Powered By Blogger

Friday, 17 February 2012

நானும் எனது சொந்த ஊரும்!! (தொடர்பதிவு)


லையுலகின்  வீசுதென்றலாய் கவிதைகளில் தென்றலின்
இன்பத்தை சுவைக்க வைக்கும் என் அன்புத் தங்கை சசிகலா
அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கினங்க இந்தப் பதிவு.. 

சொந்த ஊர் என்று சொல்லும்போதே கொஞ்சம் புன்னகையும்
இதழோரம் கலந்துவிடுவது இயல்பான செயல். நம்ம பிறந்த
ஊரைப்பற்றி சொல்லணும் என்றால் சொல்லிக்கிட்டே இருக்கலாம்..
 
ர்ப்பெருமை பேசுவது பொதுவாகவே மனதிற்கு குதூகலிப்பை கொடுக்கும்.
வாங்க.. வாங்க.. உட்கார்ந்து பேசுவோம் எங்க ஊரு பெருமை பற்றி.
 
தென் தமிழகத்தின் வரலாற்றில் நிலைபெற்ற சின்னமாய் விளங்கும்
தூத்துக்குடி என் ஊர். இதற்கான பல பெயர்க்காரணம் சொல்கிறார்கள்.
அதில் ஒன்று அன்றோர் காலத்தில் பாண்டிய மன்னர்களுக்கு தூதுவர்களாய்
வருபவர்கள் தங்கி இருந்து செல்லுமிடமாய் இருந்ததால்.... தூதுக்குடி என்றும்
பின்னர் அது திரிந்து தூத்துக்குடி ஆனதென்றும் கூறுவார்...
 
தூத்துக்குடி நகர் ஒரு வளர்ந்த கிராமம் போல.. நகரின் மையப்பகுதியில் இருந்து
பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு அப்புறம் மேற்கு நோக்கி சென்றாலோ அல்லது
தெற்கு நோக்கி சென்றாலோ பசுமையாய் இருக்கும்.
 
 
 
நாட்டின் பெரும்பாலானோர் உணவில் பயன்படுத்தும் உப்பில் ஒரு கல் உப்பாவது
எங்க ஊரு உப்பாக இருக்கும். பரந்த பாரத நாட்டின் உப்பு உற்பத்தியில்
இரண்டாம் இடம் வகிக்கிறது எங்க ஊர். அது தவிர பல முக்கியமான
தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
 
ங்க ஊர் கடலோரம் அமைந்த தான்தோன்றி பனிமய மாதா திருக்கோவில்
மிகவும் புகழ் வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 5 ம் நாள் இங்கே
கோலாகலத் திருவிழா நடக்கும்.
 
எங்க ஊர் பேச்சு வழக்கை இங்கே கொஞ்சம்
சொல்ல முயற்சிக்கிறேன்...
 
ம்லே ஏகாம்பரம்
இங்கிட்டு எங்க வந்தே?
அண்ணாச்சி
நல்லா இருக்கீகளா?
நான் சும்மா அப்படியே
ஊர சுத்தி பாத்திட்டு
எல்லாரும் நல்லா இருக்கீகளா னு
பாத்துட்டு அப்படியே
அங்கிட்டு கூடி
திருச்செந்தூரு போகலாம் னு வந்தேன்..
 
ஏலேய்
நல்லா ஏசிப்புடுவேன் பாத்துக்கோ
இந்தாள இங்க வர வந்துபுட்டு
வீட்டுக்கு வராம போனீன்னா
அப்பறம் நல்லா இருக்காது
சொல்லிபுட்டேன்...
 
இப்படி ஏழு ஸ்வரங்களுடன் எட்டாவது ஸ்வரமாய் எங்க ஊரு தமிழை
சேர்க்கலாம்..அவ்வளவு எழில்மிகு சிறப்பு.
=========================================================================
 
இந்தப் பதிவை தொடர்வதற்காக நான் அழைக்கும் என் சொந்தங்கள்..
 
திவுலகில் என் தோள்குலுக்கி உறவுமுறையோடு அருமையாய் பழகும்
அருமை காட்டான்  மாமா... இவரின் எழுத்து நடைக்காகவே இவர் பதிவுகளை
பார்க்க விரும்புகிறேன்.
 
