Sunday, 12 February 2012

களிப்பான கழியாட்டம்!!!போதக முகத்தோனே
பேரன்னை புதல்வோனே!
ஏரம்ப நாயகனே
கோட்டுமலை பெரியோனே!
கோலாட்டம் ஆடவந்தேன்
களம் வந்து காத்திடய்யா!!
 
ந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
 
 
லேலோ ஆட்டமாடி
ஏலேலந்தம் பாடிவந்தேன்!
எழிலான  ஏழுதேசம் 
இறங்கி நானும் ஓடிவந்தேன்!!
 
ருமனை அங்காளம்மா
அழகாக பெத்தபுள்ள!
கடம்பங் குச்செடுத்து 
கழியாட்டம் ஆடவந்தேன்!!
 
 
கைக்கொரு கழிகொண்டு
எதிராக சோடிபோட்டு!
நாட்டாரு கலையிதையே
நயமாக ஆடவந்தேன்!!
 
காணிக்காரன் என்றுசொல்லும்
ஆதியினம் நானப்பா!
மூட்டுக்காணி தலைமையிலே
மந்தையிலே ஆடவந்தேன்!!
 
 
சீதவெற்றம் குச்செடுத்து
சிங்கார உடையுடனே!
மைலாடி மைனர் நான்
மையலாக ஆடவந்தேன்!!
 
கொரண்டிக் கழிகொண்டு
தட்டித்தட்டி ஆடயிலே!
கருப்பன் சலங்கை போல
கலகலன்னு ஒலிக்குதய்யா!!
 
 
மாடனுக்கும் இசக்கிக்கும்
வரலாறு சொல்லிவந்தோம்!
வக்கனையா பாட்டெடுத்து
வரிசை போட்டு ஆடிவந்தோம்!!
 
ழிலைக் கிழங்கை நல்லா
பக்குவமா கிளர்ந்தெடுத்து!
பாபநாசம் உச்சியிலே
பாங்காக வாசம் செய்தோம்!!
 
தாழக்குடி ஆசானவர்
தலையேத்தி தந்தபாடம்!
கணுக்கால் சதிராட
அடவுகட்டி ஆடிவந்தேன்!!
 
 
டும்பின் தோலெடுத்து
உலர்ந்து போனபின்னே!
சுட்டெடுத்த மண்பானை
வாயில்தான் கட்டிவச்சோம்!!
 
ட்டிவச்ச பானையத
உடுக்கக்கட்டை என்போம்!
அதில் வந்த இசையோடு
அழகாக ஆடிவந்தோம்!!
 
ருகையில் கழிஎடுத்து
மறுகையில் துணிய கட்டி!
வட்டமிட்டு ஆடிவந்த
ஒத்தைக்கழி கோலாட்டம்!!
 
 
கைக்கொரு கழிஎடுத்து
முன்நெற்றி மண்பார்க்க! 
வளைஞ்சு ஆடிவந்த
இரட்டக்கழி கோலாட்டம்!!
 
த்தரம் ஒன்னு செஞ்சு
பலவண்ண துணிகள் கட்டி!
வலக்கையில் கழிஎடுத்து
இடக்கையில் துணி பிடித்தோம்!
 
 
ட்டமாக கூடிநின்னு
வந்த இசைக்கேற்ப!
கோலாட்டம் அடிக்கையிலே
துணிகளில் பின்னல் விழும்!!
 
டிவந்த திசைக்கிப்போ
எதிராக அடுத்தகுழு!
நேரெதிரா ஆடயிலே
விழுந்த பின்னல் அவிழ்ந்துவிடும்!!
 
ழகான இந்த ஆட்டம்
கவர்ந்திழுக்கும் ஆட்டமய்யா!
இதற்கான பெயரதுவே
பின்னல் கோலாட்டம் என்பார்!! 
 

தாண்டியா என்பதெல்லாம்
தானாக வந்ததல்ல!
எம்கலைய பார்த்துதானே
தருவித்த கலையப்பா!!
 
காலுக்கும் கைகளுக்கும்
ஒருசேர பணிகொடுத்து!
அழகாக ஆடியது
கனவாக போச்சுதய்யா!!
 
 
சின்னமக்கா பொன்னுமக்கா
சிங்கார கண்ணுமக்கா!
சீரான இக்கலைய
சீரழிக்க வேணாமய்யா!!
 
