Powered By Blogger

Wednesday 25 January 2012

வெறும் சொல்லா?? அல்லது .. வினையூக்கியா???






மாந்தோப்பில் திரியாதே
மந்திபோல் தாவாதே!
மந்தமாய் செயல்செய்து
மண்டு போல் ஆகாதே!!

ண்டு! மண்டு! என
மணிக்கு ஒருதரம்
செந்தேன் பாய்வதுபோல்
செவிவழி கேட்டிருந்தேன்!!




சொன்னதைச் செய்தேன்  
செய்ததைச் சொன்னேன்!
வந்த விளைவுக்கெல்லாம்
மண்டு என பெயர்பெற்றேன்!!

விளைவிது வேண்டுமென
விரும்பியா வரவேற்றேன்?
முகவரியின்றி முளைத்ததற்கு
நான் எப்படி பொறுப்பாவேன்?!!




டமிழந்த தேரதுபோல்
வாடிப் போனேன்!
வன்சொல்லாய் வார்ப்பெடுத்து
மண்டு எனக் கேட்கையிலே!!

னக்கான விளைவுகளை
மூடிவைக்கத் தெரியாத எனை
மூடன் என அழைக்கையிலே
மூச்சிழந்து போனேன்!!




பெயர்ச்சொல்லாய் என் முன்னே
பூதம் போல நின்று!
பூச்சாண்டி காட்டியது
மண்டு எனும் சொல்!!

பேறுபெற பெற்றோரும்
கற்றுவித்த பெரியோரும்
எனக்கான நிலையதனை
மண்டு எனும் பெயர்ச்சொல்லால்
அலங்கரித்து நின்றபோது!




லங்காதே பொன்மகனே
காலூன்றி எழுந்துவா!
உபரியாய் வந்தடைந்த
ஊனமான சொற்களை
வினைச்சொல்லாய் ஏற்றுக்கொள்!
விக்கித்து நிற்காதே
வீறுகொண்டு எழு என
பூந்தமிழ் சொன்னதுவே!!

செந்தூர செந்தமிழே
சத்தியமா சொல்கிறேன்!
நீமொழிந்த வார்த்தைகளில்
ஒன்றுகூட புரியவில்லை!
தெளிவாக புரிந்திடவை
தேனினிக்கும் மொழியாலே!!




ண்டு! மண்டு! என
பிறர் சொன்ன போதெல்லாம்
மூடன் என முழுதாக
பொருள் கொண்டாயே!
அதைக்கொஞ்சம் மாற்றிக்கொள்
மண்டு எனும் சொல்லை
வினைச்சொல்லாய் நானுனக்கு
பொருள் கூறுகிறேன்
பொறுமையாக கேட்டுக்கொள்!!

ல்லதொரு நண்பர் கூட்டமதை
நயமாக கண்டறிந்து
நெருங்கி பழகிக் கொள்ளென!
ஒருபொருள் உண்டிங்கே!




ண்முன்னே நடந்தேறும்
சமூக அவலங்களை
சாதுர்யமாய் அழித்திடவே
திரளாக சேர்ந்து கொள்ளென!
மற்றொரு பொருளுண்டு!!

செயலேற்கும் செயலதை
விவேகமாய் முடித்திட
தீவிரமாய் செயல்படு - எனவும்
அதற்காய் வேகமாய்
புத்தியை செலுத்து - எனவும்
மாற்றுப் பொருளுண்டு!!




ன்றுனக்கு கிடைக்கும்
சிறிதான இடைவெளியில்
பலமாக காலூன்றி
இலக்கை நிர்ணயித்து
முழுமூச்சாய் ஈடுபடு - எனவும்
இன்னொரு பொருளுண்டு!!

ன்னைத் தமிழே!
எனைச் செதுக்கிய தாயே!
துவண்டிருந்த எனை
தூளிபோட்டு ஆட்டாது
துள்ளி எழச் செய்தாயே!!




விழிநீரைத் துடைத்தெறிந்தேன்
விழுதுகள் பிடித்தெழுந்தேன்!
மண்டு எனும் சொல்லை
வினைச்சொல்லாய் மாற்றிடவே!!

நிச்சயம் சொல்கிறேன்
மண்டு என இனிமேல்
யாரிங்கே சொல்லிடினும்!
தவங்கி விட மாட்டேன்
வினையூக்கியாய் மேற்கொண்டு
விண்ணை முட்டும்
புகழ் பெறுவேன்!!



