Powered By Blogger

Monday 6 February 2012

புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை!! (தொடர்பதிவு)






புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு

எழுத அழைத்த என் மரியாதைக்குரிய சகோதரர் ரெவெரி அவர்களுக்கு நன்றிகள். 
 
இதோ அண்ணன் எவ்வழி தம்பி அவ்வழி....
 
வ்வொரு ஆண்டு ஆரம்பத்திலும் தீர்மானங்கள் பல எடுப்பதும், ஆண்டு முடிவில் தீர்மானங்கள் நிலுவையில் இருப்பதும் மாற்ற முடியாத ஒன்றாகவே நிகழ்ந்து வருகிறது.இருப்பினும்எடுக்கும் தீர்மானங்கள் மட்டும் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
 
 
ழங்கப்படா தீர்ப்புகளாய் 
ஆயிரம் ஆயிரம் வாதங்கள் 
நிலுவையில் நிற்கையிலே 
இன்னும் சில வாதங்கள் 
பிரதி வாதங்களை எதிர்நோக்கி 
இவ்வாண்டு முழுவதும்!!
 
ருசக்கர வாகனத்தை
இயைபாய்த் தேடும் என் மனம்
இன்றேனும் நடக்கலாமே - என
இடிக்கும் தினமும்!
இந்த விடுமுறை நாட்களில்
இதை நான் செய்விக்க
இனிதே ஓர் தீர்மானம்!!
 
ருவைச் சுமந்தாலும்
காலம் கனியவில்லை
கனவே என நான் கொண்ட
கருத்தாழம் மிகுந்த
நாட்டுப்புறத் தொடர் ஒன்றை
கட்டிக்கரும்பென தித்திக்க
களிப்போடு கொடுத்திடவே
கருத்திலோர் தீர்மானம்!!
 
நாளும் பொழுதுகளும் 
நயமாய் செல்கையிலே 
நல்லுறவு நட்புக்களோடு
திங்களுக்கு ஒருமுறையேனும்
நான்குவார்த்தை பேசிடவே
தொலைபேசி அழைத்திடவோர்
நான் ஏற்ற தீர்மானம்!!
 
தீர்மானங்கள் இயற்றுவது எளிது. அதை நிறைவேற்றுவது மிகக் கடினம்
என்றாலும் முடிந்தவரை முயற்சிக்க எண்ணுகிறேன்.
ஆயத்தமாகும் தீர்மானங்கள் எல்லாம் பல கதைகள் சொல்லும்
இவ்வாண்டின் முடிவில்.
 
த்தீர்மானங்களை தொடர நான் அழைக்கும் தோழமைகள் .....
(தயவு செய்து தொந்தரவு செய்கிறேன் என நினைக்கவேண்டாம்)
 
 
அருமைச் சகோதரி ஸ்ரவாணி
 
அருமைச் சகோதரி சந்திரகெளரி
 
அருமை நண்பர் கணேஷ்
 
 
 
நன்றிகள் பல.
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 

31 comments:

Anonymous said...

என் அழைப்புக்கு செவிமடுத்து தொடர்ந்ததுக்கு முதற்கண் என் நன்றி சகோதரா....

உங்கள் நாட்டுப்புறத் தொடர்க்காக இப்போதே என் காத்திருத்தல் தொடங்குகிறது...

நட்புக்களோடு தொடர்பும் தொடர வாழ்த்துக்கள்..

மூன்றும் முத்தான தீர்மானங்கள்...

என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரா...

ராஜி said...

தீர்மானங்கள் இயற்றுவது எளிது. அதை நிறைவேற்றுவது மிகக் கடினம்
>>
அதென்ன சகோ இப்படி சொல்லிட்டீங்க. ஒவ்வொரு வருசமும் அதே தீர்மானத்தை தூசு தட்டி எடுத்து இந்த வருசமாவது கடைப்பிடிப்பேன்னு சத்தியம் செஞ்சு குடுக்காத குறையா டைரில எழுதிப்புட்டு அதை காத்துலபறக்க உட்டுப்புட்டு மீண்டும் அடுத்து வரும் புது வருசத்தன்னிக்கு அதை தூசு தட்டி எடுப்பதை வழக்கமா வச்சிருக்கோமே. அதை மட்டும் சரியா கடைப்பிடிக்குறோமே

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!

கருவைச் சுமந்தாலும்
காலம் கனியவில்லை
கனவே என நான் கொண்ட
கருத்தாழம் மிகுந்த
நாட்டுப்புறத் தொடர் ஒன்றை
கட்டிக்கரும்பென தித்திக்க
களிப்போடு கொடுத்திடவே
கருத்திலோர் தீர்மானம்!!

நல்லதோர் தீர்மானம் நானும் காத்திருக்கிறேன்.. !

kowsy said...

