Powered By Blogger

Friday 21 October 2011

நூலிழை கைகொண்டு!!


தத்தோம் தத்தோம்
தரிகிட தத்தோம் தத்தோம்!
வந்தோம் வந்தோம்
சேதி சொல்லவந்தோம்!!
அந்திசாயும் நேரமய்யா
முந்திவந்து பாருங்கய்யா!
சந்தியிலே வந்துநின்னு
பந்திவிரிச்சு போட்டோமய்யா!!

அம்பலத்து பெரியோரே
வம்பளக்கும் சிறுவர்களே
எம்குலத்து மாந்தர்களே
நம்பிவந்து பாருங்கய்யா!!


கொத்துகொத்தா பாவைகள
சித்திரமா ஆட்டியிங்கே
சத்தாக கதைசொல்லி
கூத்துகாட்ட வந்திருக்கோம்!!

 

சுதிப்பெட்டி கொண்டுவந்தோம்
மதிமயக்கும் இசைகொடுக்க
முகவீணை தாங்கிவந்தோம்
சகலோரை மயக்கிடவே!!

தந்தன தாளம்போட்டு
சிந்தையை மயக்கவே 
பாந்தமாய் மிருதங்கம்
மந்தைக்கு கொண்டுவந்தோம்!!


மரத்தால் செய்துவந்த
மொரத்த பொம்மைகளை
சிரத்தில் ஏற்றிவைத்த
பருத்த செய்திசொல்ல
கரத்தால் ஆட்டிவந்தோம்!
கழித்த துணிகொண்டு  
செழித்த உடலமைத்து
பழித்தோம் தீமைகளை
நூலிழை கைகொண்டு!!


தோல்பாவை கையெடுத்து
தொலைநோக்கு கண்ணோடு
தொய்ந்துபோன நற்குணத்தை 
தோய்த்து எடுத்திடவே 
மாய்ந்து ஆட்டிவந்தோம்!!
தஞ்சை வளநாட்டு
சஞ்சாரக் கூத்தர் நாமோ
கொஞ்சம் சேதிசொல்ல
நெஞ்சில் உரத்தோடு
தஞ்சமென நாடிவந்தோம்!!


எம்கலைதான் உலகத்திலே
எல்லோருக்கும் முன்னோடி
எடுப்பான நாடகத்தின்
துடுப்பான நடிப்பெல்லாம்
மடிப்பு கலையாம
கொடுத்ததெல்லாம் நாம்தானே!!

அகவல் ஏதுமின்றி
சகலரை சேர்ந்திடவே
தகவல் தொடர்புக்கென்றே
முகவரி கொடுத்திங்கே
ஆகமம் செய்ததெல்லாம்
மகத்தான பாவைக்கூத்தே!!


குமரியில் ஆரம்பித்து
இமயம் வரையிலும்
கோமள பாவைவைத்து
கூத்துகட்டி திரும்புகையில்
போகையிலே வித்திட்ட
செம்மாங்கன்று இப்போ
வளர்ந்து கனி கொடுத்ததய்யா!!

பன்னூறு ஆண்டுகள்
முன்னே பிறந்ததுவே
சொன்ன சேதியெல்லாம்
மேன்மறை போலிங்கே 
மண்போற்றி நின்றதய்யா!!


கடகடன்னு ஒடுங்காலம் 
மடமடன்னு போச்சுதய்யா!
படபடன்னு இருந்துவந்த
குடுகுடு பாவைக்கூத்து
சடசடன்னு அழிஞ்சுதய்யா!!
பல ஆண்டு கழித்தபின்னே
பாவைகள கையெடுத்தேன்!
பட்டினியா கிடந்துதானே
தலைநகரம் போகப்போறேன்!!


பல ஊர அழிச்சிடும் 
பிற்காலம் ஒழிச்சிடும் 
பகாசுர அணுவுலையை
பட்டுன்னு நிறுத்திடுன்னு
பாவைக்கூத்து செய்யப்போறேன்!!
உயிரற்ற பொம்மைகூட
உயிர்வந்து கதைபேசும்
உயிருள்ள உனக்கிங்கே
உற்றநிலை உணர்த்திடவே
பொம்மலாட்டம் செய்யப்போறேன்!!
அன்பன்
மகேந்திரன்

90 comments:

Unknown said...

மாப்ள நச்!

M.R said...

பொம்மலாட்டம் ஒரு அருமையான கலை .நல்ல உணர்வுள்ள கவிதைப் பாடல் நண்பரே

கூடல் பாலா said...