அன்பன்
மகேந்திரன்

Friday 20 January 2012

வசந்தத்தின் நூறாம் தோரணம்!!!






சந்தத்தின் வாசலிலே
வண்ணமிகு கோலமாம்!
வானவில்லே தோரணமாய்
வந்திறங்கிய காரணமாய்!
நட்சத்திரப் பூக்களெல்லாம்
நாவற் பழம்போல
கூடிவந்து பூத்திருந்த
வசந்த மண்டபமாம்!!

சந்தத்தின் வயதின்று
பத்து திங்கள் ஆனதுவே!
திங்களுக்கு ஒருபத்தாய்
பத்துமுறை ஈன்றெடுத்தேன்!
இன்று நான் ஈனுவதோ
நூறாவது சிசுவென்பேன்!!

ருசுமந்து நான்பெற்ற
சிசுவிங்கே ஒவ்வொன்றும்!
மின்னுகிற பொன்னைப்போல்
தகதகத்து தெரிவதெல்லாம்
ஆழ்ந்து படித்துணர்ந்து
அழகாக கருத்திட்ட
உங்களால் தானன்றோ!!

சிவப்பு கம்பளம் விரித்து
வாசப் பன்னீர் தெளித்து
தாம்பூல சகிதமாய்!
மனம் நிறைந்தோரை
மனமார வரவேற்கிறேன்!
வாருங்கள் வசந்த மண்டபத்திற்கு!
இனி பூக்கும்
வசந்த பூக்களுக்கும்
உங்கள் வாழ்த்துக்களை
அருளுங்கள்!!







நேசத்தகு உள்ளங்களே,

திவுலகில் கால்பதித்து பத்து மாதங்கள் ஆன இந்நிலையில்
இதோ நூறாவது பதிவைத் தொட்டிருக்கிறேன். என்னை
கரம்பிடித்து அன்போடு ஆதரவோடு பதிவுலகில் நிலைபெறச்
செய்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும். கருத்திட்டு என்
படைப்புகளை எழுத்துக்களை அழகுறச் செய்த அத்தனை நேச
உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

முதன்முதலாய் முகம் தெரியாது வந்து கருத்திட்டு என்னை வாழ்த்திய
தோழர் ஜானகிராமன், சகோதரி கீதா அவர்களை இந்நேரத்தில்
நினைவு கொள்கிறேன்.

லைச்சரம் என்பது என்றால் என்ன? என்ற நிலையில் இருந்த என்னை
முதன்முதலாய் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி அடையாளம் காட்டிய
அன்பு நண்பர் கவிதைவீதி.சௌந்தர் அவர்களையும் நினைவில் தருவிக்கிறேன்.

திவுலகில் வசந்தமண்டபம் கட்டி ஆறாவது மாதத்தில் வலைச்சரம் தொடுக்க எனை அன்போடு அழைத்து, மாணவனாய் இருக்கும் எனை ஆசிரியராய் பணியாற்ற உன்னால் முடியும் என தட்டிக்கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் பணிவான வணக்கங்களும்.

தொடர்பதிவுகளுக்காக என்னை அழைத்து என் எழுத்துக்களை ரசித்த
தோழர் ஜா.ரா.ரமேஷ்பாபு, சகோதரி சாகம்பரி அவர்களையும் இங்கே
நினைவில் நிறுத்துகிறேன்.

ன் எழுத்துக்களில் நம்பிக்கை வைத்து, அதை ரசித்து விருதளித்து என்னையும் என் எழுத்துக்களையும் பெருமைப் படுத்திய  அன்பு முனைவர்.இரா.குணசீலன், நண்பர் நாஞ்சில் மனோ அவர்களையும் இங்கே நன்றிகளுடன் வணங்குகிறேன்.

ன்னை தன் தளத்தில் அறிமுகப்படுத்தி பதிவுலகில் நான் வளர்ந்திட நீரூற்றி வளர்த்த சகோதரர் நிரூபன், சகோதரர் ரெவெரி, நண்பர் சங்கவி அவர்களுக்கும், முகநூல் மூலம் என்னையும் என் படைப்புகளையும் பெருமைப் படுத்தும் காட்டான் மாமா, ரத்னவேல் ஐயா
அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்.

