Powered By Blogger

Sunday 17 June 2012

என் தந்தை எனும் போதினிலே!!!!







வியப்பாக இருக்கிறது 
விரிந்திருக்கும் இவ்வுலகில் 
நானும் ஒரு பாகமென!!
விழிவிரியப் பார்க்கிறேன்
வழித் தடங்களின்
பின்னோக்கிய பார்வையில்
விழிபதித்து மீள்கையில்
அழியாத சுவடுகளாய்
கடந்துவந்தப் பாதையை!!
 
 
ரைஞான் கயிற்விட்டு
அரைக்கால் சட்டையவிழ
ஒருகையால் பிடித்தோடிய காலமதில்!!
நண்பர்கள் குழாமுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்
சண்டையிட்ட பொழுதெல்லாம்!!


ல்லெடுத்து அடித்த அடியில்
தலையில் குருதிவர
வலக்கையால் பொத்திக்கொண்டு
அழுதுசென்ற முனீஸ்வரன்!
அடுத்த மணித்துளியில் 
தந்தையுடன் சேர்ந்துவர
மனம் பதைத்துப் போகையில்!!


ருத்துவச் செலவு பார்த்து
என்னய்யா இது!
சிறுபிள்ளைகள் சண்டையில்
நமக்கென்ன வேலையிங்கே! எனச் சொல்லி
உருட்டிய கண்களால்
மிரட்டிச் சென்ற தந்தையை!!


டன்படித்தோரின் தந்தையர் பலர்
அலுவலகம் சென்று வருகையில்!! என்னவரோ 
அதிகாலை கிளம்பிச்சென்று
நாளெல்லாம் மிதிவண்டி அழுத்தி
அலுப்பு மட்டுமே மிஞ்சி
எனக்கான பண்டத்துடன் திரும்புகையில்!!


டபடக்கும் பட்டாசுக்காய்
பகல்முழுதும் காத்திருந்து - நான்
சோர்ந்துபோய் உறங்கிவிட!
தூக்கத்தில் எனை எழுப்பி
முன்தின இரவுப் பொழுதில்
தோளில் எனைச் சுமந்துகொண்டு
பைநிறைய வாங்கிவந்த தீபாவளி!!


கைவண்டி நிரப்பியிருந்த
நெல்மணி மூட்டையெல்லாம்
இறக்கியங்கே வைத்துவிட்டு
அன்றைய தின கூலிக்காய்
எண் கால் இரண்டு - நா முக்கா மூணு என
அறியாத வாய்ப்பாட்டை
இயல்பாய் சொன்ன போதினிலே!!


சிரியர் எனையழைத்து
அப்பாவைக் கூட்டிவா என்றதும்
பதைத்துப் போன நானோ!
கூட்டி வந்த பின்னே - என்னய்யா
இத்தேர்வில் உங்கள் மகன்
வகுப்பிலேயே முதல்மாணவன் - என்றதும்
இரக்கமும் வேகமும் பார்த்த கண்கள்
உதிர்ந்த சிறு பனித்துளியை
கண்டு நான் கலங்கிய போதினிலே!!


யதுவந்த பிள்ளைஎனினும்
வாஞ்சையோடு மார்பில் கிடத்தி
ஆத்தா என் தாயி
ஆங்கார மாரியம்மா எனத் தொடங்கி
வாய்ப்பாட்டு பாடி எனை 
வளர்ந்து வா என் மகனே 
வாசல்நின்று காத்திருக்கேன் என 
தாலாட்டுப் பாடிய தருணத்தில்!!
 
 
ப்பா என்றொரு வார்த்தையில் தான் 
எத்தனை மந்திரங்கள் 
சொல்லிக்கொண்டே இருக்கலாம் 
சொல்லத்தான் சொற்களில்லை!!
 