டிக்க ஆரம்பிக்கையில் கமல மொட்டுக்களாய் துவங்கும் இவரின் பதிவுகள்
படித்து முடிக்கையில் மலர்ந்து செந்தாமரையை மனம் வீசும் எழுத்துக்குச்
சொந்தக்காரர் அன்பு சகோதரி கீதமஞ்சரி.
 
கோவை மாநகரின் இதமான ஈரக்காற்று போல இவர் பதிவுகளிலும்
இதமும் பதமும் இனிமையுற நூற்றுக்கொடுக்கும்
கோவையின் கொன்றைவேந்தன் என் அருமை நண்பர் ரமேஷ் வெங்கடபதி
 
மிழின் சுவையை தான் எழுதிய பக்தி பாமாலைகளால் என் மனதை கொள்ளை கொண்டு மனதில் நீங்கா இடம் பிடித்த ஐயா தமிழ்விரும்பி ஆலாசியம் அவர்கள்.
 
 
அன்பன்
மகேந்திரன்

70 comments:

Unknown said...

மாப்ள அருமயா சொல்லி இருக்கீங்க நன்றி!

கோவை நேரம் said...

நல்லா இருக்குலே ......

வெங்கட் நாகராஜ் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே....

”ஒரு கல் உப்பாவது!” - நிச்சயம்.

”உப்பிட்ட வரை உள்ளளவும் நினை” ஊரையும் நினைப்பார்கள்....

நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே...

Unknown said...

என்ன இப்படி செஞ்சு போட்டிங்க..பாராட்டுகளை முதன்முறையாக உங்கள் எழுத்துகளில் பார்க்கும்போது ஒரு சிலிர்ப்பு..!இதை தக்கவைத்துக் கொள்ள தரத்தை உயர்த்தவேண்டுமே எனஒருவித எச்சரிக்கை கலந்த பயம்! நன்றி..நண்பரே!

துரைடேனியல் said...

Arumai Sir!
Konjam virivaa pesanum. Office kelambittu irukken. Appuram varen. Wait!

Anonymous said...

பெயர்க்காரணம் தெரிந்து கொண்டேன்.
மற்ற விவரங்களும் அருமை.
வளர்ந்த கிராமம் என்றுக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
ஆனால் நகரத்தின் நெரிசல் , தூசு மாசு
இன்ன பிற இத்யாதிகள் இல்லாமல் வாழ
கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
அருமை மகி சகோ !

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் தூத்துக்குடியின் அழகு உங்க எழுத்தில் மிளிர்கிறது...

சொந்த ஊரைப்பற்றி எழுதுவதே ஒரு தனி சுகம் தான் எழுத எழுத நிச்சயம் உங்கள் ஊர் நினைவு மனதில் நிறைந்திருக்கும்...

தொடர்பதிவெழுதியற்கு மிக்க நன்றி... ( இந்த தொடரை ஆரம்பித்தவன் என்ற முறையில்)

Sakunthala said...

நம்ம ஊரு பெருமை நல்லாத்தான் இருக்கு...

Shakthiprabha said...

மேற்கே அல்லது தெற்கே பொனால் பசுமை, இந்த ஒருவரியாலையே உங்க ஊர் புடிச்சு போச்சு.

துரைடேனியல் said...

நான் பிறந்தது ஏரலாக இருந்தாலும் நமக்கு ரொம்பவே பரிச்சயமானது நம்ம தூத்துக்குடி. ஏறக்குறைய சொந்த ஊருதான். நான் பணிபுரிந்து கொண்டிருப்பதும் இங்கேதான். நம் சுவாசம் கலந்த மண்ணில் எத்தனை எத்தனை பசுமையான நினைவுகள். அருமை சார். நம்ம துறைமுகம் நமக்கு எவ்வளவு பெரிய பெருமை. கடலும், கரையும் சேர்ந்தத வாழ்வு. தூத்துக்குடியில் ஆரம்பித்து கடற்கரையோர கிராமங்களில்தான் எத்தனை கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நம்ம ஊரு பெருமை சொல்லி மாளாதுங்கோ! பகிர்வுக்கு நன்றி.

Marc said...

அழகான பதிவு. நல்ல நடை வாழ்த்துகள்

நம்பிக்கைபாண்டியன் said...

நன்றாக சொல்லியிருகீங்க மகேந்திரன்,ஆனால் சுருக்கமாக இருக்கிறது,அங்கு உங்கள் பழைய நினைவுகள் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.

Unknown said...