தோளிலே கைபோட்டு
தோழனென இல்லேனாலும்!
கூனிப்போன எங்களைத்தான்
கோமாளி ஆக்காதய்யா!!
 
ங்குதற்கு காரவீடு
தகுதியா இல்லேனாலும்!
தரணியில் இப்போதும் - நாங்க
தரம் தாழ்ந்து போகலய்யா!!
 
 
குறிப்பு:
 
கடந்த மாதம் 22  ம் நாள் விஜய் தொலைக்காட்சியில் "நீயா-நானா" வில் "தமிழர்களின் பாரம்பரியம்"
பற்றிய விவாதம் அழகாக நடந்தேறியது. பாரம்பரியம் என்பது அவசியமில்லாதது என்று பேசிய நபர்களை
பார்த்தால் பொதுவாக இளைய தலைமுறையினர் என்றே சொல்லலாம்.
"தமிழர்களின் கலைகள்" பற்றிய பேச்சு எழுகையில் நம் பாரம்பரியக் கலைகளை தெரிந்துகொள்ளக் கூட
அவர்கள் விரும்பவில்லை என்று தெளிவாக தெரிந்தது. அதே சமயம் வடநாட்டு மற்றும் மேல்நாட்டு கலைகளுக்கு அவர்கள் தரும் ஆதரவுக்கு மனம் வேதனை அடைந்தது.
 
அதையும் தாண்டி அந்த நிகழ்ச்சியின் நடத்துனர் "திரு.கோபிநாத்" அவர்கள் கலைகளின் தன்மையையும்
அதை ஏன் நீங்கள் வெறுக்கிறீர்கள், நம் கலைகளை அருவெருப்பாய் பார்க்கும் நீங்கள் ஏன்  மற்ற நாட்டு கலைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள்?? என்று மாறி மாறி கேள்விக்கணைகளை தொடுத்து ஒரு நல்ல தீர்மானத்துக்கு வந்தார்.
இந்தப் பதிவின் மூலமாக "திரு. கோபிநாத் " அவர்களுக்கு என் பணிவன்பான வணக்கங்களையும்
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
 
அன்பன்
மகேந்திரன்
 

65 comments:

இராஜராஜேஸ்வரி said...

காலுக்கும் கைகளுக்கும்
ஒருசேர பணிகொடுத்து!
அழகாக ஆடியது
கனவாக போச்சுதய்யா!!

கனமான கவிதைக்கு
மனநிறைவான பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

"திரு. கோபிநாத் " அவர்களுக்கு என் பணிவன்பான வணக்கங்களையும்
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இளைய தலைமுறையினருக்கு சரியான பாதை அறிமுகப்படுத்திய பகிர்வுக்கு வாழ்த்துகள்..

ரமேஷ் வெங்கடபதி said...

நம் பழங்கலைகளுக்கும் ஒருநாள் வாழ்வு வரும்! ஆனால் அன்று அவற்றை தெரிந்தவர் அதிகம் இலர்! புதியக் கோணத்தில் சிந்தித்து கவிதையாக்கி படைத்துள்ளீர்! அபாரம்!

ராஜி said...

தங்குதற்கு காரவீடு
தகுதியா இல்லேனாலும்!
தரணியில் இப்போதும் - நாங்க
தரம் தாழ்ந்து போகலய்யா!!
>>>
கலையை வாழ வைக்கும் உயர்கலைஞனுக்கே உள்ள “திமிர்” இது. இந்த திமிர் இல்லாட்டி நம்ம கலி எப்பவோ அழிஞ்சு போய் இருக்கும் சகோ

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

guna thamizh said...

தாண்டியா என்பதெல்லாம்
தானாக வந்ததல்ல!
எம்கலைய பார்த்துதானே
தருவித்த கலையப்பா!!

காலுக்கும் கைகளுக்கும்
ஒருசேர பணிகொடுத்து!
அழகாக ஆடியது
கனவாக போச்சுதய்யா!!

மரபை நினைவுபடுத்தினீர்கள் நண்பரே..

கணேஷ் said...

