சில நாட்களுக்கு முன்னர் முகநூலில் வெளியிட்ட
படக்கவிதைகள் இங்கே தளத்தில் இப்போது.....
அமிலக் கரைசல்!!!
ஏனடா அழுகிறாய்?!
வடிநீர் துடைத்திடடா
ஏகலைவன் என
பிரகடனப்படுத்தியும் - உனை
ஏய்த்துப் பிழைக்கின்றாரோ
எசமான பிண்டங்கள்! - உன்
விழிநீர் வீழ்ந்துவிட்டால்
அமிலக் கரைசலடா - அவரை
அமிழ்த்தும் கரைசலடா!!!
சாதகத் தேடல்!!
எனக்கான தேடல்கள்
தொலைதூர முடிவிலியாய்!
துணையொன்று தேவையென
எண்ணித் திளைக்கையில்
மென்தோல் வருடினாய்
திண்தோள் கரம் இணைத்தாய்!
பாதத்தில் பாதம் பிணைத்து
உனைச் சுமந்துகொண்டே
தேடலில் மூழ்குகிறேன்!!!
அன்பன்
மகேந்திரன்




