Powered By Blogger

Wednesday, 7 December 2011

ஒயிலாடி வந்தேன்!!!தன்னேனன்னே நானே
தன தன்னேனன்னே நானே!
தன்னேனன்னே நானே
தன தன்னேனன்னே நானே!!

ஊருக்கொரு கம்மாக்கரை
கரையோரம் அரசமரம்!
அரசமரம் சும்மாயில்ல
வேம்போடு பிணைஞ்சிருக்கு!!

ஆலோல அரசமரம்
அடியிருக்கும் பிள்ளையாரே!
ஒயிலாடி வந்த எமை
ஒசந்திருக்க செய்யுமய்யா!!

 
சித்திபுத்தி நாயகனே
சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்!
களிப்பான ஒயிலாட்டம் 
காலம்வெல்ல வேணுமய்யா!!
 
 

அழகான ஆட்டமிது
அலங்கார ஆட்டமிது!
ஒளிஞ்சிருக்கும் பொன்னுமக்கா 
ஒயிலாட்டம் காணவாங்க!!

பாரிலே பரந்திருக்கும்

பரணிபாயும் ஊரய்யா!
நெல்லைச் சீமைவிட்டு
ஒயிலாட்டம் ஆடிவாறேன்!!
 
 
ஆளுக்காளு உரசாம
இரண்டடி தள்ளிநின்னு!
தென்னந் தோப்பினிலே
கன்றுபோல நின்னிருந்தோம்!!
 
ஒத்த நிறத்தினிலே
ஒய்யார தலைப்பாகை!
சுத்தி தலையில்கட்டி
ஒயிலாக ஆடிவந்தோம்!!
 
 
சிவந்த நிறத்தினிலே
துணியொன்றை கைபிடித்து!
தமிழ்மணக்கும் வீதியெல்லாம்
மயில்போல ஆடிவந்தோம்!!
 
தவளப் பானையில
குருமாட்டின் தோல்கட்டி!
வல்லிசை எழுப்பியங்கே
துள்ளி துள்ளி ஆடிவந்தோம்!!
 
 
குமரிப் பெண்போல
கிளுக்கின்னு சிரிச்சிவரும்!
கெண்டைக்கால் சலங்கையிட்டு
அடவுகட்டி ஆடிவந்தோம்!!
 
பச்சைத்துணி கைகொண்ட
அண்ணாவி பாடிவர!
சங்கத்தமிழ்ச் சாலையிலே
சந்தம்போட்டு ஆடிவந்தோம்!!
 
 
தலைமேல கைகூப்பி
ஒருகாலை நிலமடித்து!
தரைதொட்டு வணங்கியிங்கே
தாளம்போட்டு ஆடிவந்தோம்!!
 
மெதுவாக ஆட்டத்தை
மெத்தனமா ஆரம்பிப்போம்!
உச்சம் போகையிலே
கிறுகிறுன்னு ஆடிவந்தோம்!!
 
 
பூப்போல அடியெடுத்து
மெதுவாக ஆடியதை!
தக்கு எனச் சொன்னாரே
தகுதியான பெரியவுக!!
 
புயல்போல உருவெடுத்து
உக்கிரமா ஆடியதை!
காலம் எனச் சொன்னாரே
களங்கண்ட பெரியவுக!!
 
 
கலைகள் பிறப்பெடுத்து
அரசாண்ட போதினிலே!
காலமெனும் அடவுதனை
கலகலக்க ஆடியதை!
மறைந்திருந்து பார்த்திருந்த
மங்காத மாதரசி
மாலையிட வந்தனரே!!
 
 
கழுத்துக்கு கீழேயும்
இடுப்புக்கு மேலேயும்!
வளையாம ஆடிவந்தோம்
வாத்தியாரு வடிச்சுவைச்ச
இலக்கணந்தான் மாறாம!!
 
கெண்டைக்கால் கொலுசுசத்தம்
கொக்கரித்து ஒலித்திடவே! 
நல்லபல கதைசொல்லி
நாடெல்லாம் ஆடிவந்தோம்!!
 
 
ஒயிலாக ஆடிவந்த
நாட்களெல்லாம் நிழலாக!
கலிகாலம் இப்போது
கண்மறைஞ்சு போச்சுதய்யா!!
 
கண்போல காத்துவந்த
அழகான கலையிதுவோ!
கண்ணுக்கு முன்னால 
கற்பூரமா கரைகையிலே! 
பரிதவிக்கும் எம்மனசு
குறுகிப்போயி நிக்குதய்யா!! 
 
