Powered By Blogger

Sunday 27 May 2012

சக்கர வியூகம் அமைத்திடுக!!







தியென்று எனக்கு இல்லை
வந்தவழி தெரியாது!
இயன்றவரை மனிதனுக்கு
நற்பலனை கொடுப்பேனே!!
 
முக்கனியாய் பிரித்தபோதும்
முதல் கனி நானென்று!
முன்னோர்கள் அன்றுதொட்டு
முத்தாய்ப்பாய் வகுத்தனரே!!

கண்ட காவிரியின்
அகந்தையை ஒழித்திட்ட
அகத்திய முனிவனும் 
அரக்கன் வாதாபியை
அழித்ததும் எனைக்கொண்டே!!
 

 


ஞாலம் எங்கிலும் 
ஞான ஊற்றெடுக்க 
ஞான முனிவனால் 
ஞானப்பழம் என்ற 
ஞானப்பெயர் பெற்றேனே!! 
 
ஞானப்பழம் என்றபெயர்
தமிழெனக்கு சூட்டியது!
அறிவினைப் பெருக்கும்
பொட்டாசியம் உள்ளதால்
ஞானப்பழமென்று ஆனாய் என
வேதியியல் விளம்பிற்று!!
 
ன்னை ஊட்டும்
அமுதுக்கு இணையாய்
அகப்பொருள் கொண்டேனென
அழகாய் புகழ்ந்தனரே
அறமறிந்த சான்றோரே!!
 
 
தொல்லையென நினைத்து
தொலைவெறியும் என்னுடைய 
தோலதுவை உட்கொண்டால்   
தோல்வியாதி நீக்குவேனேன
தெளிவாக சித்தம் கொள்க!!
 
புட்டுபோல என்னுள்ளே 
புடம்போட்டு நான்வைத்த 
பூப்போன்ற சதையதை
பூரிப்பாய் உட்கொண்டால் 
புற்றுநோய் போக்கிடுவேன்!!
 
ருத்தாக எனக்குள்ளே 
கவனமாக சேர்த்துவைத்த 
கணச்செறிவு சத்தாலே 
கண்பார்வை பெருகிடுமே 
கவளமாக எனைக்கொண்டால்!!
 
 
பாங்காக ஊட்டமதை
பாருக்கு கொடுத்ததினால் 
புசித்த மானுடரால்
பழங்களின் அரசனென
பட்டமதை பெற்றேனே!!
 
முன்னோர் காலத்தில்
மலர்விட்டு காயாகி
மரத்திலேயே தொங்கினாற்போல்
மணம்வீசி பழுத்திருந்தேன்!!
 
காலம் மாறிப்போனது
களைந்தனர் எனை
கருவோடு பிஞ்சிலே!
கார்பைடு கல் வைத்து
கடும்வெப்பம் வேகவைத்து
கனியாக மாற்றினரே!!
 
 
கால்சியம் கார்பைடெனும்
கருங்காலி அரக்கனவன்
காற்றின் ஈரப்பதம் கொண்டு
கிராதகன் அசெட்டிலீனை
கண்கசக்க என்மீது
கனமாக பாச்சினரே!!
 
ழமாக மாறிடவோர்
பத்துநாட்கள் எடுக்குமெனை
பத்துமணி நேரத்தில்
பழுத்துக் கனிந்திட
புறச்செயல் செய்தனரே!!
 
செயற்கையாக பழுத்த நானோ
செருக்காக சந்தையேறி 
செய்முறை அறியாத
செங்குற்றம் புரியாத
நுகர்வோர் அகம் புகுந்தேனே!!
 
 
னியுனை புசித்தாலே
கண்டபிணி தீருமென
கூறிவந்த அனைவருமே!
கடுகேனும் ருசித்திட்டால்
கடும்பிணி வருமென்ற
கடுஞ்சொல் வீச நானும்
கூனிக்குறுகிப் போனேனே!!
 
ங்கியில் பணமெடுத்து
வாங்கிவந்து உட்கொண்டால்
வாந்தி பேதியும்
வயிற்று எரிச்சலும்
வந்து துயர் பெற்றனரே!!
 
ன்னிலை உயர்வதற்கு 
என் நிலை ஏன் மாற்றுகிறாய்?
உன் குடி வாழ்வதற்கு
மாற்றான் குடி ஏன் கெடுக்கிறாய்?
உனதருமைப் பிள்ளைகளும் 
உன்னால் தருவித்த
எனைத்தான் உண்பார்களென
உனக்கேன் தெரிவதில்லை??!!
 
