Tuesday, 6 March 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம் ...!!! ( தொடர்பதிவு )லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி 
பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் 
திரும்ப வராதா என்ற ஏக்கம் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொள்கிறது.
இப்படி ஒரு தலைப்பில் என்னை எழுத அழைத்த பாசத்திற்குரிய என் 
அன்பு சகோதரி ஷைலஜா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தாயின் 
முதல் கருவறைக்குப் பின் அடுத்த இரண்டாம் கருவறையாய் அமைந்த 
பள்ளிக்கூடத்தின் நினைவுகள் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு 
அகம் மகிழ்கிறேன்.
 

 


ரைக்கால் சட்டையில் இருபுறமும் கயிறுவைத்து முதன்முதலில் 
பள்ளிக்கு போன நாளை எண்ணும்போதே மனதுக்குள் சந்தோசமும் 
நகைப்பும் சேர்ந்தே வருகிறது. 

எல்.கே.ஜி, யு.கே.ஜி எல்லாம் அப்போது இருந்ததா என்றே தெரியவில்லை 
நேரடியா முதலாம் வகுப்பு தான். பெற்றோர்கள் என்னை பள்ளிக்கு 
கூட்டிச் சென்றார்கள். 

"பையனைப் பார்த்தால் ரொம்ப சின்னவனா இருக்கான். அதனால அடுத்த 
வருடம் சேர்த்துக்கொள்ளலாம்" என்று தலைமை ஆசிரியர் சொல்ல 
" சார் படிச்சிருவேன்.. பாருங்க எனக்கு கையால காதைத் தொட முடியும்" என்று
வலது கையை உச்சந்தலை வழியாக இடது காதை தொட குனிந்து நெளிந்து 
எத்தனித்தேன்.அதைப்பார்த்ததும் தலைமை ஆசிரியர் சிரித்துக் கொண்டே " சரி சரி சேர்த்துக்கொள்கிறேன் நல்லாப் படிக்கணும்" என்று சொன்னவாறு என் பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார்.
 
 
யிரெழுத்தை என் 
உயிருக்குள் நுழைத்து 
மெய்யெழுத்தை என் 
மெய்க்குள் திணித்து 
உயிரும் உடலுமாய் 
ஆரம்பித்த ஒன்றாம் வகுப்பு........

ண்ணும் எழுத்தும் 
இரு கண்ணென அறிந்து 
இயைபோடு படிக்கையில் 
அருகிலிருந்த பெண்ணொருத்தி 
என்னைவிட நன்றாய்ப் படிக்க
மனதிற்குள் போட்டியும் 
பொறாமையும் வளர்த்த 
இரண்டாம் வகுப்பு.......

புதிதாய் வந்த திரைப்படங்களின் 
குணாதிசயங்களின் பெயர்களை 
எங்களுக்கு சூட்டிக்கொண்டு 
நட்பும் பகையுமாய் 
மதியஉணவில் மக்காச் 
சோளச் சோறு தின்று 
மப்புடன் படித்துவந்த 
மூன்றாம் வகுப்பு............
 
 
ரம்பியல் பாதிப்பால் 
வலிப்பு வந்து துன்புற
என் உயிரை அன்றும் 
இரண்டாம் முறை மீட்டெடுத்த 
என் தாய்தந்தையர் ஒருபுறம் 
அதன் பின் பெற்றபிள்ளை போல 
அன்பாக பாவித்த 
தனலட்சுமி ஆசிரியை மறுபுறமென 
நன்றாய் கழிந்த 
நான்காம் வகுப்பு........................

லைமை ஆசிரியரே 
வகுப்பு ஆசிரியராய் வர
முதல் முறையாய் 
கூரைவேய்ந்த பள்ளியறை விடுத்து 
ஓடுவேய்ந்த பள்ளியறையினுள்
சற்று பயத்துடன் நுழைந்து 
நடுநிலைப் பள்ளிக்கு 
செல்வதற்கான நடுக்கத்தை 
சற்றே குறைத்து வைத்த 
ஐந்தாம் வகுப்பு...........................

சில நல்ல பழக்கங்களையும் 
சில தீய பழக்கங்களையும் 
சரிவிகிதத்தில் கலந்து 
வாழ்விற்கான முதல் தெளிவை 
அமுதாய் ஊட்டிய 
ஆறாம் வகுப்பு...............................
 
 
முதன் முதலாய் 
வரலாற்றுப் பாடத்தை 
நடத்தும் ஆசிரியர் - அதை 
நடித்தே காண்பித்து 
மூளைக்குள் இன்றும் 
அந்தக் காட்சிகளை 
அசைபோட வைத்த 
ஏழாம் வகுப்பு...............................

