Powered By Blogger

Sunday, 28 August 2011

முளைப்பாரிக் கும்மி!!


தன்னானே நானேனன்னே
தானேனன்னே  நானேனன்னே
தன்னான தானேனன்னே
தானேனன்னே நானேனன்னே!!

கும்மியடி கும்மியடி
குலம்விளங்க கும்மியடி
சோழ பாண்டி நாடெல்லாம்
செழித்துவர கும்மியடி!!

கும்மியடி கும்மியடி
குலவையிட்டு கும்மியடி
விதைச்ச விதையெல்லாம்
விளைஞ்சிவர கும்மியடி!!

பஞ்சமெல்லாம் தீர்க்கவந்த
பாகீரதன் போல இங்கே
பரணி ஆத்துத்தண்ணி
பாஞ்சுவர கும்மியடி!!
சீரான கலையத்தில
சித்திரச்சம்பா நெல்லெடுத்து
வேண்டியதை கேட்டு இங்கே
பொங்கலிட்டு கும்மியடி!!மஞ்சள் முகத்தவளாம்
மகமாயி கோவில்முன்னே
மங்கலமா வாழ்ந்திடவே
முளைசுமந்து கும்மியடி!!எட்டுநாளு முளைவளர்த்து
அடுத்தநாளு எடுத்துவந்து
எட்டாத உயரத்த
எட்டிடவே கும்மியடி!!

குலத்திலே குயவனாரின்
சுள்ளையிலே தான்புகுந்து
கொசப்பாத்திரம் எடுத்துவந்து
குலுங்கியாடி  கும்மியடி!!
பாங்காக வளர்ந்திருக்கும்
பருத்திக்காடு தான்புகுந்து
பருத்திகுச்சி ஓடித்துவந்து
பாட்டுப்பாடி கும்மியடி!!

செங்கல் சூளையிலே
செஞ்சாந்து நிறமடியோ
செங்கல்பொடி வாரிவந்து
செம்மாந்து கும்மியடி!!
ஆட்டுடையான் அகத்தினிலே
ஆவார தொழுதிறந்து
ஆட்டுரமும் எடுத்துவந்து
ஆடிப்பாடி கும்மியடி!!

மாட்டுடையான் அகத்தினிலே
பூவாச தொழுதிறந்து
மாட்டுரமும் எடுத்துவந்து
முளைவளர்க்க கும்மியடி!!

வெள்ளாளர் வளைதிறந்து
வெள்ளைவைக்கோல் வாரிவந்து
விரித்து பரப்பிவைத்து
வட்டமிட்டு கும்மியடி!!
சிறுபயறு பெரும்பயறு
காரா மணிப்பயறு
சிதறாம வாங்கிவந்து
சிரத்தையோட கும்மியடி!!

வாங்கிவந்த பாத்திரத்தில்
பருத்திகுச்சி கீழ்பரப்பி
சம்பாவைக்கோல் மேல்பரப்பி
சாஞ்சியாடி கும்மியடி!!

ஆட்டுரமும் மாட்டுரமும்
அழகான தாளுரமாம்
உரத்தை கீழ்பரத்தி
உற்சாகமா கும்மியடி!!
கடைதிறந்து வாங்கிவந்த
பயறுவித்தை எடுத்துவந்து
உரத்தின் மேல்பரத்தி
விளையவைச்சு கும்மியடி!!

என்னப்பா சூரியனே
எட்டி நீயும் பார்க்காதப்பா
இருட்டில் வளரவைத்து
இசைபாடி கும்மியடி!!

ஒத்தமுளை இரட்டைமுளை
முத்தான மூனாம்முளை
நாத்துமுளை பார்த்து
நயமாக கும்மியடி!!
மஞ்சள்முளை அடுக்குமுளை
ஏழாம் ஏற்றுமுளை
எட்டாம் முளைபார்த்து
ஏகாந்தமா கும்மியடி!!

ஒன்பதாம் நாளடியோ
ஓங்கிவளர்ந்த முளையடியோ!
உந்துன்பம் சொல்லி சொல்லி
ஓங்காரக் கும்மியடி!!

நாளெல்லாம் தான் உழைச்சி
நல்லபடியா நானிருக்கேன்
எனக்கின்னு எதுவுமிங்கே
வேண்டாமின்னு கும்மியடி!!

