Powered By Blogger

Monday 23 April 2012

மலரினும் மெல்லிய......!!!







லரினின்று உறிஞ்சிய
மது உண்ட மயக்கத்தில்!
ரீங்கார இசையோடு
சிறுவட்டமிட்டு சுற்றிவரும்
சில்வண்டு பூச்சிகள் யாம்!!
 
லும்பொடு சதைகளை
பின்னிப் பிணைத்து!
நரம்பு நதிகளை
தோல் கொண்டு சுற்றிய
உடலின் உணர்ச்சியல்ல யாம்!!
 

 


ள்ளங்கை அளவே
உருப்பெற்று இருந்தாலும்!
ஓயாத உழைப்பினால்
உயிர்சுமந்து நிற்கும்
இதயத்தின் உணர்ச்சி யாம்!!
 
ன்று பிறந்து இன்றே அழியும்
விட்டில் பூச்சல்ல
முன்னிலை படர்க்கையும்
புன்சிரிப்பால் அகமகிழும்
ஈதலின் இன்னுருவே யாம்!!
 
 
துரத்தும் துயரங்களின்
இடுக்கிப் பிடியில்!
துன்புறும் உள்ளங்களை
பொன்முறுவல் பூத்திட
விழையும் வினையூக்கி யாம்!!
 
யாம் இங்கே யாரென்ற  
வினாக்களை கேட்கின்றேன்?
எமையிங்கே பன்மையாய்
ஏற்றத்தோடு விளம்பி நிற்கும்
யாமோ அன்பு எனும் பண்பே!!
 
 
கிலத்தின் புறப்பரப்பில்
மானுடப் பெருங்குலத்தோர்!
மாட்சிமை குணத்தோடு
பெருவாழ்வு வாழ்ந்திடுவதோ 
அன்பெனும் எம்மாலே!!
 
திரிசடையோன் சிவனுக்கு 
புரி இணையாய் எமையிங்கே!
தருவித்து அழகாய் 
மந்திரம் சொன்னதோர் 
புலவன் வாழ்ந்ததும் இங்கன்றோ!!
 
 
னைத்தினையும் பூட்டி 
பாதுகாக்க தாழுண்டு!
எமையிங்கு பூட்டி 
அடைத்திட ஓர் தாழில்லை என 
உரைத்ததும் இங்கன்றோ!!
 
மெல்லிய பொருளுக்கு 
உவமைக் கருவாய் 
மலரதனை சொல்வதுண்டு!
இப்புவியில் எம்குணமோ
மலரினும் மெல்லியதாய்!!
 
 
மெல்லிய தன்மையாம் 
எமைக்கருவில் ஏற்றிடுக!
புவனத்தின் கறையெல்லாம்
எமைக்கொண்டு கழுவிடுக!
பண்புள்ள மானுடராய்
அகிலத்தில் சிறந்திட
காரணியைக் கைகொள்வீர்!
தண்மையாம் அன்பெனும்
காரணியைக் கைகொள்வீர்!!
ஆதலின் ...........
இன்றே அன்பு செய்வீர்!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Friday 20 April 2012

கவிதை தந்த விருது!!






நிழற்படங்கள் இரண்டினை
கருவாய்க் கொடுத்து! - எம்
மனச் சுரங்கத்தை
சொற்கோடரி  கொண்டு
துளைத்தெடுக்க வைத்து
வாரீர்! வந்து பாரீர்!
பார்த்து கவிதை படைத்து 
விருந்து தாரீர்!! - என
அழைப்பும் விடுத்து
வடித்த கவிதைக்கு
விருதும் கொடுத்த - என்
அன்பு சகோதரி ஹேமா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஹேமா அவர்களின் கவிதையில் வரும் சொல்லாடல்கள் மிகவும்
பிரமிக்க வைக்கும். வார்த்தைகளால் வண்ணமிகு தோரணம் கட்டுபவர் அவர்.
அவரின் உப்புமாட சந்தியில் கவிதை எழுத வாரீர் என அழைப்பும் விடுத்து
அங்கு எம்மால் எழுதப்பட்ட கவிதைக்கு விருதும் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் என்பது தான் தட்டிக்கொடுக்கும் ஒரு
மாபெரும் சக்தி. அத்தகைய அங்கீகாரத்தை எமக்களித்த
சகோதரி ஹேமா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

உப்புமாட சந்தியில் என் கவிதை...