மகி!
நான் பலமுறை அங்க வந்திருக்கிறேன் இன்றும் எனக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள்

சா இராமாநுசம்

கூடல் பாலா said...

ஊர் பெருமை ...அருமை!

Yoga.S. said...

வணக்கம் நண்பரே!அருமையான பகிர்வு.ஒவ்வொருவருக்கும் பிறந்த ஊர் பற்றிப் பேசுவதில் அலாதி இன்பம்.விழுந்து,புரண்டு,எழுந்து,ஓடி......................ம்.ம்.ம்.ம்.ம்.ம்...................ஒரு காலம்!

தனிமரம் said...

வணக்கம் அண்ணா!
ஊர் புகழ் பாடுவது என்றால் தேர்தல் பிர்ச்சாரம் போல பேசிக்கொண்டே போகலாம் அந்தளவு சுவையான விடயம் தூத்துக்குடியின் சிறப்பை உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன் மகிழ்ந்தேன்.

பால கணேஷ் said...

இன்னும் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது உஙகள் எழுத்தைப் படித்ததும். தூத்துக்குடி எனக்கும் பிடித்த ஊர். உங்க ஊரில் மக்ரோனி என்று ஒரு ஐட்டம் விரும்பிச் சாப்பிட்டிருக்கிறேன். வெள்ளையாய் கூம்பாய் நன்றாய் இருக்கும். நினைவுகூரச் செய்த நண்பருக்கு நன்றியுடன்...

சசிகலா said...

அண்ணா ..
மிகவும் அருமை உப்பளம் பற்றி அறிய ஆவலாக இருந்தேன் . சுருக்கமாக சொல்லி ஆவலைத் தூண்டி விட்டீர்கள் . அருமை அருமை .

சசிகலா said...

இந்த தங்கையின் விருப்பத்தையும் நிறைவேற்றிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

சென்னை பித்தன் said...

ஒன்பதாவது ஸ்வரமாய் ஒலிக்கிறது பதிவு!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

RAMA RAVI (RAMVI) said...

//சொந்த ஊர் என்று சொல்லும்போதே கொஞ்சம் புன்னகையும்
இதழோரம் கலந்துவிடுவது இயல்பான செயல். //
உண்மைதான், மகேந்திரன்.

தூத்துக்குடி பெயர் காரணம் தெரிந்து கொண்டேன்.சிறப்பான தகவல்கள். அருமையான பதிவு.

Sri Muthumalai Amman ThiruKovil said...

அருமையான பதிவு...எனக்கும் திருச்செந்தூர் வட்டம், பரமன்குறிச்சிதான்....http://muthumaalaiamman.blogspot.in/
V.P.Murugun

Ahila said...

தூத்துக்குடியின் பெயர் காரணத்தை உங்களின் பதிவிலிருந்து தெரிந்துகொண்டேன்......பதிவு அருமை மகேந்திரன்....

shanmugavel said...

ஊரைப்பற்றி சுருக்கமான அறிமுகம்,நன்று

KANA VARO said...

நம்ம ஊரைப்பற்றி கதைக்க நமக்கு கசக்குமா என்ன? நன்றாக இருக்கின்றது.

மாம்ஸ் காட்;டானின் பதிவுக்கு வெயிட்டிங்.

ஹேமா said...

எங்கள் யாழ் தமிழ்போல உங்கள் தமிழும் ஒருசுவை.அழகான பதிவு மகி !

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவு அருமை ! தொடருங்கள் !

கீதமஞ்சரி said...

சொந்த ஊர் பற்றியப் பதிவுக்கு என்னையும் அழைத்ததற்கு நன்றி மகேந்திரன். ஊர் பெருமை பேச அதுவும் பெண்களுக்கு பிறந்த ஊர் பெருமை பேசக்கசக்குமா என்ன? விரைவில் பதிவிடுகிறேன்.

உங்கள் ஊர் பற்றியப் பதிவு அருமை. அதிலும் அந்தப் பேச்சு வழக்கு மனத்தைக் கொள்ளை கொள்கிறது. அதுவும் தூத்துக்குடி என்றதுமே முத்துக்குளிக்க வாரீயளா? என்னும் பாட்டு மனதோரம் வந்து ஒட்டிக்கொண்டது. அழகுத்தமிழ்க் கொஞ்சும் பதிவு. பாராட்டுகள் மகேந்திரன்.

Anonymous said...

