Powered By Blogger

Wednesday, 16 January 2013

நிழற்படக் கவிதைகள்.....!!!

வணக்கம் தோழமைகளே...
முதன்முறையாக நிழற்படக் கவிதைகளை
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....


பனிக்குமிழ்  நெஞ்சம்!!


தொட்டுத் தொடர்ந்துவரும்
பட்டுப்போன முகமூடிகள்
சிறுகட்டத்தில் மோதிநிற்கும்
திமில்நிறை எறுதுகளாய்!!
மோதலுக்குப் பின்வரும்
விளைவுகளை நினைத்து
தொண்டைக் குழிக்குள்
உமிழ்நீர் விழுங்கினேன்
தனிச்சிமிழாம் என் நெஞ்சம்
பனிக்குமிழாய் சிதறிடுமோ??!!!
எழில் வண்ண நினைவுகள்!!


விழியலர்ந்த வேளையிலே
குழம்பிய ஓடையில்
தளும்பிய அலைகளினூடே
பளிங்குக் கனவுகளை!!
குலுங்கிய விருட்சத்தினின்று
விழுந்த இலைகொண்டு
நெகிழும் ஒடமாக்கினேன்!
விழிபிரித்துப் பார்க்கையிலே
வழிநெடுக பசுமையாய்
எழில்வண்ண நினைவுகள்!!!அன்பன்
மகேந்திரன்

Saturday, 12 January 2013

நிழல்போல மடியிருக்கு!!!!ன்னானே தனேனன்னே
தானானே தானேனன்னே
தன்னானே நானனன்னே - தன்ன நனனே
தானானே தானேனன்னே
தன்ன நனனே!!
தாமரைப்பூ பாதம் வைச்சு
தளுக்கு நடை போட்டுக்கிட்டு
தனியாகப் போறவளே - தங்க மயிலே
தவியா நான் தவிச்சிருக்கேன்
பொன்னு மயிலே!!


ள்ளபட்டி பருத்திவேட்டி
பாங்காக கட்டிக்கிட்டு
வரப்புமேல நிற்பவரே - ஆசை மாமோய்  
சித்த நேரம் பொருத்திருங்க
நேச மாமோய்!!
வைகாசி பொறந்திருச்சி
வாழையெல்லாம் விளைஞ்சிருச்சி
பரிசம் போட நாள்பார்த்து - தங்க மயிலே
பட்டெடுத்து நானும்வாரேன்
பொன்னு மயிலே!!
ங்க வைச்சி சொல்லுறியே 
எனக்கு வெக்கம் ஆகுதய்யா!
அந்தநாள பார்த்துத்தானே - ஆசை மாமோய் 
என் உசிரு காத்திருக்கு 
நேச மாமோய்!!

ங்காத்தா பேச்சியம்மா 
உன்னப்பத்தி பேசயில!
மங்காத தங்கமின்னு - தங்க மயிலே 
மனசார சொல்லுறாக 
பொன்னு மயிலே!!
னையூரு அங்காளம்மா 
அருளாலே கிடைச்சதய்யா!
பாசமான மாமியாரு - ஆசை மாமோய் 
பக்குவமா நடந்துக்குவேன் 
நேச மாமோய்!!

ருவேல மரமிருக்கு
மரத்தின் கீழே நிழலிருக்கு!
நிழலிலத்தான் நானிருக்கேன் - தங்க மயிலே
நீச்சத் தண்ணி கொண்டுவாடி
பொன்னு மயிலே!!
நெசமாத்தான் சொல்லுறியா
எனக்கு வெக்கம் ஆகுதய்யா!
வேலைவெட்டி முடிஞ்சுதாய்யா - ஆசை மாமோய்
வக்கனையா கூப்பிடுற
நேச மாமோய்!!
ழைதண்ணி ஏதுமில்ல
மடையெல்லாம் காய்ஞ்சி போச்சி!
போட்டவிதை அத்தனையும் - தங்க மயிலே 
கருகுமணி ஆகிப்போச்சி 
பொன்னு மயிலே!! 