ண்களை அகல விரித்தேன்
வந்த இடம் தெரியவில்லை!
செல்லும் இடம் புலப்படவில்லை!
கண்மூடி தியானித்தேன்
முன்னோக்கிப் பார்த்தால்
இருமுனைப் பாதைகள்
எம்மார்க்கம் சென்றிடினும்
அனுபவங்கள் பலவாகும்!
சற்றே பின்னோக்கினேன்!
எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!

==============================================


..நிலவே!
பால்போன்ற உன்னில்தான்
அழகின் அடைக்கலம் -என
இறுமாப்பு உனக்கு!
இதோ
அமுதூட்டும்
என் அன்னை இருக்கிறாள்!
அதோ ஒரு
கரிய மேகம் வருகிறது
ஒளிந்து கொள்!
பின்னர் ஒரு நாள்
என்னிலும் ஓர் அழகைக்
கண்டேன் என
புலம்பித் தவிக்காதே!!



அன்பன்
மகேந்திரன் 

Tuesday 17 April 2012

எனக்கின்னு ஒரு வீடு!!







ந்தைக் கண்ண உருட்டிகிட்டு
ஆலவட்டம் போட்டுக்கிட்டு!
அசையாத எம்மனச - கட்டிக் கரும்பே
உலையரிசி ஆக்கிபுட்ட - சுட்டிக் குறும்பே!!
 
செப்புக்குடம் செஞ்சதுபோல்
செம்மாந்த இடுப்பழகி!
குலுக்கி நீயும் நடக்கையில - பச்சைக் கிளியே
எம்மனசு உடைஞ்சுதடி - இச்சைக் கிளியே!!
 

 


ந்தவாசி சந்தையிலே
வாங்கிவந்த விதைகளெல்லாம்!
விதைச்சிபுட்டு வந்தவரே - கட்டிக் கரும்பே
சித்தநேரம் உட்காரய்யா - சுட்டிக் குறும்பே!!
 
விதைநெல்லு விதைச்சபின்னே
மனசிங்கே குமுறுதடி!
மழை தண்ணி இருந்தாத்தானே - பச்சைக் கிளியே
மாபோகம் கிடைக்குமடி - இச்சைக் கிளியே!!
 
 
ருத்தமேகம் கூடிருச்சு 
கூராப்பு போட்டிருச்சு!
சிலுசிலுன்னு காத்தடிக்க - கட்டிக் கரும்பே
கிளுகிளுப்பா ஆனதய்யா - சுட்டிக் குறும்பே!!
 
பூந்தூறல் போடுதடி
மண்வாசம் வீசுதடி!
இதுக்காகத் தானே நானும் - பச்சைக் கிளியே
காத்து காத்து பூத்திருந்தேன் - இச்சைக் கிளியே!!




பூத்திருக்கும் விழிய நானும்
நித்தமும் தான் பார்த்திருக்கேன்
கொழிஞ்சிப்பூ மூக்கழகா - கட்டிக் கரும்பே 
கொஞ்சிப்பேச வந்திடய்யா - சுட்டிக் குறும்பே!! 

கொஞ்சிப்பேச நேரமில்ல
மஞ்சப்பூச்சு முகத்தழகி!
வயலுக்கு போயிவாறேன் - பச்சைக் கிளியே
சாயங்காலம் பேசிடுவோம் - இச்சைக் கிளியே!!
 
 
ம்பம் புல்லு குத்திவைச்சு
கஞ்சிபோட்டு வைச்சிருக்கேன்!
பொழுதடைஞ்சி போனபின்னே - கட்டிக் கரும்பே
மழுப்பாம வந்திடய்யா - சுட்டிக் குறும்பே!!
 
ழைநல்லா பெஞ்சுதடி
வரப்பெல்லாம் நிறைஞ்சுதடி!
ஓடைத்தண்ணி ஓடையில - பச்சைக் கிளியே 
ஒடம்விட தோணுச்சடி - இச்சைக் கிளியே!!
 