 
ன் விரல்பிடித்து இன்னும் 
ஊர்வலம் வந்திட ஆசைதான் நெஞ்சுக்குள்
என்ன நான் செய்திடுவேன்
காலம் எனும் மாயன் உனை
கடத்திக் கொண்டு விட்டானே!!
 
 
துவும் ஓர் விந்தைதான்
உன்னுருவில் என் மகனை
அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!
 
 
ப்பா.....
இன்னுமொரு பிறப்பிருந்தால்
மீண்டும்
தந்தையாக வருவாயா?!!
 
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Friday 15 June 2012

காற்றே ..... பூங்காற்றே!!!!




ருவங்கள் பலகண்டு
சருகுகள் கரம்கொண்டு
உருவமென ஒன்றிலாது
அரூபமாய்த் தவழ்ந்திடும்
துருவக் கருப்பொருளே!!

புவனத்தின் தோற்பரப்பில்
தவம்புரி முனிவன்போல்
காவலின் தோரணையில் 
உவப்புடன் தவழ்ந்திடும்
கவசக் கருப்பொருளே!!!


நிலமதுவும் நீரதுவும்

நிலைமாறும் வெப்பத்தால்
நிலையியக்கம் மாறுவதால்
நிர்மலக் கருவடைந்து
நீயும் இங்கே வந்தடைந்தாய்!!

விரிகதிர் ஆதவன்
விழிப்புடன் எழுந்து
உருப்பெறும் திசையாம்
கிழக்கினில் கருப்பெற்றால்
கொண்டல் என பெயர்பெற்றாய்!!

செம்மாந்த செஞ்சுடரோன்
செவ்வனே பணிமுடித்து
செம்புகு திசையதுவாம்
மேற்கினில் விளைந்ததனால்
கச்சான் என பெயர்பெற்றாய்!!

ருவத்தின் மாற்றத்தால்
மேற்கினிலே விளைந்தாலும்
வேய்கூரை வெய்யோனின்
வெம்மைமிகு கதிர் சுமந்ததனால்
கோடை எனவும் பெயர்பெற்றாய்!!






தேன்மதுரத்  தோரணமாம்
தெள்ளுதமிழ் பிறப்பிடமாம்
தென்கோடித் திசையதுவாம்
தெற்கினிலே விளைந்ததனால் 
சோழகம் என பெயர்பெற்றாய்!!


தேனிசைத் தமிழ்பாடும்
தெற்கினிலே விளைந்தாலும்
அகம் தனை வருடி
சுகம் தனை கொடுப்பதனால்
தென்றல் எனவும் பெயர்பெற்றாய்!!


வானுயர வளர்ந்தோங்கிய
வெள்ளிமலை போல
பனியுருகும் தளமதுவாம்
வடக்கினில் விளைந்ததனால்
வாடை என பெயர்கொண்டாய்!!
நாசியின் வழிச்சென்று
நுரையீரல் வியாபித்து
இதயத்தில் தங்கியபின்
நாசியிலேயே வெளியேறி
என்னுயிர் சுமக்கும் இன்னுயிரே!!


சாதுவாய் உனை நான்
விழியேற்ற பொழுதினிலே 
சாது மிரண்டது போல்
வெங்கொடுமை சுழல்காற்றாய்
மாறியது ஏனிங்கு??!!


நிலமிசை தனைவிட்டு
வெப்பக் காற்றாய் மேலெழும்பி
இடிமின்னல் உருவாக்கும்
முகில்தனை  விட்டிறங்கும்
குளிர்காற்றுடன் புனைந்ததனால்
விளைந்திட்ட வினைதானோ?!!
தமான உனது தழுவலில் 
இமை அயர்ந்த வேளையில்
உன் இயக்கநிலை மாறுபட்டு 
பலம்கொண்ட பாய்புயலாய்
குணம் மாறிப் போகையிலே 
குருதி வற்றிப் போனேனே!!