ங்கிலத்தின் பெயரைக் கேட்டாலே 
அவயம் நடுங்கியதை 
சற்றே தனித்து 
ஆங்கிலமும் நம் வசப்படுமென 
அழகாய் எடுத்துரைத்த 
ஆசிரியரை எனக்களித்த 
எட்டாம் வகுப்பு....................................

( எட்டாம் வகுப்பில் என் ஆசிரியர் ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் பற்றி சொல்கையில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் " The sentence never end with BECAUSE BECAUSE BECAUSE is a conjunction" இன்றும் மனதில் நிழலாடுகிறது )

றிவியலின் ஆளுமைக்கு 
அருஞ்சொற்பொருள் கொடுப்பதெல்லாம் 
கணிதம் எனும் புனிதமே - என 
கணிதத்தை எனக்கு 
கனிவாய் கற்பித்த 
ஒன்பதாம் வகுப்பு............................
 
 
பொத்தாம் பொதுவாய் 
படித்து வந்தவனை 
பின்னந்தலையில் தட்டி 
இவ்வகுப்பே உன் 
வாழ்வின் ஆதாரமென 
சிரசில் உறைக்கவைத்து 
இன்றும் நான் மதிக்கும் 
ஆசிரியர்களை என் வாழ்வில் 
அறிமுகப் படுத்திய 
பத்தாம் வகுப்பு...........................................

ரும்பு மீசை வளர 
இனம்புரியா ஆசைகள் வளர 
திரிகோணமிதியை சற்றே 
கலவரத்துடன் என்னை 
கவனிக்க வைத்த 
பதினோராம் வகுப்பு......................

ரசாயனமே உனக்கு வாழ்வு 
இன்றே கற்றுக்கொள் என 
கற்பித்துக் கொடுத்திட 
இறுக்கமுகத்துடன் இருந்தாலும்
இளகிய மனம் கொண்ட 
ஆசிரியரை எனக்கு அளித்து
இரசாயனத்தை எனக்கு 
இன்னிசை கீதமாய் 
உரைத்திட்ட 
பன்னிரெண்டாம் வகுப்பு........................
 
 
ன்னும் எழுதிக்கொண்டே போகலாம். பதிவு ஏற்கனவே நீண்டுவிட்டது.
இந்த தொடர்பதிவை தொடர்ந்து எழுத நான் அழைக்கும் பதிவர்கள்.....

 
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 

86 comments:

கோவை நேரம் said...

கவிதை நடையில் அசத்தி விட்டீர்களே....

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

இனிய பல்ளிப் பருவத்தை கவிதையிலே வடித்தவிதம் அழகு நண்பா! கலக்கல் கவிதை!

பெருமாள் பிரபு said...

பள்ளிக்காலம் ஒரு வசந்தகாலம் அண்ணா. பழைய இனிய நினைவுகளை அசைபோடும்படி செய்தீர் நன்றி.தொடரட்டும் தங்களின் சிறப்பு

காட்டான் said...

வணக்கம் மாப்பிள !

பள்ளி பருவத்தை கவிதையிலே வடித்தவிதம் அழகய்யா வாழ்த்துக்கள்.!

Anonymous said...

சுப்பரா கவிதை ல அழகா சொல்லிப் போட்டிங்க அண்ணா ...சான்ஸ் இல்லை ...

நாலாம் கனவில் கூட கற்பனை செய்ய முடியாது உங்கட மாறி எழுத ....

Anonymous said...

சார் படிச்சிருவேன்.. பாருங்க எனக்கு கையால காதைத் தொட முடியும்" என்று
வலது கையை உச்சந்தலை வழியாக இடது காதை தொட குனிந்து நெளிந்து
எத்தனித்தேன்.////////////////////////

அண்ணா நான் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்....... இவ்வளவு நல்லப் பிள்ளையா நீங்க

Anonymous said...

( எட்டாம் வகுப்பில் என் ஆசிரியர் ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் பற்றி சொல்கையில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் " The sentence never end with BECAUSE BECAUSE BECAUSE is a conjunction" இன்றும் மனதில் நிழலாடுகிறது )////////////////////////////////////

என்ன அண்ணா பாட சாலையில் நல்லப் பிள்ளையா படிச்சதை கூட எழுதின நீங்க பண்ணின ஒருச் சேட்டை கூட எழுதவில்லை ...மீ இதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன் ...

Anonymous said...

