Powered By Blogger

Wednesday 1 February 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-5)


ன்புநிறை தோழமைகளே,

வாழ்வில் ஓடும் நிமிடங்களுக்கு பின்னர் நாமும் ஓடி ஓடி
களைத்து திரும்புகையில் ஏதோ ஒரு இளைப்பாறல்
தேவைப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்படி ஒன்று தான் 
விளையாட்டு. அந்த விளையாட்டை சொல் வடிவில் கொடுக்கும்
முயற்சி தான் இந்த விடுகதைக் கவிதை விளையாட்டு. நான் நினைத்த
ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய ஒரு விடுகதைக் கவிதை
இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

தோ விடுகதைக் கவிதை........



ந்தெழுத்தை தன்னுள்ளே
அழகாய் புதைத்து வைத்த
செழுமையான சொல்லிது!!
 
ந்தும் தனித்து நின்றால்
இருபொருள் படும்!
ஒன்றோ 
உணர்ச்சிகளின் ஒன்றன் 
பெயரை உரைத்து நிற்கும்!!
மற்றொன்றோ 
குற்றமென கண்டவுடன் 
நீதிகோரி 
சாடி நிற்கும்!!
 
முதலெழுத்து மட்டும் 
தனித்து நின்றால்!!
அரண்மனையின்
வெளிப்புறச் சுவரின்
பெயரை கம்பீரமாய்
உரைத்து நிற்கும்!!


மூன்றாம் எழுத்து திரிந்து
"ந" கர "அ" கரமாய்
மாறி நின்று
கடை இரண்டு எழுத்துடன்
கூடி மூன்றெழுத்தாய் நின்றால் 
சிறப்பான திறமை நான் - என 
தம்பட்டம் அடிக்கும்!!  
 
முதலெழுத்து திரிந்து 
"ப" கர  "அ" கரமாய்
மாறி நின்றால்
சத்தியம் தவறினும்
இதைத் தவறாதே - என
பழமொழி விளம்பி நிற்கும்!!
 
முதலெழுத்து திரிந்து
"வ" கர "ஆ" காரமாய்
மாறி நின்றால்
என்னிலிருந்து
இசை மழை கொட்டும் - என
இயம்பி நிற்கும்!!

னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்

42 comments:

பால கணேஷ் said...

ம்ஹும்... யோசி்சசுப் பாத்ததுல எதுவும் பிடிபடலை! முயற்சிச்சுப் பார்த்துட்டு அப்புறமா வர்றேன் நண்பா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அன்பரே!
நான் அறியவில்லை விடை. தாங்கள் சொன்னால் அறிந்து கொள்வேன்.

லேஅவுட் மிக அழகு!

Unknown said...

நானும் முயற்சி செய்து பின் வருகிறேன்! சிறிது கடினமாகவே உள்ளது!

Marc said...

வாழ்க்கை என நினைக்கிறேன்.

அருமையான விடுகதைக் கவிதை வாழ்த்துகள்

RAMA RAVI (RAMVI) said...

முயன்று பார்க்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

பத்தியம்.... சரியா ?

அப்படியே எங்க ஊர் குழந்தைகளின் படைப்புகளையும் பற்றி என் தளத்தில் ஒரு கருத்து சொல்லுங்க சார்! நன்றி என் அருமை நண்பரே !

யோசனை செய்து விட்டு மறுபடியும் வருகிறேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

முதலெழுத்து மட்டும் தனித்து நின்றால்!! அரண்மனையின் வெளிப்புறச் சுவரின் பெயரை கம்பீரமாய் உரைத்து நிற்கும்!! -

மூன்றாம் எழுத்து திரிந்து "ந" கர "அ" கரமாய் மாறி நின்று கடை இரண்டு எழுத்துடன் கூடி மூன்றெழுத்தாய் நின்றால் சிறப்பான திறமை நான் - என தம்பட்டம் அடிக்கும்!! - நயம்

முதலெழுத்து திரிந்து "ப" கர "அ" கரமாய் மாறி நின்றால் சத்தியம் தவறினும் இதைத் தவறாதே - என பழமொழி விளம்பி நிற்கும் ! - சத்தியம் தவறினும் பத்தியம் தவறாதே!

முதலெழுத்து திரிந்து "வ" கர "ஆ" காரமாய் மாறி நின்றால் என்னிலிருந்து இசை மழை கொட்டும் - என இயம்பி நிற்கும்!! - வாத்தியம்

யோசனை செய்து விட்டு மறுபடியும் வருகிறேன்

kowsy said...