வ்வுசிரு உருகுதய்யா  
மனசெல்லாம் மருகுதய்யா! 
நான் வரும் வேளையிலே - ஆசை மாமோய் 
வெள்ளாமை வெளுத்துப்போச்சே 
நேச மாமோய்!!
ப்படி நீ பேசாதடி 
அத்தபெத்த அன்னக்கிளியே! 
ஆறுபோகம் விளைஞ்சாலும் - தங்க மயிலே 
உன்னைப்போல கிடைக்காதடி 
பொன்னு மயிலே!!
ளத்திலுள்ள நெல்லுமணி 
கண்ணுக்கெட்டி காணவில்லை!
அடுத்த போகம் எதிர்பார்த்து - ஆசை மாமோய் 
கண்ணுபூத்து காத்திருப்போம் 
நேச மாமோய்!!
ழைதண்ணி பெஞ்சாக்கூட 
மலைச்சி போச்சி நெஞ்சமெல்லாம்!
பேசாம விளைநிலத்த - தங்க மயிலே 
கட்டம்கட்டி வித்திடலாம் 
பொன்னு மயிலே!!
ன்னசொல்லு சொல்லிபுட்ட 
எவ்வுசிரே போச்சிதய்யா!
அந்த தப்பு செய்யாதய்யா - ஆசை மாமோய் 
அறிஞ்சி விசம் குடிக்காதய்யா 
நேச மாமோய்!!
ம்பொழைப்ப பார்த்துபுட்டு 
ஏதாச்சும் சொல்லு புள்ள!
ஏறுபிடிச்சி நாளாச்சி - தங்க மயிலே 
ஏக்கத்தில நானிருக்கேன் 
பொன்னு மயிலே!!
ம்மைபோல ஆளுகலெல்லாம் 
விளைநிலத்த வித்துபுட்டா!
வருங்கால சந்ததியெல்லாம் - ஆசை மாமோய் 
வெறிச்சோடி போகுமய்யா 
நேச மாமோய்!!
ண்ணளக்கும் மாரியாத்தா 
மழையாகப் பொழிஞ்சிடுவா!
படியளக்கும் எஞ்சாமி - ஆசை மாமோய் 
ஒடிஞ்சி நீயும் போகாதய்யா 
நேச மாமோய்!!
சொன்னசொல்லு புரிஞ்சுதடி 
சொக்கத்தங்க பூமயிலே!
பொன்விளையும் பூமியிதை - சொர்ணக் கிளியே 
விலைநிலமா ஆக்கமாட்டேன் 
வண்ணக் கிளியே!!
ந்தசொல்ல கேட்டதுமே
எம்மனசு குளுந்துபோச்சி!
கருவேல நிழலெதுக்கு - ஆசை மாமோய் 
நிழல்போல மடியிருக்க 
நேச மாமோய்!!
அன்பன் 
மகேந்திரன் 

Sunday, 6 January 2013

தேளாக மாறிவிடு தெளிதேனே!!!
போட்டுவைத்த பந்தலிலே
பரவிவந்த மல்லிகையோ?!
குமிழ்ந்திருக்கும் சூல்பையில்  
முகிழ்ந்திருக்கும் செந்தேனோ?!
செம்மரமிருக்கும் திசையெல்லாம்
மணமணக்கும் மரகதமோ?!!


டைமழையாய் வந்திங்கே
ஆழ்மனதை நனைத்துவிட்டாய்!
வாடைக்காற்றாய் செவிவழி நுழைந்து
இதையத்தை குளிர வைத்தாய்!
சிறுதூரல் போட்டுவந்து
சிரம் முதல் பாதம் வரை
சிலிர்க்கவும் வைத்துவிட்டாய்!!
ருக்கும் இரு பாலினத்தில்
இரும்பு வலிமை நானெனவும்
மென்மையாம் நீயெனவும்
கள்ளமொழி பேசிவரும்
மனிதமெனும் குலமதில்
மங்காத ஒளியாய்
நானும் ஒரு பாலென
நங்கை நீ அவதரித்தாய்!!