 
யற்கையாய் பழுக்குமெனை
தடிபோட்டு அடிக்காதே!
செயற்கைவழி கண்டறிந்து
உன்குடி தொலைக்காதே!!
 
ச்செயல் தவறென்று
இயம்பி நிற்பதற்கு
இதற்கான சட்டங்கள்
இயைபோடு இருந்தாலும்
இச்செயல் இழிசெயலென
இன்றே உரைத்திடவோர்
கடும்சட்டம் போட்டிடுக!!
 
த்தம் போடாது
சதிச்செயல் செய்வோரை
சம்மணம் போடவைத்து
சாட்டையால் அடித்திடவே
சக்கர வியூகம் அமைத்திடுக!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 
 
 
 
 

Thursday 24 May 2012

இயல்பினைக் களையாதே!!







யிர்தரித்து ஆங்கே
உடல் வளர்த்து!
வாழும் நாளெல்லாம்
ஏதோ ஒன்றுக்காய்
ஏக்கப் பெருமூச்சுடன்
பொற் பொழுதுகளை  
கற்களாய் சமைப்பதுதான்
வாழும் நிலையோ?!!
 
துதான் இலக்கென்று
தூரத்துப் பச்சையாய்
நிர்ணயம் தருவித்து!
கடிகார முட்களின்
ஓட்டத்திற்கு இணையாய்
நாடியங்கே சென்றாலும்
சுழியத்தை தழுவியதுபோல்
இலக்கோ இன்னும் தூரமாய்!!
 

 


வாழ்நிலை மேன்மைக்காய்
சூழ்நிலை அறியாது
கோள்களை கடந்தும்
கொண்ட இலக்கின் முடியதை
விண்டிட துடிக்கையில்
தடம் மாறும் தவறுகளால்
புடம்போட்டு வைத்த
இயல்பங்கே புதைந்ததுவே!!

ளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சென
ஆன்றோர் உரைத்தாலும்!
அவசர அவனியில்
அன்றே அரியாசனம் ஏறும்
ஆசைகளின் கொள்கலனாய்
அவதியாய் மாறிப்போய்
இயல்பினை இழப்பதேன்??!!
 
 
தென்னைமர உச்சியில்
பனங்காய் காய்த்திடுமோ?!
வேம்பின் கிளைகளில்
விழுதுகள் தான் விளைந்திடுமோ?!
தன்னிலை அறிந்திருந்தும்
தன் நிலை புரிந்திருந்தும்!
பொய்வாழ்க்கை வாழ்ந்திட
இயல்பினை இழப்பதேன்??!!
 
முரளியின் மேனியிலே
துளையது இருந்தால் தான்
ராகங்கள் கேணியாய் சுரக்கும்!
அதன்பால் கொண்ட ஈர்ப்பால்
மத்தள மேனியிலே
குத்தலாய் துளையிட்டு
ராகங்கள் வருமென
எண்ணுதல் தவறன்றோ??!!


திகட்டாத தேனென
மிடுக்கான எண்ணத்தால்
பகட்டு வாழ்வின்
பசிக்கு இரையாகி
இயல்பினை இசைவாய்
போலிச்சாயம் போர்த்தி
சாயம் வெளுத்தபின்னே
சுயம் இழந்து போவதேன்??!!

காற்றுவெளி மண்டலத்தில்
சுவாச வாயுவது
தன் கொள்ளளவில் மாறி
மிகையுற்றுப் போனால்
கொடிய விடமாக
குணம் மாறிப்போகுமென
சிந்தையில் ஊன்றிக்கொள்
இயல்பினை மறவாது!!
 
 
சுவின் மடியது
தினமும் படியளவு
சுரக்கும் அமுதென
திண்ணமாய் அறிந்தபின்
மடி அறுத்து அகம் வைத்தால்
அமுதிங்கே நமக்கேது?!
இயன்றதை கைகொண்டு
இச்சகத்தில் கோலேச்ச  
இயல்பு நழுவாதே!!
 
வியாபித்த வையகத்தில் 
உனக்கான இடமொன்று 
தருவித்தே உள்ளது!
முனைப்பான முயற்சியும் 
தளராத தன்னம்பிக்கையும் 
கையகத்தில் பூட்டிவைத்து 
இட்டுவைத்த இலக்கதை
இயல்பாக எட்டிவிடு!!
 
 
தீத தன்னம்பிக்கையும் 
அவசர புத்தியும்!
விவேகமற்ற செயலும் 
பொறாமைக் குணமும்!
மார்நிமிர்த்தச் சொல்லும்  
வறட்டு கௌரவமும்!
புவனத்தில் கோலேச்சும் உனை 
புதைகுழியில் தள்ளுமென 
புத்தியில் போட்டுவை!!
 