 
ம்பங்கஞ்சி கொண்டுவாரேன் 
கடகடன்னு குடிச்சிடய்யா!
விதைச்ச நெல்லு மளமளன்னு - கட்டிக் கரும்பே
விளஞ்சிநிக்கும் நேரம்வரும் - சுட்டிக் குறும்பே!!
 
ந்தநாள பார்க்கத்தானே
அங்கமெல்லாம் காத்திருக்கு !
அறுவடையின் நேரம்பார்த்து - பச்சைக் கிளியே
மழைபெய்யக் கூடாதடி - இச்சைக் கிளியே!!
 
 
ம்கையில் எதுமில்ல
நல்லமனசு கொண்டவரே!
நல்லதையே நினைச்சிருப்போம் - கட்டிக் கரும்பே
நல்விளச்சல் கிடைக்குமய்யா - சுட்டிக் குறும்பே!!
 
விளஞ்சிவந்த பின்னாலேயும்
கட்டிவச்ச நெல்களையெல்லாம்!
சந்தைக்கு கொண்டுபோனா - பச்சைக் கிளியே
நல்லவிலைக்கு போகணுமே - இச்சைக் கிளியே!!
 
 
ரசாங்கம் செய்யனுமய்யா
அதற்கான ஏற்பாடெல்லாம்!
அத்திப்பூ முகத்தழகா - கட்டிக் கரும்பே  
அதுவரைக்கும் பொருத்திருங்க - சுட்டிக் குறும்பே!!
 
வேய்ந்தகூரை பிஞ்சிப்போச்சு
வெட்டவெளி ஆகிப்போச்சி!
காரவீடு கட்டனமின்னு - பச்சைக் கிளியே
பாவிமனசு துடிக்குதடி - இச்சைக் கிளியே!!
 
 
ந்தபோகம் விளைஞ்சிவரும்
எருக்கம்பூ மூக்கழகா!
அந்த பணத்த வைச்சி நாமும் - கட்டிக் கரும்பே
அழகாக கட்டிடுவோம் - சுட்டிக் குறும்பே!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Saturday 14 April 2012

விசைகொண்டு வாழ்ந்திடு!!!







சுழியத்தின் நிலைவிடுத்து
சூனியப் பக்கங்களின்
சுருக்கென்ற கருவறுத்து!
சூரியக் கதிர்களின்
சூட்சும வினைவேகத்தை
சூதனமாய் கொண்டிட
விசையொன்றை வளர்த்திடு!!
 

 


ருப்பு நிலையினின்று
தயக்கத்தை சிரமறுத்து
இயக்கம் கொடுத்திடவும்!
காலமாறுதலுக்கு ஒப்ப
தடைகளை தகர்த்தெறிந்து
நடப்பு வேகத்தை
துரிதமாக்க துல்லியமாய்
விசையொன்றை வளர்த்திடு!!
 
 
விசைகளிலே இசைவாய்
என்மனதை ஆட்கொண்ட
விசைகளின் வித்தகன்
மையநோக்கு விசையே!
மையத்தை கருவாயக்கொண்டு
வட்டப்பாதையில் சுற்றிவரும்
தொகுவிசைகளின் தொகுப்பே
மையநோக்கு விசையாம்!!
 
 
கூழ்மங்களின் குழைவை
குடுவையில் இட்டுவைத்து
இடமிருந்து வலமாய்
விசைகொண்டு சுற்றினால்
கூழ்மத்தின் திடப்பொருளை
படிமமாக்கி விட்டு
திரவத்தை மேல்நோக்கி
நீந்தச்செய்து பிரித்து தருதலே
மையநோக்கி விசையாம்!!
 
 
சுவின் பால்தனை
தயிராக உருமாற்றி
தயிரினின்று வெண்ணெயும்
எடுத்திடலாம் என
மத்துகொண்டு கடைந்திட்டு
மையநோக்கு விசையின்
பெருமையின் தன்மையை  
அன்றே உரைத்திட்டார்
நமக்குமுன் வாழ்ந்தோரே!!
 