கொரண்டிக் கழிகொண்டு தட்டித்தட்டி ஆடயிலே! கருப்பன் சலங்கை போல
கலகலன்னு ஒலிக்குதய்யா!!
-அருமையான வரிகள். தாண்டியா ஆட்டம் மட்டுமென்ன... பல பாரம்பரியக் கலைகள் நந்தமிழ் நாட்டுப் புறக் கலைகளிலிருந்து பிறந்தவைதான். பழம்பெருமையை நினைத்து பூரிக்கச் செய்து விட்டீர்கள் நண்பரே...

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
கிராமியத்தை பற்றி உங்களுக்கு சொல்லியா தரனும்? அருமையான கவிதை..

வளர்ந்து வரும் இளைய சமுதாயம் பாரம்பரிய கலைகளை மறப்பது வேதைனைக்குரியது.. இங்கிருந்து நாங்கள் எமது கிராமிய கலைகளை ஆதாரிக்கிறோம். அங்கு மேல்நாட்டு கலாச்சாரமா? வேதனைதான் மிஞ்சுகிறது.:-(

துரைடேனியல் said...

ஆட்டமும் கவிதையும் ஒரு சேர அழகு. கிராமியம் தொட்டுப் பேசும் தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை.

துரைடேனியல் said...

tha ma 6.

ஹேமா said...

எத்தனை கலைகள்.
தப்பு,கோலாட்டம்,உடுக்கு எல்லாம் சின்ன வயசில் மலையகப் பக்கத்தில் கண்டிருக்கிறேன்.மீட்டெடுக்கிறீர்கள் வார்த்தைகளால்.அற்புதம் !

Ramani said...

பாடலை இசையோடு ரசித்துப் பாடிக்கொண்டே
படங்களைப் பார்க்கையில் அவர்கள்
ஆடுகின்ற கோலாட்டத்தை நேரடியாகவே
பார்ப்பதைப்போலவே இருந்தது
இறுதில் தாங்களாதங்கப் படுவது சரிதான்
நம் கலாச்சாரம் மண்ணிலிருந்து பிறந்தது
அதைக் காக்கும் உயர்த்தும் பொறுப்பும்
நிச்சயம் நமக்கு உண்டு
மனம் கவர்ந்த அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 9

Lakshmi said...

நம் பழங்கலைகளுக்கும் ஒருநாள் வாழ்வு வரும்! ஆனால் அன்று அவற்றை தெரிந்தவர் அதிகம் இலர்! புதியக் கோணத்தில் சிந்தித்து கவிதையாக்கி படைத்துள்ளீர்! அபாரம்!

RAMVI said...

சிறு வயதில் பள்ளியில் ஆடிய பின்னல் கோலாட்டம் நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.மிகவும் அருமையான கோலாட்டப்பதிவு மிக்க நன்றி மகேந்திரன்.

dhanasekaran .S said...

கலைகளை இசை வடிவில் பாடும் பாடலாக தந்தமைக்கு மிக்க நன்றி.

கருத்தும் வேக நடையும் கவிதையில் மிக அருமை வாழ்த்துகள்.

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

நல்ல சிந்தனை..
அருமையான ஒருக் கவிதை...

தங்களின் ஆதங்கம் நியாயமானது...
பாரம்பரியம் மறந்தால் அநாதைகளாகி விடுவோம் என்பதை அறியாதவர்கள் இன்று பெருகிக் கொண்டு வருகிறார்கள்...
என்னதான் நுனிநாக்கு ஆங்கிலம் பேசினாலும் அவர்களைப் போல நடை,உடை,பாவனை செய்தாலும்... நம்மை இந்தியர், தமிழர் என்றே சொல்வார்கள் என்பதை யாவரும் உணர வேண்டும்...

நல்லக் கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் கவிஞரே..
பகிர்வுக்கு நன்றிகள்.

mum said...

"திரு. கோபிநாத் " அவர்களுக்கு என் பணிவன்பான வணக்கங்களையும்
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
அருமையான பதிவு.......
வாழ்த்துகள்!!!!!!!!!!!!!

விக்கியுலகம் said...

மாப்ள கவிதை அருமை...

என்னோட கருத்து : அக்கரைப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி அம்புட்டுதான்!

மாலதி said...

மிகவும் சிறப்பான ஆக்கம் தமிழர்களின் கலைகள் உண்மையில் பாதுகாக்க கூடியவைகள் பின்பற்ற கூடியவைகள் சிறப்பு பாராட்டுகள் .

உங்களுக்கு எனது இடுகையில் விருது இருக்கிறது .