லுவேறு பலம்கொண்ட 
வன்காற்று உனைக்கண்டு 
உதித்தது ஓர் எண்ணம்!
மென்காற்றாய் இருந்த உனை 
வன்காற்றாய் மாற்றியதெல்லாம்
வேறோர் தூண்டுதலே!!

வறான தூண்டுதலால் 
தன்சூடு ஏறிப்போய்
தடம் மாறி போகாதே - என 
தன்பாடம் உரைத்திட்ட
தவசீல கருப்பொருளே!!



அன்பன் 
மகேந்திரன்

Sunday 10 June 2012

எழில்நிறை எழுத்துக் கலை!!




ன்முகக் கலைகள் இங்கே
பார்முழுதும் விதைத்திருக்க
பாங்குடன் ஏனையோர்
பகுத்தறிந்து பார்த்திடவே
பிறந்திட்ட ஓர் கலை!!


ணர்வினில் ஊசலாடும்
உன்மத்த நினைவுகளை!
உள்ளத்தின் வேர்களில்
ஊற்றெடுக்கும் எண்ணங்களை
உலகினுக்கு வடிவழகாய்
உரைத்திட பிறந்த கலை!!





மொழியின் உருவினில்
மோனமாய் கருவாகி 
மதிகவர் சொற்களால்
மாநிலம் அறிந்திட
முரண்பாடு பலகண்டு
முகிழ்ந்து பிறந்திட்ட நற்கலை!!


தான்கொண்ட எண்ணங்களை
தகைசால் சொல்லழகால்
தரளமென மினுமினுக்க
திரள்நிறை பொருளோடு 
தரணியின் சபைதனில்
தேனுறை பொற்கலை!!
நிகற்பத்தின் நீட்சியில்
நாவினுக்கு இனிமையாய்
நல்லுருவாய் நயமாக
நாள்தோறும்  மாறிடினும்
நெறிமுறை தவறிடா
நித்திலமாம் இக்கலை!!


ருவொன்று நன்றாக 
கமழ்ந்திட கிடைத்திட்டால் 
கற்பனைக் குதிரையை 
கடிவாளம் அறுத்திட்டு 
களஞ்சியப் பொருளோடு 
காவியமாகும் இக்கலை!!

மேதகு வித்தகர்கள்
மேவிடும் கற்பனையால்
மேதரக் காவியம் பல
மஞ்சரிக் குவியலாய்
மிகைபதுமம் உருவேற்றிய
மதுரத்தேன் பொற்கலை!!


ண்டிசை கிளைபரப்பி
எதுகை மோனையோடு
எழில்மிகு சொற்களால்
எழுத்தாற்றல் வளர்த்திட்டால்
எறுழ்வலிமை சித்திரமாம்
எழில்நிறை எழுத்துக் கலை!!



கமிருக்கும் கருவதனை 
அறிவேட்டில் பொறித்தபின்னே
அவனியதை புகழ்ந்திட்டால் 
அகம்பாடு கொள்ளாது 
அகவமைதி கைகொண்டால் 
ஆசிடை வழங்கும் எழுத்துக் கலை!!


யல்நடை மொழியினிலே
இதிகாசம் சமைத்திடுவோம்!
இகந்துழி தேடிடினும்
இத்தகைய காவியத்தை
இனியெங்கும் காணோமென
இச்சகத்தோர் இயம்பிடவே
இன்னெழுத்து  படைத்திடுவோம்!!



அன்பன்
மகேந்திரன்



சொல்லுக்கான பொருள்:

நிகற்பம் ----------- 10 ன் பதிமூன்றாம் அடுக்கு  (1 ,00 ,00 ,00 ,00 ,00 ,00)

பதுமம்  ------------ 10 ன் பதினான்காம் அடுக்கு  (1 ௦,௦௦,00,௦௦,௦௦,௦௦,000)

தரளம்         ------------ முத்து

நித்திலம்      --------- முத்து போல ஒளியுடைய

மேதரம்              --------- மலைக்குன்று

எறுழ்வலிமை  ---------- இரும்புபோன்ற வலிமையுடைய

ஆசிடை             ---------- நல்வாழ்த்து

இகந்துழி           ----------- அதி தொலைவு அல்லது தொலைதூரம் 


Tuesday 5 June 2012

எதிர்வரும் நலமே!!!!







