Powered By Blogger

Thursday, 29 March 2012

குதிரையின் குறிச்சொற்கள்!!பிடரிமயிர்கள் சிலிர்த்து
ஓடும் குதிரையை
விழிபிதுங்கப் பார்த்தேன்!
கம்பீரம் என்பதன்
பொன்னான பொருளதனை
அன்றுதான் அறிந்துகொண்டேன்!!
 
தைகள் புடைத்து
முதுகை உலுப்பி
புவியின் மேற்பரப்பில்
பூகம்பம் வந்தது போல்
குளம்புகள் உரசி
விரைந்திடும் அழகை
கண்டு ரசித்திருந்தேன்!!
 

 


நாசியின் வழியே
புயலின் மறுவுருவாய்
சுவாசத்தை வெளியேற்றி
வாலின் கோணத்தை
செங்குத்தாய் நிலைப்படுத்தி
காற்றுக்கு இணையாய்
ஓடும் அழகை
கண்டு வியப்புற்றேன்!!
 
 
லிமையின் பொருளுக்கு
வாய்மொழி உதாரணமே!
உன்பெயர் குதிரை தானா??!!
இதற்கு மேலும் பெயருண்டா?
வியப்பில் ஆழ்த்தும் உன்னை
குதிரை எனும் ஒரு பெயரால்
அடக்கிவிட முடியுமா??!!
 
 
ன்றனுக்கு பலபெயர் சொல்லும்
தேன் மதுரத் தமிழே!!
பாமரன் என் அறிவுக்கு
மறுபெயர் விளங்கவில்லை
வினா தொடுக்கிறேன்
விடையளிக்க ஓடிவா!!
 
பாமரப் பாவலனே!
என்னுயிர்க் காவலனே!
விளம்பிடுவேன் செவியேற்க
பார்வென்ற மன்னவரின்
படைதனுக்கு வலுவமைத்த
குதிரையின் பெயர்களை!!
 
 


முன்னங்கால் உயர்த்தி
முன் நிற்கும் பகைவனை
முழங்கால் போடவைத்து
தாவிச் சென்று
தன் வெற்றி அறிவித்தமையால்
குதிரை என ஆயிற்றே!!
 
 


ன்கொள்கை சரியல்ல
மாற்றிக்கொள்க என
தூது செல்லவேண்டி
கண்காணா நாட்டினுக்கு
பின்னங்கால் பிடரிபட
வாயுவின் மகவைப்போல்
விரைந்து ஓடியதால்
பரி என பெயரிட்டேன்!!
 
 


ண்டைய காலம்தொட்டு
புனிதத்தின் அடையாளத்தை
தன்னுள் பொதிந்துவைத்து
மின்னொளி வீசும் கண்களுடன்
வெண்ணிறம் கொண்டமையால்
வன்னி என அழைத்திட்டேன்!!
 
 


டைந்தெடுத்த தேக்கும்
முறுக்கிவைத்த இரும்பும்
தன் வலிமை நினைத்து
தலையைக் குனியும் வண்ணம்
வலிவுடை கால்களை
பொலிவுடன் கொண்டமையால்
கந்துகம் என விளம்பினேன்!!
 
 


திர்நிற்கும் மன்னவனின்
படைபலம் இன்னவென
பகுத்தறிந்து பார்த்திட
இயலவில்லை எனினும்
பின்னோக்கிப் போகாது
மார்நிமிர்த்திப் களத்திலினிலே
புரிசமர் புரிந்ததால்
இவுளி என பெயரிட்டேன்!!
 
 
மரோன் அழிந்தபின்னும்
சமர்புரி களம் அங்கே  
சாக்காடு ஆனபின்னும்
சினம் தணியாது
சாகசம் புரிவதுபோல்
மதில் தாண்டி செல்வதால்
புரவி என ஆயிற்றே!!!
 
 


ர் உழுதமையால்
கலிமா எனவும்
தூதுவனை தன்மேல்
தாங்கிச் சென்றமையால்
துரகம் எனவும்
பெயரிட்டு வைத்தேன்
செவிமடுத்த என்மகவே!!


