Powered By Blogger

Friday 3 February 2012

மூடுபனித் திரை!!!


னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் 
ஏன்? என்று புரியவில்லை!
பின்னந்தலையை தட்டி 
ஆயிரம் முறை கேட்டிடினும் 
பதில் ஒன்றும் கிடைக்கவில்லை!!
 
விழிகளின் முன்னே 
படலம் இட்டது போல 
பக்குவப்படா ஓருணர்வு!
திரைவிலக்கிப் பார்த்தேன் 
முற்றிலும் மூடுபனித் தோற்றம்!!
 

திகாலை விழித்தலுக்கும்
அந்திநேர அடங்களுக்குமிடையில்
அவதியாய் தோன்றிய
அரூப காட்சியெல்லாம்
அடைக்கலம் போனதெங்கே?!!
 
றம் செய விரும்பு - என  
ஆறுமுறை படித்தும்
புரியாது விழித்த
என்மகனைக் கண்டு!
இதுகூட புரியவில்லையா? - என
விழிசுருக்கி கேட்டதெல்லாம்
வழிமறைந்து போனதேனோ?!!
 

ருந்த பாலைச் சூடாக்கி
தேநீர்க் கலவையாய்
முகத்தில் மலர்ச்சியோடு
என் மனைவி கொடுக்கையில்!
சர்க்கரை குறைவென
சற்று தள்ளி வைத்ததெல்லாம்
திரைமறைவில் ஒளிந்ததேனோ?!!
 
ருசக்கர வாகனத்தில் 
அலுவலகம் செல்கையிலே!
விதிதவறி செல்வோரை 
வஞ்சித்து சென்ற நான்!
சாலையோரம் அடிபட்டுக் கிடந்த 
சகமனித உருவமொன்றை 
வேடிக்கை பார்த்து சென்றதேனோ?!! 
 

யண வீதியின் பாதையோரத்தில்
கந்தல் ஆடையோடு
இரவல் என வந்தோரை
இகழ்ச்சியாய் பார்த்துவிட்டு!
எத்தனையோ வழியிருக்க
இது என்ன பிழைப்பென்று 
ஏளனம் செய்ததேனோ?!!
 
ம்பவங்கள் நிழலாய்
விக்கித்து நின்றாலும்!
சாட்சிகள் ஏதுமின்றி
சடுதியில் வந்ததுபோல்  
சவக்கிடங்கில் புதையுண்டதேன்?!!
 

ந்திரம் ஏதுமில்லை
மாயமும் ஏதுமில்லை!
தானென்ற அகந்தையின்
சாயம்போன பண்புகளே
சாட்சிகள் என அறிவுற்றேன்!!
 
மாயப் பண்புகளாய்
முகம் மறைத்து நின்ற
மூடுபனித் திரையை!
இனிமேல் தோன்றாது  
விலக்கிட விழைந்தேன்!!
 

ரக்க குணங்களை
அடியோடு தவிர்த்து!
முடி ஏற்க வைக்கும்  
மனித மாண்புகளை
அறிந்திட விழைந்தேன்!!
 
றுமையில் உழன்றாலும்
செழுமையாய் உள்ளத்தை!
எளிமையாய் வைத்தாள
மேருமலை ஏவவைக்கும்
பொறுமையைக் கண்டறிந்தேன்!!
 

கொஞ்சமும் பணிவின்றி
நெஞ்சுநிமிர்த்தி பேசாது!
அவைமுன் அடக்கத்தால்
விதானம் ஏறவைக்கும்
நிதானத்தைக் கண்டறிந்தேன்!!
 
றுக்கான சொற்களால்
சுருக்கென்று பேசாது!
மயிலிறகு வார்த்தைகளால்
நயமாக பேசிடவே
அன்பினை இனம்கண்டேன்!!
 

னிதங்களின் நேயமெல்லாம்
பண்புகளின் சாயலில்தான்!
மூடுபனியால் திரையிட்டு
முகம்மறைத்து வைத்ததெல்லாம்
தூர்வாரா துர்பண்புகளே!!
 
தூய பண்புகளால்
தூர்வார முயற்சித்தேன்!
மூடுபனி விலகிய பின்  
முழுநிலவு ஆகிவந்தேன்!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

46 comments:

பி.அமல்ராஜ் said...