வாயுதிரும் வார்த்தைகள் 
வாழ்வினில் ஏராளம்!
வெளிவந்த வேகத்தில் 
வேற்றுமை இல்லையெனில் 
விவகாரம் அங்கில்லை!!
 
ன்னால் எதுவும் 
எளிதாக இயலுமென 
எக்காள சொற்களால் 
எரிவார்த்தை தவிர்த்திட்டால் 
எதிர்வரும் நலமே!!
 

 


சோம்பலின் போர்வைக்குள்
சொகுசாய் உறங்கியபின்
சுற்றிவரும் வினைவிளைகள்
சாதகமாய் வேண்டுமென
சத்தமிட்டு என்னபயன்?!!

நாடிவரும் சந்தர்ப்பத்தை 
நாழிகைகள் கடத்தி 
நாசூக்காய் ஒதுக்கியபின் - அட 
நமக்குத் தெரியாமல் போயிற்றேவென 
நாடகமாடி என்னபயன்?!!
 
 
ட்டிவிட்டால் தொட்டுவிடும் 
எள்முனைத் தொலைவில் 
ஏதுவாயிருந்த வாகையை 
ஏளனமாய் உதறிவிட்டு - பின்னர்
ஏங்குவதால் என்னபயன்?!!
 
ன்னை உயர்வாய் எண்ணி
தற்பெருமை அரக்கனுக்கு
தங்குமிடம் தானளித்து
தகைமை நெறி தவறி - ஆங்கே
தரமுனக்கு தேடுவதில் பயனென்ன?!!
 
 
ல்லாம் தெரியுமென
ஏகமாய் வார்த்தையாடி
எரிமலைக் குழம்பையும் 
எளிதென எண்ணிவிட்டு - பின்னே 
எரிகிறதென்றால் விலகிடுமோ?!!
 
நூதனப் போக்கறியாது 
நுண்ணறிவு கைவிடுத்து 
நுனிப்புல் மேய்ந்துவிட்டு 
நுகர்ந்திட கிடைக்காது - போகையில் 
நெற்றிசுருக்கி என்னபயன்?!!
 
 
யல்பறிவு இல்லாததை
இசைவோடு ஏற்காது
இயலாமையை மறைத்திட
இதற்குமுன் அறிந்திருந்தால்
இமயம் எட்டியிருப்பேன் - என
இறுமாப்பு பேசுவதில் என்னபயன்?!!
 
பிறக்கையிலே யாரும்
பிறவி அறிஞன் அல்ல!
புரியாத கருக்களையும்
புரிந்துகொள்ள விழையும்
பித்தனாக மாறிவிடு!!
 
மக்குத் தெரியாமல் போனதே -என
நமட்டு வார்த்தை பேசாது
நான் தெரிந்துகொள்ளாது போனேனே - என
நல்லெண்ணம் விதைத்திடு
நாளும் நாளும் விளைந்துவரும்
நற்புது விளைவுகளை
நாகரீகமாய் கற்றுக்கொள்!!
 
 
போனது போகட்டும்
புதுமையாய் வருவதை
புழக்கடையில் போடாது
புத்தியில் போட்டுவை!!
 
மேவிடு அவனியில்
மேதாவி நானென - இனியும்
மேம்போக்கு பேசாது
மெல்லவரும் மாற்றங்களை
மென்று விழுங்க பழகிக்கொள் - அன்றுபார்
மேதாவி நீதான் என உலகம்
மெச்சி உனைப் புகழ்ந்திடும்!!!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 
 

Friday 1 June 2012

சிரித்திருக்கும் சிந்துமணி !!!







