Powered By Blogger

Wednesday 25 January 2012

வெறும் சொல்லா?? அல்லது .. வினையூக்கியா???






மாந்தோப்பில் திரியாதே
மந்திபோல் தாவாதே!
மந்தமாய் செயல்செய்து
மண்டு போல் ஆகாதே!!

ண்டு! மண்டு! என
மணிக்கு ஒருதரம்
செந்தேன் பாய்வதுபோல்
செவிவழி கேட்டிருந்தேன்!!




சொன்னதைச் செய்தேன்  
செய்ததைச் சொன்னேன்!
வந்த விளைவுக்கெல்லாம்
மண்டு என பெயர்பெற்றேன்!!

விளைவிது வேண்டுமென
விரும்பியா வரவேற்றேன்?
முகவரியின்றி முளைத்ததற்கு
நான் எப்படி பொறுப்பாவேன்?!!




டமிழந்த தேரதுபோல்
வாடிப் போனேன்!
வன்சொல்லாய் வார்ப்பெடுத்து
மண்டு எனக் கேட்கையிலே!!

னக்கான விளைவுகளை
மூடிவைக்கத் தெரியாத எனை
மூடன் என அழைக்கையிலே
மூச்சிழந்து போனேன்!!




பெயர்ச்சொல்லாய் என் முன்னே
பூதம் போல நின்று!
பூச்சாண்டி காட்டியது
மண்டு எனும் சொல்!!

பேறுபெற பெற்றோரும்
கற்றுவித்த பெரியோரும்
எனக்கான நிலையதனை
மண்டு எனும் பெயர்ச்சொல்லால்
அலங்கரித்து நின்றபோது!




லங்காதே பொன்மகனே
காலூன்றி எழுந்துவா!
உபரியாய் வந்தடைந்த
ஊனமான சொற்களை
வினைச்சொல்லாய் ஏற்றுக்கொள்!
விக்கித்து நிற்காதே
வீறுகொண்டு எழு என
பூந்தமிழ் சொன்னதுவே!!

செந்தூர செந்தமிழே
சத்தியமா சொல்கிறேன்!
நீமொழிந்த வார்த்தைகளில்
ஒன்றுகூட புரியவில்லை!
தெளிவாக புரிந்திடவை
தேனினிக்கும் மொழியாலே!!




ண்டு! மண்டு! என
பிறர் சொன்ன போதெல்லாம்
மூடன் என முழுதாக
பொருள் கொண்டாயே!
அதைக்கொஞ்சம் மாற்றிக்கொள்
மண்டு எனும் சொல்லை
வினைச்சொல்லாய் நானுனக்கு
பொருள் கூறுகிறேன்
பொறுமையாக கேட்டுக்கொள்!!

ல்லதொரு நண்பர் கூட்டமதை
நயமாக கண்டறிந்து
நெருங்கி பழகிக் கொள்ளென!
ஒருபொருள் உண்டிங்கே!




ண்முன்னே நடந்தேறும்
சமூக அவலங்களை
சாதுர்யமாய் அழித்திடவே
திரளாக சேர்ந்து கொள்ளென!
மற்றொரு பொருளுண்டு!!

செயலேற்கும் செயலதை
விவேகமாய் முடித்திட
தீவிரமாய் செயல்படு - எனவும்
அதற்காய் வேகமாய்
புத்தியை செலுத்து - எனவும்
மாற்றுப் பொருளுண்டு!!




ன்றுனக்கு கிடைக்கும்
சிறிதான இடைவெளியில்
பலமாக காலூன்றி
இலக்கை நிர்ணயித்து
முழுமூச்சாய் ஈடுபடு - எனவும்
இன்னொரு பொருளுண்டு!!

ன்னைத் தமிழே!
எனைச் செதுக்கிய தாயே!
துவண்டிருந்த எனை
தூளிபோட்டு ஆட்டாது
துள்ளி எழச் செய்தாயே!!




விழிநீரைத் துடைத்தெறிந்தேன்
விழுதுகள் பிடித்தெழுந்தேன்!
மண்டு எனும் சொல்லை
வினைச்சொல்லாய் மாற்றிடவே!!

நிச்சயம் சொல்கிறேன்
மண்டு என இனிமேல்
யாரிங்கே சொல்லிடினும்!
தவங்கி விட மாட்டேன்
வினையூக்கியாய் மேற்கொண்டு
விண்ணை முட்டும்
புகழ் பெறுவேன்!!



அன்பன்
மகேந்திரன்

76 comments:

Anonymous said...

மண்டு விற்கு இத்தனைப் பொருளுண்டு
என அறியாதோர் தான் மண்டு போல.
ஊக்கம் தரும் அழகுக் கவிதை.

vimalanperali said...

நல்ல படங்கள்.நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

பி.அமல்ராஜ் said...

