Powered By Blogger
Showing posts with label நாட்டுப்புறப்பாடல். Show all posts
Showing posts with label நாட்டுப்புறப்பாடல். Show all posts

Monday, 9 December 2013

தெருக்கூத்து தெம்மாங்கு !! - பாகம் 2





கட்டியங்காரன் அறிமுகம் !!!


க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவரை கோமாளி என்ற சொல் கொண்டு அழைக்கிறோம். கூத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்படும்போதும், மாந்தர்கள் தங்கள் பாடல்களை மறந்து தினறுகையிலும் கட்டியங்காரன் தான் அருமருந்து. அது மட்டும் அல்லாது தோழி, காவல்காரன், மந்திரி, தூதுவன், ஒற்றன், இப்படி உதிரி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சகலகலா வல்லவர். கட்டியங்காரன் பற்றி இப்பாகத்தில் பாடலாக தருகிறேன், என் குரலில் பாடியும் தருகிறேன். மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்......





லால தோப்புக்குள்ளே 
அமர்ந்திருக்கும் நாயகனே - உன்னடிய 
பணிந்துவந்தேன் - ஐயா 
உத்தமரே காக்கவேணும்!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


ட்டிளம் காளையிவன் 
கட்டியங்காரன் எந்தன் பெயர்
பார்போற்றும் கலையிதுவின் - ஆமா 
உயிர்நாடி நான் தானய்யா!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!




ண்போன்ற காவியத்தை 
கதையாக்கி நடிக்கும்போது    
இடையிடையே தொய்கையிலே - நானும்
காண்போரை கவர்ந்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


கோடிட்ட இடங்களிலே 
கோமகனாய் வாழ்ந்துவந்தேன் 
கோலேச்சும் என்னைக்கண்டு - ஐயா 
கோமாளி என்றனரே !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!




வைக்கோலால் செய்யப்பட்ட 
குடைபோல விரிந்திருக்கும் 
உடைகளில் நான் வருகையிலே - ஆமா 
காண்போரின் நகையொலிக்கும் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


தையில் வரும் நாயகர்கள் 
கதைப்பாட்டு மறக்கையிலே 
அதையெடுத்து நான் பாடி - அழகா 
கலை உயிர்ப்பை காத்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


==== தெருக்கூத்து தொடரும் 







அன்பன் 
மகேந்திரன்

Monday, 28 October 2013

தெருக்கூத்து தெம்மாங்கு!!!

ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம்.
உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த 
தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த 
இடம் உண்டு. அப்படி பெருமை வாய்ந்த கலையின் 
முன்னோடியாம்  தெருக்கூத்து கலை பற்றி இங்கே கவிதையாக 
தருவதற்கு முயற்சிக்கிறேன். சேகரித்த செய்திகளை 
நல்வண்ணம் கொடுத்திட எத்தனிக்கிறேன். பிழைகள் ஏதும் 
இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள் என்னைத் 
திருத்திக்கொள்கிறேன். அழகான கலை இது சரியான முறையில் 
பிழை இல்லாமல் பின்வரும் சந்ததிகளுக்கு சென்று சேரவேண்டும்.

விளக்கமாக சொல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே 
ஒரே பதிவில் சொன்னால் மிகவும் நீளமாக ஆகிவிடும் என்ற 
காரணத்தால் தொடர் கவிதையாகத் தருகிறேன், அதையும் என் குரலில் 
பாடி ஒலிப்பேழையாக தருகிறேன். 

நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் ... இதோ பாடல்.....




த்தங்கரை மேலிருக்கும் 
அழகுப் பிள்ளையாரே! ஆனை முகத்தோனே 
அரிதாரம் பூசிவந்தேன் 
ஆனை முகத்தோனே!!


ரணியெங்கும் புகழ்கொண்ட 
தங்கத் தமிழ்த்தாயே! எங்க தங்கத் தமிழ்த்தாயே 
முன்னிருந்து காக்கவேணும் 
மூத்தகுடித் தாயே!!


ங்களுக்கு இந்த கலைய 
கத்துதந்த சாமி! ஐயா கத்துதந்த சாமி 
குருபாதம் தொழுகின்றோம் 
ஆசி வேணுமய்யா!!