தினம்தினம் என் தளம் வந்து படித்து கருத்திட்டோருக்கும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்து தெரிவித்தோருக்கும், என்னைப் பின்தொடர்பவர்களுக்கும்,
படைப்புகளில் வரும் பிழைகளை திருத்தி என்னையும் என் எழுத்துக்களையும்
சீர்படுத்தும் தோழமைகளுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் என்
சிரம்தாழ்ந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன்

Friday 13 January 2012

பொங்கட்டும் புதுப்பொங்கல்!!




தவனே! ஆண்டவனே!
அகிலத்தின் முதல்வோனே!
அழகாக பொங்கல் வைத்தோம்
மனமிறங்கி வாருமய்யா!!

பொங்குகிற பொங்கலைப்போல்
மகிழ்விங்கே பொங்கவேணும்!
தைமகளின் கரம்கோர்த்து
எங்களுக்கு அருளுமய்யா!!




முக்கோண பொங்கல் கட்டி
முப்புறமும் தான்வைத்து
மூலவன வேண்டிவந்தோம்
குலம்காக்க வேணுமய்யா!!

வாழையையும் மஞ்சளையும்
குலைகுலையா கட்டிவைச்சு!
மங்கள வடிவோனை
மண்டியிட்டு வணங்கிவந்தோம்!!




நாற்புறமும் கரும்பாலே
பந்தலொன்னு போட்டுவைச்சு!
நடுவாலே பொங்கவைச்சோம்
நல்வரமும் தாருமய்யா!!

னைவெல்லம் பச்சரிசி
பக்குவமா கலந்துவைச்சி!
சர்க்கரை பொங்கல் வைச்சோம்
சந்ததிய காத்திடய்யா!!




ண்மணக்கும் மண்பானை
பொங்கவைக்கும் பொங்கப்பானை!
பொங்கி வருகையிலே
குலவையிட்டு ஆர்பரித்தோம்!!

வாழையிலை விரிச்சிவைச்சு
படிநெல்ல தான்பரப்பி!
விளைஞ்சிருந்த வெள்ளாமைய
உனக்காக படைச்சிபுட்டோம்!!




ந்துமுக விளக்கேற்றி
அன்புடனே தொழுதுவந்தோம்!
ஆறுமுக விளக்கேற்றி
திருவடிய நாடிவந்தோம்!!

ந்திருந்த காலமெல்லாம்
நான்பட்ட துன்பம் போதும்!
இனிவரும் காலத்துல
உழவுத் தொழில் வளரவேணும்!!

தாவி வா தைமகளே
எம்குலத்து திருமகளே!
என்வீட்டு முற்றத்தில
தவழ்ந்திட வா பொன்மகளே!!


ந்தப் பாடலை நானும் என் மனைவியும் சேர்ந்து பாடி இங்கே
வெளியிட்டிருக்கிறேன். இது என் முதல் முயற்சி.





ங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பிற்கினிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.



அன்பன்
மகேந்திரன்

Wednesday 11 January 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-4)






ன்புநிறை தோழமைகளே,

விளையாட்டுக்கள் பலவிதம். அதிலொரு விதம் விடுகதை
விளையாட்டு. விடுகதையை கவிதை வடிவில் கொடுக்கும்
விடுகதைக்கவிதையின் அடுத்த பகுதி இது. நான் நினைத்த
ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய ஒரு விடுகதைக் கவிதை
இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

இதோ விடுகதைக் கவிதை........





ந்தெழுத்தை தன்னுள்
அழகாய் கொண்ட
அற்புதச் சொல்லிது!!

ந்து எழுத்தும்
தனித்து நின்றால்
இருபொருள் படும்
ஒன்றோ
கரிய பெரிய விலங்கினத்தின்
பெயரை உச்சரிக்கும்
மற்றொன்றோ
அழகாய் உயர்ந்து வளரும்
பெயரில் கம்பீரம் கொண்ட
மரம் ஒன்றின் பெயரை
விளம்பி நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து
"ச" கர "ஊ" காராமாய்
மாறி நின்று
இரண்டு, நான்கு மற்றும்
ஐந்தாம் எழுத்துடன்
இணைந்து நான்கெழுத்து
சொல்லாய் நின்றால்
சிறு கிணறு என்ற
பொருளை உரைத்து நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து
"ப"கர "அ" கரமாய் 
மாறி நின்று
கடைசி மூன்று எழுத்துக்களுடன்
கூடி நான்கெழுத்தாய் நின்றால்
செய்யும் செயலின்
கேடு விளைவை
விளம்பி நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து
"ஆ" என மாறி நின்றால்
ஏக்கம் கலந்த
கவலை உணர்வின்
பெயர் ஒன்றை
கூறி நிற்கும்!!




