வீழ்ச்சி இல்லாத
வாழ்வின் நிகழ்விற்காய்!
விளக்கி வைத்த உணர்வுகளை
மேல்பரணில் போட்டு
மூட்டைகட்டிய பின்
என் ஆழமனது
மீறிடத் துடித்த
உணர்ச்சி அலைகளே!
இங்கே
தலைகீழ் விகிதங்களாய்!!


நிதர்சனத்தின்

நீட்சிப் போக்கில்
நாவறண்டு போனாலும்!
உள்ளோடிய உணர்வுகளை
எழுதிவைத்த காகிதங்கள்
நமத்துப் போனாலும்!
உணர்சிகளின்
பிம்பங்கள் இங்கே
நிதர்சனத்தினும் அழகாக!!


 


அன்பன்
மகேந்திரன் 


Wednesday, 14 November 2012

துடிப்பான புலியாட்டம்!!


ன்னனன்னே தான நன்னே

தான நன்னே நானே
தன தான நன்னே நானே
தன தானானே தானானே
தானனன்ன நானே!!

யிர்கொடுத்த தெய்வமய்யா
ஆறுமுகச் சாமி
எங்க ஆறுமுகச் சாமி!
தெண்டனிட்டு வணங்குகிறோம்
அருள்கொடுப்பாய் சாமி!!ந்திருக்கும் மக்களுக்கு
வணக்கம் பலகோடி
ஆமா வணக்கம் பல கோடி
வந்தவங்க அமர்ந்திருந்து
பார்க்கணும் நான் ஆடி!!

பார்ப்பதற்கு கடுமையாக
இருக்கும் புலியாட்டம்
ஆமா எங்க புலியாட்டம்!
பார்முழுதும் பரந்திருக்கும்
தமிழர் புலியாட்டம்!!
மாதத்திலே நல்லமாதம்
கார்த்திகைத் திருமாதம்
ஆமா
கார்த்திகைத் திருமாதம்
கார்த்திகைப் பரணியிலே
ஆடிவந்தோம் புலிப்பாதம்!!

 

சிலம்பமென்னும் வீரக்கலை
இதுக்கு முன்னாள் ஆடி
அந்த கலைஞரெல்லாம் கூடி
அடவுகட்டி ஆடிவந்தோம்
நல்லபுகழ் தேடி!!
ருதனூரு சந்தையிலே
மல்லுத்துணி எடுத்து
எங்க உடம்பெல்லாம் கட்டி
மேல்தோல மறைச்சி வந்தோம்
புலிவேடம் கட்டி!!ஞ்சளை அறைச்சிவைச்சி
மருதாணி சேர்த்து
நல்லா சாயங்களைப்பூசி
புலிவேடம் போட்டுவந்தோம்
பழையகதை பேசி!!


தேங்காய் நாரெடுத்து
கயிறாக திரிச்சி
நீள வாலாக்கிக் கட்டி
குழுவா ஆடிவந்தோம்
தீமைகளைச் சாடி!!

 

ப்பு மேளம் போடும் 
தாளத்து ஏற்ப 
எங்க அடவுகள போட்டு!
தஞ்சை வீதியிலே 
ஆடினோம் புலிக்கட்டு!!


ரிப்புலி உணர்வுகள
வாஞ்சையோட பார்த்து
எங்க ஆட்டத்தில சேர்த்து!
சமூகக் கொடுமைகள
சாடிவந்தோம் நேத்து!!


ங்கதி பலகோர்த்து
சந்தங்களை போட்டு
எங்க சிந்தனைய சேர்த்து
சங்கிலி புங்கிலி என
ஆடிவந்தோம் ஈர்த்து!!
ளியாட்டம் ஒயிலாட்டம்
கரகாட்டம் எல்லாம்
இங்கே காலம் தள்ளுதய்யா
எங்க கலை மட்டும்
சோரம் போனதய்யா!!


நாடுவிட்டு நாடுபோயி
கலைய விற்க போனோம்
அந்த சேரநாடு போனோம்!
புலியாட்டம் என்ற கலைய
புலிக்களியா மாத்தி!!