 
னிதர்கள் மட்டுமல்ல
நிலைநீர்த் தடங்களில்
நீந்தி வாழ்ந்த அன்னமும்
அழகாய் உரைத்திட்டதே!
அலகின் நுனியை  
பாலின் மேற்பரப்பில்
தொடுவாற்போல் தொட்டுவைத்து
இடமிருந்து வலமாய்
சுழற்சியால் சுற்றவைத்து
பாலினின்று தண்ணீரை
பிரித்து எடுத்ததெல்லாம்
மையநோக்கு விசையாலே!!
 
 
விழிப்போடு நீ வாழ்ந்திட
புவனமிதில் சான்றோர்கள்  
விரித்துவைத்த பக்கங்கள்
ஏராளம்!! ஏராளம்!!
மலர்ப்பாதம் அடியெடு!
கருவிழி அகலவிரி!
சிதிலமான உன்னறிவை
குவியலாய் கூட்டிவைத்து
மையநோக்கு விசைகொண்டு
மையத்தில் சேர்த்துவை!!
 
 
 
நோக்கத்தை விளைபொருளாக்க
முயற்சியை தாதுப்பொருளாக்கு!
செயல்வினைகளின் வேகத்தை
ஊக்குவிக்கும் வினையூக்கியாய்
மையநோக்கு விசைகொள்!
கொண்ட இலக்கினில்
விழியின் குவியத்தை வைத்து
வீறுகொண்டு நடைபோடு!
நிலமிசை புகழ்பெற
விசைகொண்டு வாழ்ந்திடு!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Tuesday 10 April 2012

பின்னோக்கி ஓர் பயணம்!!


மிடுக்காக மின்னணுவியல்
மிளிர்ந்திருக்கும் போதிலும்!
தொய்வில்லா தொலைத்தொடர்பு
உச்சமிருக்கும் போதிலும்!
கற்காலம் தேடியிங்கே
பின்னோக்கி ஓர் பயணம்!!
 
யன்பாடுகள் பெருகுகையில்
உற்பத்தியே! நீ மிகைந்தால்!
நாகரீகப் பாதையில்
நானும் வளர்வேன் என
நாசூக்காய் சொல்லிக்கொண்டு
தட்டுப்பாடும் வளருதிங்கே!!
 

 


ன்று வாங்கினால்
ஒன்று இலவசமென!
பழையது கொடுத்து  
புதிதாய் பெற்றதென!  
வாங்கிவைத்த பொருளெல்லாம்
சிலந்தி வலைகளுக்கு  
தாக்கமாய் நின்றதிங்கே!!
 
காய்ந்த மரம் வெட்டி
விறகுக் குச்சியாக்கி
அடுப்பெரித்து வாழ்ந்தோரை!
காலத்தின் தன்மைக்கு
மாறிட அறிவுறுத்தி
இயற்கைவாயு தந்து எனை
இன்புறச் செய்தது ஓர் காலம்!!
 
 
நான்கு தூக்கு விறகுவாங்கி
வெயில்கண்டு உலரவைத்து!
எரிகையில் எரிச்சலூட்டும்
புகைச்சலின் பால்கொண்ட
வெறுப்பின் காரணமாய்!
மலர்ந்த முகத்தோடு
நானும் அதை ஏற்றுக்கொண்டேன்!!  




விழ்ந்து போன காலச்சூழலில்
பதிவு செய்திடுகவென  
தொலைபேசி விடுத்தாலோ!
இயற்கை வாயு வருவதற்கு
இன்னும் மூன்று மாதமென
புதிய கணக்கு சொல்கையிலே!
சுற்றிவந்தால் வட்டமென
இன்றுதான் புரிகிறது!!
 
 


சிறுதடியின் முகப்பில் 
மல்லுத்துணி கட்டி
சிக்கிமுக்கி கல் தேய்த்து
வந்த நெருப்பினால்
எரிய வைத்தும்!
மின்மினிப் பூச்சிகளை 
கண்ணாடிக் குடுவைக்குள் 
அடைத்து வைத்தும்  
வெளிச்சம் கொண்டு வந்தோம்
அதுவும் ஓர் காலம்!!
 