முதலெழுத்து திரிந்து
"ப" கர "ஓ" காரமாய்
மாறி நின்று
இரண்டு நான்கு மற்றும்
ஐந்தாம் எழுத்துக்களுடன்
கூடி நான்கெழுத்தாய் நின்றால்
இருபொருள் படும்
ஒன்றோ
யானையின் இளங்கன்றின்
பெயரைச் சொல்லும்
மற்றொன்றோ
பிறருக்கு நல்ல அறிவினை
எடுத்துச் சொல்லும்!!

னதருமை நண்பர்காள்!


இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்


Monday 9 January 2012

துளையில்லா புல்லாங்குழல்!!!!






நுண்துளைக் கேணியின்
நுனிவாய் உமிழ்ந்திடும்!
நூற்றுவைத்த ராகங்கள்
நூற்றினில் அடங்கிடுமோ?!!

யிர்சுமக்கும் உள்வெளியின்
உன்மத்த சுவாச மூச்சின்
உருமாற்ற வடிவங்கள்
உரைத்திடில் விளங்கிடுமோ?!!




மூங்கிலால் உடலெடுத்து
முரளியாய் ஆனபின்னே!
மூச்சுமுட்ட சுரங்களை
முழுவீச்சில் கொடுத்தாயே!!

துரத்தேன் இசையினிலே
மயங்கிய பொழுதினிலே!
மருதமாலைக் காற்றொன்று
மந்த இசை கொணர்ந்ததுவே!!




பாதாதிகேசம் அங்கே
பாடித் திளைக்கையில்!
பாதியில் தடுத்திட்ட
பாத்திறம் எதுவன்றோ?!!

துளையிட்ட குழல்களின்
துல்லிய ராகத்திலே
தவழ்ந்து கிடக்கையில்
தட்டி எழுப்பியது யாரோ?!!




யாரென்று கண்டவுடன்
வாயடைத்துப் போனேன்!
துளையில்லா குழலதுவின்
நாதத்தை கண்டேன்!!

வாய்  இருக்கிறதென்று
வீண்வம்பு பேசியே
பொழுதைக் கழிக்க இயலா
சித்திரச் செல்வனவன்!!




நாவைத் துலட்டி
நன்மொழி பேசிடவே!
நித்தமும் சத்தமாய்
நம்பியவன் துடிக்கிறான்!!

துளையடைத்துப் போனதால்
முண்டியிட்ட மூச்சுகூட
களைப்படைந்து தளர்ந்து
முகாரி அங்கே பாடியதே!!




வாய்பேச முடிவோரெல்லாம்
வாய்மைதனை மறக்கையிலே!
வாஞ்சையாய் உன்குரலோ
வையமிதில் இணையாதோ?!!

பாதாதி கேசத்தை
பாதியிலே விட்டுவிட்டேன்!
கேசாதி பாதம் தொடுகிறேன்
கேட்டுக்கொள் மன்னவனே!!




பிறப்பணுவின் கோளாறோ?
பிறந்தபின் வந்ததுவோ?
பிழை எதுவாய் இருந்தாலும்
பாதகம் ஏதுமில்லை!!

கிள்ளையென அழகாய்
மொழிபேச தெரிந்திருந்தும்!
புறம்பேசி திரிவோரே
இத்தரணிதனில் ஏராளம்!!




னக்கென இங்கே
மறுக்கப்பட்ட ஓருணர்வை
நினைத்து மருங்காதே
நிமிர்ந்து நடைபோடு!!

துளையிட்ட புல்லாங்குழலை
வாசிப்பதில் இல்லை அழகு!
துளையில்லாது அக்குழலின்
நுதல்வழி ராகம்வர
முயல்வகை செய்கிறாயே
அதுவே பேரழகு!!!




அன்பன்
மகேந்திரன்

Monday 2 January 2012

குடல்வெந்து போகாதாய்யா!!






வெள்ளப்பட்டு சந்தையிலே 

வாங்கிவந்த வெள்ளமாடு!
துள்ளித்துள்ளி ஓடுதையா - காளியப்பா!
நாம போகுமிடம் தூரமில்ல - காளியப்பா!!
 