ன்னனன்னே தானேனன்னே 
தானேனன்னே தானே தன தானேனன்ன நானே 
தன்னான தானேனன்னே  
தானேனன்னே தானே!!


ந்திருக்கும் பெரியோரே 
ஆசி வேணுமய்யா! உங்க ஆசி வேணுமய்யா!
உயிராக சுமக்கும் கலைய 
காக்க வேணுமய்யா!!


முக்கனிபோல் சுவையான 
தெருக்கூத்து கட்ட! அந்த நல்லகூத்து கட்ட!
முத்தமிழை கூட்டிவந்தோம் 
நாடோடி நாங்க!!


தெவிட்டாத தேன்தமிழில் 
பாடிவந்தோமய்யா! அழகா பாடிவந்தோமய்யா!
தெருக்கூத்து எனும் கலைய 
ஆடிவந்தோம் ஐயா!!


நாடகத்தின் முன்னோடி 
எங்க கலை ஐயா! இந்த தங்க கலை ஐயா!
கலையின் வடிவமைப்பை 
சொல்ல வந்தேனய்யா!!


தினாறு கலைஞரோட 
வாத்தியாரும் இருக்கார்! நம்ம வாத்தியாரும் இருக்கார் 
அழகான இந்த குழுவுக்கு 
சமா என்று பேரு!!


பேர்பெற்ற எங்க கலை 
தெருக்கூத்து தானே! இந்த நல்ல கூத்துதானே!
அழகான மறுபெயராம் 
கட்டைக் கூத்து தானே!!


டக்கு தெற்கு என 
வண்ணம் கொண்டோமய்யா! நல்ல வண்ணம் கொண்டோமய்யா!
அண்ணாமலை தீரம்விட்டு 
ஆடி வந்தோமய்யா!!



........ தொடர்ந்து கூத்து கட்டுவோம்......









அன்பன் 
மகேந்திரன்

Tuesday, 17 April 2012

எனக்கின்னு ஒரு வீடு!!







ந்தைக் கண்ண உருட்டிகிட்டு
ஆலவட்டம் போட்டுக்கிட்டு!
அசையாத எம்மனச - கட்டிக் கரும்பே
உலையரிசி ஆக்கிபுட்ட - சுட்டிக் குறும்பே!!
 
செப்புக்குடம் செஞ்சதுபோல்
செம்மாந்த இடுப்பழகி!
குலுக்கி நீயும் நடக்கையில - பச்சைக் கிளியே
எம்மனசு உடைஞ்சுதடி - இச்சைக் கிளியே!!
 

 


ந்தவாசி சந்தையிலே
வாங்கிவந்த விதைகளெல்லாம்!
விதைச்சிபுட்டு வந்தவரே - கட்டிக் கரும்பே
சித்தநேரம் உட்காரய்யா - சுட்டிக் குறும்பே!!
 
விதைநெல்லு விதைச்சபின்னே
மனசிங்கே குமுறுதடி!
மழை தண்ணி இருந்தாத்தானே - பச்சைக் கிளியே
மாபோகம் கிடைக்குமடி - இச்சைக் கிளியே!!
 
 
ருத்தமேகம் கூடிருச்சு 
கூராப்பு போட்டிருச்சு!
சிலுசிலுன்னு காத்தடிக்க - கட்டிக் கரும்பே
கிளுகிளுப்பா ஆனதய்யா - சுட்டிக் குறும்பே!!
 
பூந்தூறல் போடுதடி
மண்வாசம் வீசுதடி!
இதுக்காகத் தானே நானும் - பச்சைக் கிளியே
காத்து காத்து பூத்திருந்தேன் - இச்சைக் கிளியே!!




பூத்திருக்கும் விழிய நானும்
நித்தமும் தான் பார்த்திருக்கேன்
கொழிஞ்சிப்பூ மூக்கழகா - கட்டிக் கரும்பே 
கொஞ்சிப்பேச வந்திடய்யா - சுட்டிக் குறும்பே!! 

கொஞ்சிப்பேச நேரமில்ல
மஞ்சப்பூச்சு முகத்தழகி!
வயலுக்கு போயிவாறேன் - பச்சைக் கிளியே
சாயங்காலம் பேசிடுவோம் - இச்சைக் கிளியே!!
 
 
ம்பம் புல்லு குத்திவைச்சு
கஞ்சிபோட்டு வைச்சிருக்கேன்!
பொழுதடைஞ்சி போனபின்னே - கட்டிக் கரும்பே
மழுப்பாம வந்திடய்யா - சுட்டிக் குறும்பே!!
 
ழைநல்லா பெஞ்சுதடி
வரப்பெல்லாம் நிறைஞ்சுதடி!
ஓடைத்தண்ணி ஓடையில - பச்சைக் கிளியே 
ஒடம்விட தோணுச்சடி - இச்சைக் கிளியே!!
 
 
ம்பங்கஞ்சி கொண்டுவாரேன் 
கடகடன்னு குடிச்சிடய்யா!
விதைச்ச நெல்லு மளமளன்னு - கட்டிக் கரும்பே
விளஞ்சிநிக்கும் நேரம்வரும் - சுட்டிக் குறும்பே!!
 
ந்தநாள பார்க்கத்தானே
அங்கமெல்லாம் காத்திருக்கு !
அறுவடையின் நேரம்பார்த்து - பச்சைக் கிளியே
மழைபெய்யக் கூடாதடி - இச்சைக் கிளியே!!
 
 
ம்கையில் எதுமில்ல
நல்லமனசு கொண்டவரே!
நல்லதையே நினைச்சிருப்போம் - கட்டிக் கரும்பே
நல்விளச்சல் கிடைக்குமய்யா - சுட்டிக் குறும்பே!!
 
விளஞ்சிவந்த பின்னாலேயும்
கட்டிவச்ச நெல்களையெல்லாம்!
சந்தைக்கு கொண்டுபோனா - பச்சைக் கிளியே
நல்லவிலைக்கு போகணுமே - இச்சைக் கிளியே!!
 
 
ரசாங்கம் செய்யனுமய்யா
அதற்கான ஏற்பாடெல்லாம்!
அத்திப்பூ முகத்தழகா - கட்டிக் கரும்பே  
அதுவரைக்கும் பொருத்திருங்க - சுட்டிக் குறும்பே!!
 
வேய்ந்தகூரை பிஞ்சிப்போச்சு
வெட்டவெளி ஆகிப்போச்சி!
காரவீடு கட்டனமின்னு - பச்சைக் கிளியே
பாவிமனசு துடிக்குதடி - இச்சைக் கிளியே!!
 
 
ந்தபோகம் விளைஞ்சிவரும்
எருக்கம்பூ மூக்கழகா!
அந்த பணத்த வைச்சி நாமும் - கட்டிக் கரும்பே
அழகாக கட்டிடுவோம் - சுட்டிக் குறும்பே!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Sunday, 12 February 2012

களிப்பான கழியாட்டம்!!!







போதக முகத்தோனே
பேரன்னை புதல்வோனே!
ஏரம்ப நாயகனே
கோட்டுமலை பெரியோனே!
கோலாட்டம் ஆடவந்தேன்
களம் வந்து காத்திடய்யா!!
 
ந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
 
 
லேலோ ஆட்டமாடி
ஏலேலந்தம் பாடிவந்தேன்!
எழிலான  ஏழுதேசம் 
இறங்கி நானும் ஓடிவந்தேன்!!
 
ருமனை அங்காளம்மா
அழகாக பெத்தபுள்ள!
கடம்பங் குச்செடுத்து 
கழியாட்டம் ஆடவந்தேன்!!
 
 
கைக்கொரு கழிகொண்டு
எதிராக சோடிபோட்டு!
நாட்டாரு கலையிதையே
நயமாக ஆடவந்தேன்!!
 
காணிக்காரன் என்றுசொல்லும்
ஆதியினம் நானப்பா!
மூட்டுக்காணி தலைமையிலே
மந்தையிலே ஆடவந்தேன்!!
 
 
சீதவெற்றம் குச்செடுத்து
சிங்கார உடையுடனே!
மைலாடி மைனர் நான்
மையலாக ஆடவந்தேன்!!
 
கொரண்டிக் கழிகொண்டு
தட்டித்தட்டி ஆடயிலே!
கருப்பன் சலங்கை போல
கலகலன்னு ஒலிக்குதய்யா!!
 
 
மாடனுக்கும் இசக்கிக்கும்
வரலாறு சொல்லிவந்தோம்!
வக்கனையா பாட்டெடுத்து
வரிசை போட்டு ஆடிவந்தோம்!!
 
ழிலைக் கிழங்கை நல்லா
பக்குவமா கிளர்ந்தெடுத்து!
பாபநாசம் உச்சியிலே
பாங்காக வாசம் செய்தோம்!!
 
தாழக்குடி ஆசானவர்
தலையேத்தி தந்தபாடம்!
கணுக்கால் சதிராட
அடவுகட்டி ஆடிவந்தேன்!!
 
 
டும்பின் தோலெடுத்து
உலர்ந்து போனபின்னே!
சுட்டெடுத்த மண்பானை
வாயில்தான் கட்டிவச்சோம்!!
 
ட்டிவச்ச பானையத
உடுக்கக்கட்டை என்போம்!
அதில் வந்த இசையோடு
அழகாக ஆடிவந்தோம்!!
 
ருகையில் கழிஎடுத்து
மறுகையில் துணிய கட்டி!
வட்டமிட்டு ஆடிவந்த
ஒத்தைக்கழி கோலாட்டம்!!
 
 
கைக்கொரு கழிஎடுத்து
முன்நெற்றி மண்பார்க்க! 
வளைஞ்சு ஆடிவந்த
இரட்டக்கழி கோலாட்டம்!!
 
த்தரம் ஒன்னு செஞ்சு
பலவண்ண துணிகள் கட்டி!
வலக்கையில் கழிஎடுத்து
இடக்கையில் துணி பிடித்தோம்!
 
 
ட்டமாக கூடிநின்னு
வந்த இசைக்கேற்ப!
கோலாட்டம் அடிக்கையிலே
துணிகளில் பின்னல் விழும்!!
 
டிவந்த திசைக்கிப்போ
எதிராக அடுத்தகுழு!
நேரெதிரா ஆடயிலே
விழுந்த பின்னல் அவிழ்ந்துவிடும்!!
 
ழகான இந்த ஆட்டம்
கவர்ந்திழுக்கும் ஆட்டமய்யா!
இதற்கான பெயரதுவே
பின்னல் கோலாட்டம் என்பார்!! 
 

தாண்டியா என்பதெல்லாம்
தானாக வந்ததல்ல!
எம்கலைய பார்த்துதானே
தருவித்த கலையப்பா!!
 
காலுக்கும் கைகளுக்கும்
ஒருசேர பணிகொடுத்து!
அழகாக ஆடியது
கனவாக போச்சுதய்யா!!
 
 
சின்னமக்கா பொன்னுமக்கா
சிங்கார கண்ணுமக்கா!
சீரான இக்கலைய
சீரழிக்க வேணாமய்யா!!
 
தோளிலே கைபோட்டு
தோழனென இல்லேனாலும்!
கூனிப்போன எங்களைத்தான்
கோமாளி ஆக்காதய்யா!!
 
ங்குதற்கு காரவீடு
தகுதியா இல்லேனாலும்!
தரணியில் இப்போதும் - நாங்க
தரம் தாழ்ந்து போகலய்யா!!
 
 
குறிப்பு:
 
கடந்த மாதம் 22  ம் நாள் விஜய் தொலைக்காட்சியில் "நீயா-நானா" வில் "தமிழர்களின் பாரம்பரியம்"
பற்றிய விவாதம் அழகாக நடந்தேறியது. பாரம்பரியம் என்பது அவசியமில்லாதது என்று பேசிய நபர்களை
பார்த்தால் பொதுவாக இளைய தலைமுறையினர் என்றே சொல்லலாம்.
"தமிழர்களின் கலைகள்" பற்றிய பேச்சு எழுகையில் நம் பாரம்பரியக் கலைகளை தெரிந்துகொள்ளக் கூட
அவர்கள் விரும்பவில்லை என்று தெளிவாக தெரிந்தது. அதே சமயம் வடநாட்டு மற்றும் மேல்நாட்டு கலைகளுக்கு அவர்கள் தரும் ஆதரவுக்கு மனம் வேதனை அடைந்தது.
 