முயற்சி செய்து பார்க்கின்றேன். முடியவில்லை என்றால் உங்கள் பதிலைப் பார்த்து தெரிந்து கொள்ளுகின்றேன்

மாலதி said...

அருமையான விடுகதைக் கவிதை

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,

அருமையான விடுகதை முயற்சியினை கவிநடையில் பகிர்கிறீர்கள்.

அடியேனால் பங்கெடுக்க முடியலையே என்று வருத்தமாக இருக்கிறது.

கூடல் பாலா said...

23 ம் புலிகேசி நியாபகத்துக்கு வருகிறது ...எஸ்கேப்

K.s.s.Rajh said...

விடுகதைகள் அருமையாக இருக்கு ஆனால் எனக்கு விடைதான் தெரியவில்லை

Ahila said...

முயன்று பார்க்கிறேன்.....

காட்டான் said...

இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது மாப்பிள பதிலுக்காக காத்திருக்கிறேன்;-)!!

Anonymous said...

இந்த தொடர் மாத்திரம் நம்மள ஜகா வாங்க வைக்குது சகோதரா...

அருமையான விடுகதைக் கவிதை -:)

K said...

நண்பா, முதலில் அழகான கவிதை + விடுகதைக்கு வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலனின் பதில் சரி என்றே நினைக்கிறேன்!

K said...

ப்ளாக் டிசைன் செம கலக்கல்!

கீதமஞ்சரி said...

சோத்தியம் என்பது சரியா என்று சோதித்துச் சொல்லவும்.

சோத்தியம் - வியப்பு (உணர்ச்சிகளில் ஒன்று)

சோ - மதில்

பத்தியம் - பகர அகரமானபோது

வாத்தியம் - வகர ஆகாரமானபோது

விடை அறிய ஆவலாக உள்ளேன். இதுபோல் சவாலான விடுக(வி)தைகள் வழங்குவதற்குப் பாராட்டுகள்.

Mahan.Thamesh said...

முடியல்ல அண்ணே

மகேந்திரன் said...

அன்புநிறை தோழமைகளே,

இந்த புதிருக்கான சரியான விடை


சோத்தியம்.



சோத்தியம்
சோ
நயம்
பத்தியம்
வாத்தியம்


சரியான விடை சொன்னவர்களுக்கும்
முயற்சி செய்தவர்களுக்கும்
மற்றும் அனைவருக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் முயற்சிக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிஜாமுதீன்,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனசேகரன்,

தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,

சரியான விடை
சோத்தியம்

சொல் கண்டுபிடிப்பிற்கான
திரிபு விடுகதையின் கடைசி மூன்று
கண்டுபிடிப்புகளும் மிகச் சரியாக
கண்டுபிடித்திருக்கிறீர்கள்.

நிச்சயம் தங்கள் தளம் வருகிறேன் நண்பரே.


தங்களின் முயற்சிக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகௌரி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நிரூபன்,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
ஹா ஹா ஹா
அட ஓடாதீங்க நண்பரே...
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜ்,
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அகிலா,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,

தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,

தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மணி,

சரியான விடை

சோத்தியம்.

தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,

மிகச் சரியான விடை.
உங்களின் விடை எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.


சோத்தியம் - வியப்பு (உணர்ச்சிகளில் ஒன்று),குற்றச்சாட்டு


சோ - மதில்

நயம் - மூன்றாம் எழுத்து நகர அகரமாய் கடையிரண்டுடன் கூடி


பத்தியம் - பகர அகரமானபோது

வாத்தியம் - வகர ஆகாரமானபோது



தங்களின் மேலான கருத்துக்கும் அழகான விடைக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

கீதா அவர்களின் திறன் கண்டு வியந்தேன்
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
பயனுள்ள அருமையான விளையாட்டு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

விடையை அருமையாகக் கண்டுபிடித்த கீதாவிற்கும்
இப்படி ஒரு கஷ்டமான புதிர் தந்து என் அறிவை ? மேம்படுத்திய
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். புதிதாய் ஒரு சொல் தெரிந்து கொண்டேன்.
நன்றி !

ஹேமா said...

யோசித்துப் பிடிபடவில்லை.பிந்தி வந்ததால் பின்னூட்டத்தில் கண்டு வியப்படைந்தேன்.என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதது இப்படிப் பதிவு !

குறையொன்றுமில்லை. said...

நானும் லேட்டாவந்து பின்னூட்டங்கள் மூலமாக விடையைத்தெரிந்து கொண்டேன்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

எனக்கெல்லாம் யோசிச்சாலும் வருமா தெரியலை. புதுசா வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டேன். சோத்தியம், சோ etc. மிக்க நன்றி.

Post a Comment