Powered By Blogger

Thursday 23 February 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-6)






ன்புநிறை தோழமைகளே,

னமே ஒரு மந்திரச்சாவி என்பார்கள். அப்படி நம் எண்ணங்களை

திறக்க உதவும் அந்த மந்திரச்சாவியை மிகவும் பத்திரமாக வைக்க
மனதை சிறுசிறு விளையாட்டுக்களும் வேறு பல சிந்தையூறும்
சிந்தனைகளும் உருவாக்கி அதனை பாதுகாத்திடல் வேண்டும்.
அதற்காக இங்கே ஒரு சொல்விளையாட்டு.  விளையாட்டை
சொல் வடிவில் கொடுக்கும் முயற்சி தான் இந்த விடுகதைக் கவிதை 
விளையாட்டு. நான் நினைத்த ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய
ஒரு விடுகதைக் கவிதை இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

தோ விடுகதைக் கவிதை........
 

 


ந்தெழுத்தை தன்னுள்ளே
அழகாய் கோர்த்து வைத்த
விலைமதிப்பற்ற சொல்லிது!!
 
ந்தெழுத்தும்
தனித்து நின்றால்
தகதகவென மின்னும்
பொன்னின் பொருள் கொள்ளும்!!
 
முதலெழுத்து திரிந்து
'அ' என மாறி
ஏனைய நான்குடன்
இணைந்து நின்றால்
இருபொருள் தரும்!
ஒன்றோ
வேல்விழிகளுக்கு இடும்
கண்ணிடு மையை
உணர்த்தி நிற்கும்!
மற்றொன்றோ
மேற்குத்திசை யானையின்
பெயரினை
விளம்பி நிற்கும்!!
 
முதலெழுத்து திரிந்து
'ச'கர 'அ'கரமாய் மாறியும்!
நான்காம் எழுத்து திரிந்து
'ல'கர 'அ'கரமாய் மாறியும்
ஐந்தெழுத்தாய் நின்றால்
நிலைத்தன்மை இல்லாத
குழம்பிய மனநிலையை
உணர்த்தி நிற்கும்!!
 
 
முதலெழுத்து திரிந்து
'த' கர 'அ' கரமாய் மாறி
இரண்டு மூன்று மற்றும்
கடைஎழுத்துடன்
கூடி நான்கெழுத்து சொல்லாய்
நிற்குமேயானால்
அடைக்கலம் நீயென
புகழிடம் தேடி வரும்!!
 
முதலெழுத்து மட்டும்
தனித்து நின்றால்
அழகு மிகுந்த
சோலை எனவும்
பொருள் தரும்!!
 
னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்

63 comments:

Anonymous said...

காஞ்சனம்
அஞ்சனம்
சஞ்சலம்
தஞ்சம்
கா

முதலிரண்டு விடையும் எனக்கு சற்று சந்தேகம்.
இந்த முறை சுலபமாகத்
தந்து இருக்கிறீர்கள் சகோ .

Anonymous said...

மன்னிக்க. நான் கூறிய விடையில்
முதல் & கடைசி விடை சற்று சந்தேகமாக உள்ளது.

கோகுல் said...

சகோ ஸ்ரவாணி சரியான விடை எல்லாம் சொல்லிட்டாங்களே....!

தொடர்ந்து வார்த்தை ஜாலத்தில் அசத்துகிறீர்கள்.

Anonymous said...

வாழ்த்துகள் மகேந்திரன் தொடருங்கள். ( உந்த விளையாட்டிற்கு நான் வரவில்லைத் தெரியும் தானே!....)
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

யோசிப்பது சிரமம்..விட்டுவிடலாம் என நினைத்து பின்னூட்டம் வந்து பார்த்தால் சகோதரி பட்டென்று உடைத்து விட்டார்! வாழ்த்துக்கள் சகோதரி ஸ்ரவாணி! விடுகதை வரைந்த நண்பர் மகேந்திரனுக்கும் வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

அண்ணா நான் குரோபதியில் கூட கலந்துக்க முயல்வதிலை நீங்க சொல்லில் விளையாட்டு வைத்து சிந்திக்கச் செய்துவிட்டீர்கள்.
 தோழி சரியான விடையைப் பகிர்ந்து விட்டாங்க.வாழ்த்துக்கள் 

ஹேமா said...

மகி...மூளைக்கும் வேலை தாறீங்க.நேரம்தான் வேணும்.அதை சுலபமாக்கிவிட்டார் ஸ்ரவாணி !

கீதமஞ்சரி said...

ஆஹா... தங்கத்துக்கான விடை தங்கச்சுரங்கத்திலிருந்து வந்ததில் வியப்பென்ன? பதில் தந்த ஸ்ரவாணிக்கு என் பாராட்டுகள். அழகான விடுகதை காஞ்சனம் போல ஜொலிக்கிறது மகேந்திரனின் கைவண்ணத்தில்.

Anonymous said...