அன்பன்
மகேந்திரன் 

Tuesday, 20 March 2012

நதிக்கரை தாகங்கள்!!!தேடல்களின் நிமித்தம்
நொடிகள் தோறும்
தவிப்பின் தடங்களில்
சுவடுகளை பதித்துச் சென்ற
தவிப்படங்கா தாகங்கள்
கூம்புக் குவியலாய்
குழுமிக் கிடக்கின்றன!!வழ் பருவந்தொட்டு
உமிழ் நீருக்குள்
குமிழிகளாய் அடக்கி
விழுங்கிக் கொண்டு
குவளையில் போட்டுவைத்த
பவளக் கனவுகள் - இங்கே
தீர்க்கப்படாத தாகங்களாய்!!
தூக்கம் களைந்து மீண்டும்
தூளிக்குள் அடங்குமுன்
சிறுதுளி இதயத்துள்
பல உளி குத்தல்களை
உள்வாங்கிப் போட்டுவிட்டு
கழைக் கூத்தாடிபோல்
மணித்துளி நகர்த்துகிறேன்!!
வாழ்வின் பயணத்தில்
வடித்து வைத்த 
புத்தகப் பக்கங்களின்
எத்தனையோ புரட்டல்களில்
நிறைவேறா தாகங்களாய்
ஏக்கங்கள் மட்டுமே
மிஞ்சிக் கிடக்கின்றன!!புழுதி பறக்கும்
பாலை நிலத்தில் அல்ல
இந்த தாகங்கள்
நதிக்கரை ஓரத்து
சோலை வனங்களின்
எட்டாக் கனியாக
கிட்டாத ஏக்கங்கள்!!
சிட்டுக்குருவி போல்
சிறகடித்துப் பறக்கையில்
பனித்துளி ஆசைகளால்
படலம் போட்டுவைத்து
பனியுருகிப் போனதால்
உடல்குறுகி உன்மத்தமாய்
சிறுமூளைக்குள் பதுக்கிவைத்த
தாகங்கள் கோடியுண்டு!!செய்தொழிலில் பக்தி இருந்தும்
கொண்ட கல்விமேல் பிடிப்பிருந்தும்
இன்றிருக்கும் இதுவா
நான் நினைத்த நிலை??
இன்று செய்யும் இத்தொழிலா
எம் மனம்கொண்ட தொழில்??
இயைபை இழந்துவிட்டு
இன்முகம் காட்டிவரும்
கண்காட்சிப் பொம்மையாம் நான்
இன்னும் தீராத தாகங்களுடன்!!

ணமிங்கு தாகமல்ல
நதியலைகளைப் போல்
சிறுவடிவில் எழுந்து
அங்கேயே சில காரணங்களால்
தகனம் செய்யப்பட
மனக் குமுறல்களே!
தவித்திருக்கும் தாகங்களாய்!!


ன்னை நானே வினவினேன்
ஆசைகள் என்ன தாகங்களா??
ஆசைகள் நிராசைகள்
ஆகிடுகையில் தாகங்களே!!
அள்ளிக்குடிக்க நீரில்லையெனில்
அங்கே வார்த்தைகள் இல்லை
அபரிமிதமாய் நீரிருந்தும்
அள்ளிக்குடிக்கும் கைகள்
கட்டப்பட்டவையே இங்கே
தாகங்களாய்  உருமாற்றம்!!

வைகள் என்றும்
தீர்க்கமுடியா தாகங்கள் அல்ல!
காலம் காலமாய்
தீர்க்கப்படாத தாகங்கள்
ஆம்!!
நதிக்கரை தாகங்கள்!!அன்பன்
மகேந்திரன் 

Sunday, 11 March 2012

கிளையில்லா விருட்சம்!!

விந்தையை இன்னும்
வியப்போடு பார்க்கிறேன்!
விதையிட்டு வந்தேனா?!
தான்தோன்றி சுயமாய்
நீண்டுகிடக்கும் நிலம்கீறி
தானாக வந்தேனா?!!

பிறக்கையிலே உச்சிமுகர்ந்து
பிள்ளையாய் நீ எனக்கு
வாய்த்ததெல்லாம் வரமென
வாய்பேசிய  பெற்றோரே!
என்வயிற்றில் ஏன் பிறந்தாய்
என் குலப்பெருமை ஒழித்திடவா - என
வாய்குழறிப் பேசுவதேன்?!!