அட நம்ம தூத்துக்குடி...மலரும் நினைவுகள் தான் போங்க சகோதரரே...நல்லா எழுதியிருக்கீங்க...
ஒரு தொடராய் நீங்களே எழுதலாமே...

இராஜராஜேஸ்வரி said...

ஊர்ப்பெருமை பேசுவது பொதுவாகவே மனதிற்கு குதூகலிப்பை கொடுக்கும்.

முத்து முத்தான பகிர்வுகள் பாராட்டுக்கள்..

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
ஊர் பற்றிய உங்கள் அறிமுகம் அழகு.. உங்களால் நானும் ஒருமுறையாவது தூத்துக்குடி வரணும் என்ற ஆவலை தூண்டி இருக்கிறீங்க..

என்னையும் தொடர் பதிவு எழுத அழைத்ததற்கு நன்றி..

Unknown said...

அண்ணாச்சி கலக்கிபுட்டிங்க....

kowsy said...

எந்த ஊரு என்றாலும் அது சொந்த ஊரு போலாகுமா? என்ற பாடல் தான் ஞாபகத்திற்கு வருகின்றது . தூதுகுடி தூத்துக்குடி ஆனது பெருமை. சூத்துக்கு உப்புப் போட்டுச் சாப்பிடுகின்றானா என்று ரோசத்திற்கும் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று நன்றி உணர்விற்கும் உப்பு எடுத்துக் காட்டப்படுகின்றது. அந்த உப்பு விளையும் பூமியாக உங்கள் ஊர் இருப்பதும் பெருமை. இப்பெருமையில் உங்களைப் பெற்ற பூமி என்பதிலும் பெருமை கொள்ளுங்கள்

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் முதல் வருகைக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வாங்க கோவைநேரம் அண்ணாச்சி...
ரசிச்சதுக்கு நன்றிங்க...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
உங்களின் எழுத்துக்களில் வாசம் இருக்கிறது.
இன்னும் பட்டை தீட்டுங்கள்.
இனிய கருத்துக்கும் என் வேண்டுகோளை ஏற்றமைக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
நம்ம ஊர்க்காரர் நம்ம கூட வலைப் பதிவில்
கூடவே இருக்கிறார் என்ற எண்ணம் எனக்கும்
எப்போதுமே மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இந்த முறை ஊருக்கு வருகையில் உங்களை சந்திக்கிறேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
சரியாச் சொன்னீங்க.
எங்க ஊரில் அதிகமான தொழிற்சாலைகள் இருக்கின்றது.
ஆனாலும் இயற்கை எப்போதும் கிழக்கு நோக்கியே
காற்றின் திசையை அனுமதிப்பதால்..
மாசு குடியிருப்பின் பக்கம் வருவதற்கான வாய்ப்புகள்
மிகக் குறைவு.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சங்கவி,
வாங்க வாங்க..
எங்க ஊர் பற்றி எழுத ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

நேசத் தோழி சகுந்தலா,
ஊர்ப்பெருமை என்றாலே அது..
நெஞ்சமெல்லாம் இனிக்கும்.
அதை எழுதும் பாக்கியம் எனக்குக்
கிடைத்தமைக்காக மகிழ்கிறேன்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சக்திபிரபா,
எங்க ஊருக்கு வாங்க..
எங்க மக்களையும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனசேகரன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய
கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,
தொடர்பதிவு என்பதால் மிகச் சிறியதாக
எழுதிவிட்டேன்..
கூடிய விரைவில் எங்க ஊர்த் தமிழ் மணக்க
ஒரு நாட்டுப்புற தொடர் ஆரம்பம் ...
வாங்க வந்து ஆசீர்வாதம் தந்துட்டு போங்க...

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
தூத்துக்குடியில் உங்கள் தமிழ் வாசத்தை
மதிக்கும் ஒரு மாணவன் இருக்கிறான்..
உங்கள் மரபுக் கவிதைகளின் ரசிகன்
இருக்கிறான்..
அடுத்தமுறை வரும்போது மறக்காமல்
என் மனைக்கு வரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Unknown said...

நன்றிகள் பல கவிஞரே
நயம் பட உரைக்கும் உங்கள்
நல்ல தமிழுக்கு...

தூத்துக்குடி எந்தன் மனதையும் குடித்த
சாத்துக்குடி இது சாத்திய மானது
எனது பதினேழு வயதில்...