 
சிறிதாக அகல்விளக்கும்
பெரிதாக அரிக்கேனுமென 
எரியும் எண்ணெய் கொண்டு
விளக்குத் திரியேற்றி
உரசிப் பற்றவைக்கும்
தீப்பெட்டி துணைகொண்டு
வெளிச்சம் கொண்டு வந்தோம்
பின்னர் ஓர் காலம்!!
 
 
றிவியல் வளர்ந்ததப்பா
விட்டிற் பூச்சியாய்
வீட்டிற்குள் அடங்காது
புறம் வந்து பார்த்திடப்பா! - என
கண்ணுக்கு தெரியாது
கம்பிக்குள் சக்தியை
சந்துக்குள் கொண்டுவந்து
பளபளப்பாய் வெளிச்சம் காட்டி
திகைக்க வைத்ததோர் காலம்!!
 
 
கல் விளக்கை புறம் எறிந்து
மின்சக்தி அகம் கொணர்ந்து
சொகுசான வாழ்க்கைக்கு
அடித்தளம் போட்டுவைத்தேன்!
குலவி நின்று உரல் ஆடுவதை
வாங்கி வைத்து
உரல் நின்று குலவி ஆடியதை
தொலைவில் எறிந்தேன்!!
 
டம் புரண்ட காலம்
கதையிங்கே சொல்கிறது!
காணமுடியா மின்சக்தி 
கண்மறைந்து போனதாம்!
பெருகிவரும் மக்கட்தொகையால் 
உற்பத்தி போதாது 
தட்டுப்பாடு வந்ததாம்!!
 
 
தொலைவெறிந்த அகல்விளக்கு 
இன்றோ! அகத்தில் 
மறுபுகுத்தலாய் மாடத்தில்!
கைதேர்ந்த சிற்பிகளோ 
அரைக்கும் அம்மிக்கல்லையும் 
ஆட்டும் ஆட்டு உரலையும் 
நுணுக்கமாய்  செதுக்கி
கலைவண்ணம் செய்துவரும்
காலமிது இக்காலம்!!
 
 
பாமரப் பருவம்விட்டு
படித்தறிந்த பின்னும்
தட்டுப்பாடு பெருகிடவே!
விஞஞான கால்ம்விட்டு
மெதுவாய் கால்பரப்பி
பின்னோக்கி செல்கிறேன்
கற்காலம் நோக்கி!!
 
 
ட்டுப்பாடு இங்கே
தானாக வந்ததோ?
ஆளும் வர்க்கத்தோர்
தனித் திறம் காட்டி 
தரம் உயர்த்தத் தவறிவிட்டு  
பசப்பு வார்த்தைகள் பேசி 
செய்த தவறுகளை
தவளை உருவாக்கி
கிணற்றில் அடைக்கின்றனரே!!
 
 
ளர்ச்சிப் பாதையில்
தட்டுப்பாடெனும் அரக்கன்
நுழைந்திட காரணம் யார்??!!
மக்கட் தொகை பெருக்கமோ??
ஆக்க வழிகளில் 
அழிவின் சக்தியைக் கொணர
ஆள்வோர் நடத்தும் நாடகமோ??
விழிப்புணர்வு இன்றி
வீணாக பயன்படுத்தி 
இன்று விழிபிதுங்கும்
நுகர்வோரின் குற்றமோ??!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 
 

Friday 6 April 2012

இலையே ....நீ....இலை தானா??!!







ங்கம் வளர்த்த தங்கத்தமிழின்
நுங்குச் சுவையை!
எண்ணித் திளைக்கையிலே
இன்னுயிரும் ஆங்கே
தன்னிலை மறந்துபோகும்!! 
 
ன்னுயிர் தீந்தமிழே
உன்னில் நானோ
சொற்சுவை வியந்திடவா?!
பொருட்சுவை வியந்திடவா?!
சொல்லும் பொருளும் கலந்த
மொழிச்சுவை வியந்திடவா?!!
 