பிறக்கையிலே ஆண்மகனாய்
வித்திட்டு வந்தவன் தான்
வயசு ஏறிப்போக
நளினங்கள் எதேச்சையாய்
நர்த்தனம் ஆடிடவே
மரபணுக்கள் தன்னிச்சையாய்
மாற்றங்கள் செய்ததேன்?!!

ருவங்கள் மாறுமென
பாடங்கள் படித்ததுண்டு
பாலினம் மாறுவதோ
பார்த்திராத செயலிங்கு!
உணர்சிகளை உரசிப்பார்க்கும்
உடல்மாற்றம் நிகழ்ந்தபோது
தொண்டைக்குள் விக்கித்து
உதிரம் கறுத்து நின்றேன்!!ரும்பு மீசை முளைக்கும் நேரம்
அவயங்கள் மிருதுவாய்
அசைபோட்டு நடிக்கையில்
பசைபோட்டு ஒட்டிக்கொண்ட
உணர்சிகளை கண்டே
அங்கமெல்லாம் உதறி
துணுக்குற்றுப் போனேன்!!
 
டன் பிறந்தோரும்
உற்ற உறவினர்களும்
இயல்பாய் பிறந்திருக்க
இயற்கைக்கு மாறாய்
எனக்கு மட்டும்
ஏனிந்த மாற்றம்?!!
 
 
குற்றமென்ன செய்தேன் - நான்
குற்றமென்ன செய்தேன்?!
குற்றத்தின் காரணமென்ன?
குரோமோசோம்களின்
திருவிளையாடலோ?
மரபணுக்களின் மந்திரஜாலமோ?!!
 
ங்கம் பழுதுபெற
தங்கமே என கொண்டாடிய
உறவினர் கூட்டம்
பங்கம் விளைத்திடவே!
மங்கிப்போன கொள்கைகளால்
தங்கிப்போன அவர்களை
சொந்தம் என சொல்லிடேன் - இனி
எனக்கென இன்றே
சங்கம் தருவிக்க விழைந்தேன்!!
 
 
யிரியல் மாற்றத்தால் 
ஏற்பட்ட விளைவுதனை 
நெகிழி சிகிச்சையால் 
நிர்மலமாய் மாற்றி 
நிமிர்ந்து பார்க்கையில் 
கண்டு விழியேற்றேன்
எனக்கான உறவுகளை!!

முன்னூறு முயற்சிக்கு
முத்தாய்ப்பு பலனாய்
மூன்றாம் பாலென
முடிசூட்டிய பின்னர்
சமூகம் எனக்கிட்ட
சமாதானப் பெயர் - இங்கே
அரவாணி என்பதே!
 
 

னக்கான கலாச்சாரம்
எனக்கான பண்பாடென
நாட்டார் வழக்கினின்று
சற்றே மாறுபட்டு
சமத்தாய் தருவித்தே!
எமக்கான சமூகத்தை
வரலாற்றின் பக்கங்களில்
சுவடாக பதித்திடவே
எழுத்தாணி எடுத்துவந்தேன்!!

பாரத அர்ச்சுனரின்
காதல் லீலையால்
வேடுவ கன்னிகைக்கு
வெளிர்நீல சிசு பிறக்க!
அங்கமெல்லாம் லட்சணமாய்
ஒருங்கே பெற்றவனை
அரவான் என்றழைக்க!!
பாரதப் போரின்
மனிதப் பலிக்காய்
சுடரொளி மன்னவனை
சூட்சுமமாய் கொன்றிடவே
சூது புனைந்தனரே!
ஓரிரவு ஒரு கன்னிகையுடன்
இல்லறம் ஈடுபட்டால்
கொலைக்களம் புகுவேன் என
அரவான் உரைத்திடவே!

மோகினிப் பெண்ணாய்
உருமாறி வந்த
மாயக் கண்ணனின்
உடலோடு பிணைந்தானே
அழகான அரவானவன்!!
ன்றே முடிவெடுத்தேன்
எமக்கான தெய்வமவன்
அன்று கூடி
அன்றே மறைந்த
அரவான் தானென்று!!