மிழனென்னும் பெருமையோடு
தரணி வாழும் தமிழா
இந்தப் புவனம் போற்றும் தமிழா!
உன்புகழ் பாடும் எங்க
புலியாட்டம் எங்கே?!!


ம்மோட வரலாறு
கலைகளில் தான் உண்டு
பொற்கலைகளில் தான் உண்டு!
கலைகள் அழிஞ்சுதுன்னா
நமக்கு வரலாறு இல்லை!!


மிழர் பண்பாட்டை
பொன்னேட்டில் எழுத!
அந்த வரலாற்றில் எழுத
கலைகள் வாழவேண்டும் - வெறும்
சிலையாக அல்ல!!அன்பன்
மகேந்திரன்   

Monday, 12 November 2012

முக்கோணப் பெட்டகம்!!தாரப் புள்ளியினின்று
ஆகிருதியாய் வந்த 
ஒற்றை வெள்ளைக் கற்றையை 
உள்வாங்கிக் கொண்டாயோ?!!
 
ன்ன மாயம் செய்தாய்?!
என் விழிப் பார்வையின் 
காட்சிப் பிழைதானோ?!
இல்லை இல்லை
உண்மைதான் போலும்!
நான் தான்
கனவுலகில் இல்லையே!!
 
வெண்ணிறக் கற்றையை
உட்புறம் ஏற்ற நீ
வெளிவிடுகையில்
வண்ணங்கள் மாற்றினாய்!!
 

 


திசயம் என நான்
எண்ணியிருக்கும் வேளையிலே
அதிசயம் ஏதுமில்லை
ஒளிவிலகல் எனும் பண்பை
உனக்காக விவரித்தேன் என
உன்பெருமை வாசித்தாய்!!
 
னக்கு முன்னே
ஒரு சவால் இருக்கையில்
அதற்கான ஒருதீர்வு
உன்னகத்தில் கொள்ளாது
சிந்தனையை தூண்டிவிட்டு
பல்வேறு தீர்வுகளை
பாங்காக எடுத்திடென
பக்குவமாய் உரைத்திட்டாய்!!
 
முப்பரிமானம் காட்டும்
முக்கோணப் பெட்டகமே!
வண்ண நிறம் காட்டும்
வாஞ்சைமிகு பெட்டகமே!
நிச்சமாய் சொல்கிறேன்
நீ எனக்கு ஆசானே!!
 


அன்பன்
மகேந்திரன்

Saturday, 10 November 2012

பட்டாசு பகாசுரன்!!


ண்டுக்கு ஒருமுறை
மீண்டும் மீண்டும் வந்து
தொன்றுதொட்டு எமை
தீண்டுமின்பம் திளைக்கச்செய்யும்
வான்புகழ் தீபாவளி!!

தேனினிக்கும்  பலகாரம்
நாவினிக்கச் செய்தாலும்
தீப்பொறி சிதறடிக்கும்
மத்தாப்பூ வண்ணம் காணத்தான்
மனமது துடிக்கிறது!!


லகலவென குலைவையிடும்
மத்தாப்பூ வண்ணங்களும்
படபடவென மேளம்கொட்டும்
வெடிகளின் சத்தங்களும்
நெஞ்சுக்குள்ளே பந்தாடுது!!

ட்டாசுத் தயாரிப்பில்
பலகுடும்பம் வாழ்ந்தாலும்
சொற்ப வருமானத்திற்காய்
தொழிற்சாலை வெடிவிபத்தில்
இன்னுயிர் மாண்டனரே
மத்தாப்பூ புன்னகையை
எமக்காக ஈந்தோரே!!
மக்கான இன்பத்தை
இயைபாய்க்  கொடுத்த அந்த
சுமைதாங்கி யாரென்று
நானங்கே தேடுகையில்!
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் கோடியென்ற
கசப்பான உண்மையது
அலர்ந்த என் முகத்தை
அடர்ந்தவனம் ஆக்கியது!!
ன்றெனக்கு மகிழ்ச்சியதை
இயல்பாய் ஆக்கிடவே
தன்னுயிர் ஈந்து
தரணியில் அரூபமாகிப்போன
மறைபொருள் உயிர்களை
எண்ணியெண்ணி ஏங்கி
மனம் கொந்தளிக்கிறது!!

