Powered By Blogger

Wednesday, 11 May 2011

மனம் தான் இல்லை!




என்னுருவம் நான் காண்கையில்
என முகம் கூட மாறுவேடமிட்டு
மறைந்து கொண்டது!

சிந்தனையில் சிக்காத
சின்ன சின்ன காரணங்களை
வலை வீசி தேடுகிறது!

பாங்காக இருக்கும் உடல்நிலையை
பாழ்பட்டு போனதாக
பொய்யுரைக்கச் சொல்கிறது!

பாவம் போல் முகத்தை வைத்தால்
பரிதாபம் வருமென
பாழும் மனது சொல்கிறது!

நேற்றுவரை பார்த்த நாட்காட்டியை
பிழையேதும் இருக்குமென
திரும்பப் பார்க்கச் சொல்கிறது!

போகுமிடத்தில் நல்ல உணவிருந்தும்
வாய்க்கு விளங்கவில்லை என
உண்மை மறைக்கிறது!

தேடித் தேடி நான் சொன்ன
காரணமெல்லாம் ஏனென்று
புரியவில்லை - புதிராயிருக்கிறது!

என நெஞ்சம் பித்தானதா? - இல்லை
பொய்யுரைக்கும் விஷமானதா? - இல்லை
என மனதில் ஏன் இந்த களியாட்டம்?!!

நிதர்சனமாய்  யோசித்தேன்!
நிச்சயமாக சொல்கிறேன்!
வேறொன்றும் இல்லை?!

உன்னை விட்டு தூரம் செல்ல
மனம் தான் இல்லை -  ஆம்
என அன்பைப்  பிரிய
மனம் தான் இல்லை!!!


அன்பன்

மகேந்திரன்

2 comments:

Anonymous said...

சொல்லமுடியாத பிரிவின்
வேதனையை
அழகாக சொல்லி இருக்கிறீர்கள்!
உங்கள் படைப்பு மேலும் மேலும்
மெருகேற

வாழ்த்துக்கள்

தமிழ்தேவன்

மகேந்திரன் said...

அழகான கருத்துக்கு மிக்க நன்றி
நண்பர் தமிழ்தேவன் அவர்களே..

Post a Comment