ரவான் கூடிய
மோகினிப் பெண்ணவள்
மாய கிருஷ்ணனை
அடிபோற்றி தொழுபவரே!
மாயக் கண்ணனின்
மோகினித் தோற்றம் கொண்ட
எம்மை ஏன் விலக்குகிறீர்?!!
னக்கான அத்தனை
உரித்தான உணர்ச்சிகளும்
சற்றும் மாறாது
எமக்கும் உண்டென
சிந்தையில் பதிந்துகொள்!
சிரித்துப் புறக்கணித்து
சிவப்பு வார்த்தைகள் பேசி
எம்மை சிதறடித்து விடாதீர்!!

ணென ஒருபாலுண்டு
பெண்ணென மறுபாலுண்டு
அதற்கு ஈடாக
மூன்றாம் பாலும்
உண்டென உரைத்திடவே
அரசாணை பிறப்பித்து
அதனை அச்சேற்றி வைத்திடுங்கள்!
இப்புவியில் வாழ்வதற்காய்
எமக்கும் சம உரிமை உண்டென
அங்கீகாரம் கொடுத்திடுங்கள்!!அன்பன்
மகேந்திரன் 

Tuesday, 6 March 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம் ...!!! ( தொடர்பதிவு )லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி 
பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் 
திரும்ப வராதா என்ற ஏக்கம் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொள்கிறது.
இப்படி ஒரு தலைப்பில் என்னை எழுத அழைத்த பாசத்திற்குரிய என் 
அன்பு சகோதரி ஷைலஜா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தாயின் 
முதல் கருவறைக்குப் பின் அடுத்த இரண்டாம் கருவறையாய் அமைந்த 
பள்ளிக்கூடத்தின் நினைவுகள் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு 
அகம் மகிழ்கிறேன்.
 

 


ரைக்கால் சட்டையில் இருபுறமும் கயிறுவைத்து முதன்முதலில் 
பள்ளிக்கு போன நாளை எண்ணும்போதே மனதுக்குள் சந்தோசமும் 
நகைப்பும் சேர்ந்தே வருகிறது. 

எல்.கே.ஜி, யு.கே.ஜி எல்லாம் அப்போது இருந்ததா என்றே தெரியவில்லை 
நேரடியா முதலாம் வகுப்பு தான். பெற்றோர்கள் என்னை பள்ளிக்கு 
கூட்டிச் சென்றார்கள். 

"பையனைப் பார்த்தால் ரொம்ப சின்னவனா இருக்கான். அதனால அடுத்த 
வருடம் சேர்த்துக்கொள்ளலாம்" என்று தலைமை ஆசிரியர் சொல்ல 
" சார் படிச்சிருவேன்.. பாருங்க எனக்கு கையால காதைத் தொட முடியும்" என்று
வலது கையை உச்சந்தலை வழியாக இடது காதை தொட குனிந்து நெளிந்து 
எத்தனித்தேன்.அதைப்பார்த்ததும் தலைமை ஆசிரியர் சிரித்துக் கொண்டே " சரி சரி சேர்த்துக்கொள்கிறேன் நல்லாப் படிக்கணும்" என்று சொன்னவாறு என் பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார்.
 
 
யிரெழுத்தை என் 
உயிருக்குள் நுழைத்து 
மெய்யெழுத்தை என் 
மெய்க்குள் திணித்து 
உயிரும் உடலுமாய் 
ஆரம்பித்த ஒன்றாம் வகுப்பு........

ண்ணும் எழுத்தும் 
இரு கண்ணென அறிந்து 
இயைபோடு படிக்கையில் 
அருகிலிருந்த பெண்ணொருத்தி 
என்னைவிட நன்றாய்ப் படிக்க
மனதிற்குள் போட்டியும் 
பொறாமையும் வளர்த்த 
இரண்டாம் வகுப்பு.......

புதிதாய் வந்த திரைப்படங்களின் 
குணாதிசயங்களின் பெயர்களை 
எங்களுக்கு சூட்டிக்கொண்டு 
நட்பும் பகையுமாய் 
மதியஉணவில் மக்காச் 
சோளச் சோறு தின்று 
மப்புடன் படித்துவந்த 
மூன்றாம் வகுப்பு............
 