னிந்த விபரீதம்? - உண்மையிலேயே
எமக்கான மகிழ்ச்சிக்குத்தானா
இந்த உயிரிழப்புகள்?!!
இல்லையில்லை நிச்சயமாய்
பணவெறி கொண்ட
படலேறு மந்திகளின்
பிணவேட்டைகள்தான் இதுவென்று
உண்மை அறிந்தபோது
மனம் சுருங்கிப்போனேன்!!
ராயிரம் களையழித்தால்
சிலபயிர் வாழுமென்று
சிறுமதி கொண்டிருந்தேன்!
ஓராயிரம் பயிரழித்து
சில களைகளும் வாழலாம் - என
சிற்றுளி கொண்டு நிதர்சனத்தை
சிறுமூளை உணர்த்தினரே!!
ட்டங்களை புறக்கணித்து
சாகசங்கள் இங்கு ஏன்?!
தரம்பார்க்க வந்தோரை
சிரமறுக்கும் புத்தி ஏன்?!
தரமில்லை உனக்கென
தள்ளியுனை வைத்தாலும்
சட்டத்திற்கு புறம்பாய்
கையூட்டுக் காவலனுடன்
கட்டம்கட்டி வாழ்வது ஏன்?!!

ளவறிந்து வாழ்ந்தாலும்
அதீத பணத்திற்காய்
ஆட்டமிங்கே போட்டாலும்
நீ குழிசென்று சேர்கையிலே
உனக்கென்று ஓரடி
அதிகமில்லை உணர்ந்துகொள்!!அன்பன்
மகேந்திரன் 

Friday, 9 November 2012

அடைகாக்கப் பழகிக்கொள்!!!


நினைத்தால் நிமிடத்தில்
நிலவையும் இத்தரைக்கு
நல்விளக்காய் மாற்றுவேனென
நமத்து மரத்துப்போன
நமட்டுப் பேச்சை
எப்போது நிறுத்தப் போகிறாய்!!


ட்டெடுத்து வைத்து
நடக்கத் தெரியும் வரை
உன் கால்கள் உனக்குத் தெரியாது!!
சிதறுண்ட கண்ணாடி துகளாய்
பேசத் தெரியும் வரை
வாயிருப்பதே தெரியாது!!


பாலுணர்வு உணர்ந்த பின்தான்
பாலினம் அறிந்து கொண்டாய்!!
நட்புகள் இணைகையில் தான்
இனமறிந்து இணைந்துகொண்டாய்!!


சாதி என்ற ஒன்றை
தானே கண்டது போல
சாத்திரங்கள் பலசொல்லி
தான் சேர்ந்த குழுமத்தில்
ஆள் சேர்க்க அலைகின்றாய்!!


ளமை இளைத்து
இடுப்பெலும்பு வளையும் வரை
துள்ளலாட்டம் போடுகிறாய்!
முதுமை வந்துசேர்ந்த பின்னே
இளமையின் மேல் வெறுப்பாகி
தத்துவங்கள் பேசுகிறாய்!!


ல்லையில்லா இவ்வுலகில்
எல்லாம் பயின்ற நீ
ஒன்றை மட்டும்
மறந்துவிட்டாய் மானிடா!
அளப்பரிய ஆற்றல்கொண்ட
அன்பை என்று
கற்றுக் கொள்வாய்??!!


சின்னஞ்சிறு புழுவெனினும்
அதுவும் ஓர் உயிரென
மனதில் நிறுத்திக்கொள்!
அடிவயிற்றில் அதைவைத்து
அடைகாக்கப் பழகிக்கொள்!!
அன்பன்
மகேந்திரன்

Monday, 17 September 2012

கிழக்கும் மேற்கும்!!!விசும்பின் போர்வையில்
விழித்தெழும் உலகின் 
விடியலே என்னாலென
வீண் இறுமாப்பில்
வீற்றிருக்கும் கிழக்கே!!
 
லகினுக்கு வெளிச்சத்தை
உதயனின் தயவால் 
உவப்புடன் கொடுக்கும்  
உன் வெற்றிக்குப் பின்னால்
உள்ளதென்ன அறிவாயோ?!!
 