ழகான வெள்ளமாடு
அலுங்காம ஓடுதய்யா!
எம்புட்டுக்கு வாங்கிவந்த - மாரியப்பா!
நானும் ஒன்னு வாங்கப்போறேன் - மாரியப்பா!!
 

 


பேரையூரில் பொறந்தமாடு
பேச்சியம்மா வளர்த்தமாடு!
பேரம்பேசி வாங்கிவந்தேன் - காளியப்பா!
நான்போய் பத்தரைக்கு ஒட்டியாந்தேன் - காளியப்பா!!
 
மலைய இறைச்சு அங்கே
தண்ணிப்பாச்ச பொழுதாச்சு
வேகமாக ஒட்டிடய்யா - மாரியப்பா
அங்கே பண்ணையாரு காத்திருப்பார் - மாரியப்பா!!
 
 
சித்தநேரம் பொறுத்துக்கோய்யா
சீக்கிரமா போயிடுவோம்!
சிலுக்குப்பட்டி தாண்டிவிட்டோம் - காளியப்பா
இன்னும் நாளுகல்லு தூரந்தாய்யா - காளியப்பா!!
ன்னைய நீ விட்டுபுட்டு
எந்த ஊரு போகப்போற
திரும்பிவரும் நேரத்தில - மாரியப்பா
என்னைய கூட்டிகிட்டு போறியா நீ - மாரியப்பா!!
 


னைமலை பக்கத்திலே
அயித்த வீடு ஒன்னிருக்கு
அங்கேதான் போகப்போறேன்  - காளியப்பா
நானும் வெரசாக வந்துடுறேன் - காளியப்பா!!

வாழைத்தோப்பு பக்கத்துல
வளமான தென்னந்தோப்பு
அங்கே என்ன இறக்கிவிடு - மாரியப்பா!
நீ திரும்பையில இங்கிருப்பேன் - மாரியப்பா!!

=============================================================
 
 


ண்ணையாரு தோட்டத்திலே
தண்ணிபாச்சி முடிச்சிட்டியா
நேரம் கொஞ்சம் கடந்து போச்சி - காளியப்பா
நீயும் ரொம்பநேரம் நிக்கிறியா - காளியப்பா!!

மின்சாரம் இல்லையின்னு
கமலையிறைக்க வந்தேனய்யா
இருநூறு கமலையப்பா - மாரியப்பா
ஏற்றத்தில இறச்சிவந்தேன் - மாரியப்பா!!
 


ற்றமிறச்ச களைப்புனக்கு
ஏகமாக தானிருக்கும்
கொஞ்சநேரம் படுத்துக்கோ நீ - காளியப்பா
கண்ணசர தூக்கம்போடு - காளியப்பா!!

கைகாலு வலிக்குதய்யா
கெண்டக்காலு நோகுதய்யா
வலிபோக மருந்திருக்கு - மாரியப்பா
அதுக்கு கல்லிகுடி போகவேணும் - மாரியப்பா!!
 
 
தேனும் வைத்தியரா
ஆங்கிலத்து மருத்துவரா
கல்லிகுடி ஊரு போனா - காளியப்பா
களைப்பெல்லாம் போய்விடுமா?? - காளியப்பா!!

தொட்டதுமே விறுவிறுக்கும்
குடிச்சதுமே தலைக்கேறும்
அமுதமான கள்ளச்சாராயம் - மாரியப்பா
குடம்குடமா கிடைக்குதய்யா - மாரியப்பா!!

===========================================================
 
 


ய்யய்யோ அலங்காரி
பாலமேட்டு மகமாயி
இந்த வார்த்த கேட்டிடவா - காளியப்பா
உன்கூட நானும் வந்தேன் - காளியப்பா!!

ன்ன நானும் சொல்லிபுட்டேன்
ஏனிப்போ சிலுத்துக்கிற
உள்ளதத்தான் நானும் சொன்னேன் - மாரியப்பா
கள்ளசரக்கு மனக்குமய்யா - மாரியப்பா!!
 
 


நாளெல்லாம் உழைச்சாலும்
நாம்காணும் வெள்ளிப்பணம்
குடிச்சே அழிக்கனுமா  - காளியப்பா
குடல்வெந்து போகாதாய்யா - காளியப்பா!!