நீங்கள் தொடர்ப் பதிவுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா ....

அய்யகூ உங்களை மாறி கவிதையில் எழுதத் தெரியாதே அண்ணா எனக்கு ..

மீ மொக்கையா எழுதிப் போடுவான் ...நீங்க அதை சுபேரா இருக்கு எண்டு சொல்லிப் போடனும் ..ஒகேய்ய்ய்..
காட் நீங்கோதான் என்னைக் காப்பற்றனும்

ஆமினா said...

பள்ளிப்படிப்பை அழகாய் கவிதையாகவே சொல்லிட்டீங்க

முதல்வகுப்புக்கு சொன்ன வரிகளில் உடல் சிலிர்த்தது

அருமை அண்ணா

இப்போ நலமாக இருப்பீர்கள் இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்

இராஜராஜேஸ்வரி said...

முதல் கருவறைக்குப் பின் அடுத்த இரண்டாம் கருவறையாய் அமைந்த
பள்ளிக்கூடத்தின் நினைவுகள் சிறப்பாய் மிளிர்கின்றன.. பாராட்டுக்கள்..

DhanaSekaran .S said...

சூப்பர் பதிவு வாழ்த்துகள்.

மதுமதி said...

அருமை தோழர்..பள்ளி அனுபவங்களை கவிதையாக வடித்துவிட்டீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

கவிதையாய்ப் பகிர்ந்த உங்கள் பள்ளி நினைவுகள் அருமை நண்பரே..

வார்த்தைகளில் கவிதையைக் கொண்டு வரும் உங்களது பாணி அருமை....

நானும் எனது பள்ளி நினைவுகளை எழுதி இருக்கிறேன்... உரைநடையில்.

நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கவிதையில் நினைவலைகள் அருமை

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

பள்ளிப் பருவமதை பாங்குடனே பகிர்ந்து
பசுமையான நினைவுகளை மீண்டும் அசை போட்டு
கவிப் பாலை காம்பிலேக் குடித்தது போல்
கவி(ன்)மிகு திறத்தாலே களிக்கச் செய்த
கலைஞர், தமிழ் கவிஞர் உமக்கு நன்றிகள் பல...

அம்பலத்தார் said...

பன்னிரண்டு வருட பாடசாலை வாழ்வை இலகுதமிழ் கவிதையிலேயே தந்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

வரலாறு, ஆங்கிலம், கணிதம்..... என ஒவ்வொரு பாடத்திலும் உங்களுக்கும் ஈடுபாட்டை ஏற்படுத்தியதுபோல கவிதை எழுதுமளவிற்கு தமிழ்ப்புலமை உண்டாக உந்துகோலாக இருந்தது எந்த ஆசிரியரோ?

கணேஷ் said...

ஒன்று முதல் பன்னிரண்டு வரை அழகாய் எளிய தமிழில் கவிதை நடையில் சொல்லி அசத்திட்டீங்க. அடுத்து என் ஃப்ரெண்ட் ஹேமா என்ன எழுதறாங்கன்னு ஓடிப் போய் பாத்திடறேன்...

Lakshmi said...

கவிதையில் நினைவலைகள் அருமை

PREM.S said...

//" The sentence never end with BECAUSE BECAUSE BECAUSE is a conjunction" //எல்லாருக்கும் சொல்லிருப்பாங்க போல எனக்கும் சொன்னார்கள்

PREM.S said...

கவிதை நடையில் பள்ளி பருவத்தை பகிர்ந்தது அருமை

துரைடேனியல் said...

கவிதை நடையில் பள்ளிக்கூட நினைவுகளா? அசத்திவிட்டீர்கள் சார். அருமையான பகிர்வு. உங்களோடு நாங்களும் மகிழ்ந்தோம். நன்றி!

துரைடேனியல் said...

தமிழ்மணம் ஓட்டுப் போடமுடியவில்லையே. இன்னும் சரி செய்யவில்லையா? bloggernanban தளத்தைப் பார்த்து சரி செய்யவும். நன்றி சார்.

தனிமரம் said...

பள்ளியின் பின்னே உங்கள் நினைவலைகளை பின்னி எங்களையும் அதில் ஈர்க்க வைத்துவிட்டீர்கள் அண்ணா.கலக்கல் கவிதை.

KANA VARO said...

பள்ளி நினைவுகளையும் கவிதையோடு பகிர்ந்ததற்கு நன்றி

நம்பிக்கைபாண்டியன் said...