 


யைபாய்க் களைத்த
இரவியின் கவிழ்வால்
இருண்ட திசையென
இயல்பாய் ஏற்றிட்ட
இன்திசை மேற்கினை அறிவாயோ?!!
 
ண்டிலம் தானேற்று
மாநிலம் மழுக
மகிழ்வாய் அவப்பெயரேற்ற
மாதவத் திசையதுவே - உன்
மருவரல் வெற்றிக்குக் காரணமே!!
 
 
ன்னுடல் நெக்குருக
தனைச்சுற்றிய திசையெல்லாம்
தீச்சுடர் ஒளிதரும் 
தண்மையான மெழுகினைப்போல்!
தகைவாய்க் கிழக்கது
தண்டலை எனும் பெயரேற்க
துகளேற்ற திசை மேற்கே!!
 
னியேனும் கிழக்கே
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 
 
கையாளப்பட்ட சில சொற்களுக்கான பொருள்:
 
மருவரல்                       – சூழ்ச்சி
மழுக                              – இருள்பரவ 
துகள்                              – குற்றம்
தண்டலை                     – சோலை
மண்டிலம்                     - ஞாயிறு
இரவி                              - கதிரவன்
விசும்பு                           - ஆகாயம்
 

Saturday, 15 September 2012

விடைதேடும் சலனங்கள்!!!


டைபாதைத் தடங்களில்
சுவடுகள் பதித்திட
எண்ணிடும் வேளையில்!
உள்ளங்கால் தீரம்விட்டு
ஆணிவேர் ஒன்று
புவனம் ஊடுருவி - என்னை
நடையிழக்கச் செய்ததுவே!!

காட்சிகள் ஏராளம்
கணக்கற்ற தோரணங்களாய்
கண்முன்னே உதிக்கையில்!
ஒற்றைக் காட்சியில்
நிலைப்பு ஏற்படாது
கவரத் துடிக்கையில்!
கண்ட காட்சியும்
பிழையாய்ப் போனதுவே!!


றவுகள் இருந்தால்
சிறகொடிந்து போனாலும்
உறுதுணை உண்டென
எண்ணிய வேளையில்!
சிறுசிறு காரணத்தால்
மறுமுகம் காட்டி
உருமாறிப் போகையில்
உள்ளம் குறுகிப் போனதுவே!!


னந்தக் குளியலிட
அருவிக்குச் சென்றாலும்
விழும் அழகினில்
விக்கித்து நின்றாலும்!
நதிமூலம் அறிந்திடவும்
வீறிட்டு விழும்
காரணம் அறிந்திடவும்
மனமது விழைந்ததுவே!!


க்கள் பணிசெய்ய
மாண்பாக வந்தவரோ
மாண்புமிகு ஆனபின்னே!
பண்புகளை இழந்து
பணமொன்றே குறியாய்
மணமிழந்த மலராய்
பிணமாய் ஆகிடுகையில்
மனம் வெறுத்ததுவே!!


நான்குவழிச் சாலையின்
நாற்கர அமைப்பில்
வெகுவேகப் பயணத்தை
இலகுவாய் கடக்கையில்!
சாலைகளின் ஓரங்களில்
அரணாய் உயர்ந்துநின்ற
பசுமரங்கள் எங்கேயென
தேடித் பார்க்கையில் - மனம்
திக்கித்துப் போனதுவே!!


ரளமாய் வாழ்க்கையது
சாகசம் பலகாட்டி - தன்
சாளர முகங்களில்
சிறுகதைகள் பலகூறி
விடுகதைகள் போட்டபடி
வினாக்களை தொடுக்கிறது - நானோ
விடுத்திட விழைகையில்
விளைச்சலாய் மலர்ந்தது
விடைதேடும் சலனங்கள்!!!


அன்பன்
மகேந்திரன்

Friday, 10 August 2012

காவியமே கண்ணுறங்கு!!!குண்டுமல்லி தோட்டத்திலே 
குவிந்திருக்கும் மல்லிகையே - உன்
கூட்டாளி நானிருக்கேன்
குவளைமலரே கண்ணுறங்கு!!
 
கைகொட்டி சிரித்திருக்கும்
பட்டுமேனி பெட்டகமே
யார் கண்ணும் படுவதற்குள்
காந்தள்மலரே கண்ணுறங்கு!!
 
