Powered By Blogger

Monday 17 September 2012

கிழக்கும் மேற்கும்!!!







விசும்பின் போர்வையில்
விழித்தெழும் உலகின் 
விடியலே என்னாலென
வீண் இறுமாப்பில்
வீற்றிருக்கும் கிழக்கே!!
 
லகினுக்கு வெளிச்சத்தை
உதயனின் தயவால் 
உவப்புடன் கொடுக்கும்  
உன் வெற்றிக்குப் பின்னால்
உள்ளதென்ன அறிவாயோ?!!
 

 


யைபாய்க் களைத்த
இரவியின் கவிழ்வால்
இருண்ட திசையென
இயல்பாய் ஏற்றிட்ட
இன்திசை மேற்கினை அறிவாயோ?!!
 
ண்டிலம் தானேற்று
மாநிலம் மழுக
மகிழ்வாய் அவப்பெயரேற்ற
மாதவத் திசையதுவே - உன்
மருவரல் வெற்றிக்குக் காரணமே!!
 
 
ன்னுடல் நெக்குருக
தனைச்சுற்றிய திசையெல்லாம்
தீச்சுடர் ஒளிதரும் 
தண்மையான மெழுகினைப்போல்!
தகைவாய்க் கிழக்கது
தண்டலை எனும் பெயரேற்க
துகளேற்ற திசை மேற்கே!!
 
னியேனும் கிழக்கே
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 
 
கையாளப்பட்ட சில சொற்களுக்கான பொருள்:
 
மருவரல்                       – சூழ்ச்சி
மழுக                              – இருள்பரவ 
துகள்                              – குற்றம்
தண்டலை                     – சோலை
மண்டிலம்                     - ஞாயிறு
இரவி                              - கதிரவன்
விசும்பு                           - ஆகாயம்
 

Saturday 15 September 2012

விடைதேடும் சலனங்கள்!!!


டைபாதைத் தடங்களில்
சுவடுகள் பதித்திட
எண்ணிடும் வேளையில்!
உள்ளங்கால் தீரம்விட்டு
ஆணிவேர் ஒன்று
புவனம் ஊடுருவி - என்னை
நடையிழக்கச் செய்ததுவே!!

காட்சிகள் ஏராளம்
கணக்கற்ற தோரணங்களாய்
கண்முன்னே உதிக்கையில்!
ஒற்றைக் காட்சியில்
நிலைப்பு ஏற்படாது
கவரத் துடிக்கையில்!
கண்ட காட்சியும்
பிழையாய்ப் போனதுவே!!


றவுகள் இருந்தால்
சிறகொடிந்து போனாலும்
உறுதுணை உண்டென
எண்ணிய வேளையில்!
சிறுசிறு காரணத்தால்
மறுமுகம் காட்டி
உருமாறிப் போகையில்
உள்ளம் குறுகிப் போனதுவே!!


னந்தக் குளியலிட
அருவிக்குச் சென்றாலும்
விழும் அழகினில்
விக்கித்து நின்றாலும்!
நதிமூலம் அறிந்திடவும்
வீறிட்டு விழும்
காரணம் அறிந்திடவும்
மனமது விழைந்ததுவே!!


க்கள் பணிசெய்ய
மாண்பாக வந்தவரோ
மாண்புமிகு ஆனபின்னே!
பண்புகளை இழந்து
பணமொன்றே குறியாய்
மணமிழந்த மலராய்
பிணமாய் ஆகிடுகையில்
மனம் வெறுத்ததுவே!!


நான்குவழிச் சாலையின்
நாற்கர அமைப்பில்
வெகுவேகப் பயணத்தை
இலகுவாய் கடக்கையில்!
சாலைகளின் ஓரங்களில்
அரணாய் உயர்ந்துநின்ற
பசுமரங்கள் எங்கேயென
தேடித் பார்க்கையில் - மனம்
திக்கித்துப் போனதுவே!!


ரளமாய் வாழ்க்கையது
சாகசம் பலகாட்டி - தன்
சாளர முகங்களில்
சிறுகதைகள் பலகூறி
விடுகதைகள் போட்டபடி
வினாக்களை தொடுக்கிறது - நானோ
விடுத்திட விழைகையில்
விளைச்சலாய் மலர்ந்தது
விடைதேடும் சலனங்கள்!!!


அன்பன்
மகேந்திரன்