மண்டு என்னும் சொல்லிற்கு இத்தனை பொருள்களா?? அதிக விடயங்களை தெரிந்துகொண்டேன் அண்ணா. கவிதை, அதன் பாடு பொருள் அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

நிச்சயம் சொல்கிறேன்
மண்டு என இனிமேல்
யாரிங்கே சொல்லிடினும்!
தவங்கி விட மாட்டேன்
வினையூக்கியாய் மேற்கொண்டு
விண்ணை முட்டும்
புகழ் பெறுவேன்!!
நல்ல கவிதை. வாழ்த்துகள்.

கூடல் பாலா said...

பிரமிப்பாக உள்ளது !

சென்னை பித்தன் said...

புதியதொரு செய்தியைக் கவிதையாக வடித்து விட்டீர்கள்.நன்று.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க.

Yaathoramani.blogspot.com said...

அட நான மண்டாக இது கூடத் தெரியாமல்
இருந்திருக்கிறேனே என நினைத்து வருந்தினேன்
பின் தங்கள் கவிதையை ஊன்றிப் படித்ததும்
இனி மண்டாக இருக்கவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்

ADMIN said...

ரமணி ஐயா சொல்வதைப் போன்று கவிதையை தீவிர நாட்டத்துடன் படித்தால்தான் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. அல்லது சொல்லியிருக்கீர்கள் என்பது முழுதாய் புரியவரும்.. அட நீங்கள் ஒரு மண்டு என்று நீங்களாக ஒத்துக்கொண்டுவிட்டீர்கள்.. !! இனி எப்போதும் நீங்கள் மண்டாகவே இருக்க வேண்டும்.. உங்கள் நண்பர்களாகிய நாங்கள் எப்படி? நீங்கள் தான் சொல்லவேண்டும்.. !!!

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
நான்கூட மண்டுபோலதான் இருக்கிறேன். அட நீங்க சொன்னமாதிரி மண்டல்ல.. மண்டுக்கு இப்படியும் அர்த்தம் இருக்கு என்று தெரியாத மண்டு நான்.;!!!

சி.பி.செந்தில்குமார் said...

இதுகூட புதுசாயிருக்கே! மண்டுவில் இத்தனை பொருள்களா???

தனிமரம் said...

இனி யாரையும் மண்டு என்று அழைக்காமல் விட்டால் போதும் என தெளிந்து கொண்டேன் உங்களின் அழகான கவிதை.மூலம்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணா

மண்டு எனும் சொல்லின் மூலம் எம் செயற்பாடுகளை எப்படி வினைத் திறனுடன் செய்யலாம் என உணர்த்தும் வகையில்
சொல் சபதக் கவிதை தந்திருக்கிறீங்க.

வினையூக்கியாக மண்டு எனும் வார்த்தை இருக்கிறதே என்பது எனக்கு புதிய விடயமாக இருக்கிறது.

ஹேமா said...

ஒரு மண்டுவை வைத்துப் பெரிய மாநாடே நடத்தியிருக்கீங்க.
உண்மையில் தெரியாத அர்த்தங்கள் அறியமுடிந்தது !

ஷைலஜா said...

படத்தை பாராட்டறதா பாடலை பாராட்டறதான்னு தெரியல அமர்க்ளம் !

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா ! பிரமாதம் சார்! கர்சரை வைத்தால் பூப்பூவா கொட்டுவதை விட உங்களின் கவிதை, மனதில் பூப்பூவா கொட்டுகிறது! பாராட்டுக்கள் ! நன்றி சார்!

vetha (kovaikkavi) said...

வினையூக்கி பற்றி அருமையாகச் சொன்னீர்கள். நல் வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Unknown said...

தம்பீ!
அருமையான கவிதை அகராதி!

வாழ்க1 வளர்க!
தங்கள் பணி!

புலவர் சா இராமாநுசம்

முத்தரசு said...

மண்டு மண்டுன்னு இனி யாரும் சொல்லபடாது ஒக்கே.

படங்கள் அருமை - பகிவுக்கு நன்றி

துரைடேனியல் said...

Arumai Mahendran Sir! Padangalum arumai.

TM 16.

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை அருமை..

வினையூக்கியாய் உங்கள் எழுத்துக்கள்..

நன்று.

K.s.s.Rajh said...

அருமையான கவிதை என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது ஆனாலும் எனக்கு வேறு வார்த்தைகள் தெரியவில்லை மிகவும் சிறப்பாக இருக்கு

MANO நாஞ்சில் மனோ said...

அடடா மண்டு'வுக்கு இம்புட்டு அர்த்தம் இருக்கா, புரிந்துகொண்டேன் நண்பா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

எழுத்துல இன்னும் மெருகு கூடி இருக்கு மக்கா வாழ்த்துக்கள்...!!!

மாலதி said...

கண்முன்னே நடந்தேறும்
சமூக அவலங்களை
சாதுர்யமாய் அழித்திடவே
திரளாக சேர்ந்து கொள்ளென!
மற்றொரு பொருளுண்டு!!// அழகுக் கவிதை.

RAMA RAVI (RAMVI) said...

மண்டு என்பதற்கு புதிய பொருகள், உண்டா என ஆச்சரியமாக இருக்கு. அழகாக விளக்கி இருக்கீங்க.

Unknown said...