 


பொருளுக்கும் உறவுக்கும்
ஏனைய மொழிகள்
ஒற்றைச் சொல்லால் அடக்குகையில்!
அங்கனம் அல்ல தமிழா!
ஒன்றனுக்கு பலசொல் உண்டென
நீ கூற நான் வியந்தேன்!!
 
தாவர உடற்கூற்றில்
பச்சையத்தை மேனியில்
தாங்கிநிற்கும் இலைகளுக்கும்
பலசொல் உண்டா என ?
பாங்காக வினா தொடுத்தேன்!
உண்டென இயம்பி
என்னறிவு புகுத்தினாய்!!
 
 
வாழையடி வாழை என
உவமை பெற்ற வாழையும்!
அகலக் கிளைபரப்பி
மண்ணையும் வளமேற்றி
தன்னையும் வளமேற்றும்!
மரங்கள் கொண்டதெல்லாம்
இலைகள் என அறிந்திடுக!!
 
 
புவியின் மேற்பரப்பை
கொழுகொம்பாய்க் கொண்டு!
வளர்ச்சியில் எல்லையற்று 
புவி ஈன்றதோ?! தான் ஈன்றதா?! என 
அறிந்திட இயலா  
கைகளை ஈன்றுவக்கும்
கொடிகள் கொண்டதெல்லாம்
பூண்டு என அறிந்திடுக!!
 
 
டையற்று நிர்மலமாய்
உவர்நீர் வடித்தவளை!
பச்சை பட்டு போர்த்தி
மானம் காக்கும் நன்மகவாய்!
இடைவெளி சிறிதின்றி
புவிப்பரப்பில் வளர்ந்திடும்
கோரை அருகு கொண்டதெல்லாம்
புல் என விளங்கிடுக!!
 
 


டினத்தின் உவமைக்கு
இயற்கைப் பொருளாய் அமைந்த!
நிலமகளின் மேனியிலே
வீக்கம் கொண்டது போலவாம்!
மலைகளின் வாசத்தில்
வேர்களை ஊடுருவி
வானுயர வளர்ந்து நிற்கும்!
பெரும் விருட்சங்கள் கொண்டதெல்லாம்
தழை என இயம்பிடுக!!
 
 


மானுடப் பிறப்பின்
வாழ்வின் நிலைப்பாட்டிற்கு
அடிப்படைத் தேவையாம்!
பசிக்கையில் புசித்திட
உழவனெனும் இறைவன் படைத்த!
நெல் கேழ்வரகு எனும்
தானியங்கள் கொண்டதெல்லாம்
தாள் என அறிந்திடுக!!
 
 
வானுயர்ந்து வளர்ந்து
உச்சிக்கு மேலே  
உயரக் குடை பிடித்தாற்போல்!
தான்கொண்ட பாகங்கள் 
சிறிதேனும் மீதின்றி 
தனைவளர்த்த மனிதனுக்காய் 
ஈந்து இன்பம் பெரும்!
தென்னை பனை கொண்டதெல்லாம் 
ஓலை என விளங்கிடுக!!
 
 
சாலை ஓரங்களில் 
கேட்பதற்கு ஆளின்றி 
இங்கு நான் கண்டதெல்லாம் 
எனது தேசமென!
பரந்து விரிந்து வியாபித்து
வளர்ந்து குவிந்திருக்கும் 
சப்பாத்தி தாழை கொண்டதெல்லாம் 
மடல் என இயம்பிடுக!! 


யர உயர வளர்ந்தும் 
உடல்பருமன் சிறுத்தும்!
வாழ்வினில் சிலநிலை கடக்க
இதைப்போல் வளைந்துகொடென
பெயர்பெற்ற நாணலும்!
தோலின் வண்ணம் கருத்திருப்பினும்
கொண்ட உடல்முழுதும்
வளர்த்தவனுக்கு இன்முகத்தோடு!
இனிக்க இனிக்க உணவை மாறும்
கரும்பினம் கொண்டதெல்லாம்
தோகை என விளங்கிடுக!!
 