ன்னேனன்னே நானேனன்னே 
தானேனன்னே நானேனன்னே
தன்னேனன்னே நானேனன்னே - தானே
தானேனன்னே நானேனன்னே!!

ண்ணன்மாரே தம்பிமாரே
அருமையுள்ள அக்காமாரே!
கூடியிங்கே வந்திடுங்க - நாம
கூட்டா சேர்ந்து பேசிடலாம்!!
 
தென்னங்கீற்று ஒலைவைச்சி 
எங்க அப்பன் போட்ட வீடு!
திண்ணை ரெண்டு இங்கிருக்கு - வாங்க
கூடி நாமும் பேசிடலாம்!!
 

 


டபடன்னு பறந்துபோகும்
பாசமான தட்டாம்பூச்சி!
பறக்கும் ரெக்கை இறக்கி வைச்சி - உள்ளே  
பழக்கம் பேச வந்திடிங்கே!!
 
ங்கப்பன் ஆண்டிமுத்து
ஏவுவேலை  வேலைக்காரன்!
சொன்னவேலை செஞ்சிபுட்டு - இப்போ
சோமப்பொடி வாங்கிவாறார்!! 
 
ங்காத்தா பொன்னுத்தாயி 
இலந்தமல போயிருக்கா!
விறகுவெட்டி சுமந்துவந்து - நல்லா
கஞ்சிவச்சி தந்திடுவா!!
 
 
ரெண்டு நாளு கழிஞ்சபின்னே 
பள்ளிக்கூடம் போகவேணும்!
போட்டுபோக ஆடையில்ல - இப்போ 
அப்பன்கிட்ட கேட்டிடனும்!!
 
ன்னத்த நீ சாப்பிட்டடா
ஏப்பமிடும் ஏழுமல!
உங்க அப்பனாத்தா தேடுவாக - வெரசா
வீட்டுக்கு நீ போயிடடா!!
 
சித்தமாக பேசுறியே
சிவப்புசட்ட சின்னத்தாயி!
எங்க அப்பனாத்தா வந்திடத்தான் - இன்னும்
சித்த நேரம் ஆகவேணும்!!
 
 
ட்டுவூறு பேசுறியே
ஏத்தமுள்ள ஏழுமல!
அப்பனாத்தா போனயிடம் - உனக்கு
தெரியுமான்னு சொல்லிடடா!!
 
ழைபெஞ்சு ஒஞ்சதுபோல்
ஊரெல்லாம் கழிவுத்தண்ணி!
என்னப்பனான காத்தமுத்து - அங்கே
சுத்தஞ்செய்ய போயிருக்கார்!!
 
சொந்த வயல் இல்லேன்னாலும்
சொக்காரன் வயலினிலே!
களையெடுக்க போயிருக்கா - அங்கே
எங்காத்தா தங்கமணி!!
 
 
க்கனையா பேசுவியே
வாயாடி வைரக்கண்ணு!
வாடிப்போன பயிரைப்போல - நீயோ
வாயடைச்சி போனதேய்யா!!
 
சின்னமணி பொன்னுமணி 
எங்கவூரு சிந்தாமணி!
சில்லறைய போட்டதுபோல் - இங்கே
சிரித்திருக்கும் சிந்துமணி!!
 
மாட்டுவண்டி கட்டிக்கிட்டு
மந்தையூரு  சரக்கு ஏத்தி
மதுரைச்சீமை போயிருக்கார் - ஆமா
மாயாண்டி எங்க அப்பன்!!
 
 
லையும் காயும் கலந்திருக்கும்
சென்னா இலை வாங்கிவர!
செம்புக்குடோன் போயிருக்கா - ஆமா
எங்க ஆத்தா கனகவல்லி!!
 
ரெட்டைச்சடை போட்டுக்கிட்டு 
ஒத்தரோசா வைச்சிகிட்டு!
ஓரமாக இருப்பவளே - இங்கே 
முன்னேவாடி மாரிக்கனி!!
 