 
 
அன்பன்
மகேந்திரன்


76 comments:

RAMA RAVI (RAMVI) said...

//கண்போல காத்துவந்த
அழகான கலையிதுவோ!
கண்ணுக்கு முன்னால
கற்பூரமா கரைகையிலே!
பரிதவிக்கும் எம்மனசு
குறுகிப்போயி நிக்குதய்யா!! //

ஆம்,வருத்தமாக இருக்கு.
அழிந்து வரும் கலைக்கு தங்களின் பாட்டு உயிரோட்டத்தை கொடுக்கிறது. தொடருங்கள் உங்களின் அருமையான பணியினை.

Unknown said...

பழங்கலைகளின் நிலைமை உங்க பதிவு மூலம் உணர முடிகிறது மாப்ள!

கீதமஞ்சரி said...

அட, அருமையான ஒயிலாட்டத்தை நேரிலே கண்டது போல் அழகான பதிவு. பழங்காலக் கலைகளை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் இதுபோன்ற பதிவுகளுக்குப் பாராட்டுகள். இன்றையத் தலைமுறையினர் பலருக்கும் புரிந்திராத பல செய்திகளை உள்ளடக்கிய அரிய பதிவு. பாடலைப் பாடும்போடு மனதும் ஒயிலாட்டமாடுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

கரையோரம் அரசமரம்!
அரசமரம் சும்மாயில்ல
வேம்போடு பிணைஞ்சிருக்கு!!

என்ன அழ்கான அருமையான தரிசனம்..

மனம் நிறைகிறது!

இராஜராஜேஸ்வரி said...

கண்போல காத்துவந்த
அழகான கலையிதுவோ!
கண்ணுக்கு முன்னால
கற்பூரமா கரைகையிலே!
பரிதவிக்கும் எம்மனசு
குறுகிப்போயி நிக்குதய்யா!!


கனக்க வைக்கிறது
கற்பூரமாய் கரையும் கலை..

மும்தாஜ் said...

ஒயிலாட்டத்தின் பெருமைகளை தான் பாணியில் சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் பதிப்புகள்... அறியட்டும் மக்கள் அனைவரும் கலைகளின் பெருமைகளை...

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
நல்லா இருக்கீங்களா?

உங்களிடமிருந்து முன்னரும் ஒயிலாட்டம் பற்றி ஓர் கவிதையினைப் படித்தாக நினைவு!


உங்களின் இக் கவிக்குத் தலை வணங்குகிறேன்! எம் பாரம்பரியக் கலைகள் அழிவுறா வண்ணம் இன்றைய சந்ததியிடமும் சேர வேண்டும் எனும் நோக்கில் அவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளுகின்ற வகையில் புதுக் கவிதையில் சந்தம் கொஞ்ச எழுதியிருக்கிறீங்க.

நன்றிகள் அண்ணா!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல்.

சக்தி கல்வி மையம் said...

கண்போல காத்துவந்த
அழகான கலையிதுவோ!
கண்ணுக்கு முன்னால
கற்பூரமா கரைகையிலே!
பரிதவிக்கும் எம்மனசு
குறுகிப்போயி நிக்குதய்யா!! // உண்மை நண்பா. இந்த கலைகள் அழியா வண்ணம் பாதுகாக்க வேண்டும்..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கலையை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பா!
நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படிப்பவர்களையும் கூடவே ஆட வைக்கிறது...

அழகிய கவிதை வடிவம்...

தமிழகத்தில் கொஞ்ச கொஞ்சமாக குறைந்துக்கொண்டும் வரும் ஒயிலாட்டம் பற்றிய தங்களின் இந்த படைப்புக்காக தங்களை வாழ்த்துகிறேன்...

மாலதி said...

உங்களின் அனைத்து இடுகைகளும் சிறந்த ஆக்கங்களைத்த தருகிறது அவைமட்டு மில்லாமல் ஒரு மாற்றத்தை யும் அல்லவா பதிவு செய்கிறது இருத்தலை உடைத்து காத்தலை செய்கிறது உண்மையில் பாராட்ட வேண்டிய போற்ற வேண்டிய சிறந்த பணி பாராட்டுகள் நன்றி .

ராஜா MVS said...