அதையும் தாண்டி அந்த நிகழ்ச்சியின் நடத்துனர் "திரு.கோபிநாத்" அவர்கள் கலைகளின் தன்மையையும்
அதை ஏன் நீங்கள் வெறுக்கிறீர்கள், நம் கலைகளை அருவெருப்பாய் பார்க்கும் நீங்கள் ஏன்  மற்ற நாட்டு கலைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள்?? என்று மாறி மாறி கேள்விக்கணைகளை தொடுத்து ஒரு நல்ல தீர்மானத்துக்கு வந்தார்.
இந்தப் பதிவின் மூலமாக "திரு. கோபிநாத் " அவர்களுக்கு என் பணிவன்பான வணக்கங்களையும்
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Friday, 13 January 2012

பொங்கட்டும் புதுப்பொங்கல்!!




தவனே! ஆண்டவனே!
அகிலத்தின் முதல்வோனே!
அழகாக பொங்கல் வைத்தோம்
மனமிறங்கி வாருமய்யா!!

பொங்குகிற பொங்கலைப்போல்
மகிழ்விங்கே பொங்கவேணும்!
தைமகளின் கரம்கோர்த்து
எங்களுக்கு அருளுமய்யா!!




முக்கோண பொங்கல் கட்டி
முப்புறமும் தான்வைத்து
மூலவன வேண்டிவந்தோம்
குலம்காக்க வேணுமய்யா!!

வாழையையும் மஞ்சளையும்
குலைகுலையா கட்டிவைச்சு!
மங்கள வடிவோனை
மண்டியிட்டு வணங்கிவந்தோம்!!




நாற்புறமும் கரும்பாலே
பந்தலொன்னு போட்டுவைச்சு!
நடுவாலே பொங்கவைச்சோம்
நல்வரமும் தாருமய்யா!!

னைவெல்லம் பச்சரிசி
பக்குவமா கலந்துவைச்சி!
சர்க்கரை பொங்கல் வைச்சோம்
சந்ததிய காத்திடய்யா!!




ண்மணக்கும் மண்பானை
பொங்கவைக்கும் பொங்கப்பானை!
பொங்கி வருகையிலே
குலவையிட்டு ஆர்பரித்தோம்!!

வாழையிலை விரிச்சிவைச்சு
படிநெல்ல தான்பரப்பி!
விளைஞ்சிருந்த வெள்ளாமைய
உனக்காக படைச்சிபுட்டோம்!!




ந்துமுக விளக்கேற்றி
அன்புடனே தொழுதுவந்தோம்!
ஆறுமுக விளக்கேற்றி
திருவடிய நாடிவந்தோம்!!

ந்திருந்த காலமெல்லாம்
நான்பட்ட துன்பம் போதும்!
இனிவரும் காலத்துல
உழவுத் தொழில் வளரவேணும்!!

தாவி வா தைமகளே
எம்குலத்து திருமகளே!
என்வீட்டு முற்றத்தில
தவழ்ந்திட வா பொன்மகளே!!


ந்தப் பாடலை நானும் என் மனைவியும் சேர்ந்து பாடி இங்கே
வெளியிட்டிருக்கிறேன். இது என் முதல் முயற்சி.





ங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.



அன்பன்
மகேந்திரன்

Wednesday, 7 December 2011

ஒயிலாடி வந்தேன்!!!







தன்னேனன்னே நானே
தன தன்னேனன்னே நானே!
தன்னேனன்னே நானே
தன தன்னேனன்னே நானே!!

ஊருக்கொரு கம்மாக்கரை
கரையோரம் அரசமரம்!
அரசமரம் சும்மாயில்ல
வேம்போடு பிணைஞ்சிருக்கு!!





