Saturday, 28 July 2012

பனித்துளி நகங்கள்!!


சுமைநிற விரல்களிலே
பனித்துளி நகங்களோ?!
புற்களின் நுனியீன்ற
கண்ணாடிக் குமிழ்களோ?!!

 
 
ளியொன்றை உள்வாங்கி
உன்னகப் பரப்பளவில்
எதிரொலித்து ஆங்கே
பலவண்ணம் காட்டும்
மாயநீர்க் கோளமே!!
 

ந்தவொரு நொடியிலும்
தன்னுருவை இழக்கும்
அற்பாயுள் வாழ்வெனினும்
உன் புறத்தில்
என்முகம் காட்டி
இன்புறுவாய் நகைத்து நிற்கும்
நீயோ
வைரமணிப் பெட்டகமே....!!
 
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Wednesday, 25 July 2012

நித்தமும் ஓர் பாடம்!!!நித்தமும் ஓர் பாடம்  
நெஞ்சுக்குள்ளே விளையுது
சாட்டையில்லா பம்பரமாய்
தலைகீழாய் சுத்துது!!
 
னுபவத் தென்னைமரம்
பனம்பழமா காய்க்குது
அடியெடுத்து வைச்சபின்னே
முழம் முழமா நீளுது!!
 

 


ருபக்கம் குழியென்று
மண்போட்டு நிறைச்சபின்னே
திரும்பி பார்த்தாக்க
மறுபக்கம் குழியாச்சி!!
 
டைதிறந்த வெள்ளமென
அறிவு நல்லா இருந்தாலும்
அடிவருடிக்குத்தான் இப்போ
நினைச்சதெல்லாம் நடக்குது!!

றைபடாம வாழ்ந்திருந்தா
உதவாக்கரை பட்டமிட்டு
ஊர்ப்பணத்தை ஏப்பமிட்டா
சிம்மாசனம் கிடைக்குது!!
 
 


விலைவாசி கிடுகிடுன்னு
ஏற்றத்திலே நிக்குது
களவு திருடுயெல்லாம்
கண்ணாமூச்சி ஆடுது!!
 
வினைக்கு எதிர்வினையெல்லாம்
பழங்கால கதையாச்சு
எதிர்வினை கொடுத்தால் தான்
வினையிங்கே முடியுமென
புதுக்கதை வந்தாச்சு!!அன்பன்
மகேந்திரன்  

Monday, 23 July 2012

நந்தவனங்கள் நாங்கள்!!


முகப்பரு தொலைக்க 
பூசிவந்த சாயமல்ல 
அகப்பசி தீர்க்க 
ஏற்றுக்கொண்ட சாயமிது!!
 
ள்ளிமுடித்த கூந்தலில் 
அலங்கரிக்க வந்த 
பூக்களல்ல நாங்கள் 
சொல்லத் துணியுமுன் 
கிள்ளி எறியப்பட்ட  
நந்தவனங்கள் நாங்கள்!!
 
சீருடை அணிந்து
சீரான நடைகொண்டு
புத்தகப் பையோடு
பள்ளிசெல்ல ஆசையொன்று
நெஞ்சினிலே இருந்தாலும்
விதியிங்கு எம்மை
வீதியில் தள்ளி
பிஞ்சில் கனியவிட்டது!!
 
நான்கொண்ட நிலைக்கிங்கே
காரணங்கள் ஏதென்று 
விவாதிக்க பொழுதில்லை 
தலைக்குமேல் பணியிருக்கு 
தலைவார நேரமில்லை!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Saturday, 21 July 2012

நிரல்நிறை அமுதே!!!

நிறமும் மனமும் இல்லாத
நிறைவாய் இவ்வுலகில் 
நிரல்நிறை அமுதமாய் 
நிறைந்திருக்கும் மந்திரமே!!

ச்சக பரப்பளவில்
இருவேறு வாயுக்களை
இறுக பிணைத்துவைத்த
இயற்கையின் மகவே!!வாழ்வாங்கு வாழ்ந்திட 
வந்த மனிதனின் 
வாழ்வின் ஆதாரமாம் 
வையகத்து நித்திலமே!!

ன்வண்ணம் தவறிடினும் 
தான் ஏற்கும் வண்ணங்களை 
தனிவட்டி வண்ணங்களுடன் 
தகைவாய் அளிக்கும் பேரழகே!!
நாகரீகம் என்பதெல்லாம் 
நீ தவழும் நதிக்கரையில் தான் 
நீட்சியாய் வளர்ந்ததென 
நன் சரித்திரம் கொண்டாயே!!

திட திரவ வாயுவென 
தீர்க்கமாய் முந்நிலையில்
திரவியமென எமக்காய் 
தோன்றிட்ட தேனமுதே!!
முந்நிலையில் எந்நிலையாய்
முகமங்கே கொண்டாலும் 
முற்றிலும் தன்னிலையை 
முழுதாய்க் கொண்ட ஆரமுதே!!