 


சிறிய மரமெனினும்
சின்னஞ்சிறு செடியெனினும்
விதைத்திட்ட சிலநாளில்
விதைகீறி துளிர்த்து
பச்சையத்தை தன்னுள்ளே
இச்சையாய் பூண்டிருக்கும்
அகத்தி பசலை மணல்தக்காளி
ஆகியவை கொண்டதெல்லாம்
கீரை என இயம்பிடுக!!


 
அன்பன்
மகேந்திரன்  

Wednesday 4 April 2012

பொய்க்கால் குதிரை ஆட்டம்!!






பாய்ந்தோடும் குதிரைமேல
பக்கத்தில ராணியோட
பார்முழுதும் சுத்திவரும்
வருசநாட்டு வேந்தன் - நானும்
வருசநாட்டு வேந்தன்!!

தொந்தி வயிற்றோனை
தெண்டனிட்டு வணக்கிபுட்டு
பரியேறும் மன்னவன் நான்
தென்காசிச் சீமை - ஆமா
தென்காசிச் சீமை!!




சிவகிரி சின்னமாமன்
செல்லமாக பெத்தபுள்ள
என்னோட ராணியாக
அரசாள வந்தா - இப்போ
அரசாள வந்தா!!

காத்திருக்கும் ராசாத்தியை
ரோசா போல கூட்டிக்கிட்டு
ஊர்வலந்தான் போகப்போறோம்
நெல்விளையும் சீமை - ஆமா
நெல்விளையும் சீமை!!




திற்பரப்பு அருவியிலே
தீர்த்தமாடி வந்தபின்னே
தம்பதியா போகப்போறோம்
திருவையாறு பூமி - வாங்க
திருவையாறு பூமி!!

கால்களில் கட்டைகட்டி
விடமுள்ள பூச்சிகளை
அழிக்கப் பிறந்ததுதான்
மரக்காலாடல் ஆட்டம் - ஆமா
மரக்காலாடல் ஆட்டம்!!




புராணத்தில் இருந்துவந்த
இந்தவகை ஆட்டமதை
பொய்க்காலு குதிரையாக்கி
தந்தவர்தான் ஐயா - திருவையாறு
இராமகிருட்டிணன் ஐயா!!

குதிரை வடிவுடைய
கூடு ஒன்னு கட்டிக்கிட்டு
மரக்காலில் ஆடிவந்த
ஆட்டமிந்த ஆட்டம் - இது
பொய்க்கால்குதிரை ஆட்டம்!!




சாக்கு பிரம்புக்கம்பு
இரும்புத்தகடு கொண்டு
புளியங்கொட்டை பசையெடுத்து
ஒட்டி செஞ்ச குதிரை - இந்த
ராசாராணி குதிரை!!



பொய்க்காலு என்பதிங்கே
மாமரக் கட்டையப்பா
ஒன்னரை அடியளவு
பொய்க்காலுக்  கம்பு - இது
பொய்க்காலு கம்பு!!



பொய்க்காலு இல்லாம
காலிலே சலங்கை காட்டி
ஆடுகின்ற ஆட்டமது
பொய்க்குதிரை ஆட்டம் - ஐயா
பொய்க்குதிரை ஆட்டம்!!

குதிரைக் கூடெடுத்து
தோளிலேதான் தொங்கவிட்டு
நையாண்டி மேளத்தோட
ஆடிவந்தோம் நாங்க - ஆமா
ஆடிவந்தோம் நாங்க!!




ம்பை கிடுகிட்டி
தவிலோடு கோந்தளமும்
அடவுகள் பலகட்டி
குதிரையோட்டி வந்தோம் - நாங்க
குதிரையோட்டி வந்தோம்!!

தேசமில்லா அரசன் நானோ
அரசியோடு கூத்துகட்டி
ஊரெல்லாம் சுத்திவந்து
கலைய வளர்த்துவந்தோம் - ஆமா
கலைய வளர்த்து வந்தோம்!!




குதிரையும் காணவில்லை
கூத்துக்களும் தெரியவில்லை
வளர்த்துவைச்ச கலைகளெல்லாம்
போன இடம் எங்கே  - ஆமா
போன இடம் எங்கே?!!



அன்பன்
மகேந்திரன்