சானி மூலையிலே
உலையங்கே கொதிக்குதம்மா
போயி நானும் பார்த்துவரேன்
பூந்தளிரே கண்ணுறங்கு!!
 
 
 
சும்பால் வாங்கிடவே 
பணமிங்கே போதலியே 
உலைத்தண்ணி ஊத்திவாறேன் 
மாந்தளிரே கண்ணுறங்கு!!
 
ட்டுமரக் கப்பலோட்டி 
கடலுக்கு போன அப்பா 
பொழுதடைய வந்திடுவார் 
பூச்சரமே கண்ணுறங்கு!!
 
யரை மீனும் ஆரமீனும்
அள்ளிக்கொண்டு வருவாரடி
அதுவரைக்கும் பொறுத்திருக்க
ஆரவல்லி கண்ணுறங்கு!!
 
 
வாளைமீனும் வழலை மீனும்
வலைபோட்டு பிடித்தமீனும்
வட்டியிலே போட்டுத்தாறேன்
வாடாமலரே கண்ணுறங்கு!!
 
விடியலிலே போனவரு 
பொழுதடைஞ்சி போனபின்னும் 
வராதது ஏனடியோ 
வண்ணக்கிளியே கண்ணுறங்கு!!
 
ல்லைதாண்டிப் போனாரோ
ஏதுமங்கே ஆனதுவோ
எம்மனசு தவிக்குதடி
கனிமொழியே கண்ணுறங்கு!!
 
 
கல்விளக்கு ஏற்றிவச்சேன்
ஆளவந்தோன் உயிர்காக்க 
அல்லும்பகலும் விழித்திருந்தேன் 
அல்லிமலரே கண்ணுறங்கு!!
 
ண்டைநாட்டு கப்பற்படை 
ஆட்டம்தான் போட்டதுவோ 
அவியுது மனமெனக்கு 
காவியமே கண்ணுறங்கு!!
 
ந்த உயிர் வந்தால்தான் 
நம்ம உயிர் நிலைக்குமிங்கே
அதுவரைக்கும் பொறுத்திருக்க
புதுமலரே கண்ணுறங்கு!!
 
 
நித்தம்நித்தம் நெஞ்சுக்குள்ளே 
வேதனைய சுமந்திருக்கும் 
நம் பிழைப்பு மாறுமோடி
மலர்விழியே கண்ணுறங்கு!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 

Monday, 6 August 2012

எம் உயிரில் அடிக்காதே!!


சிதறிக் கிடப்பதை 
சீராக கூட்டிவைத்து 
சீர்மிகு தெருக்களை 
செம்மையாய் மாற்றிவரும் 
செம்மையாளர் என் தந்தை!!
 
துப்புரவுத் தொழிலது 
தூரோடு வேரறுத்து 
என்னோடு நிற்கட்டும் 
பள்ளிசென்று படித்து 
பார்போற்ற வளர்ந்திடென 
பள்ளிக்கு அனுப்பிவைத்தார்!!


வாடியபயிரை இனம்காண்பதுபோல்
வாடிநிற்கும் எம்மின் 
வறுமையை அறிந்திட்ட 
வாஞ்சைமிகு அரசாங்கம் 
வழங்கியது கல்வி உதவித்தொகை!!
 
ரசுகொடுத்த பணமதை 
ஆசிரியர் எனும் போர்வையில் 
நடமாடும் பிணங்களோ  
அகல வாய்திறந்து
ஏப்பமிட்டு போனாரே!!


முதுகெலும்பு வளையாது
காசுபார்க்க உனக்கு
ஆயிரம் வழியிருக்க
கல்விக்காய் எமக்களித்த
உதவித்தொகைதானா கிடைத்தது!!
 
சிறுகுழந்தையாம் எம்மின் 
வாழ்வாதாரத்தில் கைவைக்கும் 
வக்கிரபுத்திக்காரன் நீயோ
பணப்பசி எடுத்தால்
பெற்றபிள்ளையையும் விற்பாயோ?!!
 