 
ரம்பியல் பாதிப்பால் 
வலிப்பு வந்து துன்புற
என் உயிரை அன்றும் 
இரண்டாம் முறை மீட்டெடுத்த 
என் தாய்தந்தையர் ஒருபுறம் 
அதன் பின் பெற்றபிள்ளை போல 
அன்பாக பாவித்த 
தனலட்சுமி ஆசிரியை மறுபுறமென 
நன்றாய் கழிந்த 
நான்காம் வகுப்பு........................

லைமை ஆசிரியரே 
வகுப்பு ஆசிரியராய் வர
முதல் முறையாய் 
கூரைவேய்ந்த பள்ளியறை விடுத்து 
ஓடுவேய்ந்த பள்ளியறையினுள்
சற்று பயத்துடன் நுழைந்து 
நடுநிலைப் பள்ளிக்கு 
செல்வதற்கான நடுக்கத்தை 
சற்றே குறைத்து வைத்த 
ஐந்தாம் வகுப்பு...........................

சில நல்ல பழக்கங்களையும் 
சில தீய பழக்கங்களையும் 
சரிவிகிதத்தில் கலந்து 
வாழ்விற்கான முதல் தெளிவை 
அமுதாய் ஊட்டிய 
ஆறாம் வகுப்பு...............................
 
 
முதன் முதலாய் 
வரலாற்றுப் பாடத்தை 
நடத்தும் ஆசிரியர் - அதை 
நடித்தே காண்பித்து 
மூளைக்குள் இன்றும் 
அந்தக் காட்சிகளை 
அசைபோட வைத்த 
ஏழாம் வகுப்பு...............................

ங்கிலத்தின் பெயரைக் கேட்டாலே 
அவயம் நடுங்கியதை 
சற்றே தனித்து 
ஆங்கிலமும் நம் வசப்படுமென 
அழகாய் எடுத்துரைத்த 
ஆசிரியரை எனக்களித்த 
எட்டாம் வகுப்பு....................................

( எட்டாம் வகுப்பில் என் ஆசிரியர் ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் பற்றி சொல்கையில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் " The sentence never end with BECAUSE BECAUSE BECAUSE is a conjunction" இன்றும் மனதில் நிழலாடுகிறது )

றிவியலின் ஆளுமைக்கு 
அருஞ்சொற்பொருள் கொடுப்பதெல்லாம் 
கணிதம் எனும் புனிதமே - என 
கணிதத்தை எனக்கு 
கனிவாய் கற்பித்த 
ஒன்பதாம் வகுப்பு............................
 
 
பொத்தாம் பொதுவாய் 
படித்து வந்தவனை 
பின்னந்தலையில் தட்டி 
இவ்வகுப்பே உன் 
வாழ்வின் ஆதாரமென 
சிரசில் உறைக்கவைத்து 
இன்றும் நான் மதிக்கும் 
ஆசிரியர்களை என் வாழ்வில் 
அறிமுகப் படுத்திய 
பத்தாம் வகுப்பு...........................................

ரும்பு மீசை வளர 
இனம்புரியா ஆசைகள் வளர 
திரிகோணமிதியை சற்றே 
கலவரத்துடன் என்னை 
கவனிக்க வைத்த 
பதினோராம் வகுப்பு......................

ரசாயனமே உனக்கு வாழ்வு 
இன்றே கற்றுக்கொள் என 
கற்பித்துக் கொடுத்திட 
இறுக்கமுகத்துடன் இருந்தாலும்
இளகிய மனம் கொண்ட 
ஆசிரியரை எனக்கு அளித்து
இரசாயனத்தை எனக்கு 
இன்னிசை கீதமாய் 
உரைத்திட்ட 
பன்னிரெண்டாம் வகுப்பு........................
 
 
ன்னும் எழுதிக்கொண்டே போகலாம். பதிவு ஏற்கனவே நீண்டுவிட்டது.
இந்த தொடர்பதிவை தொடர்ந்து எழுத நான் அழைக்கும் பதிவர்கள்.....

 
 
 
அன்பன்
மகேந்திரன்