Powered By Blogger

Monday, 9 December 2013

தெருக்கூத்து தெம்மாங்கு !! - பாகம் 2

கட்டியங்காரன் அறிமுகம் !!!


க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவரை கோமாளி என்ற சொல் கொண்டு அழைக்கிறோம். கூத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்படும்போதும், மாந்தர்கள் தங்கள் பாடல்களை மறந்து தினறுகையிலும் கட்டியங்காரன் தான் அருமருந்து. அது மட்டும் அல்லாது தோழி, காவல்காரன், மந்திரி, தூதுவன், ஒற்றன், இப்படி உதிரி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சகலகலா வல்லவர். கட்டியங்காரன் பற்றி இப்பாகத்தில் பாடலாக தருகிறேன், என் குரலில் பாடியும் தருகிறேன். மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்......

லால தோப்புக்குள்ளே 
அமர்ந்திருக்கும் நாயகனே - உன்னடிய 
பணிந்துவந்தேன் - ஐயா 
உத்தமரே காக்கவேணும்!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


ட்டிளம் காளையிவன் 
கட்டியங்காரன் எந்தன் பெயர்
பார்போற்றும் கலையிதுவின் - ஆமா 
உயிர்நாடி நான் தானய்யா!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!
ண்போன்ற காவியத்தை 
கதையாக்கி நடிக்கும்போது    
இடையிடையே தொய்கையிலே - நானும்
காண்போரை கவர்ந்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


கோடிட்ட இடங்களிலே 
கோமகனாய் வாழ்ந்துவந்தேன் 
கோலேச்சும் என்னைக்கண்டு - ஐயா 
கோமாளி என்றனரே !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!
வைக்கோலால் செய்யப்பட்ட 
குடைபோல விரிந்திருக்கும் 
உடைகளில் நான் வருகையிலே - ஆமா 
காண்போரின் நகையொலிக்கும் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


தையில் வரும் நாயகர்கள் 
கதைப்பாட்டு மறக்கையிலே 
அதையெடுத்து நான் பாடி - அழகா 
கலை உயிர்ப்பை காத்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


==== தெருக்கூத்து தொடரும் அன்பன் 
மகேந்திரன்

31 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமை மகேன்... ரசித்தேன்.

த.ம, 2

வெற்றிவேல் said...

வணக்கம் அண்ணா...

பாடலை இயற்றியதோடு அல்லாமல் பாடியும் வெளியிட்டுள்ளது சிறப்பாக உள்ளது அண்ணா...

கட்டியங்காரன் என்றால் யார், தெருக்கூத்துப் பாடலில், அவர்களது பங்களிப்பு என்ன என்பதை தங்களது பாடலில் அறிந்து கொண்டேன்... நன்றி அண்ணா...

பாடலை இயற்றியும் பாடியும் வெளியிட்டுள்ளது புது முயற்சி... முயற்சி வெற்றி பெறட்டும்... வாழ்த்துக்கள் அண்ணா... ரசித்தேன்...

இராஜராஜேஸ்வரி said...

கதையில் வரும் நாயகர்கள்
கதைப்பாட்டு மறக்கையிலே
அதையெடுத்து நான் பாடி - அழகா
கலை உயிர்ப்பை காத்துவந்தேன் !!

கூத்திலே கோமாளி நுழைந்த மாதிரி -
என்று சொல்லுவார்கள்..!

Yaathoramani.blogspot.com said...

வரிவடிவில் படித்தும்
குரல் வழி கேட்டும் மகிழ்ந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
( மிகச் சரியாகப் பாடவேண்டும்
எனக் கூடுதல் கவனம் கொண்டதாலோ என்னவோ
கட்டியங்காரனுக்குரிய உற்சாகத்துடன் கூடிய
கம்பீரம் கொஞ்சம் குறைவாகக்
காணப்பட்டதுபோல் படுகிறது
அடுத்த பதிவில் சரியாகிவிடும் என நினைக்கிறேன்)

Yaathoramani.blogspot.com said...

tha.ma 4

அம்பாளடியாள் said...

சிறப்பான கூத்துப் பாடல் .
கட்டியங்காரன் மனதில் தோன்றிய
எண்ணைகளை மிக அழகாக வெளிக்காட்டியுள்ளார்
படங்களும் ஓர் அருமையான தேர்வு .வாழ்த்துக்கள்
சகோதரா தொடர்ந்தும் வலையில் எழுதுங்கள் .

இளமதி said...

உங்கள் முயற்சி மிக அருமை!
கட்டியங்காரனின் பொருள் என்னவென
அழகாகச் சொன்னீர்கள் பாடல் வரிகளில்!

உங்கள் குரலில் பாடியும் சிறப்பித்துள்ளீர்கள்!
நன்றாகவே இருக்கின்றது!
ரமணி ஐயா கூற்றினையே நானும் வழிமொழிகிறேன்!
கட்டியங்காரரை மனக்கண்ணில் காணும்போது
உங்கள் குரலும் இன்னும் ஓங்கி கம்பீரமாக ஒலித்தால் மிகச்சிறப்பாக இருக்கும்!
முயற்சி அருமை! அடுத்தடுத்த பதிவுகளில் சரியாகிவிடுமென எண்ணுகிறேன்!