நல்ல அருமையான பகிர்வு...
பாடலை படிக்கும்போது சிறுவயதில் ஒயிலாட்டம் பார்த்த நினைவுகள் மனதில் ஆடுகிறது...
படங்களும் அருமை... நண்பரே...

வாழ்த்துகள்....

குறையொன்றுமில்லை. said...

கண்போல காத்துவந்த
அழகான கலையிதுவோ!
கண்ணுக்கு முன்னால
கற்பூரமா கரைகையிலே!
பரிதவிக்கும் எம்மனசு
குறுகிப்போயி நிக்குதய்யா!!

இனிமேல இந்தக்கலைகள் எல்லாம் கவிதையிலும் பதிவுகளிலும் தான் பார்ர்க்கமுடியும்போல இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

தும் தக தும் தக தும் தக தும் தக, போடு தாளம் போடு பாடு பாட்டு பாடு, கலக்கல் மக்கா...!!!

சுதா SJ said...

பாஸ் நீங்க ஒரு பழமை&இயற்க்கை விரும்பி.... சூப்பர்

சுதா SJ said...

நீங்க பிள்ளையாரை அழைக்கும் போது எனக்கு எழுந்து ஆடனும் போலவே இருந்திச்சு.... ரியலி பாஸ்.

சுதா SJ said...

வார்த்தைகளை அழகாய் கோர்க்கிறீர்கள்... ரெம்ப ரசித்தேன் பாஸ்.... உங்க பதிவுகளில் அதிகம் மண் மணம் வீசுது பாஸ்

shanmugavel said...

//கண்ணுக்கு முன்னால
கற்பூரமா கரைகையிலே!
பரிதவிக்கும் எம்மனசு
குறுகிப்போயி நிக்குதய்யா!! //

மண்ணில் அமர்ந்து சொக்கிப்போய் ரசித்த கலைகள் .இன்று நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.வார்த்தைகளை சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.அருமை மகேந்திரன்.

சென்னை பித்தன் said...

//கண்போல காத்துவந்த
அழகான கலையிதுவோ!
கண்ணுக்கு முன்னால
கற்பூரமா கரைகையிலே!
பரிதவிக்கும் எம்மனசு
குறுகிப்போயி நிக்குதய்யா!! //
கால மாற்றத்தின் தவிர்க்க இயலாத வருத்தும் நிதர்சனம்.
நன்று.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
உங்களின் கிராமிய காதலும் கலையும் ஊர் அறிந்த விடயம் என்றாளும் ஒவ்வொரு முறையும் அது தரும் உணர்வுக்கு நான் அடிமை...

மஞ்சள் உடையில் இருக்கும் படங்கள் ஈழத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது.. இப்பதிவை எனது முக நூலிலும் நாற்று குழுமத்திலும் பகிர்கிறேன்..
அருமையான பகிர்வுக்கு நன்றி!!

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,

ஒயிலாட்டம் மிகவும் அழகான நேர்த்தியான ஆட்டம், இன்னும் தென்மாவட்டங்களில் மட்டும் உயிரோடு இருக்கிறது.
மனதைக்கவரும் இக்கலை பன்நெடுங்காலம் வாழ வேண்டும்.
தங்களின் மேன்மையான கருத்துக்கும் பாராட்டுக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,

தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி மும்தாஜ்,
தங்களின் செறிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனம்நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நிரூபன்,

இதற்குமுன் தப்பாட்டம்,கரகாட்டம்,கூத்து,மற்றும் வில்லிசை ஆகியவற்றை
சொல்லியிருந்தேன். அத்தனை கலைகளையும் சேர்த்து கலைகள் காக்க வேணுமய்யா என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.
ஒயிலாட்டம் பற்றிய முதல் தனிக்கவிதை இதுதான்.
என் படைப்புகளை தொடர்ந்து படித்து என்னை மேலும் பட்டைதீட்டும்
கருத்தாளர்களில் நீங்களும் ஒருவர். இதற்கு நான் என்றென்றும் நன்றியுடன்
கடமையாற்றுவேன்.

தங்களின் வாழ்த்துக்கும் என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்.,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,

ஆம் நண்பரே, ஒயிலாட்டப்பாடலை கேட்டாலே ஆட்டம் தானாக வரும், அத்தனை அழகான ஆட்டம் அது.தங்களின் வாழ்த்துக்கும் என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,

நம்மால் இயன்ற அளவு அடுத்த தலைமுறைக்கு இக்கலைகளை
எடுத்துச் சொல்லவே இக்கவிதை வடிவம்.