திர்கால இலக்கிற்காய் 
எதிர்நீச்சல் போடுவதே 
வாழ்வின் நிலையாம்!
குறுக்கு வழியில் 
குறுகிய காலத்தில் 
பெருத்த நிலை அடைந்திட 
இயைபாய் அமைந்திட்ட 
இயல்பினைக் களையாதே!! 
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 
 
 
 


 

Wednesday 2 May 2012

வழுக்களே ..... வடுக்களாக!!







காயப் பந்தலாம்
வெளிர்நீலக் குடையின்கீழ்!
வெங்காயத் தாமரை போல்
படர்ந்திருக்கும் மானுடரின்
வளர்பிறைத் தடங்களில்
தோய்ந்திருக்கும் கறைகளோ
கணக்கில் அடங்காது!!
 
டுமாறும் பயணங்களில்
தவறுகள் என்பது
யதார்த்த நிகழ்வு தான் - எனினும்
நிகழ்த்தியே ஆகவேண்டிய
நித்திய செயலும்  அல்ல!
வளர்த்தே ஆகவேண்டிய
வான்புகழ் பண்பும் அல்ல!!
 
 
ண்பாடு இன்னதென
கலாச்சாரம் இதுவென!
மரபுவழி குணங்களெல்லாம்
மார்வழிக் குடித்திருந்தும்!
மரபுகளின் தன்மையெல்லாம்
புழக்கடையில் போட்டுவைக்கும்
மரபுவழு ஏனிங்கு?!!
 
யிர்களின் வகைகளில்
பிரிவுகள் ஏகமெனினும்!
உயிரென்பது பொதுவென
உள்ளூர உணர்ந்திருந்தும்!
உயர்வென்றும் தாழ்வென்றும்
பிரிவினைகள் ஊக்குவிக்கும்
திணைவழு ஏனிங்கு?!!

 


ன்மையாய் தம்மை
தரம்கொண்டு ஏற்றிவைத்து!
முன்னிற்கும் முன்னிலைக்கும்
புறமிருக்கும் படர்க்கைக்கும்
செயலாலும் சொல்லாலும்
தவறிழைத்து மகிழும்
இடவழு ஏனிங்கு?!!

ன்றிழைக்கும் தவறுகள்
இன்னுமோர் யுகத்திற்கு
இழிநிலை சாற்றுவிக்க!
மறைந்தகால புகழ் ஒழித்தும்
வரும்கால ஏற்றம் தடுக்கும்!
நிகழ்நிலைத் தவறுகளாய்
காலவழு ஏனிங்கு?!!
 


னங்களை இனிமையாய்
பிரித்து வைத்ததெல்லாம்!
மொழியின் சொற்சுவைக்கே - அன்றி
ஒன்றனுக்கு மற்றொன்று
தாழ்வென உரைப்பதற்கு அல்லவென
கற்று கற்பித்து அறிந்தாலும்
பால்வழு ஏனிங்கு?!!

வினாக்கள் தொடுப்பது
விளைந்திருக்கும் அறிவதனை
உரம்கொண்டு வளர்த்திடவே - என
உணர்ந்தே இருந்தாலும்
தகாத வினாக் கணைகளால்
துளையிட்டு மகிழ்வேற்கும்
வினாவழு ஏனிங்கு?!!
 


தொடுத்துவரும் வினாக்களுக்கு
தகுந்த விடை உண்டென
தன்னிலையாய் உணர்ந்தாலும்!
நேர்மறை விடைகள் தவிர்த்து
எதிர்மறை எண்ணங்களுடன்
பொதுமறை புறந்தள்ளும்
செப்புவழு ஏனிங்கு?!!

வாழ்வின் காலநிலைகளில்
வழுக்களின் நிகழ்வுகள்!
நடந்தேறும் போதெல்லாம்
வழாநிலை தழுவிடவே
வழுவமைதி கைகொண்டு
வழுக்களின் தடங்களை
துடைத்துப் போகின்றேன்!!
 


ழுக்கள் என்பதெல்லாம்
புறங்காலில் ஒட்டிய
சேறுகள் போன்றவையே!
நிகழும் தருணம்
அகற்றவில்லை எனில்
வடுக்களாக நிலைகொண்டு
வாழ்வைச் சீரழிக்கும்!!

ழுக்கள் இங்கே
வடுக்களாக மாறுமுன்!
வழுக்களின் நிறம்
மாற்றிடுக!
வழாநிலையே வாழ்வின்
நிலைப்பென கொண்டிடுக!!


 
அன்பன்
மகேந்திரன்