நல்லமனம் கொண்டோரெல்லாம்
நலமாக வாழவேனும்
நயவஞ்சக பேயெல்லாம்
நசுக்கியாடி கும்மியடி!!

குத்தம் செஞ்சொரேல்லாம்
கூண்டிலேற்ற வேணுமின்னு
குஞ்சார முளைபார்த்து
குனிந்துகுனிந்து கும்மியடி!!

அன்பன்
மகேந்திரன்

51 comments:

மாய உலகம் said...

கும்மி பதிவை போட்டு சந்தோச அடியை அம்மி மாதிரி கொடுத்துவிட்டீர்கள் ஹா ஹா

மாய உலகம் said...

தமிழ் மணம் 1

சுந்தரவடிவேல் said...

அருமையான பாடலும், படங்களும். இந்த வழக்கம் சிறந்தோங்கி மேலும் வளர வாழ்த்துவோம், உழைப்போம். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் சார்லெட் தமிழ்ச் சங்கத்தினர் முளைப்பாரி கும்மியடித்தது அருமையாக இருந்தது. அதனைப் பற்றிக் குறிப்பிட்ட புதுகை பூபாளம் குழுவினர், முளைப்பாரி என்பது தமிழர்களின் அறிவியல் முறை, அதாவது இவ்வாண்டுக்கான விதைகள் நன்றாக முளைக்குமா என்பதை நிலத்தில் விதைப்பதற்கு முன் சிறு சட்டிகளில் இட்டு முளைக்கவைத்துப் பார்க்கும் சோதனை, என்பதை அழகாய்ச் சொன்னார்கள். நம் சமூகம் எவ்வளவு அறிவியல் நேர்த்தியுடன் அமைந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். வாழ்க தமிழர் பண்பாடு!

மாய உலகம் said...

திருவிழாவுக்குள் சென்று நானும் சேர்ந்து கும்மியடித்ததை போல ஒரு சந்தோசம்.... நமது உறவுகளெல்லாம் சேர்ந்து நின்று கும்மியடித்தை பார்த்து விட்டதைப்போல ஒரு சந்தோசம்....


//ஒத்தமுளை இரட்டைமுளை
முத்தான மூனாம்முளை
நாத்துமுளை பார்த்து
நயமாக கும்மியடி!!//

கிராமத்து வரிகளில் எவ்வளவு நயமாக வரிகளை கொர்த்துள்ளனர்.... கும்மியடி கவிதை கலக்கியடித்துவிட்டது நண்பா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .வாழ்த்துக்கள்.

Unknown said...

// நல்லமனம் கொண்டோரெல்லாம்
நலமாக வாழவேனும்
நயவஞ்சக பேயெல்லாம்
நசுக்கியாடி கும்மியடி!!//

சிறந்த கருத்துள்ள வரிகள்!

நாட்டுப்புற இசையோடு
இணைந்து வந்த பாடல்
அதற்கேற்ற படம் அது
மேலும் சிறக்க ஆடல்
அருமை! வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
எப்படி இருக்கிறீங்க?
நலம் தானே?
தமிழ்மணம் 5

நிரூபன் said...

கும்மியடித்தலின் மகிமையினை, வெவ்வேறு வகையான நிகழ்வுகளைப் பற்றிய சிறப்பான தகவல்களோடு பகிர்ந்திருக்கிறீங்க.

கும்மிப் பாடல்....மனதினுள் கும்மியடிக்க வேண்டும் எனும் உணர்வினைத் தருகின்றது,

கோகுல் said...

கவிதைககேற்ற படங்கள்.
வர்ணனையுடன் நேரில் கண்ட அனுபவம்!
TM 6

ராஜா MVS said...

நல்ல பகிர்வு..,வாழ்த்துகள் நண்பரே..

Rathnavel Natarajan said...

அருமை.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்

இது இதுதான் நம்முடைய நாட்டுப்புறப் பாட்டு.
கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும்
கிரங்கடித்துவிடும்
தங்களின் அன்பான இனிமையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சுந்தரவடிவேல்

தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கு என் மனமார்ந்த வரவேற்புகள்.
நீங்கள் கூறிய செய்தி முற்றிலும் உண்மையே
நம் தமிழர் பண்பாடுகளும் கலாச்சாரங்களும்
அறிவியல் சார்ந்தே இருக்கிறது.....
வாசலில் பசுவின் சாணம் தெளித்து
பூசணிப் பூவை வைப்பதிலிருந்து
தொடங்குகிறது..
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜசேகர்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா
தங்களின் இனிய கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்
தங்களின் மேன்மையான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS
தங்களின் மேன்மையான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் இனிய கருத்துக்கு
என் பணிவான நன்றிகள்

Anonymous said...