தங்களின் ஆழ்ந்த கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

துரைடேனியல் said...

Nallarukku Sago.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,

நீங்கள் கூறியது தான் என் கவலையும். ஆனால் நாம் நினைத்தால் வாழவைக்கலாம். நம் வீட்டு விஷேசங்களுக்கும் நம் வீட்டிற்கு அருகில் நடக்கும் கோவில் திருவிழாக்களிலும் இக்கலைகளை நடத்த முன்னேற்பாடு செய்யலாம்.
நடக்கும் என்ற நம்பிக்கையுடன்......


தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துஷ்யந்தன்,

தங்களின் தொடர் ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

துரைடேனியல் said...

TM 10.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னை பித்தன் ஐயா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,

தங்களின் தொடர் ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

அம்பலத்தார் said...

//அண்ணாவி பாடிவர!
சங்கத்தமிழ்ச் சாலையிலே
சந்தம்போட்டு ஆடிவந்தோம்!!//
வணக்கம் மகேந்திரன், சந்தககவிதையில் அழிந்துவரும் கலைநயத்தைக் கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.

அம்பலத்தார் said...

எத்தனை அழகிய கிராமியக் கலைகளை அநியாயத்திற்கு இழந்துவருகிறோம்.

vetha (kovaikkavi) said...

''..ஆடிவந்த
நாட்களெல்லாம் நிழலாக!
கலிகாலம் இப்போது
கண்மறைஞ்சு போச்சுதய்யா...''
அழகாகச் சந்தம் கொஞ்சுது.வாழ்த்துகள் சகோதரா!
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ஷைலஜா said...

அழிந்துவரும் கலைகளை நினைக்க வைக்கிற வரிகள்... உங்களுக்கு அரிய கலைகள் மேல் உள்ள அக்கறையை நினைத்துப் பெருமையாய் உள்ளது மகேந்திரன்.

ஹேமா said...

உண்மையில் எனக்கு ஒயிலாட்டம் தெரியாது.உங்கள் வரிகளில் அறிகிறேன் நன்றி !

Unknown said...

// ஒயிலாக ஆடிவந்த
நாட்களெல்லாம் நிழலாக!
கலிகாலம் இப்போது
கண்மறைஞ்சு போச்சுதய்யா!!

கண்போல காத்துவந்த
அழகான கலையிதுவோ!
கண்ணுக்கு முன்னால
கற்பூரமா கரைகையிலே!
பரிதவிக்கும் எம்மனசு
குறுகிப்போயி நிக்குதய்யா//

மகி! தங்கள் வருத்தம்
நியாமானதே பழங்கால கலைகள்
அழியாமல் காக்க வேண்டியது
அரசின் கடமை1
அருமையான சந்தம்! அற்கேற்ற படங்கள்!
வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

மூன்றுமுறை முயன்றும்
ஓட்டு பதிவாகவில்லை
கவனிக்க!

புலவர் சா இராமாநுசம்

வெங்கட் நாகராஜ் said...

ஒயிலாட்டம் போலவே ஒயிலான கவிதை. வாழ்த்துகள் நண்பரே...

Yaathoramani.blogspot.com said...

ஒயிலாட்டத்தின் சிறப்புகளை மட்டும் சொல்லாது
அதன் சூட்சுமங்களை சொல்லிப் போகும் விதமும் அதன்
நசிவினைச் சொல்லிப் போகும் விதமும்
படங்களும் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

SURYAJEEVA said...

கற்பூரம் போல் தான் கரைகிறது...

Unknown said...

அழகான பதிவு நண்பரே..

இரண்டு நாட்களுக்கு முன்னர் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல்..

நாட்டுப்புற கலைஞர்களின் குழுவினருடன் பார்த்து மகிழ்ந்தேன்..

அக்குழுவினர் பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று காவடி, மயிலாட்டம், பொய்கால் குதிரை, கரகம் என பல கலைகளையும் நடத்தி வருகிறேன் என்று பெருமையாகச் சொன்னார்கள்.

நம் நாட்டில் அதன் மதிப்பு குறைந்துவிட்டதையும் அவர் குறிப்பிடத்தவறவில்லை..

இதுபோன்ற இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் தேவை..

நம் பண்பாடுகளை அடையாளப்படுத்த..

தொடரட்டும் தங்கள் அரும்பணி..