உளிகளின் வெட்டு படாமல் சிலைகள் உருவாவதில்லை! என்பதை மீண்டும் ஒருமுறை இக்கவிதையால் உணர்த்தியுள்ளீர்! வாழ்த்துக்கள்!19!

ராஜ நடராஜன் said...

துண்டு போடும் மண்டுகளில் நானும் ஒருவன்:)

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் விமலன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ பி.அமல்ராஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
தங்களை மீண்டும் சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சி.
தங்களின் கருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

Anonymous said...

குடியரசு தின வாழ்த்துக்கள்...

மண்டாக இருக்க சொல்றீங்க...இனி யாராவது மண்டுன்னு சொன்னா சிரிக்கணும் போல...-:)

வினையூக்கியாய் உங்கள் அழகுக் கவிதை...

வாழ்த்துகள் சகோதரரே...

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தங்கம் பழனி,

அறிவிற் சிறந்த என் நண்பர்கள் ஆகிய
நீங்களும் முன்டியிட்டு செயல்களை வெற்றியாக்கி
கொள்வதில் வல்லவர்களே...
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
இன்னும் பொருளுண்டு
இன்னும் அதிக நீளம் ஆகிவிடுமே என்று இத்தோடு
விட்டுவிட்டேன்.
தங்களின் அழகான கருத்துக்கு என் உளம் கனிந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி,
இன்னும் இருக்கு நண்பரே..
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நேசன்,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா ,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனசாட்சி,

தங்களு வசந்த மண்டபம் சிவப்பு கம்பளம்
விரித்து வரவேற்கிறது.

தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரை டேனியல்,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜ்,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜ நடராஜன்,

தங்களு வசந்த மண்டபம் சிவப்பு கம்பளம்
விரித்து வரவேற்கிறது.

தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

குடியரசு தின வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

அசர அடித்து விட்டீர்கள் மகேன்! மண்டு என்று என்னை யாரேனும அழைத்தால் இனி மகிழ்வேன் நான்! மிகமிகமிக ரசித்துப் படித்தேன்! தொடரட்டும் இதுபோன்ற அற்புதக் கவிதைகள்!

arasan said...

அண்ணே வணக்கம் ..
கவிதை கலக்கல் .. வாழ்த்துக்கள்

கா.ந.கல்யாணசுந்தரம் said...

கண்முன்னே நடந்தேறும்
சமூக அவலங்களை
சாதுர்யமாய் அழித்திடவே
திரளாக சேர்ந்து கொள்ளென!
மற்றொரு பொருளுண்டு!!

செயலேற்கும் செயலதை
விவேகமாய் முடித்திட
தீவிரமாய் செயல்படு - எனவும்
அதற்காய் வேகமாய்
புத்தியை செலுத்து - எனவும்
மாற்றுப் பொருளுண்டு!!
............

அழகு கவிதைவரிகளால் தோரணம் கட்டி

உங்கள் வசந்தமண்டபத்தை அலங்கரிக்கிறீர்கள்.

தமிழ் அன்னை அங்கு குடிபுகுந்துள்ளதைக் காண்கின்றேன்!

வாழ்த்துக்கள்.

kowsy said...

மண்டுக்குள் மறைந்திருக்கும் சொல் செண்டு சொன்ன கவிதை சிறப்பு. இத்தனையும் அதற்கிருக்க எத்தனை கோபம் நாம் கொள்கின்றோம் இம் மண்டுக்கு. புரிய வைத்தீர்கள் . வாழ்த்துகள்

Anonymous said...

அன்பு சகோதரரே...உங்களை புத்தாண்டு தீர்மானங்கள் ~ ஒரு மாத சுய பரிசீலனை... என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அன்போடு அழைக்கிறேன்...

Unknown said...

மாப்ள மண்டு வச்சி பின்னியதை கண்டு மகிழ்ச்சி அடைந்தான் இந்த வாண்டு!

ராஜா MVS said...

கவிதை மிக அருமை... நண்பரே...

தங்களின் சிந்தனையும்/மொழியாற்றல் அசரவைத்துவிட்டது... நண்பரே...

வாழ்த்துகள்...

சாகம்பரி said...

திட்ட திட்ட திண்டுகல்லு, வைய வைய வைரக்கல்லு என்ற சொற்றொடரின் விளக்கம் போல அழகு தமிழில் கவிதை. கவிதைக்கு நன்றி சகோ.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அரசன்,
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கா ந கல்யாணசுந்தரம்,
தங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்துணர்ந்த
அழகிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகௌரி,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி,
தங்களின் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நிச்சயம் எழுதுகிறேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS,
தங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி,
தங்களின் மேலான கருத்திற்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

Mahan.Thamesh said...

அத்தனையும் அருமை அண்ணே

Shakthiprabha (Prabha Sridhar) said...

அற்புதமான ஊக்கமளிக்கும் கோணம்.
இப்படி பார்க்கவும் புரியவும் கற்றுக்கொண்டாலே பாதி கவலை அற்றுவிடுமே. நன்று.

Post a Comment