அசத்தல் !

சென்னை பித்தன் said...

பொம்மலாட்டம் பற்றிய கருத்துக்களை ஒரு அழகிய கவிதையாக்கித் தந்தமைக்கு நன்றி

Unknown said...

பாவைக் கூத்து பாடல் மிகவும்
அருமை!
அதோடு அதை விரிவாக விளக்கி
கூடங்குளம் போராட்டத்தோடு கொண்டு
சேர்த்தது பாராட்டத் தக்கது.

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

பொம்மலாட்டம் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்.. நேரில் இதுவரை நான் பார்த்ததில்லை... உங்கள் கவிதை நேரில் பாடலுடன் பார்த்த திருப்தி ஏற்படுத்திவிட்டது.. நன்றி நண்பா

ராஜா MVS said...

மிக அருமையான, அழகான கலை, பாமரன் கூட மிக எளிமையாக புரிந்துகொள்ளும் விதம் கதை பேசும் இக்கலை,
இப்போது எடுக்கும் சில தமிழ் திரைப்படங்கள் படித்தவர்களுக்கு கூட புரிவதில்லை...

நம்மை அறியாமலேயே அழிந்து வரும் பல பொக்கிஷங்களுள் இதுவும் ஒன்று...

ராஜா MVS said...

அழிந்துவிட்ட கலைக்கு தங்களின் வரிகளால் உயிர்கொடுத்துள்ளீர்கள்...

பாடல் மிக அருமையாக உள்ளது... நண்பரே...

வாழ்த்துகள்... நண்பா...

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

Unknown said...

அருமையான பாடல் பொம்மலாட்டம் பற்றி வாழ்த்துக்கள் ...

மகேந்திரன் said...

ஆம் நண்பர் எம்.ரமேஷ்,
அழகான அருமையான கலை,
ஆட்டுவிப்பவர்களின் கைவிரல் அசைவுகள்
மிகவும் ஆச்சர்யப்படக்கூடிய ஒன்று.
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கூடல்பாலா,

தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைப்பித்தன் ஐயா
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறைப் புலவரே,

தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்,
சிறுவயதில் அடிக்கடி பார்த்து பழக்கப்பட்ட கலை இது.
அதுவும் தென் மாவட்டங்களில் பாவைக்கூத்தின் வடிவம்
அழகிய நகைச்சுவை இழையோடி இருக்கும்.
தங்களின் இனிய கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா.MVS

நீங்கள் சொன்னது அத்தனையும் சரியே, அத்தனை எளிய கலை இது.
பாவைக்கூத்து செய்பவர் நாட்டுநடப்புகள், இலக்கியம் என எல்லா துறைகளிலும்
விஷயம் தெரிந்தவராக இருப்பார்.
இலக்கிய கூத்து செய்தாலும் அதில் அன்றைய நடப்புகளை
கோர்த்து கொடுப்பதில் வல்லவர்கள்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு,

தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

SURYAJEEVA said...

கலை கலைக்காக அல்ல, அது மக்களுக்கே என்று நிரூபித்து விட்டமைக்கு நன்றி தோழர்

முனைவர் இரா.குணசீலன் said...

எம்கலைதான் உலகத்திலே
எல்லோருக்கும் முன்னோடி
எடுப்பான நாடகத்தின்
துடுப்பான நடிப்பெல்லாம்
மடிப்பு கலையாம
கொடுத்ததெல்லாம் நாம்தானே!!

நினைத்துப்பார்க்கவே பெருமையாக இருக்கிறது நண்பரே..

அவள் பெயர் தமிழரசி என்றொரு தமிழ் திரைப்படம் வெளிவந்தது..

வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது..

காரணம்...
நாட்டுப்புறக் கூத்துக் கலையை மையப்பொருளாக அந்தப் படம் கொண்டிருந்ததே அடிப்டைக் காரணம்..

என்ன கொடுமை பார்த்தீர்களா நண்பா..

நிகழ்காலம் சுடுகிறது..

தனிமரம் said...

இயற்கைக் கலைகள் அழிந்து வரும் இன்னேரத்தில் பாவைக்கூத்தின் பெருமையை அழகு  பாடல் மூலம் சிறப்பித்தீர்கள்!

Sakunthala said...

அழிந்து வரும் பழமையான கலைகளுக்கு
தங்களின் எழுத்துக்கள் மூலம்
உயிரூட்டி உள்ளீர்கள் .
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

தாளம்போட்டு பாடவைக்குது பாட்டு...!!!!

MANO நாஞ்சில் மனோ said...

