Powered By Blogger
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Monday, 17 September 2012

கிழக்கும் மேற்கும்!!!







விசும்பின் போர்வையில்
விழித்தெழும் உலகின் 
விடியலே என்னாலென
வீண் இறுமாப்பில்
வீற்றிருக்கும் கிழக்கே!!
 
லகினுக்கு வெளிச்சத்தை
உதயனின் தயவால் 
உவப்புடன் கொடுக்கும்  
உன் வெற்றிக்குப் பின்னால்
உள்ளதென்ன அறிவாயோ?!!
 

 


யைபாய்க் களைத்த
இரவியின் கவிழ்வால்
இருண்ட திசையென
இயல்பாய் ஏற்றிட்ட
இன்திசை மேற்கினை அறிவாயோ?!!
 
ண்டிலம் தானேற்று
மாநிலம் மழுக
மகிழ்வாய் அவப்பெயரேற்ற
மாதவத் திசையதுவே - உன்
மருவரல் வெற்றிக்குக் காரணமே!!
 
 
ன்னுடல் நெக்குருக
தனைச்சுற்றிய திசையெல்லாம்
தீச்சுடர் ஒளிதரும் 
தண்மையான மெழுகினைப்போல்!
தகைவாய்க் கிழக்கது
தண்டலை எனும் பெயரேற்க
துகளேற்ற திசை மேற்கே!!
 
னியேனும் கிழக்கே
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 
 
கையாளப்பட்ட சில சொற்களுக்கான பொருள்:
 
மருவரல்                       – சூழ்ச்சி
மழுக                              – இருள்பரவ 
துகள்                              – குற்றம்
தண்டலை                     – சோலை
மண்டிலம்                     - ஞாயிறு
இரவி                              - கதிரவன்
விசும்பு                           - ஆகாயம்
 

Saturday, 21 July 2012

நிரல்நிறை அமுதே!!!





நிறமும் மனமும் இல்லாத
நிறைவாய் இவ்வுலகில் 
நிரல்நிறை அமுதமாய் 
நிறைந்திருக்கும் மந்திரமே!!

ச்சக பரப்பளவில்
இருவேறு வாயுக்களை
இறுக பிணைத்துவைத்த
இயற்கையின் மகவே!!



வாழ்வாங்கு வாழ்ந்திட 
வந்த மனிதனின் 
வாழ்வின் ஆதாரமாம் 
வையகத்து நித்திலமே!!

ன்வண்ணம் தவறிடினும் 
தான் ஏற்கும் வண்ணங்களை 
தனிவட்டி வண்ணங்களுடன் 
தகைவாய் அளிக்கும் பேரழகே!!
நாகரீகம் என்பதெல்லாம் 
நீ தவழும் நதிக்கரையில் தான் 
நீட்சியாய் வளர்ந்ததென 
நன் சரித்திரம் கொண்டாயே!!

திட திரவ வாயுவென 
தீர்க்கமாய் முந்நிலையில்
திரவியமென எமக்காய் 
தோன்றிட்ட தேனமுதே!!
முந்நிலையில் எந்நிலையாய்
முகமங்கே கொண்டாலும் 
முற்றிலும் தன்னிலையை 
முழுதாய்க் கொண்ட ஆரமுதே!!

வெப்பம் காற்று என 
வெளிதொடு தூண்டுதல் 
வெம்மையாய் வந்திடினும்
முந்நிலைக்குள் தன்னிலையை 
மாற்றிக்கொள்ளும் மாதவமே!!
த்துன்பம் வந்திடினும் 
எண்ணிய செயல்முடிக்க 
எடுத்துவிடு அவதாரமென 
எனக்குரைத்த கருப்பொருளே!!

ற்றதை ஏதுவாய் முடித்திடவே 
எந்நிலை மாறினாலும் 
உன்னிலை தவறாதே என 
உட்கருத்து போதித்த மறைபொருளே!!