ஆலோல அரசமரம்
அடியிருக்கும் பிள்ளையாரே!
ஒயிலாடி வந்த எமை
ஒசந்திருக்க செய்யுமய்யா!!

 
சித்திபுத்தி நாயகனே
சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்!
களிப்பான ஒயிலாட்டம் 
காலம்வெல்ல வேணுமய்யா!!
 
 

அழகான ஆட்டமிது
அலங்கார ஆட்டமிது!
ஒளிஞ்சிருக்கும் பொன்னுமக்கா 
ஒயிலாட்டம் காணவாங்க!!

பாரிலே பரந்திருக்கும்

பரணிபாயும் ஊரய்யா!
நெல்லைச் சீமைவிட்டு
ஒயிலாட்டம் ஆடிவாறேன்!!
 
 
ஆளுக்காளு உரசாம
இரண்டடி தள்ளிநின்னு!
தென்னந் தோப்பினிலே
கன்றுபோல நின்னிருந்தோம்!!
 
ஒத்த நிறத்தினிலே
ஒய்யார தலைப்பாகை!
சுத்தி தலையில்கட்டி
ஒயிலாக ஆடிவந்தோம்!!
 
 
சிவந்த நிறத்தினிலே
துணியொன்றை கைபிடித்து!
தமிழ்மணக்கும் வீதியெல்லாம்
மயில்போல ஆடிவந்தோம்!!
 
தவளப் பானையில
குருமாட்டின் தோல்கட்டி!
வல்லிசை எழுப்பியங்கே
துள்ளி துள்ளி ஆடிவந்தோம்!!
 
 
குமரிப் பெண்போல
கிளுக்கின்னு சிரிச்சிவரும்!
கெண்டைக்கால் சலங்கையிட்டு
அடவுகட்டி ஆடிவந்தோம்!!
 
பச்சைத்துணி கைகொண்ட
அண்ணாவி பாடிவர!
சங்கத்தமிழ்ச் சாலையிலே
சந்தம்போட்டு ஆடிவந்தோம்!!
 
 
தலைமேல கைகூப்பி
ஒருகாலை நிலமடித்து!
தரைதொட்டு வணங்கியிங்கே
தாளம்போட்டு ஆடிவந்தோம்!!
 
மெதுவாக ஆட்டத்தை
மெத்தனமா ஆரம்பிப்போம்!
உச்சம் போகையிலே
கிறுகிறுன்னு ஆடிவந்தோம்!!
 
 
பூப்போல அடியெடுத்து
மெதுவாக ஆடியதை!
தக்கு எனச் சொன்னாரே
தகுதியான பெரியவுக!!
 
புயல்போல உருவெடுத்து
உக்கிரமா ஆடியதை!
காலம் எனச் சொன்னாரே
களங்கண்ட பெரியவுக!!
 
 
கலைகள் பிறப்பெடுத்து
அரசாண்ட போதினிலே!
காலமெனும் அடவுதனை
கலகலக்க ஆடியதை!
மறைந்திருந்து பார்த்திருந்த
மங்காத மாதரசி
மாலையிட வந்தனரே!!
 
 
கழுத்துக்கு கீழேயும்
இடுப்புக்கு மேலேயும்!
வளையாம ஆடிவந்தோம்
வாத்தியாரு வடிச்சுவைச்ச
இலக்கணந்தான் மாறாம!!
 
கெண்டைக்கால் கொலுசுசத்தம்
கொக்கரித்து ஒலித்திடவே! 
நல்லபல கதைசொல்லி
நாடெல்லாம் ஆடிவந்தோம்!!
 
 
ஒயிலாக ஆடிவந்த
நாட்களெல்லாம் நிழலாக!
கலிகாலம் இப்போது
கண்மறைஞ்சு போச்சுதய்யா!!
 
கண்போல காத்துவந்த
அழகான கலையிதுவோ!
கண்ணுக்கு முன்னால 
கற்பூரமா கரைகையிலே! 
பரிதவிக்கும் எம்மனசு
குறுகிப்போயி நிக்குதய்யா!! 
 
 
 
அன்பன்
மகேந்திரன்