ஊர் கொல்லை கண்டது மனதை...
ஊரின் பெயர்கள் கொல்லை கொண்டது
எனது சிந்தனையை அல்லவா!
எத்தனை அழகானத் தமிழ் பெயர்கள்...

நெல்லைத் தமிழுக்கு இணையான வேறொரு சொல்லைத் தரமுடியுமா!

தாமதமாக வந்துவிட்டேன்... பொருத்தருள வேண்டும்.

நானும் இந்தத் தொடரை தொடர வேண்டிய அன்பிற்கு நன்றிகள் நண்பரே!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
தங்களின் கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் யோகா ஐயா,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
தங்களின் வரவால் மிக மகிழ்ச்சி அடைந்தேன்.
இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரர் நேசன்,
சரியாச் சொன்னீங்க
ஊர்ப்பெருமை பேசுவது நமக்கு
அச்சுவெல்லம் சாப்பிடுவது போல ..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
நிறைய எழுதணும் னு ஆசை..
நேரமும் போதவில்லை.. அதே நேரம்
தொடர்பதிவாய் இருந்ததால்
குறைத்துக் கொண்டேன்.
எங்க ஊர் மக்ரூன் பிஸ்கட் மற்றும் மஸ்கூத் அல்வா
இரண்டும் மிகப் பிரபலம்..
இரண்டும் முந்திரிப் பருப்புகளின் கலைவையால்
செய்யப்படுவது..

எங்க ஊர்த் தமிழில் ஒரு தொடர்.. அதுவும் நாட்டுப்புறத் தொடர்
வருகிறது நண்பரே..
காத்திருங்கள்.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
உங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு.
முதலில் உங்களுக்குத் தான் என் நன்றிகள்.
எங்க ஊர் பற்றி எழுத வேண்டும் என்பது
நீண்ட நாள் ஆவல்..
உப்பின் விளைச்சல் பற்றி ஏற்கனவே ஒரு
கவிதை போட்டிருக்கிறேன். ..
பாருங்கள்.

நன்றி நன்றி நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
இதைவிட இந்தப் பதிவுக்கு
ஒரு அங்கீகாரம் வேண்டுமா....!!
மிக்க நன்றி ஐயா..

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் முருகன் அவர்களே,
தங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தெளித்து
வரவேற்கிறது.
அருள்மிகு குரங்கணி முத்துமாலை அம்மன் பெயர்தாங்கி
வந்த தங்களின் கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நிச்சயம் தங்கள் தளம் வருகிறேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அகிலா,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரோதயன்,
உங்களைப்போல நானும் மாமாவின்
தொடர்பதிவுக்காய் காத்திருக்கிறேன்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
யாழ் தமிழை கேட்டு கேட்டு ரசித்திருக்கிறேன்..
அந்த பேச்சு லாவகம் என்னை மீளாத இன்பத்தில் ஆழ்த்தும்.

எங்க ஊரின் தமிழை ரசித்தமைக்கு நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
என் வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றிகள் பல.
தங்களின் தொடருக்காய் காத்திருப்பு.

ஆகா அந்தப் பாடலை மறக்க முடியுமா..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
நிச்சயம் எழுதுறேன் ..
நேரம் தான் போதவில்லை ..
காலம் கனியட்டும் நிச்சயம்
தொடராக வெளியிடுகிறேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
நீங்கள் தூத்துக்குடி வந்தால்
எனக்கு மிகமிக சந்தோசம்.
தங்களின் வருகைக்காக காத்திருக்கிறேன்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வீடு சுரேஷ்,
என்ற பதிவை படித்து நல்லா எழுதிப் போட்டேன்னு
சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தங்களின் கருத்து என்னை மகிழ்விக்கிறது.
தூத்துக்குடியால் தான் எனக்குப் பெருமை.
அதன் பெருமையை இங்கே சொல்ல ஒரு பெரிய
வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஆலாசியம் ஐயா,
நெல்லைத்தமிழ் நம் கொல்லையில் மணக்கும்
முல்லையைப் போன்றது..
அதனை ரசித்தமைக்காக நன்றிகள் ஐயா.
தங்களின் தொடர் பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

arasan said...

அண்ணே அழகாய் கூறி இருக்கின்றீர் உங்களின் ஊரை பற்றி ..
ரசித்தேன்.. வரவேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டுள்ளது ..

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

Post a Comment