உங்களின் அத்தனை வகுப்புகளும் சுவாரஸ்யமானவை, அதிலும் அந்த 10 வகுப்பின் முக்கியத்துவத்தை சொன்னது மிகவும் அருமை!

அழைப்புக்கு நன்றி நண்பரே! உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் இரண்டு நாட்களில் எதையாவது எழுதி பதிவிடுகிறேன்

ஹேமா said...

பள்ளி நினைவுகளை அள்ளி எடுத்து எங்களையும் அந்த நினைவுகளுக்குள் மூழ்கடித்துவிட்டீர்கள் மகி.எனக்கும் அழைப்பா...எழுதணுமா...குண்டுச் சத்தமும் ஓடினதும் ஒளிஞ்சதுமான நினைவுகளை மறக்கமுடியாவிட்டாலும் எழுதணும்ன்னா ரொம்பவே கஸ்டம்.முயற்சி செய்யணுமான்னும் இருக்கு.பார்க்கலாம்.அன்புக்கு மிக்க மிக்க நன்றி உங்களுக்கு !

♔ம.தி.சுதா♔ said...

பழைய நினைவுகளை மீண்டும் வரிகளால் மீட்டிச் சென்றமைக்கு நன்றி சகோதரம்...

ஷைலஜா said...

அழைப்பை ஏற்றதற்கு நன்றி
ஆஹா கவிதை நடையில் அருமையாக எழுதிட்டீங்களே பாராட்டுக்கள்!

புலவர் சா இராமாநுசம் said...

ஒன்று பனிரெண்டு வரை வாயிபாடு போல வகுப்பும் கவிதையில்...!
அசத்தல்!

புலவர் சா இராமாநுசம்

koodal bala said...

பள்ளிக்கூட வாழ்கையை சொன்ன விதம் அருமை!

Shakthiprabha said...

பள்ளி நினைவுகள் கூட கவிதையாய் உங்களிடம் தான் இவ்வளவு அழகாக வண்ணம் பெற முடியும்...

// சார் படிச்சிருவேன்.. பாருங்க எனக்கு கையால காதைத் தொட முடியும்" என்று
வலது கையை உச்சந்தலை வழியாக இடது காதை தொட குனிந்து நெளிந்து
///

:)

//நரம்பியல் பாதிப்பால்
வலிப்பு வந்து துன்புற
என் உயிரை அன்றும்
இரண்டாம் முறை மீட்டெடுத்த
என் தாய்தந்தையர் ஒருபுறம்
//

hmmm :|


//இரசாயனமே உனக்கு வாழ்வு
இன்றே கற்றுக்கொள் என
கற்பித்துக் கொடுத்திட
///

நான் உங்க பள்ளியில படிச்சிருந்தா எனக்கும் சொல்லிக் கொடுத்திருப்பீங்களோ!

நன்றி சகோ. உங்களின் பின்புலம் அறிந்தது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது.

mum said...

பள்ளி வாழ்க்கையை கண் முன்னே படமாக்கி காட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்....

சசிகலா said...

கவிதை வரிகளில் அழகாய் பள்ளி அனுபவம் அருமை அண்ணா.

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல் சார் !

shanmugavel said...

ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத அனுபவங்கள்.இயல்பான வார்த்தைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்திரகௌரி said...

வகுப்பு வகுப்பாய் வளர்ந்த விதம் நன்றாகத்தான் இருக்கின்றது. கையாள காதைத் தொட்டவிதம் படிப்பின் பக்கமுள்ள உங்கள் விருப்பத்தை எடுத்துக் காட்டுகின்றது . சில விடயங்களை இன்னும் நினைவில் வைத்திருக்கின்றீர்களே. வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

அது ஒரு காலம் ....அழகிய நினைவலைகளில் எங்களையும் நீந்த வைத்தீர்கள்...

ரமேஷ் வெங்கடபதி said...

தேர்வுக்காலம் தவிர்த்து, ஒருவர் மகிழ்ச்சியாக இருந்த நேரம் வாழ்நாளில் பள்ளிப்பருவமே! ஒவ்வொரு நாளும் ஒருகதை சொல்லுமே!

நினைவுகளை பகிர்ந்தமை அழகு!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கொவைநேரம்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றிகள் பல..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஐடியாமணி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றிகள் பல..

மகேந்திரன் said...

அன்புத் தம்பி பெருமாள்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை கலை,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

நிறைய சேட்டைகள் செய்திருக்கேன் தங்கையே
அதெல்லாம் இங்கே எழுதணும் னா ஒரு முழுநீள
கட்டுரையே எழுதணும்...