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்புதமான படைப்பு...

அரசன் சே said...

தெளிவான வார்த்தைகளை தொடுத்து தரமான கவிதை ..
நம் கலையை நாமே மிதித்தால் பின் எவர் மதிப்பர் .
உணரனும் இந்த நாகரிக மோக மனிதர்கள்...

நல்ல படைப்பு .. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நலமா,
தக்க நேரத்தில் சரியானதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

பாரம்பரியக் கலைகளை மறக்கும் எம் வயதை ஒத்தோர் ஏனைய நாட்டவரின் கலைகளை ரசிப்பது தான் வேதனையாக இருக்கிறது.

வலையுலகின் சார்பில் கோபிநாத்திற்கு நாமும் நன்றியினைக் கூறிக் கொள்வோம்.

அழிந்து வரும் களியாட்டம்/ கும்மி பற்றி அழகு தமிழில் அருமை பெருமைகளைச் சொல்லும் கவிதை கொடுத்திருக்கிறீங்க.

நன்றி.

Anonymous said...

பின்னல் இடுவதும் அதை இன்னொரு சாரர்
பிரிப்பதுமான கோலாட்டத் தகவல்
புதிதாக உள்ளது. கல்வெட்டு சித்தரிக்கும் கோலாட்டம்
படங்களும் , பாரம்பர்ய கலையின் பெருமை சொல்லும்
உங்கள் கவிதையும் அருமை.

சென்னை பித்தன் said...

பாரம்பரியக்கலைகளை ஒவ்வொன்றாய் உங்கள் கவிதை மூலம் மீட்டெடுத்துக் கொடுத்து வருகிறீர்கள்!நன்று.

KANA VARO said...

படங்களும் பகிர்வும் நன்றி. அருமையான கோலாட்டம்

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் வாழ்த்துக்கும் மனநிறைவான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நிறைவான பகிர்வு...

அவ்வளவு அழகான கோலாட்டம்... அதைப் பற்றிய உங்கள் கவிதை மிக அழகு....

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
சரியாகச் சொன்னீர்கள்.
இப்போதே அதற்கான ஆவணங்கள்
தேடி வைத்து வருங்கால சந்ததிகளுக்கு
தெரிவிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
ஆம் சகோதரி..
கலைகளை சிரமேற்கொண்டு செய்பவர்
படைக்கும் பிரம்மா தேவன் போல...
தலை முழுதும் ஆணவம் இருக்கும்.
சரக்கு இருப்பவர்களிடம் இது இருப்பது
சாதாரணமே.
எல்லா நாட்டுப்புறப் பாடல்களிலும் கலைகளிலும்
கொஞ்சம் தற்பெருமை தூக்கலாகவே தான் இருக்கும்.

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் மனநிறைவான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
நம் மரபுகள் வரலாற்றில் நின்று பேசுபவை இல்லையா...
அந்த வரலாற்றுக்கு நம்மால் முடிந்த உதவி... இது...

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான கலைகளுக்கு
முன்னோடியே நம்ம நாட்டுப்புறக் கலைகள் தான் நண்பரே.
கோலாட்டம் கண்டு நீங்கள் மகிழ்ந்தமைக்கும்
இனிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
ஏதோ நம்மால் முடிந்தது,
இயன்றதைச் செய்வோம் ...

ஆம் மாமா, இன்றைக்கு மட்டுமல்ல
காலம் காலமாக இப்படித்தானே..
நம் கலாச்சாரங்கள் பண்பாடுகளும்
ஒரு சாரார் தம்மை
கட்டிப்போடுவதாகவே நினைக்கின்றனர்...

தமிழையும் பிறந்த ஊரையும் விட்டு வெளியே செல்கையில் தான்
அதன் அருமை புரியும்...
பிசாவும் கோக்கும் சாப்பிட வேண்டி மரபை மறந்தவர்களுக்கு
பண்பாடுகள் எல்லாம் சட்டாம்பிள்ளைத்தனம் தான்.

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
தங்களின் மென்மையான கருத்துக்கு என்
உள்ளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
மலையகத்தில் தோன்றி அங்கு வாழ்ந்த மக்களால் தான்
நிறைய கலைகள் பரவின என்பது வரலாற்றுச் சான்று...