கண்ணீரில் நனைகிறது கலை...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சிறுகுழந்தையில் பாவை கூத்து பார்த்தது நினைவுக்கு வருகிறது...!!!

RAMA RAVI (RAMVI) said...

அழிந்து வரும் பொம்மலாட்டம் கலை பற்றிய அழகான பதிவு.
உங்கள் பாடல் அந்த கலைக்கு உயிருட்டுவது போல அமைந்திருக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

பாவைக் கூத்துப் படங்களும்
விளக்கக் கவிதைகளும் அருமை
துள்ளிதமாக அனைத்து விஷயங்களையும்
சொல்லிப் போவது பிரமிப்பூட்டுகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

சிறுவனாய் நான் பார்த்திருக்கிறேன்...உங்கள் வலைப்பூ மூலம் தான் என் மகளுக்கு இதெல்லாம் அறிமுகம்...
அசத்தல் சகோதரா..

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நல்ல உணர்வுள்ள கவிதை

ஷைலஜா said...

இந்த பொம்மலாட்டக்கலைஞர்களை கர்னாடகாவில் சந்தித்திருக்கிறேன்...நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள் மிகச்சிலரே இந்தக்கலையை ஆதரிப்பதால் வருமானமும் போதவில்லை...அந்த பொம்மைகளில்தான் அவர்களின் உயிரே இருப்பதை உணர்ந்தேன் உங்கள் கவிதை இடுகை அருமை

காட்டான் said...

வணக்கம் மாப்பிள
இத இதத்தான் வேண்டுகிறேன் உங்களிடம் நான்கூட நேரில் பொம்மலாட்டம் கண்டதில்லை சினிமாவில் பார்ததோடு சரி அருமையான படங்களோடு கூடிய பதிவு... பொம்மலாட்ட கலைஞர்கள் வாழ்கையும் பொம்மலாட்டமே!!!????
வாழ்த்துக்கள்..

Unknown said...

super

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நலமா?
எமது பாரம்பரிய கலைகளுள் ஒன்றாக விளங்குவதும்,
இன்றைய சினிமா மோகத்தால் அழிவடையும் நிலையில் இருப்பதுமான பொம்மலாட்டம் பற்றி அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

குழந்தைகள் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய கவிதை.
முடிந்தால் ஏதாவது பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பி பாருங்கள். நிச்சயம் அனைவரையும் போய்ச் சேர வேண்டிய படைப்பு.

சிறுவர் பாடல் என்ற வகையினுள்ளும் ஒரே இராகத்தில் இதனை யூஸ் பண்ணலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

பொம்ம்லாட்டக்கலைஞர்கள் படித்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா,

தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் முனைவரே,
நிகழ்காலம் சுடத்தான் செய்கிறது.
அவள் பெயர் தமிழரசி பட இயக்குனர்
முதலில் பொம்மலாட்டம் பற்றிய குறும்படம்
எடுத்து அதில் வெற்றிகண்டு, பின்னர் அதே
கருத்தை கொண்டு எடுத்த படம்.
கடைசி சில நிமிடங்களில் கூத்தை அழகாய் சொல்லியிருப்பார்.
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனிமரம்,

தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி சகுந்தலா
தங்களின் வாழ்த்துக்கும்
மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநண்பர் மனோ,
நம்ம ஊர் பக்கமெல்லாம் இப்போதும் சில கிராமங்களில்
நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த இடங்களை.
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ராம்வி,
இந்த இனிய கலைக்கு உயிரூட்ட வேண்டும் என்பதே
என் மனதளவில் ஆசை.
தங்களின் இனிய கருத்துக்கு
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இதோ பேறு பெற்றேன் நண்பர் ரேவேரி,
காண்பியுங்கள் என் மருமகளுக்கு,
நம் நாட்டுப்புற கலைகள் மிகவும் மகத்தானது என்று.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி நண்பரே.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்
தங்களை வசந்தமண்டபத்திற்கு வரவேற்பதில்
பெருமகிழ்ச்சி.
இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

ஆம் சகோதரி ஷைலஜா,
பஞ்சடைத்துப்போன கண்களும், பசியால் ஒட்டிப்போன வயிறுமாய்
காண்பதற்கே மனம் வேதனைப்படும் அளவுக்கு அவர்கள் நிலை
இருப்பது வேதனை.
கலை வாழ வேண்டும்.
கலைஞர்களும் வாழ வேண்டும்.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
கடந்த இரு கவிதைகளுக்காய் உங்கள் கருத்து இல்லாதது
மனதுக்கு ஏதோ செய்தது.
இன்றைய கவிக்கான உங்கள் கருத்தை கண்டதும்
மனதுக்குள் மத்தாப்பு.
நீங்கள் கூறியதும் நிஜம் தான்,
பொம்மலாட்டக் கலைஞர்களின் வாழ்வும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
கலை வாழ வேண்டும்
கலைஞர்களும் வாழ வேண்டும்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வைரை சதிஷ்,

தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

vetha (kovaikkavi) said...