மனமுவந்த நல் வாழ்த்துக்கள் சகோ!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! உருகி விட்டேன்... தொடர வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும் பாடலும் மிகவும் ரஸிக்க வைத்தன ......

தந்தோம் தந்தோம் தனதன தந்தோம் தனதோம் !! ;)))))

பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

இதை நேரில் பார்த்து ரஸித்து அனுபவித்து என் பதிவினிலும் கொடுத்துள்ளேன்.

http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html

மகிழ்நிறை said...

தெருக்கூத்தை பற்றி ஒரு தெம்மாங்கு
இரண்டாம் பாகத்தை ஆர்வத்தோடு
எதிர் பார்த்தேன் .இன்னும் தெருஞ்சுக்க எவ்ளோ இருக்கு.!!!!!!!!!!!!!!!
அருமை அண்ணா

Unknown said...

அந்த நாள் ஞாபகம் ( கிராமத்திலே கூத்துப் பார்த்தத) வந்ததே!

Jayadev Das said...

Super, pl continue.................

அருணா செல்வம் said...

நான் நவராத்திரி படத்தில் தான் தெருகூத்து பார்த்திருக்கிறேன்.
மற்றபடி பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.

ஆனால் இங்கே (கற்பனையில்) காட்சியுடன் பார்த்தது போல் இருக்கிறது.
அருமை மகி அண்ணா.

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... அருமையான பகிர்வு...

தனிமரம் said...

அருமையான பகிர்வு தொடரட்டும் அண்ணாச்சி கூத்து.

கரந்தை ஜெயக்குமார் said...

வரிவடிவில் படித்தும்
குரல் வழி கேட்டும் மகிழ்ந்தேன்
தொடரட்டும் தங்களின் பணி
நன்றி ஐயா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான முயற்சி, கூத்தை கற்பிக்கும் வாத்தியார் பல சமயங்களில் கட்டியக் காரராக இருப்பார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதை அழகாக சொல்லி விட்டீர்கள். அருமை மகேந்திரன்.

டிபிஆர்.ஜோசப் said...

இக்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன்.//

நம்முடைய வாழ்க்கை மேடையிலும் இப்படியொருவர் இருந்து நாம் சோர்வடையும்போதெல்லாம் வந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? கட்டியங்காரன் கோமாளி வேடம் இட்டாலும் அவன் செய்கைகள் யாவும் நன்மையே பயக்குகிறதே... அருமையான அறிமுகம். தொடருங்கள்.

அ.பாண்டியன் said...

அன்பு சகோதரருக்கு வணக்கம்
தெருக்கூத்துவின் கட்டியங்காரனுக்கு தங்கள் கவி வரிகளால் சிறப்பு சேர்த்த விதம் கண்டு நெகிழ்ந்தேன், அற்புதமான வரிகளைப் பாடியும் ஒலி வடிவாக தந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி. தொடரட்டும் தெருக்கூத்து. வாழ்த்துகள் சகோதரரே. பகிர்வுக்கு நன்றிகள்.

மனோ சாமிநாதன் said...

உங்களின் கூத்துப்பாடல் மிக வித்தியாசமானது.! கவிதையும் குரலும் மிக இனிமை, அருமை!

Kasthuri Rengan said...

ஆகா... அருமை...

இந்தக் கலையை உலகறியச்செய்வதில் உங்கள் பங்கு போற்றத்தக்கது ..

Rathnavel Natarajan said...

தெருக்கூத்து தெம்மாங்கு !! - பாகம் 2
நன்றி திரு மகேந்திரன்
எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள்.

ஸாதிகா said...

பாடலை விழி வழியாகவும் செவி வழியாகவும் கேட்டது அருமையாக உள்ளது.தெம்மாங்கு அருமை.வாழ்த்துக்கள் சகோ.

வெற்றிவேல் said...

அடுத்த பதிவு????

அம்பாளடியாள் said...

எண்ணமெல்லாம் இன்பமது தளைத்தோங்க
வண்ண மயமாய் வாழ்வது இனித்திடவே
வருகின்ற புத்தாண்டில் நீங்களும் உங்கள்
குடும்பத்தினரும் மகிழ்வோடு திளைத்திருக்க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா .

Unknown said...

வணக்கம் சகோதரரே தெருக்கூத்து மிக அருமை தமிழ்க்கலைகள் தமிழர்களின் தனிச்சிறப்பு அதை நினைவு படுத்தும் வகையில் கட்டியக்காரனின் கலகலப்பான நடிப்பும் உரையாடலும் சிறப்பான முறையில் தங்களின் பதிவு அருமை வாழ்த்துக்கள்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!

பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!

பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!

பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Iniya said...

அருமை சகோதரரே !
தெருக்கூத்து காலப் போக்கில் அருகி வருகிறது . அழிந்து விடாது காத்தல் அவசியமே. மீண்டும் இவைகளை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. அத்துடன் நிற்காது படியும் அசத்திவிட்டீர்கள். இளமதி சொல்வது போல் தூக்கத்தில் இருப்பவரை எழுப்பும் விதமாக அமையும் அந்த ஓங்கும் குரல். அப்படி ஓங்கி இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும். உங்களால் முடியும் எனவே அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்.
நன்றி தொடர வாழ்த்துக்கள்.....!

Anonymous said...

நல்ல சிந்தனையுடன் தொடர்வது நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment