Sunday, 5 February 2012

மனமகிழ் தருணம்!!றைக்க இறைக்க
நீரூறும் கேணி - போல
நினைத்த கருக்களை எல்லாம்
எழுத்தாக வடிக்க
பதிவுலகம் கிட்டிடவே - நான்
என்ன தவம் செயதேனம்மா!!
 
ழுத்துக்களை வடித்த பின்
மனதில் உள்வாங்கி
உன்னெழுத்து பிடித்ததென
நயமாய் கருத்திடவே
நல்லுள்ள நட்புகள் கிடைத்திடவே
என்ன தவம் செயதேனம்மா!!
 
நீயும் ஒரு பதிவனென
அங்கீகாரம் கொடுத்திடவே
பல்விருது கொடுத்திங்கே
எனை மகிழச் செய்வித்த
என்னுயிர்த் தோழமைகளுக்கு
நட்புள்ளத்தை வாஞ்சையோடு
தாரை வார்க்கிறேன்!!
 
 
 
 'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த  
தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

'லீப்ச்டர்" விருதினை அன்போடு எனக்களித்த எனதருமை நண்பர்
மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருதை பெற்றதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்குஅளவே இல்லை...
 ========================================================================
இதோ என் மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதினை
அளிக்கவேண்டும் என்பது தார்மீகம். அதை இங்கே நிறைவேற்றுகிறேன்..
 
பதிவுலகில் எனக்கு கிடைத்த சகோதரர். ரெவெரி சமூக கருத்துக்களை நாசூக்காகஎழுதுவதில் வல்லவர். கூடங்குளம் போராட்டம் பற்றிய நேரடிப் பதிவினைஇப்போது எழுதி வருகிறார்...
 
 
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா என்ற தொடரை எழுதி என் நெஞ்சினில்
அருமைத் தம்பியாய் குடியேறியவர் துஷ்யந்தன். வர்ணனைகளை வார்த்தைகளில்மென்மையாய் உரைக்க வல்லவர்.
 
 
பல்சுவைப் பதிவுகளின் மன்னன். எங்கள் குமரி நாட்டு வேந்தன். என் மனதிற்கினியநண்பர் நாஞ்சில் மனோ. மனதினில் ஆயிரம் ஆயிரம் கவலைகள் இருந்திடினும் இவர்பதிவுகளை படித்தால் மனம் இறகு போல இலகுவாகிவிடும்.
 
 
தமிழ் கொஞ்சும் வார்த்தைகளால் கவி வடிப்பதில் வல்லவர். கருக்களை சுமந்து நிற்கும்கருப்பை என்றே சொல்லலாம்  என் மரியாதைக்குரிய நண்பர் ரமணி அவர்களை.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் இவர் உரைக்கும் ஒவ்வொரு பதிவும் ஆயிரம் ஆயிரம் பொற்களஞ்சியங்களுக்கு சமம்.
 
வலையுலகில் சங்கத் தமிழை தாலாட்டாய் சிறு பிஞ்சு நெஞ்சங்களும் மனதிற்குள்பதிவேற்கும் விதமாய் அருமையாய் தமிழ்த் தொண்டாற்றிவரும் என் வணக்குதலுக்குரிய நண்பர் முனைவர் இரா.குணசீலன். பல்வேறு கோணங்களில் இவர் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டுக்கு நான் அடிமை. 

 
இந்த தொடர் விருதின் ஆகம விதிக்கு ஏற்ப, அடுத்து ஐந்து பதிவருக்கு இவ்விருதினைஇன்புற வழங்கிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
 
நன்றிகள் பல.
 
 
அன்பன்
மகேந்திரன்

57 comments:

Anonymous said...

மகி அண்ணா ,

முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்களைக்
கூறி விடுகிறேன் .

இந்த இடத்தில் superstar இன்
வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
'கிடைக்க வேண்டியது கிடைக்காம போகாது ..... '
ஏன் என்றால் நானே தங்கள் மற்றும் ரமணி சார்
அவர்களின் பெயர்களைப் பரிசீலணையில் வைத்து இருந்தேன்.
[ஒரு நாள் முழுக்க யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை...
ஆனால் தொடர் சங்கலி என்னால் அறுபடவும் மனம் இடம் தரவில்லை]

ஆனால் நீங்கள் இருவரும் சிகரங்கள். நான் எல்லாம் தந்தால்
பொருத்தமாக இருக்காது என்றெண்ணி குறைந்த பட்சம் 100
உறுப்பினர்கள் உள்ளதையாவது தேர்வு செய்வோம் என நினைத்து
செயல்பட்டேன். ஆனால் கணேஷ் சார் உங்களுக்குத் தந்தது மிகப் பொருத்தமே
உங்கள் பட்டியலும் வெகு அருமை. அவர்களுக்கும் உங்களுக்கும் என்
பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் .!

Anonymous said...

பரிசால் மனம் நெகிழ்ந்து உள்ள சகோதரருக்குப் பாராட்டுகள்.
அன்புடன்.
வேதா. இலங்காதிலகம்.

ஆமினா said...

வாழ்த்துக்கள் சகோ

guna thamizh said...

பெருமகிழ்ச்சி அன்பரே..

தங்கள் அன்பிற்கு நன்றி..

மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கிறேன்..

RAMVI said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் விருதளித்தவர்களுக்கும் எனது மனம்கனிந்த வாழ்த்துக்கள்.

koodal bala said...

அருமை அண்ணாச்சி!தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் விருதுக்கு தகுதியானவர்கள் ....தங்கள் கவிதைகள் பல வியப்புக்குரியதாக உள்ளன !

ஐடியா மணியின் அல்லக்கை நிரூபன் said...

வணக்கம் அண்ணா,

விருதினைப் பெற்ற உங்களுக்கும்,
உங்களிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும் சொந்தங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மதுமதி said...

விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெற்ற அன்பர்களுக்கும் வாழ்த்துகள்..விருது பெற்ற அனைவரையும் என் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.பார்க்க வாருங்கள் தோழர்..

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
உண்மையை உரைத்தீர்கள். பதிவுலக பழக்கத்தால் நான் பெற்ற சொந்தங்கள் கணக்கிலடங்காது..அதில் நீங்களும் ஒருவர் ;-)

கணேஷ் said...

வலையுலகில் எனக்குக் கிடைத்த நட்புகளையும்,உறவுகளையும் கண்டு நானும் நெகிழ்ந்துதான் போயிருக்கிறேன் மகேன்! விருதுகளுக்கு தாங்கள் பொருத்தமானவர் என்பதோடு, விருதுகளை சரியானவர்களுக்கும் அளித்து சிறப்பித்து விட்டீர்கள். ரெவெரி ஸார் மற்றும் ரமணி ஸார் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். ஐந்து பேர் என்ற கட்டுப்பாட்டினால் நான் தர இயலவில்லை. தாங்கள் கொடுத்ததில் மிகமிக மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் நண்பா!

ரமேஷ் வெங்கடபதி said...

தொடரட்டும் விருது வழங்கலும், சிறப்பித்தலும்!

புலவர் சா இராமாநுசம் said...

இறைக்க இறைக்க
நீரூறும் கேணி - போல
நினைத்த கருக்களை எல்லாம்
எழுத்தாக வடிக்க
பதிவுலகம் கிட்டிடவே - நான்
என்ன தவம் செயதேனம்மா

உள்ள நெகிழ்ச்சியில் உருவான
கவிதை அருமை!
எரியும் விளக்கிற்குத் தூண்டு
கோலாக விருதுகள் அமையட்டும்

புலவர் சா இராமாநுசம்

KANA VARO said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

Lakshmi said...

விருதினைப் பெற்ற உங்களுக்கும்,
உங்களிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும் சொந்தங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

சந்திரகௌரி said...

தொடருங்கள் . நானும் முதலில் ரமணி சார் ஐத் தான் யோசித்தேன் . நீங்கள் முந்திவிட்டீர்கள்.

ஷைலஜா said...

வாழ்த்துகள் மகேந்திரன்.

வெங்கட் நாகராஜ் said...

விருது பெற்ற உங்களுக்கும் நீங்கள் கொடுத்த விருதினை பெற்றுக்கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....

விமலன் said...

அங்கீகாரத்தின் மறுஉறுவாய் இருந்த விருதை பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.உங்களால் விருது பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்.

துரைடேனியல் said...

விருது பெற்ற தங்களுக்கு என் வாழ்த்துக்கள்! பதிவும் அருமை. நன்றி.

dhanasekaran .S said...

அற்புதம் நண்பரே வாழ்த்துகள்

Shakthiprabha said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ. உங்களுக்கும் நீங்கள் பகிர்ந்தளித்த நண்பர்களுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.

சென்னை பித்தன் said...

வாழ்த்துகள் மகேந்திரன்

கீதமஞ்சரி said...

நல்வாழ்த்துக்கள் மகேந்திரன், விருது பெற்றமைக்கும் அதை ஏற்றவர்களுக்குப் பகிர்ந்தமைக்கும். தொடரட்டும் இனிய பதிவுகள் மென்மேலும்.

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் மகேந்திரன்.இன்னும் இன்னும் நிறைவாகப் பெறவும் வாழ்த்துகள் !

Anonymous said...

வாழ்த்துக்கள் சகோதரா...

கட்டிப்பிடித்து முதுகில் தட்டியும் கொடுத்து என் சகோதரர் வழங்கிய விருதை இனியாவது நல்லபடியாக எழுதவேண்டும் என்ற பொறுப்போடும் அளவுக்கு மீறிய சந்தோசத்தோடும் ஏற்றுக்கொள்கிறேன்...

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

shanmugavel said...

பதிவுலகம் பற்றிய தங்கள் கருத்துக்கள் சரியானது.தங்களுக்கும் விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி
அப்படி எல்லாம் சொல்லி என்னை ரொம்ப மேலே தூக்கி வைச்சி
பிரிச்சிராதீங்க...
மனம்திறந்து பாராட்ட ஒரு நல்ல மனது வேண்டும்.
இந்த விருது ஐவருக்கு மட்டும் என வரையறை
வகுத்துவிட்டதால்.. இத்தோடு நின்றுவிட்டேன்.
இன்னும் என் மனதுக்கு பிடித்த பல பதிவர்கள் இருக்கிறார்கள்..
அவர்களுக்கு எல்லாம் என் மரியாதை கலந்த அன்பு எப்போதும்.

தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஆமினா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
இவ்விருதை உங்களுக்கு அளிப்பதில் எனக்கு
பேரானந்தம். இந்த வாய்ப்பு கிடைத்ததுவே எனப்
பெருமை கொள்கிறேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
என் மீதான தங்கள் மரியாதைக்கு என்றும் அன்புடையவனாவேன்.

தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நிரூபன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
பதிவுலகில் மாமா என்று பாசத்தோடு
உள்ளன்போடு அழைக்க உங்கள் உறவு கிடைக்க
என் மனம் மகிழ்ந்திருக்கிறேன்.

தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
நீங்கள் குறிப்பிட்ட இருவரும் என் மனதில் நிலைபெற்ற
பதிவர்கள். அவர்களுக்கு இந்த விருதைக் கொடுக்க எனக்கு ஒரு
சந்தர்ப்பம் கொடுத்த உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர்ப் பெருந்தகையே,
தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்த ஆசிகள்.
என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரோதயன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் விமலன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனசேகரன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சக்திபிரபா,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரதனவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

திவ்யா @ தேன்மொழி said...

வாழ்த்துக்கள் தோழரே..!:)

mum said...

விருதினைப் பெற்ற உங்களுக்கும்,
உங்களிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும் சொந்தங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

துஷ்யந்தன் said...

அண்ணா எனக்கும் விருதா????!!!!
ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.
என் கிறுக்கல்களை கூட உங்களை போன்ற திறமையானவர்களும் ரசிக்கிறார்களே என்று நினைக்கும் பொது:)
ரெம்ப தேங்க்ஸ் அண்ணா.... :)

என்னோடு விருது பெற்ற எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

Post a Comment