நீங்க என்னைவுட நல்லா எழுதுவீங்க அப்படின்னு
எனக்கு நம்பிக்கை இருக்கு...
உங்களின் தொடர் பதிவுக்காக காத்திருக்கிறேன்...

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ஆமினா,
நல்ல சுகமாக இருக்கிறேன்
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனசேகரன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
நிச்சயம் தங்கள் தளம் வந்து பார்க்கிறேன்.
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜபாட்டை ராஜா,
நினைவலைகளை மகிழ்வலைகளாக
மாற்றிய தங்கள் கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஆலாசியம் ஐயா,
தங்களின் கவின்மிகு கருத்துக்கு
நான் தான் என்ன புண்ணியம் செய்தேன்..

என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.

மகேந்திரன் said...

அன்புநிறை அம்பலத்தார் ஐயா,
தங்களின் கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்தை
என்னை சுவைக்கச் செய்ய ஆசிரியர்கள்
கிடைத்தமைக்காக நான் இன்றும் பெருமைப் படுகிறேன்...

என் கவிதைகளை ஊக்குவித்த ஆசிரியர்கள் உண்டு ..
பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி.. என் கவிதைகளை
ஆண்டு மலரிலும் உட்பள்ளி போட்டிகளிலும் என்னை அடையாளம் காட்டியவர்கள் நிறைய...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நானும் எதிர்பார்க்கிறேன் நண்பரே...

மகேந்திரன் said...

அன்புநிறை லட்சுமி அம்மா,
நினைவலைகளை மகிழ்வலைகளாக
மாற்றிய தங்கள் கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Anonymous said...

உங்கள் தமிழ்ப் பற்று எந்த வகுப்பிலிருந்து ஆரம்பம் என ஆவலாய்ப் படித்தேன் .
முதலிலேயே உயிர் , மெய் என ஒரு போடு போட்டு அசத்திட்டீங்க . அருமை.

Anonymous said...

சுவாரஸ்யமா இருந்தது சகோதரா...

இன்னும் எழுதியிருக்கலாமோ?

Ramani said...

வித்தியாசமாக அருமையாக எப்போதும் போல் ...
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வீடு K.S.சுரேஸ்குமார் said...

மறக்க முடியாத
பள்ளி அனுபவத்தினை கவிதையில்
வடித்த முறை புதுமையானது....

Anonymous said...

பள்ளி அனுபவங்கள் இனிமை வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

பள்ளி அனுபவங்கள் இனிமை வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

மாலதி said...

பள்ளிகூட நினைவு என்பது இன்னுமொரு பிறவி எடுத்த மாதிரிதான் கண்களை குளமாக்கி அந்த இனிய பசுமையான நினைவுகள் மீண்டும் வராதா என ஏங்கவைக்கும் சுவையான வாழ்வின் மீள்பதிவு அதை திறம்பட சுவைபட சொல்லியவிதம் சிறப்பு அந்த இனிய நினைவுகளோடு .....

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பிரேம்,
ஆம் நண்பரே பொதுவான உரைகளை
ஆசிரியர்கள் எல்லோருக்கும் சொல்லி வைப்பார்கள்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
கீழே இருக்கும் தமிழ்மண ஒட்டுப்பட்டையை
பயன்படுத்துங்கள் நண்பரே.
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நேசன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ வரோதயன்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,
அழைப்பை ஏற்றமைக்கு என் அன்பான நன்றிகள்.

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ஹேமா,
நீங்கள் அனுபவித்த துயரங்கள்
நானும் சிறிதளவு அறிவேன் சகோதரி.
உங்களை நான் துன்புறுத்த விரும்பவில்லை.
முயற்சித்துப் பாருங்கள்
எழுதுவதற்கு..
தங்களின் மேலான கருத்துக்கு என் அன்பான
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ ம.தி.சுதா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் பாலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சக்திபிரபா,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு தங்கை சசிகலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சி.பி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ ரெவெரி
எழுத வேண்டும் என்ற ஆசை தான்
பதிவு நீண்டு விடுமே???

தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சுரேஷ்குமார்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

siva sankar said...

அண்ணா என்று அழைப்பதை விட
கவிஞரே என்று அழைப்பது தகும் என்று நம்புகிறேன்

பால்யம் முதல் பருவம் வரை அழகாய்
நியாபகங்களை
பூக்களாய்
கொண்டு
மலர் மலாய்
தொடுத்த உங்களுக்கு
எத்தனை பார்டினாலும் தகும்
வாழ்த்த வயதில்லை
அன்புடன்
சிவா

Post a Comment