மொட்டாக இருக்கையிலே
சிட்டாக சிறகடித்து
பட்டுப் பூச்சிபோல்
பறந்துவந்த நாள்விட்டு!
அலர்ந்த மலராகி
நேர்கொண்ட பார்வையுடன்
கூர்கொண்ட விழியாலே
பார்போற்ற வளர்ந்தவளே!!பெண்மையைப் போற்றும்
பெருமக்கள் கூட்டத்தில்
நெகிழ்ந்திருந்த நீயோ!
தான் பிறந்த வழியையும்
தாயிடம் அமுதுண்ட இடத்தையும்
பிறபெண்களிடம் காணவிளையும்
காமப்பிசாசுக் கூட்டத்தில்
கவளமாகிப் போனாயோ?!!


பெண்ணென்றால் என்னவென்று
புவனம் அறிய வை! - உன்னைப்
போகப்பொருளாய்  நினைப்போரை
பொறியில் தட்டி வை! - உன்மேல்
களியாட்டம் ஆடவரும்
காமக்குப்பைகளை  சாம்பலாக்கிவிடு!!சித்திரப் பாவை என்பதினால் - வெறும் 
உத்தரமாய் இருக்காதே!
மென்பால் நீயென்று - உனைத்
தன்பால் கவர்ந்து
உடற்பசி தீர்க்கவரும் கடைநிலை மனிதர்களை
முடமாக்கிப் போட்டுவிடு!!


துணிந்த மனம் கொண்டோரே
தும்பைப்பூ மனத்தோரே!
துடைப்பம் ஒன்று கைகொண்டு
தூசிதும்பை தட்டிடுவோம்!
வெளிப்புறப் பேச்சில்
பெண்ணைப்போற்றி புகழ்ந்துவிட்டு
காமப்போர்வை போர்த்திவரும்
கழிசடை குப்பைகளை
களைந்து எறிந்திடுவோம்!!


 
அன்பன்
மகேந்திரன் 
  

Friday, 4 January 2013

கவியரங்கக் காணொளி!!


மிழகத் தலைநகரில் ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் (26/08/2012) நடந்தேறிய
தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இன்னும் மனதில்
நிழலாடிக் கொண்டிருக்கிறது. விழாவிற்கு முந்தைய நாள்
ஊரிலிருந்து கிளம்பி விழா முடிந்து திரும்பும் வரை ஏதோ
கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்வே இருந்தது.

வலையுலகில் கால்பதித்த நாள்முதல் இதுபோன்ற விழாக்களில்
கலந்துகொண்டு சக எழுத்தாளர்களை சந்திக்கவேண்டும் என்ற
எண்ணம் தலைதூக்கி இருந்தது. அதற்கு முதல் வித்திட்டது
இந்த தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு.

தலைநகரில் உள்ள அனைத்து பதிவாளர்களும் மிகமிக அருமையாக
ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாவினை. விழா ஏற்பாட்டாளர்கள்
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

விழாவினில் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதையின்
காணொளி வடிவத்தை இங்கே இந்தப் பதிவினில் உங்களுடன்
பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.


காணொளிகளின் இணைப்பு இதோ......ள்ளத்தின் ஊற்றில்
ஊறிவந்த உணர்வுகளை
ஊசிமுனை எழுத்தாணியால்
உலகம் அறிந்திட
உவகையுடன் துவங்கிய
வலைப்பூவின் பக்கங்களில்
வடிக்கத் துவங்கிய
விடியற்பொழுது முதல்
விழிவிரித்திருந்தேன்!!

ந்த நாள்முதல்
வாகை சூடிய வான்புகழ்
வண்ணமிகு பதிவர்களை
கண்டு களித்திட
வடிகால் தேடிய - என்
விரிந்த விழிகளுக்கு
விருந்தளித்த சந்திப்பை
விழிகள் என்றும் மறவாது!!

ன்னுமொரு சந்திப்பினை
இன்றே கண்டிடவே
இருவிழிகள் துடிக்கின்றன!!அன்பன்
மகேந்திரன்