ணம்தான் உனது
பிரதானப் பிரச்சனை என்றால்
உன் உடற்கூறு அறுத்து
விற்றுப் பிழைத்துவிடு
கல்விக்காய் ஏங்கும்
எம் உயிரில் அடிக்காதே!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Thursday, 2 August 2012

துயிலெனும் தவம்!!


துயரங்கள் ஆயிரமேனும்
தும்பைமலர் கண்ணயர்ந்தால்
துயரின் வலிமைதனை
துண்டுதுண்டாய் ஆக்கிவிடும்
துயிலதுவும் ஒரு தவமே!!

சாத்திரம் பலகற்று

சூத்திரம் அறிந்தபின்னே
பாத்திர திறன்கொண்டு
முத்திரை பதித்துவிட்டால்
நித்திரை ஒரு தவமே!!
 

 


ருப்பு நிலையில்
இறுக்கம் இருப்பினும்
கருவிழியை இமைதழுவும்
இறப்பு நிலையாம் 
உறக்கம் ஒரு தவமே!!
 
நெக்குறுக்கும் நோய்களை
நெற்குளிகை தவிர்த்திட்டு
நெடுந்தூரம் விலக்கிட
நாழிகைகள் சிலவேனும்
நல்லுறக்கம் கொண்டிடுக!!
 
 


வாழ்க்கை எனும்
சித்திரம் வரைவதற்கு
உடம்பு எனும் 
சுவர் அவசியமென்றால் 
தூக்கம் எனும் 
தூரிகை அவசியமே!!

திங்கள்கடந்து உறங்கும்
கும்பகர்ண உறக்கம் தேவையில்லை
சிறுயிதழ் இமைகளை
சிறுகச்சிறுக மூடித்திறக்கம்
சிற்றிறகு கோழியின்
சிறு உறக்கமேனும்
சித்தமாய்க் கொண்டிடுக!!அன்பன்
மகேந்திரன்
 

Saturday, 28 July 2012

பனித்துளி நகங்கள்!!


சுமைநிற விரல்களிலே
பனித்துளி நகங்களோ?!
புற்களின் நுனியீன்ற
கண்ணாடிக் குமிழ்களோ?!!

 
 
ளியொன்றை உள்வாங்கி
உன்னகப் பரப்பளவில்
எதிரொலித்து ஆங்கே
பலவண்ணம் காட்டும்
மாயநீர்க் கோளமே!!
 

ந்தவொரு நொடியிலும்
தன்னுருவை இழக்கும்
அற்பாயுள் வாழ்வெனினும்
உன் புறத்தில்
என்முகம் காட்டி
இன்புறுவாய் நகைத்து நிற்கும்
நீயோ
வைரமணிப் பெட்டகமே....!!
 
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Wednesday, 25 July 2012

நித்தமும் ஓர் பாடம்!!!நித்தமும் ஓர் பாடம்  
நெஞ்சுக்குள்ளே விளையுது
சாட்டையில்லா பம்பரமாய்
தலைகீழாய் சுத்துது!!
 
னுபவத் தென்னைமரம்
பனம்பழமா காய்க்குது
அடியெடுத்து வைச்சபின்னே
முழம் முழமா நீளுது!!
 

 


ருபக்கம் குழியென்று
மண்போட்டு நிறைச்சபின்னே
திரும்பி பார்த்தாக்க
மறுபக்கம் குழியாச்சி!!
 
டைதிறந்த வெள்ளமென
அறிவு நல்லா இருந்தாலும்
அடிவருடிக்குத்தான் இப்போ
நினைச்சதெல்லாம் நடக்குது!!

றைபடாம வாழ்ந்திருந்தா
உதவாக்கரை பட்டமிட்டு
ஊர்ப்பணத்தை ஏப்பமிட்டா
சிம்மாசனம் கிடைக்குது!!
 
 


விலைவாசி கிடுகிடுன்னு
ஏற்றத்திலே நிக்குது
களவு திருடுயெல்லாம்
கண்ணாமூச்சி ஆடுது!!
 
வினைக்கு எதிர்வினையெல்லாம்
பழங்கால கதையாச்சு
எதிர்வினை கொடுத்தால் தான்
வினையிங்கே முடியுமென
புதுக்கதை வந்தாச்சு!!அன்பன்
மகேந்திரன்