ழைய இரும்பு தகரமின்னு 
மூணுகாலு வண்டியிலே!
ஊருவழியா போயிருக்கார் - ஆமா
எங்க அப்பா மாடசாமி!!
 
 
த்தையாக கழியெடுத்து
மணமணக்கும் வாசத்தோட
பத்தி செய்ய போயிருக்கா - எங்க
தங்க ஆத்தா வடிவரசி!!
 
பாண்டிக்கட்டம் போடுவோமா
பல்லாங்குழிதான் ஆடுவோமா!!
நம்ம அப்பனாத்தா வருவதற்கு - இன்னும்
கொள்ள நேரம் கிடக்குதய்யா!!
 
ண்ணாமூச்சி ஆடுவோமா
பச்சக்குதிரை தாண்டுவோமா!
கோலிக்குண்டு கொண்டுவந்து - நாம  
குழிபறிச்சி ஆடுவோமா!!
 
 
லேயப்பா ஏழுமல
வாடாப்பா வைரக்கண்ணு!
நம்ம அப்பனாத்தா வாராக - அந்த
மாரிக்கனிய கூட்டிவாங்க!!
 
லே தங்கமக்கா
நாங்க பெத்த பொன்னுமக்கா!
வீட்டுக்குள்ளே ஓடியாங்க - நாங்க
பண்டம் பல வாங்கியாந்தோம்!!
 
நாளெல்லாம் வேலைசெஞ்சி
நாடிநரம்பு அத்துப்போயி!
வீட்டைத்தேடி வந்தீகன்னா - வந்து
கொஞ்சநேரம் ஓய்வெடுங்க!!
 
 
ங்கமேல அக்கறையா 
பேசுறியே சின்னத்தாயி!
நாங்க படும் பாடுயெல்லாம் - நீங்க 
நல்லா வாழ வேணுமின்னு!! 
 
ரெல்லாம் தேடினாலும் 
உங்கபோல அப்பனாத்தா!
எங்களுக்கு கிடைக்காதய்யா - ஆமா
சத்தியமா சொல்லுறேய்யா!!
 
வேர்வையிலே முத்தெடுத்து 
விளஞ்சிவந்த சின்னப்புள்ள!
பெரிய வார்த்த பேசாதம்மா - நாங்க 
உங்களைத்தான் நம்பியுள்ளோம்!!
 
 
ரெண்டுநாளு போனபின்னே 
பள்ளிக்கூடம் போகவேணும்!
பள்ளிக்கூடம் போவதற்கு - நாங்க 
பொருளெல்லாம் வாங்கிவந்தோம்!!
 
நாங்கபடும் பாடுயெல்லாம் 
நான் பெத்த செல்லக்கிளி!
உனக்கு வரக்கூடாதுன்னா - இப்போ
நல்லாபடிச்சி வளரவேணும்!!
 
ப்பனுக்கு ஆசையுண்டு 
ஆத்தாளுக்கும் நிறையவுண்டு!
படிச்சவுக மெச்சிறாப்போல் - நீங்க 
நல்லநிலைக்கு வரவேணும்!!
 
 
கோவிலுக்கு போனதுண்டு 
சாமியங்கே இல்லையப்பா!
பெத்துவளர்க்கும் நீங்கதானே- ஆமா
எங்களுக்கு சாமியப்பா!!
 
னந்திறந்து சொல்லுறேய்யா 
முக்காலும் சத்தியமா!
வேறு எண்ணம் எங்களுக்கு - ஆமா
கடுகளவும் இல்லையய்யா!!
 
ல்லையொன்னு வகுத்துவைச்சி 
எதிர்நீச்சல் போட்டிடுவோம்!
எங்ககுல சாமிகளே - நாங்க 
கொண்டகொள்கை மாறமாட்டோம்!! 
 
 
 
 
அன்பன்
மகேந்திரன்