ன்வீட்ட நல்லாப்பாரு
ஒடுகூட உடைஞ்சிருக்கு
நல்லவீடு கட்டிக்கொள்ளு - காளியப்பா
நாலுபேரு மதிக்க வாழு - காளியப்பா!!
 
 


ன்னநம்பி பொறந்ததய்யா
உன்குலத்து செல்வமெல்லாம்
கொஞ்சமேனும் சேர்த்துவையு - காளியப்பா
ஓட்டாண்டியா ஆகிடாதே - காளியப்பா!!

தினந்தினம் செய்தியெல்லாம்
கொத்துகொத்தா வருவதை நீ
பார்த்து நீயும் திருந்திவிடு - காளியப்பா
இன்றே பக்குவமா மாறிவிடு - காளியப்பா!!

குடல் அழுகிப் போகுமய்யா
கண்ணும் கெட்டுப் போகுமய்யா
உன் பிள்ளைகளா நினைச்சிப்பாரு - காளியப்பா
உன்குணத்த மாத்திக்கோ நீ - காளியப்பா!!

=======================================================
 
 


ராசமேளம் கேட்டிருச்சி
கூரைச்சேவல் கூவிருச்சு
என்புத்திய நீயும்தானே - மாரியப்பா
செருப்பால அடிச்சிபுட்ட - மாரியப்பா!!

ராக்காயி கோவிலிலே
கொழுந்துவிட்டு எரியுமந்த
விளக்குமேல சத்தியமா - மாரியப்பா
குடிக்கிறதா நிறுத்திடுறேன் - மாரியப்பா!!

ப்படிச் சொல்லுமய்யா
கேட்கும்போதே இனிக்குதய்யா
உன்கூட குடிச்சவர - காளியப்பா
புத்திசொல்லி திருத்திவிடு - காளியப்பா!!



அன்பன்
மகேந்திரன்  

Sunday 1 January 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-3)


ன்புநிறை தோழமைகளே 
 
அனைவருக்கும் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இன்று புதிதாய் பிறந்த இப்புத்தாண்டில் எல்லா வளமும் இனிதே
பெற்றிட மனமார வேண்டுகிறேன். 
 
இவ்வாண்டின் முதல் பதிவாக விடுகதைக் கவிதை ஒன்றை
பதிவு செய்கிறேன்.
 
இதோ விடுகதைக் கவிதை,
 

 


ந்தெழுத்தை தன்பால்
அழகாய் கொண்டது!
கணித சூத்திரமல்ல
புனித சூத்திரம்!!
 
ந்தும் தனித்து நின்றால்
சொல்லும் சொல்லின்
எண்ணும் எண்ணத்தின்
திண்மையை உரைத்து நிற்கும்!!

ந்தும் தனித்து நின்று
இடையெழுத்து திரிந்து
"இ" கரமாய் இருப்பது "ஆ" காரமாய்
மாறி நின்றால்
கார்மேகம் கூடி நிற்கும்
இருண்ட மங்கலான சூழலை
சொல்லி நிற்கும்!!!
 
முதலெழுத்து திரிந்து
"த" கர "அ" கரமாய்
மாறி நின்றால்
சூசகமாய் செயலை
கையாளும் முறையினை
பகன்று நிற்கும்!!
 
 




டையெழுத்து திரிந்து
"ச" கர "ஆ" காரமாய்
மாறி நின்று
கடையிரண்டு எழுத்துக்களுடன்
சேர்ந்து நின்றால்
சொல்லப்படும் வாக்கியத்தின்
மையப் பொருளை
கூறி நிற்கும்!!!

 
முதலும் மூன்றும்
தனித்து நின்றால்
முப்பொருள் படும்!
ஒன்றோ
வளர்ந்து தேயும்
தவழ் பொருளை
உணர்த்தி நிற்கும்!
மற்றொன்றோ
சீரிய நுட்பமான
நுண்ணறிவை சுட்டும்!
மூன்றாமதோ
பொருட்சொல்லல்ல வினைச்சொல் 
கட்டுப்பாட்டுடன் கண்ணியமாய் 
நடந்துகொள் என உச்சரிக்கும்!!
 
முதல் மூன்றும் 
தனித்து நின்றும்
அதில் முதலெழுத்து திரிந்து
"அ" கரமாய் நின்றால்
நாளொன்றின் பொழுதுகளில்
ஒருபோழுதின்
பெயர் சொல்லும்!!

னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.



அன்பன்
மகேந்திரன்