கீத்ஸ் ......
என் விடை சரியென்று ஒப்புகை அளித்து
நாசூக்காய் , சூசகமாய் , அழகாய்ப்
பதில் அளித்திருப்பது கண்டு வியந்தேன் .
மகிழ்ந்தேன் . பாராட்டிய உங்களுக்கும் ,
வாழ்த்துக்கள் சொன்ன [ சொல்ல விருக்கும் ]
மற்றவர்க்கும் , நல்ல நல்ல புதிர்கள் போட்டு என் திறமையைப் ? பறை சாற்ற
உதவிய மகி சகோ விற்கும் என் நன்றி.நன்றி.நன்றி.

காந்தி பனங்கூர் said...

கேள்வியையே நம்மால புரிஞ்சுக்க முடியல, இதுல பதி எங்கிருந்து சார் சொல்றது. அப்படியும் அந்த அக்கா சொல்லியிருக்காங்க வாழ்த்துக்கள்.

Unknown said...

ட்ரை பண்ணிப்பாத்தேன் ஹிஹி???!!

சாந்தி மாரியப்பன் said...

புதிரும், விடையும் அசத்தல்..

@ஸ்ரவாணி,.. அசத்திட்டீங்க போங்க.. வாழ்த்துகள் :-)

RAMA RAVI (RAMVI) said...

கஷ்டமாக இருக்கிறதே என்று யோசித்தபடி
கருத்துப் பெட்டியைப் பார்த்தால் அட்! ஸ்ரவாணி அவர்கள் விடை கொடுத்து விட்டார்.

சசிகலா said...

அண்ணா அருமையான தமிழ் விளையாட்டு விடை தான் தெரியவில்லை . சகோதரி சொன்னது சரி என நினைக்கிறன் .

குறையொன்றுமில்லை. said...

மூளைக்கு வேலை கொடுத்து எல்லாரையும் சுறு சுறுப்பாக யோசிக்க வைக்கரீங்க. ஆமா வலைச்சர வேலைப்பளுவுக்கு மத்தியிலும் எப்படி பதிவும் போடுரீங்க சம்பத் க்ரேட்.

சென்னை பித்தன் said...

எல்லாரையும் முந்திக்கிட்டு ஸ்ரவாணி சரியான விடையைச் சொல்லீட்டாங்களே!
தப்பிச்சேன்!

துரைடேனியல் said...

நான் மூளையை கசக்கிப் பிழிந்து முடியாமல் சரி என்று பின்னூட்டமாவது இடுவோம் என்று வந்தால் சகோ.ஸ்ரவாணி அருமையாக விடையளித்திருந்தார். நன்றி உங்களுக்கும் சகோ. ஸ்ரவாணிக்கும். அப்புறம் சகோ. நமக்கு இருக்குறதே கொஞ்சமே கொஞ்சம் மூளைதான். அத இப்படி போட்டு பிழிஞ்சு எடுத்தா....என்னவாகும்னு தெரியலயே?!......!

துரைடேனியல் said...

தமஓ 8.

Shakthiprabha (Prabha Sridhar) said...

விடை கண்டு பிடித்த தோழிக்கும்,
எதனையும் அழகுத் தமிழில் கவியாய் புனையும் உங்களுக்கும் பாராட்டுக்கள்

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு நண்பரே....

வார்த்தையை வைத்து விளையாடறீங்க!

மகேந்திரன் said...

அன்புநிறைத் தோழமைகளே,
இதோ விடுகதைக்கவிதைக்கான விடை சொல்லும்
நேரம் வந்துவிட்டது.

சரியான விடை:

காஞ்சனம்

காஞ்சனம்
அஞ்சனம்
சஞ்சலம்
தஞ்சம்
கா

சரியான விடை பகர்ந்த தோழமைகளுக்கும்
விடையளிக்க முயற்சித்த அனைவருக்கும்
நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,

மிகச் சரியான விடை
எதிர்பார்க்கவில்லை
முதல் முயற்சியிலேயே சரியான
விடை வரும் என்று.

என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோதரி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நேசன்,
தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
தங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள்
முயற்சி செய்வதால் தான் இதுபோன்ற
முயற்சிகளை என்னாலும் செய்ய முடிகிறது//
அதற்காக தங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் காந்தி,
தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் முயற்சிக்கு அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அமைதிச்சாரல்.
தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சசிகலா,
தங்களின் கருத்துக்கும் முயற்சிக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
நண்பர் சம்பத் குமாருக்கான கருத்து
இங்கு பதிவாகி விட்டீர்கள் என நினைக்கிறேன்...
ஆயினும்
தங்களின் கருத்துக்கும் முயற்சிக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் கருத்துக்கும் முயற்சிக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்.
தங்களின் கருத்துக்கும் முயற்சிக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சக்திபிரபா,
தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் கருத்துக்கும் முயற்சிக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல.

Anonymous said...

நான் புவியியல்ல வீக்...
-:)

சரியான விடை:

காஞ்சனம்

காஞ்சனம்
அஞ்சனம்
சஞ்சலம்
தஞ்சம்
கா


இது மேலே இருந்து காப்பி அடிக்கப்பது அல்ல...-:)

Rathnavel Natarajan said...