இங்கே நான் குறிப்பிட்ட " காணிக்காரர்கள்" என்பவர்கள் கூட
மலைப்புரத்து மக்கள் தான்...

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,

அடுத்த நாட்டவருக்கு நம்மை அடையாள படுத்துவதே
நம் கலைகள் தான். அவைகளுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகள்
நீங்கள் கூறியவை...

மனம் நிறைவு கொடுக்கும் அருமையான
கருத்துரைக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
சரியாகச் சொன்னீர்கள்.
இப்போதே அதற்கான ஆவணங்கள்
தேடி வைத்து வருங்கால சந்ததிகளுக்கு
தெரிவிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
நான் கோலாட்டம் பார்த்ததோடு சரி...
ஆடி ஒருபோதும் பார்த்ததில்லை அதற்கான
வாய்ப்பும் கிடைக்கவில்லை...

பின்னல் கோலாட்டம் தெரிந்த ஒருவர்
எனக்கு சகோதரி என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

மனம் நிறைவு கொடுக்கும் அருமையான
கருத்துரைக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனசேகரன்,
தங்களின் வாழ்த்துக்கும் மனநிறைவான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஆலாசியம் ஐயா,
சரியாகச் சொன்னீர்கள்.
நமக்கான அடையாளம் கொடுக்கும்
நம் பாரம்பரியத்தையும் கலைகளையும்
ஏன் ஒதுக்கித் தள்ள வேண்டும்...
பெற்று பெயர்வைத்து வளர்த்த தாயை.....
வளர்ந்தபின்னர் அத்தை என்று கூப்பிடுதல் முறையோ....

இளம் தலைமுரையுனர் கலை காக்க முன்வரவேண்டும்.

மனம் நிறைவு கொடுக்கும் அருமையான
கருத்துரைக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் மனநிறைவான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,
நச்சுன்னு நெற்றிபொட்டில் அடித்தாற்போல கருத்து.

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உள்ளார்ந்த நன்றிகள்.

இதோ ஓடி வந்துவிட்டேன் தங்கள் தளத்திற்கு...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அரசன்,
சரியாகச் சொன்னீர்கள்.
தங்களின் வாழ்த்துக்கும் மனநிறைவான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நிரூபன்,
வணக்கம்.
சற்று பத்து வருடங்களுக்கு முன்னர் உள்ள
திரைப்பட பாடல்களையே இன்றைய இளைய தலைமுறையினர்
கேட்க விழைவதில்லை.
இதில் நம் கலைகளை அப்படியே இப்படித்தான் இருக்கும் என்று சொன்னால்
அவர்களால் ஜீரணிக்க இயலாது...
நம் கலைகளிலும் சற்று மாறுதல்கள் தேவை அதே சமயம்
மரபு மாறாமல் இருக்க வேண்டும்.
முயற்சி செய்வோம் சகோதரா.......
நம்மால் இயன்றதை நம் கலைகளுக்குச் செய்வோம்.

மனம் நிறைவு கொடுக்கும் அருமையான
கருத்துரைக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

shanmugavel said...

கோபிநாத்துக்கு என்னுடைய நன்றியும்.நம்முடைய பாரம்பரியத்தை மீட்டெடுப்பது அவசியம்.தங்கள் கவிதை இதமான வார்த்தைகளில் அதைச் செய்கிறது.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,

இங்கே இருக்கும் முதல் கல்வெட்டுப் படம்
திருவலம் கோயில்: 13-ஆம் நூற்றாண்டுக் கற்பாத்திரத்தில் இருக்கும் கோலாட்டம்

இரண்டாம் கல்வெட்டுப் படம்
சென்னை அருகேயுள்ள வாயலூர் பல்லவர் காலக் கோயில் மண்டபத்தில் இருக்கும் கோலாட்டக் காட்சி.

மனம் நிறைவு கொடுக்கும் அருமையான
கருத்துரைக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தொட்டுத் தொடர்ந்து என் கவிதைகளை
படித்து எனக்கு ஆதரவளித்து வரும் தங்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரோதயன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
மனம் நிறைவு கொடுக்கும் அருமையான
கருத்துரைக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

Vetrimagal said...

மிகவும் மகிழ்விக்கும் பதிவு. முதன்முறையாக படிக்கிறேன். மீண்டும் வர ஆவல்.

வணக்கம்.

கோகுல் said...