M.R said...

அருமை நண்பரே

இதனை படித்து வரும்பொழுது மனம் அவர்கள் கூடவே பாடி ஆடி வந்தது .

arasan said...

அன்பருக்கு வணக்கம்...
தமிழன் தெரிந்து தொலைத்த பல முக்கிய கலைகளில்
இந்த மிகப்பெரிய கலையும் ஒன்றுங்க ...
முதலில் நீங்க அடுக்கி வந்த சொற்களை கண்டு என்னை மறந்தே போனேன் ..
அவ்வளவு அழகாக , வடிவாக இருந்தது ...
கண்ணுக்குள் வைத்து தாங்க வேண்டிய நாம் தான் அழித்தோம் நாகரிக மோகம் என்கிற ஒரு போர்வையினால் //
இதன் தாக்கம் இப்போ தெரியாது இன்னும் சில வருடங்கள் கழித்து ஏட்டில் படிக்கும் நெஞ்சு உறுத்தும் ...
என்ன பண்ணுவது .... எல்லாம் மாற்றம் என்ற மாய வலைக்குள்...

தரமான படைப்புக்கு வாழ்த்துக்கள் அன்பரே

கோகுல் said...

வணக்கம் நண்பரே!இரண்டு மூன்று முறை மெட்டுப்போட்டு படித்துப்பார்த்தேன்.
அருமை.
தொடர்ந்து உங்கள் பதிவுகளில் வாழ்ந்து
வருகின்றன அழிந்து வரும் கலைகள்.பாராட்டுக்கள்!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அம்பலத்தார்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,

என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா,

தமிழ்மணம் சில நேரங்களில் இப்படி கோளாறு செய்கிறது ஐயா.

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,

பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகள் இன்னும் நம்
பாரம்பரிய கலைகள் பற்றிய செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டு
தான் இருக்கின்றன. நமக்கு தான் அதையெல்லாம் பார்ப்பதற்கு நேரமே போதவில்லை.
ஊடகங்கள், அரசு, மக்கள் நினைத்தால் கலைகளை வாழ வைக்கலாம்.

என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும், மேன்மையான கருத்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அரசன்,

சரியாகச் சொன்னீர்கள். பிற்காலங்களில் ஏட்டில் படிக்கையில் தான்
நாம் இழந்ததை எண்ணி வருத்தப் படுவோம்.
நாகரிக மோகத்தால் நாம் கலைகளை இழக்கிறோம் என்று நீங்கள்
சொன்னது பொருத்தமான வார்த்தைகள். அப்படியே நாம் நினைவு வைத்திருந்தாலும்
அது மருவி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே கரகாட்டம் பாலியல் உணர்வூட்டும் ஆட்டமாகவே மாறி விட்டது..
மற்ற கலைகள் குடித்து கும்மாளமடிக்க வேண்டியே செய்கிறார்கள்.
மக்கள் நம் கலாச்சாரம் தழுவிய கலைகளை கண்போல காக்க வேண்டும்.
நாளை நம்மை அடையாளம் காட்டப் போவது கலைகள் தான்.


தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

Sakunthala said...

கரகாட்டம் தப்பாட்டம் வில்லுப்பாட்டு
வரிசையில் மற்றுமோர் முத்திரை படைக்கும்
அருமையான பதிவு ..
வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

ஆளுக்காளு உரசாம
இரண்டடி தள்ளிநின்னு!
தென்னந் தோப்பினிலே
கன்றுபோல நின்னிருந்தோம்!!


மனசு ஆட்டம் போடுது அழகான படங்களுடன் கவிதை படிக்க.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி சகுந்தலா,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரிஷபன்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

சசிகலா said...

சிவந்த நிறத்தினிலே
துணியொன்றை கைபிடித்து!
தமிழ்மணக்கும் வீதியெல்லாம்
மயில்போல ஆடிவந்தோம்!!

தவளப் பானையில
குருமாட்டின் தோல்கட்டி!
வல்லிசை எழுப்பியங்கே
துள்ளி துள்ளி ஆடிவந்தோம்!!
மனசு ஆட்டம் போடுது

kupps said...

நாட்டுப்புற கலைகளின் மகத்துவத்தை மறவாமல் அழகிய கவிதை வாயிலாக அவ்வப்போது வெளிப்படுத்தும் தங்களின் முயற்சிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

RaniKanna said...
This comment has been removed by the author.

Post a Comment