எண்ணிய கருமம் எண்ணிய வாங்கு முடிக்க என்பதற்கமைய இத் தீர்மானங்களை விரைவில் முடிப்பதற்கான ஆயத்தங்களைத் தொடங்குங்கள். நாமும் உங்கள் தொடர் நாட்டுப் பாடலுக்காக காத்திருக்கின்றோம். என்னையும் தீர்மானத்தை முடிக்கும் பதிவு தர அழைத்திருக்கின்றீர்கள். .
ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் இருக்கின்றது இதில் 3 தீர்மானத்தையாவது நீங்கள் கேட்டதற்கமைய முடிக்க வேண்டும் . தொடருகின்றேன் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

புத்தாண்டு தீர்மானங்கள் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ said...

புத்தாண்டு தீர்மானங்களுக்கு வாழ்த்துக்கள் மக்கா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

நான் மும்பை வந்துட்டேன் மக்கா, உங்க கவிதைகள் எல்லாம் என் ஆர்மோனியபெட்டியை குலுங்க வைக்கப்போகுது நன்றி....!!!

Anonymous said...

ஆஹா மகி அண்ணா ,
இப்போதான் வந்து பார்த்தேன்.
விருது கொடுத்ததற்காக கணேஷையும்
அதை நான் நேரிடையாகக் கொடுக்காததற்கு
என்னையும் இப்படி பழி வாங்கிட்டீங்களே ..
ஹஹஹா... [just joking ] ....
புத்தாண்டு தீர்மானங்கள் தீர்மானமாய்
தீர்க்கப்படாமல் இருப்பதற்கே.
அப்போதான் அதற்கு மரியாதையே ...
திரும்ப வருகிறேன் அண்ணா ...
என் தீர்மானங்களுடன் !
உங்கள் செல்வங்கள்
அருமையோ அருமை.
என் வாழ்த்துக்கள் !

பால கணேஷ் said...

மகேன், இப்போதான் கவனிச்சேன். என்னையும் அழைச்சிருக்கீங்க. என்னோட அடுத்த பதிவுல இதை நிச்சயமா தொடர்ந்துடறேன். மிக்க நன்றி!

மாலதி said...

நல்லதோர் தீர்மானம் அருமையோ அருமை.வாழ்த்துக்கள் !

Anonymous said...

புத்தாண்டு தீர்மானங்களுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

தொடர்ந்தாயிற்று அண்ணா !
நிச்சயம் தொந்தரவு இல்லை .
ஒரு நல்ல வாய்ப்பு & தலைப்பு.

தனிமரம் said...

நாட்டுப்புறத் தொடரைத் தொடருங்கள் காத்திருக்கின்றேன் வாசிக்க நல்ல தீர்மானம்தான் .

நிரூபன் said...

அண்ணா, மாலை வந்து படிச்சுக்கிறேன்.

மன்னிக்கவும்.

ஹேமா said...

தீர்மானங்களை எடுப்பது சுலபம்.நிறைவேற்றுவதுதான் கஸ்டம்.அருமை !

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் அண்ணர்,
நல்லா இருக்கிறீங்களா?

தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய தீர்மானங்களை தவிர்த்து எழுத்துலக வாழ்வுடன் தொடர்புடைய உங்கள் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என
வாசகர்களாகிய நாம் அறிந்து கொள்ளும் வகையில் நல்லதோர் பதிவினை கொடுத்திருக்கிறீங்க.

நன்றி.

தங்களிடன் நாட்டுப்புறத் தொடரை எதிர்பார்த்து காத்திருகிறேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி,
நேரம் இல்லாமையால் தான் எழுத முடியவில்லை.
கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,
நீங்கள் சொல்வது போல தான்
இத்தனை வருடமும் நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த வருடமாவது, சொன்னதைச் செய்ய
முயற்சிக்கிறேன்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,

தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,
பாடி முடித்து நமக்கும் ஒரு படிமத்தை
அனுப்பி வையுங்க மக்களே.
தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
சிரமம் பார்க்காது என் வேண்டுகோளை
ஏற்றமைக்கு நன்றிகள் பல.


தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
சிரமம் பார்க்காது என் வேண்டுகோளை
ஏற்றமைக்கு நன்றிகள் பல.

தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,

தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,


தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நேசன்,
நேரம் இல்லாமையால் தான் எழுத முடியவில்லை.
கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிரூபன்,
நேரம் இல்லாமையால் தான் எழுத முடியவில்லை.
கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,


தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

கருவைச் சுமந்தாலும்
காலம் கனியவில்லை
கனவே என நான் கொண்ட
கருத்தாழம் மிகுந்த
நாட்டுப்புறத் தொடர் ஒன்றை
கட்டிக்கரும்பென தித்திக்க
களிப்போடு கொடுத்திடவே
கருத்திலோர் தீர்மானம்!!

நாளும் பொழுதுகளும்
நயமாய் செல்கையிலே
நல்லுறவு நட்புக்களோடு
திங்களுக்கு ஒருமுறையேனும்
நான்குவார்த்தை பேசிடவே
தொலைபேசி அழைத்திடவோர்
நான் ஏற்ற தீர்மானம்!!

தீர்மானங்கள் செயல் வடிவம் பெற
சிகரங்களைத் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 8

Post a Comment