Powered By Blogger

Friday, 17 May 2013

நிழற்படக் கவிதைகள் -2முகில் பூக்கள்!!!


வேரில் நீரற்று
இலைகள் உதிர்த்து
தலைகுனிந்த நேரமதில்!
மண்மீதில் என்நிலையை
மீட்டுக் கொடுத்திடவே
என்னுயிருள் நீரூற்றி
முகில் பூக்களாய் வந்தாயோ!!!துளிப்பொறி ஈன்றிடு!!!


மூட்டியது யாரென்று
மிரட்டிப் பார்த்தேன்
பதிலொன்றும் கிடைக்கவில்லை!
முழுதும் எரிந்து
மூர்ச்சையாகிப் போகும் முன்
துளிப்பொறி ஈன்றிடு!
சுமந்து சென்று
சூட்சுமத்தின் விதையாக்குகிறேன்!!!அன்பன்
மகேந்திரன்

Wednesday, 8 May 2013

ஆழிப்பேரலை அமைதி!!!மைதியான ஆழ்கடல் 
ஆழிப்பேரலை கண்டதுபோல் 
அவதானித்து விழித்தேன்! 
அமைதியின் தன்மையது 
ஆர்ப்பரிப்பு கொண்டது ஏன்?!!


விடையற்றுப் போன 
வினாக்கணை ஒன்றினை 
வீதிவழி எடுத்துச்சென்றேன்!
விதிவழி கடந்துசென்ற 
விந்தைமிகு காட்சி காண!!
 
 
 
 
ர மணற்தடம் நோக்கி 
ஈருருளி வேகம் கொண்டேன்! 
ஈவுகள் தேடியவன் 
ஈடற்ற விடைகள் கண்டு 
ஈர்க்கப்பட்டு நின்றேன்!! 


கரந்தத்தேன் குடித்த
மதுவுண்ட வண்டது போல் 
மயங்கிப்போய் நின்றேன்!
மடக்கைகள் பலகொண்ட
மண்டிநிறை அஞ்ஞானங்களால்!!
 
 
 
 
கப்பட்ட தூண்டிலதை 
ஆலிங்கனம் செய்வித்து 
அகத்தினில் கறைபடிந்த 
அரூபப் பொழுதுகளை 
அகழ்ந்து நோக்கினேன்!!


தூளியின் வெப்பம் கடந்து 
துள்ளி எழுந்த காலம் முதல்
தூற்றிவிட்டுப் போன பருவங்களை  
தூர்த்து துளாவினேன் 
துர்குணங்களின் ஆதிக்கமே!!
 
 
 
 
னக்கான தகுதியை 
தரணி புகழ்கையில் 
தகுதியாகு பெற்றவனென 
தற்பெருமை கொண்டிருந்தேன் 
தகைவாய் இன்றுவரை!!

செம்மாந்த உறைவிடத்தில் 
செருக்கின் சுவடுகளால் 
செதுக்கிய சிலையான பின்னே
செயப்படு பொருளுக்கெல்லாம் 
செந்தீமை விளைவித்தேன்!!
 
 
 
பெரும்பணம் சேர்த்து 
பெட்டக கொட்டிலிலே 
பெட்டியில் பூட்டி வைத்து - உடல் 
பெருக்கம் கொண்ட நான் 
பெறுமதி ஈதலை மறந்திருந்தேன்!!


குடல்கொண்ட மேனியெல்லாம் 
குருதி நிறம் ஒன்றல்லவென 
குடையுறை வேந்தன்போல் 
குணத்தில் சாதி கொண்டு 
குற்றம் புரிந்திருந்தேன்!!
 
 
 
 
நிறைகர்வம் கொண்டிருந்தேன் 
நிகரில்லா அகங்காரத்தால் 
நிகழ்காலப் புகழுக்காக - பிறரை 
நிந்தை செய்வித்து 
நிதானம் இழந்திருந்தேன்!!

வனா அவன்?
இங்கனம் வளர்ந்திட்டானா?
இவனிலும் குறைந்தவனா - நானென 
இதனினும் மேற்படியடைய 
இதயத்தை இற்றுப் போகச் செய்தேன்!!
 
 
 
 
சோலையான ஆழ்மனம் 
சோகையாய் மாறியதேன்?
சோடனையாய் நான்கொண்ட 
சோடை போன குணங்கள் தானோ 
சோதித்துப் பார்க்கிறது??!!!


மைதியான எனதுளத்தில் 
ஆழ கல் பாய்ந்ததால் 
அகச்சுழற்சி விட்டுப்போன 
ஆழிப்பேரலை ஆர்ப்பரிப்பு 
அமைதி கொள்வதெப்போது??!!!
 அன்பன் 
மகேந்திரன் 

 
 
 
 
 
 

Wednesday, 1 May 2013

உயிர்ப்பிழந்த சாசனங்கள்!!!நியாயத்தின் சாரங்களால் 
நியமனம் செய்யப்பட்ட 
நிதர்சன சாசனங்கள் - யாவும் 
நீர்த்துப்போன படிமங்களோ?!!

டிமங்களாயின் பாதகமில்லை 
வடிவங்கள் உருமாறி 
நொடியிழந்த மணித்துளியாய் - தாவும் 
கடிவாளமற்ற புரவியாமோ?!!
 

 


புரவியின் பிடரியாய் உலுக்காது 
நரம்புகள் தளர்ந்து 
தரங்களின் துணை தவிர்த்த - காவாம் 
நரகத்தின் காவலாமோ?!!


காவலின் தொனியிலே
பாவலன் போல் இறுமாந்து 
சேவகம் தனை மறந்து - பாழும் 
நாவடி பிறழ்ந்த வஞ்சகமோ!!
 
 
ஞ்சகப் பேய்களுக்கு 
தஞ்சம் கொடுத்துவிட்டு 
நெஞ்சம் அழுகிப்போன - மேவும்  
மஞ்சம் வீழ்ந்த சாமரமோ!!


சாமரத் தென்றல் வீசி 
கமல வதனம் சிவந்திருக்க 
கோமள நாண்பூண்டு - ஆங்கே 
தமனியன் தாள் புகுந்தாயோ!!
 
 
புகுந்த வீட்டிலோ
தகுந்த மரியாதை இல்லாது
வெகுண்டால் வெண்காடு தானென - ஊதும் 
மகுடிக்கு அடங்கினாயோ!!

டங்கியதால் தவறென்று
முடக்கியுனை போட்டுவிட்டு
சடங்குகள் கொண்டாடி - உன்னை 
அடக்கிவைத்தல் நியாயம்தானே?!!


அன்பன்
மகேந்திரன்