அருமை....நல்ல பதிவு....
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
ரெவெரி...

காட்டான் said...

வணக்கம் மாப்பிள அருமையா கும்மியடிச்சிருக்கீங்க.. அதுவும் அழகான போட்டோக்களோடு எனது சிறுவயதை ஞாபகபடுத்தீட்டீங்க.. ஓட்டெல்லாம் போட்டாச்சு வாழ்த்துக்கள்..


காட்டான் குழ போட்டான்...

முனைவர் இரா.குணசீலன் said...

மண்ணின் மரபு மறவாத பண்பாட்டுப் பதிவுகள் அருமை நண்பரே..

Unknown said...

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

கூடல் பாலா said...

தங்கள் கவிதைகள் extraordinary ஆக உள்ளன ....இவற்றை புத்தகமாக வெளியிடலாம் .....

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி
தங்களின் மேன்மையான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் மாம்ஸ் பாக்கியராஜா (காட்டான்)

உங்களை இங்கே வசந்தமண்டபத்தில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு.
சாமரம் வீசி வரவேற்கிறேன் மாம்ஸ்...

கருத்துக்கும் ஓட்டளிப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே
தங்களின் இனிய கருத்துக்கு
என் பணிவான நன்றிகள்

மகேந்திரன் said...

வணக்கம் மாம்ஸ் விக்கி
வசந்தமண்டப வாசல் தென்றல் துணையுடன் வரவேற்கிறது உங்களை....
இனிய கருத்துக்கு மிக்க நன்றி மாம்ஸ்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா

உங்களின் உற்சாகமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி.
நிச்சயம் புத்தக வடிவில் அச்சிடுகிறேன் நண்பரே.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மண்மனம் மாறாமல் மனம் வீசுகிறது கவிதை...

பழைய நினைவுகளில் மூழ்கிப்போகிறேன்...

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...

kupps said...

கிராமிய மணம் கமழும் தங்களின் கவிதையும் அதற்கேட்ற படங்களும் மிகவும் அருமை.தங்களின் கவிப்பயணம் நன்கு தொடர வாழ்த்துக்கள்.

Anonymous said...

''...பஞ்சமெல்லாம் தீர்க்கவந்த
பாகீரதன் போல இங்கே
பரணி ஆத்துத்தண்ணி
பாஞ்சுவர கும்மியடி....''
எத்தனை சங்கதிகள் கேட்டுக் கும்மியடி. அருமையாம் கிராமியக்கலை... பாராட்டுகள் சகோதரா!
வேதா. இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

அருமையான கும்மிப் பாடல் வரிகளுக்கு
வாழ்த்துக்கள் சகோ தமிழ்மணம் 13

சென்னை பித்தன் said...

கிராமிய மணம் கமழும் அருமையான கும்மி!

M.R said...

கிராமத்து மண் வாசனை கண்முன்னே காண்பித்து விட்டீர்கள் தங்கள் கவிதையால் .

தமிழ் மணம் 14

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி

உங்களின் உற்சாகமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஐயா சென்னை பித்தன்

உங்களின் உற்சாகமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஸ்
தங்களின் மேன்மையான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

பஞ்சமெல்லாம் தீர்க்கவந்த
பாகீரதன் போல இங்கே
பரணி ஆத்துத்தண்ணி
பாஞ்சுவர கும்மியடி!!//

ஆனந்தம் கொள்ளவைக்கும்
அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

மனோ சாமிநாதன் said...

உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் மனோ அம்மா

வசந்தமண்டப வாசல் தென்றல் துணையுடன் வரவேற்கிறது உங்களை....

வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

Suresh said...

Super

Ragu said...

நா பாடி பாத்த ரொம்ப நல்லா இருக்கு

Unknown said...

rmba nalla irukku

UDHAYAM MALAR said...

அருமை

Unknown said...

அருமை,தமிழ் வாழ்க!

Anonymous said...

அருமை

Post a Comment