வணக்கம் அண்ணா,

வழமைபோலவே அழகான கவிதை ஒன்றைத் தந்திருக்கிறீர்கள்.

//சம்பவங்கள் நிழலாய்
விக்கித்து நின்றாலும்!
சாட்சிகள் ஏதுமின்றி
சடுதியில் வந்ததுபோல்
சவக்கிடங்கில் புதையுண்டதேன்?!!//

மிகவும் ரசிக்க வைத்த வரிகள்.

துரைடேனியல் said...

உண்மைதான் சார். சில மூடுபனித்திரைகள் விலகினால்தான் நல்லது. அருமையான கவிதை. தொடருங்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

இருசக்கர வாகனத்தில்
அலுவலகம் செல்கையிலே!
விதிதவறி செல்வோரை
வஞ்சித்து சென்ற நான்!
சாலையோரம் அடிபட்டுக் கிடந்த
சகமனித உருவமொன்றை
வேடிக்கை பார்த்து சென்றதேனோ?!! ////

தினமும் நடக்கும் சம்பவங்களை இந்த வரிகள் உணர்த்துகிறது...

மனோ சாமிநாதன் said...

//மனிதங்களின் நேயமெல்லாம்
பண்புகளின் சாயலில்தான்!
மூடுபனியால் திரையிட்டு
முகம்மறைத்து வைத்ததெல்லாம்
தூர்வாரா துர்பண்புகளே!!

தூய பண்புகளால்
தூர்வார முயற்சித்தேன்!
மூடுபனி விலகிய பின்
முழுநிலவு ஆகிவந்தேன்!!//


மிக அருமையான வரிகள்!!
மிகச் சிற‌‌ந்த கவிதை!!
இப்படி ஒவ்வொருத்தரும் துர்பண்புகளை தூர்வாரினால் எத்தனை இனிமையாயிருக்கும் இந்த உலகம்!!

தனிமரம் said...

அழகான கவிதை அர்த்தம் பொதிந்தது எத்தனை தடுமாற்றங்கள் மயில் இறகால் வார்த்தைகள் வருடினால் முழுநிலவுதான் .

Anonymous said...

இயல்பாக வந்து விழும் ஒவ்வொரு
வார்த்தையும் வெகு அழகு. உம்: துர்பண்புகளைத்
தூர்வாரல் .....

Unknown said...

அவசர உலகத்தின் பயணம் பணம் என்பதையே தேடி ஓடும் போது....இரக்கம்
இல்லாத கல் போன்று இதயம் இருகிவிடுகிறது இல்லாதவர்களை கண்டால் ஏளனம்தான் இருக்கும்
நிதர்சனத்தை கூறும் கவிதை

நிரூபன் said...

வணக்கம் அண்ணர்,
அருமையான ஓர் கவிதை கொடுத்திருக்கிறீங்க.

எம்மிடம் குடி கொடுத்திருக்கும் விரும்பத்தகா பண்புகள் என்று நீங்குகிறதோ, அன்று தான் எம் வாழ்வில் முழு நிலவு ஒளி கிடைக்கும் என்பதனை அனுபவ உதாரணங்களூடாக விளக்கி நிற்கிறது இந்தக் கவிதை.

Unknown said...

விலக வேண்டியது நிறய இருக்கு போல மாப்ள...கவித நல்லா இருக்குய்யா!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையான கருத்துக்களைக் கொண்ட நல்ல கவிதை சார் ! பாராட்டுக்கள் ! நம்மிடம் விலக வேண்டிய திரைகள் நிறைய இருக்கையில், அடுத்தவர்கள் திரைகளை விலக்க நினைப்பது ஏனோ ?

பால கணேஷ் said...

முழு நிலவு ஆகவே நாளும் நாளும் நான் முயற்சித்து வருகிறேன். அருமையான வார்த்தைகளால் செர்ல்ல வேண்டிய கருத்தை மொழிந்திட்டீர் நண்பரே... அருமை. என் இந்தப் பதிவுக்கு உடன் வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

http://www.minnalvarigal.blogspot.in/2012/02/blog-post.html

நன்றி.

Marc said...

இருசக்கர வாகனத்தில்
அலுவலகம் செல்கையிலே!
விதிதவறி செல்வோரை
வஞ்சித்து சென்ற நான்!
சாலையோரம் அடிபட்டுக் கிடந்த
சகமனித உருவமொன்றை
வேடிக்கை பார்த்து சென்றதேனோ?!!


சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் வரிகள்.அருமை கவிதை வாழ்த்துகள்

குறையொன்றுமில்லை. said...

தூய பண்புகளால்
தூர்வார முயற்சித்தேன்!
மூடுபனி விலகிய பின்
முழுநிலவு ஆகிவந்தேன்!!

படங்களும் கவிதையும் நல்லா இருக்கு, வாழ்த்துகள்.

ஷைலஜா said...

கடைசி பாராக்கு நான் மட்டும் குறுநிலமன்னனாய் இருந்தால் ஏதும் மான்யம் கொடுத்திருப்பேன் அட்டகாசம் மகேந்திரன்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

///மனிதங்களின் நேயமெல்லாம்
பண்புகளின் சாயலில்தான்!
மூடுபனியால் திரையிட்டு
முகம்மறைத்து வைத்ததெல்லாம்
தூர்வாரா துர்பண்புகளே!!

தூய பண்புகளால்
தூர்வார முயற்சித்தேன்!
மூடுபனி விலகிய பின்
முழுநிலவு ஆகிவந்தேன்!!///

அற்புதமான கவிதை! அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்...
அன்பின் வரட்சியில் பாலம் பாலமாய் வெடித்துப் போன
மனதை.. ஆணவம் என்னும் திரையை அகற்றும் உயர்வை..

மிகவும் நன்று பகிர்வுக்கு நன்றிகள் கவிஞரே!

Unknown said...

காலம் மிகப்பெரிய ஆசான்!
உடலிலும் எண்ணங்களிலும்
அதன் தாக்கம் உண்டு!

ஓடும் நீரும்
வேகத்தைக் குறைக்கையில் தான்
சமதளம் வருகிறது!

ராஜி said...

தூய பண்புகளால்
தூர்வார முயற்சித்தேன்!
மூடுபனி விலகிய பின்
முழுநிலவு ஆகிவந்தேன்!!
>>>
முழுநிலவாக மாற நானும் தூய பண்புகளை வளர்த்துக் கொள்கிறேன் சகோ

ராஜி said...

தூய பண்புகளால்
தூர்வார முயற்சித்தேன்!
மூடுபனி விலகிய பின்
முழுநிலவு ஆகிவந்தேன்!!
>>>
முழுநிலவாக மாற நானும் தூய பண்புகளை வளர்த்துக் கொள்கிறேன் சகோ

ஹேமா said...

எப்போதும்போல எத்தனை அழகு தமிழ்ச் சொற்கள் கோர்த்த சிந்தனைக் கவிதை.பண்பைக் கருவாகக் கொண்டு அதற்கேற்ற படங்களோடு புகட்டும் புத்திமதி அருமை.பராட்டுக்கள் !

முனைவர் இரா.குணசீலன் said...

அதிகாலை விழித்தலுக்கும்
அந்திநேர அடங்களுக்குமிடையில்
அவதியாய் தோன்றிய
அரூப காட்சியெல்லாம்
அடைக்கலம் போனதெங்கே?!!


நயமாகக் கேட்டீர்கள் அன்பரே..

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
கவனிக்கப் படாதே போகும் மூடி பனித்திரை
இரும்புத்திரையாகும் முன் பனித்திரை விலக்க முயல்வோம்
அது மிக மிக எளிதுதானே
மனம் கவர்ந்த பதிவு
பக்கிர்வுக்கு வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் பி,அமல்ராஜ்,

தங்களின் உடன் வரவுக்கும் ரசித்து
கருத்திட்டமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பிரகாஷ்,

தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை மனோ அம்மா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நேசன்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சுரேஷ்குமார்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனசேகரன்,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தமிழ்விரும்பி ஐயா,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,

தங்களின் மேன்மையான அழகான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,

தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

சேகர் said...

அருமையான வரிகள்...

Shakthiprabha (Prabha Sridhar) said...

படிப்பினைக் கவிதை. பாராட்டுக்கள்.

சசிகலா said...

மனிதங்களின் நேயமெல்லாம்
பண்புகளின் சாயலில்தான்!
மூடுபனியால் திரையிட்டு
முகம்மறைத்து வைத்ததெல்லாம்
அருமையான வரிகள்..

Post a Comment