''...எம்கலைதான் உலகத்திலே
எல்லோருக்கும் முன்னோடி...'
முன்னோடிக் கலை பற்றி
முத்திரையாய் எழுதிவிட்டீர்!
முத்தான பதிவு ஐயா!
மூத்தோரும் விரும்பிடுவார்!
முழுமையாய் வர்ழ்த்துகிறேன்!
முன்னேறி முடுக்குகளிலும்
முகம் தெரிக! வாழ்க!

மூத்தவள் வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,
உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன்.
இன்றைய தலைமுறைகள் சற்றும் அறியாத
கலை. அழகி திரைப்படத்திலும் தசாவதாரம் படத்திலும்
ஓரளவுக்கு காண்பித்தார்கள். அவள் பெயர் தமிழரசி ஓடவே இல்லை...
கண்டிப்பாய் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிறேன் நண்பரே.
தங்களின் மேன்மையான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி.,

தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்.

தங்களின் வாழ்த்துக்கும்
மேன்மையான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

F.NIHAZA said...

கலைகள் அருமை...
உங்கள் கவிகள்தான் காலம் காட்டும் கண்ணாடிகள்....
வாழ்த்துக்கள் சகோ....

கோகுல் said...

நான் சின்ன வயசில விடிய விடிய உக்காந்து இது போன்ற பொம்மலாட்டங்களை பார்த்திருக்கிறேன்!
ஆனால் இப்போது?

அழிந்து வரும் இது போன்ற கலைகளை கட்டிக்காத்து வரும் கலைஞர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்!

shanmugavel said...

நான் பார்த்திருக்கிறேன்.கிராமங்களை கவிதைப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.சிறப்பான கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

தஞ்சை வளநாட்டு
சஞ்சாரக் கூத்தர் நாமோ
கொஞ்சம் சேதிசொல்ல
நெஞ்சில் உரத்தோடு
தஞ்சமென நாடிவந்தோம்!!/

அசத்தலான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

Aathira mullai said...

இந்தியப் புராதனக் கலைகளை வரிசைப்படுத்திய அழகான கலை இது. தோல் பாவையெல்லாம் இப்போது நடைபெறுகிறதா? காண முடியாவிட்டாலும் உங்கள் பதிவில், படத்தில் கண்டு ரசித்தோம். மற(றை)ந்து போன நிகழ் கலைகளை மனக்கண்முன் கொண்டு வந்தமைக்கு மனமார்ந்த ந்ன்றிகள் மகேந்திரன்.

மாலதி said...

பல ஊர அழிச்சிடும்
பிற்காலம் ஒழிச்சிடும்
பகாசுர அணுவுலையை
பட்டுன்னு நிறுத்திடுன்னு
பாவைக்கூத்து செய்யப்போறேன்!!
உயிரற்ற பொம்மைகூட
உயிர்வந்து கதைபேசும்
உயிருள்ள உனக்கிங்கே
உற்றநிலை உணர்த்திடவே
பொம்மலாட்டம் செய்யப்போறேன்!!// ஒரு சிறப்பான சிந்தனை முன்பெல்லாம் இப்படி ப்வைக்கூத்து நடக்கும் அது கூட கனவாகி போனது நல்ல சிந்தனை பாராட்டுகள்

மகேந்திரன் said...

அன்பு சகோதரி நிஹஷா
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்.,

தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சண்முகவேல்
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ஆதிரா
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மாலதி
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

M.R said...

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

மகேந்திரன் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..

வணக்கம்...

தங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் பெருமிதத்துடன் படித்து வருகிறேன்..

தங்கள் பதிவுகளுக்கு நல்லாயிருக்குன்னு நாலு வார்த்தை கருத்துரையில் இடுவதை விட மதிப்புடன் ஏதாவது செய்யவேண்டுமென்று எனக்கு அவ்வப்போது மனதில் தோன்றும் அதன் விளைவாக..

இன்று எனது..

எதிர்காலத் தொழில்நுட்பம் என்னும் இடுகையில் தங்களையும் தங்கள் இடுகையையும் அறிமுகம் செய்துள்ளேன்..

காண வருமாறு தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_24.html

தொடர்க தங்கள் தமிழ்ப்பணி..

என்றும் அன்புடன்.

RAMA RAVI (RAMVI) said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், மகேந்திரன்.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள
உங்களைபற்றி முனைவர் இன்றய பதிவில் கூறியிருக்கார் நேரம் இருந்தால் பாருங்களேன்..

Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

ரசிகன் said...

//பல ஊர அழிச்சிடும்
பிற்காலம் ஒழிச்சிடும்
பகாசுர அணுவுலையை
பட்டுன்னு நிறுத்திடுன்னு
பாவைக்கூத்து செய்யப்போறேன்!!
உயிரற்ற பொம்மைகூட
உயிர்வந்து கதைபேசும்
உயிருள்ள உனக்கிங்கே
உற்றநிலை உணர்த்திடவே// நிலைமை இப்படி இருக்கு.

எனது சிறிய வயதில் பாவை கூத்து, பொம்மலாட்டம் எல்லாம் பார்த்திருகிறேன். ஆனால் இப்போது அவை எங்கேனும் இருக்கிறதா என்றே தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன். உயிர் கொடுக்க முயற்ச்சிப்போம்.

முனைவர் தான் உங்களை அறிமுகப் படுத்தினார். நன்றாக செயல் படுகிறீர்கள். வாழ்த்துகள்.

vetha (kovaikkavi) said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

மாய உலகம் said...

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

Kanchana Radhakrishnan said...

பாடல் மிக அருமையாக உள்ளது.

வாழ்த்துகள்.

மகேந்திரன் said...

என்னே பாக்கியம் செய்தேன் முனைவரே!!!!
எனக்கும் என் படைப்புகளுக்கும் சாகித்ய விருது கிடைத்தது போல
மிகவும் பெருமை கொண்டேன். இன்னும் என் எழுத்துக்களை
பட்டை தீட்ட வேண்டும் என என்னுள் ஒளி பாய்ந்தது.
என் மீதும் என் படைப்புகள் மீதும் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அன்பன்
மகேந்திரன்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

காந்தி பனங்கூர் said...

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா
பார்த்துவந்தேன், முனைவரும் தாங்களும்
என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சித்ரா

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரசிகன்
வசந்தமண்டபம் தங்களை வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
நலிந்து போன எத்தனையோ நாட்டுப்புற கலைகளில்
பொம்மலாட்டமும் ஒன்று.குமரி மாவட்டத்தில் சில
கிராமங்களில் இருப்பதாக கேள்விப்பட்டேன். இம்முறை
விடுமுறையில் இந்தியா செல்கையில் நிச்சயமாக
கண்டறிந்து சொல்கிறேன். தங்களின் மின்னஞ்சல் கொடுத்தால்
நன்றாக இருக்கும்.
நிச்சயமாக களை வளர்க்க உதவி செய்ய வேண்டும் நண்பரே.
அடுத்த பதிவர் சந்திப்பு ஒன்று வந்தால், நாட்டுப்புறக் கலைகள் பற்றி
கொஞ்சம் அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணம் கொண்டிருக்கிறேன்.

அன்புநிறை முனைவருக்கும் என்னை எப்போதும் ஆதரிக்கும் இன்னபிற
நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள தீவாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும். உங்கள் பதிவுகளை தவற விடக்கூடாதுன்னு இப்போ நான் மின்னஞ்சல் மூலம் உங்கள் பதிவுகளை பெறுவதற்கு ஆவன செய்துள்ளேன்.. யார் பதிவுகளை விட்டாலும் உங்கள் பதிவுகளை விட முடியாது தொடருங்கள் உங்கள் சேவையை இந்த தமிழ் தாய்க்கு..

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

அம்பாளடியாள் said...

அருமையான கூத்துப் பாடல் வரிகள் .அதிலும் அணு உலை விவகாரம் மிக அழகான ஒப்பனை வாழ்த்துக்கள்
சகோ பாடலுடன் கூடிய தீபவளுக்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ .பிந்தி வந்தமைக்கு மன்னிக்கவும் .

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா

என் மீதும் என் படைப்புகள் மீதும் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் சகோ .ஒரு சின்ன வேண்டுகோள் தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து
என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தமிழ் பத்து வந்தேன், அத்தனைக்கும் ஓட்டளித்து
கருத்தும் பரிமாறினேன்...

Post a Comment