அன்பு நண்பரே,நலமா?
உங்கள் பதிவை வாசிக்க,வாசிக்க உங்கள் மேல பொறாமை கூடுகிறது,வார்த்தைக்கோர்வைகள் வியக்க வைக்கின்றன,சில அறியாத புதிய வார்த்தைகளையும் சாதாரணமாக பயன்படுத்துவது உங்களுக்கே உரித்தானது.தொடரட்டும் நமது கலைகளை கவிகளாய் மீட்டெடுக்கும் உங்கள் பணி.

Anonymous said...

காட்டான் said...
வணக்கம் மாப்பிள!
கிராமியத்தை பற்றி உங்களுக்கு சொல்லியா தரனும்? அருமையான கவிதை..

வளர்ந்து வரும் இளைய சமுதாயம் பாரம்பரிய கலைகளை மறப்பது வேதைனைக்குரியது.. இங்கிருந்து நாங்கள் எமது கிராமிய கலைகளை ஆதாரிக்கிறோம். அங்கு மேல்நாட்டு கலாச்சாரமா? வேதனைதான் மிஞ்சுகிறது.:-(
//

Amen...

எனது கருத்தும் அதே...

மனதை அள்ளுகின்றன வரிகள்..மிகவும் ரசித்தேன் சகோதரா...

பாரம்பரியம் அழியாமல் காத்து...மனதில் இருத்துவது...நம் கடமை..

வாழ்த்துக்கள்...

Anonymous said...

நம் பழங்கலைகளுக்கும் ஒருநாள் வாழ்வு வரும்! ஆனால் அன்று அவற்றை தெரிந்தவர் அதிகம் இலர்!
எல்லாம் பெரிதாக நினைவின்றி மறக்கடிக்கப்போகிறது. அப்படி ஒரு வேகமாக இளம் தலைமுறையினர் வளர்ச்சி உள்ளது. மிக நல்ல பதிவுக்கு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும், பதிவும் மிகவும் அருமை ! வாழ்த்துக்கள் சார் ! நன்றி !

நம்பிக்கைபாண்டியன் said...

அருமையாக எழுதியிருக்கீங்க!

மாடனுக்கும் இசக்கிக்கும்
வரலாறு சொல்லிவந்தோம்!
வக்கனையா பாட்டெடுத்து
வரிசை போட்டு ஆடிவந்தோம்!

இந்த வரிகள் முக்கியமானவை!இதுபோன்ற கலைகளின் வழியாகத்தான் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எளிதாக நம் வரலாறும், பெருமைகளும் எடுத்துரைக்கப்பட்டன!

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வெற்றிமகள்,
வருக வருக..
வசந்தமண்டபம் தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது.
பதிவுகளை ரசித்தமைக்கு நன்றிகள்.
தங்களின் வருகையை வழிமேல் விழி வைத்து பார்த்திருக்கிறேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,
தங்களின் சமூகப் பதிவுகளில் நீங்கள்
விளையாடும் வார்த்தை விளையாடல்களை
எண்ணி வியந்தவன் நான். நீங்கள் என் எழுத்துக்களை
புகழ்கையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
தங்களின் மேன்மையான கருத்துக்கும் என் மீதான
நம்பிக்கைக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,

என் மீதான தங்களின் அதீத நம்பிக்கை
என் எழுத்துக்களை கூர்மையாக்குகிறது.
தங்களின் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
என் உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
சரியாகச் சொன்னீர்கள்.
இப்போதே அதற்கான ஆவணங்கள்
தேடி வைத்து வருங்கால சந்ததிகளுக்கு
தெரிவிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
மனம் நிறைவு கொடுக்கும் அருமையான
கருத்துரைக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,
சரியாகச் சொன்னீர்கள்.
வரலாறு மிக முக்கியம் அல்லவா...
பொதுவாகவே நாட்டுப்புறக் கலைகள் ஊடாகத்தான்
வரலாறுகள் ஆற்றுப்படுத்தப் பட்டன..
இன்றைய அவசர உலகத்தில் அதை கிரகிக்கக் கூடிய
தன்மை குறைந்து விட்டது..
ஆனாலும் அடியோடு அழிந்துவிட்டது என்று
கூறிவிட முடியாது..
நம்மால் இயன்ற வரை கலைகளுக்குத் தோள் கொடுப்போம்..

Post a Comment