நமசிவாய

வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சாரி சார் ! ரொம்ப லேட் !

மாலதி said...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

அய்யகூ இப்புடிலாம் கேள்விக் கேக்காதிங்க ....என்னோட மூளை வேஸ்ட் ஆகிடும் ரொம்ப யோசிச்சா ....

நான் யோசிக்கலா ...சோ பதிலும் சொல்லவில்லை ....





எனதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு///////////////


அண்ணா உங்களுக்கு ஆரை திட்டனும் எண்டு என் காதில் மட்டும் சொல்லுங்கள் ..நான் திட்டிப் போடுறேன் .

Anonymous said...

மற்றவர்க்கும் , நல்ல நல்ல புதிர்கள் போட்டு என் திறமையைப் ? பறை சாற்ற
உதவிய மகி சகோ விற்கும் என் நன்றி.நன்றி.நன்றி./////////////////////////////////////////////////////////////////

அண்ணா நெக்ஸ்ட் எனக்கும் இப்புடி ஒரு சான்ஸ் நீங்க கொடுக்கணும் ஒகேய்ய்ய்யய்ய்ய்யி .......

அன்ச்வேர் லாம் முன்பே அனுப்பிடுங்கோல் ...ரகசியம் உன்கோளுக்கும் எனக்குள்ளும் மட்டுமே அண்ணா ...எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ...எனது திறமையை வெளிக் கொண்டு காமிக்கணும் ,,,,,,,,,,,,,

K said...

அட வித்தியாசமான முயற்சி மகேந்திரன்! விடைய ஆல்ரெடி சொல்லிட்டாங்களே! ஹி ஹி ஹி ஹி இல்லைன்னா நான் கண்டு புடிச்சிருப்பேன்!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சிபி
லேட்டா வந்தாலும், நண்பர் மனோவைப்
பார்த்த முகத்தோடு வந்துருக்கீங்க..
சந்தோசம்..

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரர் ரெவெரி,

உண்மையாக...
சத்தியமாக...
நெசமாலுமா?????

தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,

தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
நண்பரே நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்..
வசந்தமண்டபம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும்.
தங்களின் கருத்துக்கு என் அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,

தங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும்
என் அன்பான நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை கலை,
வாங்க வாங்க..
வசந்தமண்டபம் உங்களை வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
""இன்னும் எத்தனையோ விடுகதை இருக்குது சகோதரி.
வந்து மூளையை கசக்கி பிழிந்துவிட்டு பதில் சொல்லுங்கள்"

தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மணி,
வாங்க மணி,
நலமா?
அடுத்த விடுகதைக்கு வந்து முதலிலேயே
பதில் சொல்லிடுங்க..

தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Unknown said...

விடுகதைக் கவிதை
விடுத்தக் கதையதை -செவி
மடுத்தி மனதில் இருத்தி
விளம்பிய அறிவு நன்று...

மந்திரச் சாவியை -கவித்
தந்திரத்தால் தேட வைத்த
தங்களின் பதிவுக்கு

நன்றிகள் கவிஞரே!

Prem S said...

அன்பரே எனக்கும் தூத்துக்குடி தான் சொந்த ஊர் ப தங்களை அறிந்ததில் மகிழ்ச்சி

Marc said...

தங்களுக்கு தங்கப்பேனா விருது அளித்திருப்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.அதை ஏற்றிக்கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

http://sekar-thamil.blogspot.in/2012/02/blog-post_29.html

ஷைலஜா said...

http://shylajan.blogspot.in/2012/03/blog-post_04.html

சகோதரரே தங்க்ளை இங்கு தொடர்பதிவு எழுத அழைக்கிறேன் வாசித்துவிட்டு எழுதும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

seenivasan ramakrishnan said...

மந்திரசாவிக்கு பாராட்டுக்கள்..

seenivasan ramakrishnan said...

மந்திரசாவிக்கு பாராட்டுக்கள்..

Unknown said...

மகி!
கடந்த பல நாட்களாக மிகவும்
உடல்நலிவு! மேலும் நூல் வெளியீட்டு விழா அலைச்சல் காரணமாக ஏற்பட்ட அயர்வு, வலைபக்கமே சரியாக வர இயலவில்லை
நல்லபுதிர்! அருமை!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

மகி!
கடந்த பல நாட்களாக மிகவும்
உடல்நலிவு! மேலும் நூல் வெளியீட்டு விழா அலைச்சல் காரணமாக ஏற்பட்ட அயர்வு, வலைபக்கமே சரியாக வர இயலவில்லை
நல்லபுதிர்! அருமை!

புலவர் சா இராமாநுசம்

Owens said...

மகி! கடந்த பல நாட்களாக மிகவும் உடல்நலிவு! மேலும் நூல் வெளியீட்டு விழா அலைச்சல் காரணமாக ஏற்பட்ட அயர்வு, வலைபக்கமே சரியாக வர இயலவில்லை நல்லபுதிர்! அருமை! புலவர் சா இராமாநுசம்

Post a Comment