அன்பன் 
மகேந்திரன் 

Friday, 15 June 2012

காற்றே ..... பூங்காற்றே!!!!




ருவங்கள் பலகண்டு
சருகுகள் கரம்கொண்டு
உருவமென ஒன்றிலாது
அரூபமாய்த் தவழ்ந்திடும்
துருவக் கருப்பொருளே!!

புவனத்தின் தோற்பரப்பில்
தவம்புரி முனிவன்போல்
காவலின் தோரணையில் 
உவப்புடன் தவழ்ந்திடும்
கவசக் கருப்பொருளே!!!


நிலமதுவும் நீரதுவும்

நிலைமாறும் வெப்பத்தால்
நிலையியக்கம் மாறுவதால்
நிர்மலக் கருவடைந்து
நீயும் இங்கே வந்தடைந்தாய்!!

விரிகதிர் ஆதவன்
விழிப்புடன் எழுந்து
உருப்பெறும் திசையாம்
கிழக்கினில் கருப்பெற்றால்
கொண்டல் என பெயர்பெற்றாய்!!

செம்மாந்த செஞ்சுடரோன்
செவ்வனே பணிமுடித்து
செம்புகு திசையதுவாம்
மேற்கினில் விளைந்ததனால்
கச்சான் என பெயர்பெற்றாய்!!

ருவத்தின் மாற்றத்தால்
மேற்கினிலே விளைந்தாலும்
வேய்கூரை வெய்யோனின்
வெம்மைமிகு கதிர் சுமந்ததனால்
கோடை எனவும் பெயர்பெற்றாய்!!






தேன்மதுரத்  தோரணமாம்
தெள்ளுதமிழ் பிறப்பிடமாம்
தென்கோடித் திசையதுவாம்
தெற்கினிலே விளைந்ததனால் 
சோழகம் என பெயர்பெற்றாய்!!


தேனிசைத் தமிழ்பாடும்
தெற்கினிலே விளைந்தாலும்
அகம் தனை வருடி
சுகம் தனை கொடுப்பதனால்
தென்றல் எனவும் பெயர்பெற்றாய்!!


வானுயர வளர்ந்தோங்கிய
வெள்ளிமலை போல
பனியுருகும் தளமதுவாம்
வடக்கினில் விளைந்ததனால்
வாடை என பெயர்கொண்டாய்!!
நாசியின் வழிச்சென்று
நுரையீரல் வியாபித்து
இதயத்தில் தங்கியபின்
நாசியிலேயே வெளியேறி
என்னுயிர் சுமக்கும் இன்னுயிரே!!


சாதுவாய் உனை நான்
விழியேற்ற பொழுதினிலே 
சாது மிரண்டது போல்
வெங்கொடுமை சுழல்காற்றாய்
மாறியது ஏனிங்கு??!!


நிலமிசை தனைவிட்டு
வெப்பக் காற்றாய் மேலெழும்பி
இடிமின்னல் உருவாக்கும்
முகில்தனை  விட்டிறங்கும்
குளிர்காற்றுடன் புனைந்ததனால்
விளைந்திட்ட வினைதானோ?!!
தமான உனது தழுவலில் 
இமை அயர்ந்த வேளையில்
உன் இயக்கநிலை மாறுபட்டு 
பலம்கொண்ட பாய்புயலாய்
குணம் மாறிப் போகையிலே 
குருதி வற்றிப் போனேனே!!


லுவேறு பலம்கொண்ட 
வன்காற்று உனைக்கண்டு 
உதித்தது ஓர் எண்ணம்!
மென்காற்றாய் இருந்த உனை 
வன்காற்றாய் மாற்றியதெல்லாம்
வேறோர் தூண்டுதலே!!

வறான தூண்டுதலால் 
தன்சூடு ஏறிப்போய்
தடம் மாறி போகாதே - என 
தன்பாடம் உரைத்திட்ட
தவசீல கருப்பொருளே!!



அன்பன் 
மகேந்திரன்