வெப்பம் காற்று என 
வெளிதொடு தூண்டுதல் 
வெம்மையாய் வந்திடினும்
முந்நிலைக்குள் தன்னிலையை 
மாற்றிக்கொள்ளும் மாதவமே!!
த்துன்பம் வந்திடினும் 
எண்ணிய செயல்முடிக்க 
எடுத்துவிடு அவதாரமென 
எனக்குரைத்த கருப்பொருளே!!

ற்றதை ஏதுவாய் முடித்திடவே 
எந்நிலை மாறினாலும் 
உன்னிலை தவறாதே என 
உட்கருத்து போதித்த மறைபொருளே!!அன்பன் 
மகேந்திரன் 

Tuesday, 10 July 2012

நாடோடி பாடவந்தேன்!!


நாடோடி பாடவந்தேன் 
நையாண்டி அடித்துவந்தேன் 
நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா 
நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழகி!!

ய்யார ஓடம் ஓட்டி
ஊர்வலந்தான் வந்திடவே
ஓடக்கரை போயிருந்தேன் - தங்கமே கட்டழகி - ஆமா
ஓடக்கரை போயிருந்தேன் - தங்கமே கட்டழகி!!

டக்கரை போனபின்னே
கண்ணுமுழி பிதுங்கிப்போனேன்
ஓடையல்ல கம்மாக்கரை - குங்குமப் பொட்டழகி - ஆமா
ஓடையல்ல கம்மாக்கரை - குங்குமப் பொட்டழகி!!

விச்சிருக்கும் தொண்டக்குழி
தாகம் தான் தீர்த்திடவே
தண்ணீர் எடுக்கப்போனேன் - தங்கமே கட்டழகி - ஆமா
தண்ணீர் எடுக்கப்போனேன் - தங்கமே கட்டழகி!!

கொண்டுபோன தவளப்பானை
பொங்கிவர வேணுமின்னு
மூனாத்து முக்குபோனேன் - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூனாத்து முக்குபோனேன் - குங்குமப் பொட்டழகி!!

வளப்பானை தூரதுவோ
முழுசாக நனையவில்லை
ஓராத்த கடந்துபோனேன் - தங்கமே கட்டழகி - ஆமா
ஓராத்த கடந்துபோனேன் - தங்கமே கட்டழகி!!
த்து மணல் நனைக்க
ஒருசொட்டு தண்ணியில்ல
இரண்டாமாத்த கடந்துபோனேன் - குங்குமப் பொட்டழகி - ஆமா
இரண்டாமாத்த கடந்துபோனேன் - குங்குமப் பொட்டழகி!!

மூனாமாத்த பார்த்ததுமே
மூளைகூட வேர்த்துபோயி
மூச்சடைச்சி போனதடி - தங்கமே கட்டழகி - ஆமா
மூச்சடைச்சி போனதடி - தங்கமே கட்டழகி!!

த்துக்கு ஆதாரமா
அடித்தளமா அமைஞ்ச அந்த
மண்ணையே காணவில்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா
மண்ணையே காணவில்ல - குங்குமப் பொட்டழகி!!
ந்தவழி திரும்பிபோயி

இரண்டாமாத்து மண்ணெடுத்து 
மண் கலயம் செய்யப்போனேன் - தங்கமே கட்டழகி - ஆமா
மண் கலயம் செய்யப்போனேன் - தங்கமே கட்டழகி!!

ச்சமண்ணு எடுத்துவந்து 
செஞ்சது ஓர் மூனுபானை 
ரெண்டு பானை உடைஞ்சிபோச்சி - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மூணாம் பானை வேகவில்லை - குங்குமப் பொட்டழகி!!

வேகாத பானையில 
மூனுபடி அரிசிபோட்டேன்
ரெண்டுபடி பொக்கையடி - தங்கமே கட்டழகி - ஆமா 
மூனாம்படி வேகவில்லை - தங்கமே கட்டழகி!!
 
 
வேகாத சோற்றுக்கு 
மோர்விட்டு சாப்பிடத்தான் 
முக்குளத்தூர் சந்தையில  - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மூனுபசு வாங்கிவந்தேன் - குங்குமப் பொட்டழகி!!

வாங்கிவந்து கட்டிவைச்ச 
பசுமாட்டு கதையக்கேளு
ரெண்டுமாடு மலட்டுமாடு - தங்கமே கட்டழகி - ஆமா 
மூணாவது ஈனவில்லை - தங்கமே கட்டழகி!!

வாங்கிவந்த பசுமாடு 
மேஞ்ச நிலம் மூனுகாடு 
ரெண்டுகாடு பொட்டல்காடு - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மூணாவதில் புல்லே இல்லை - குங்குமப் பொட்டழகி!!
 
 
புல்லில்லா காட்டுக்கு 
சொந்தக்காரர் மூனுபேரு 
மூனுபேரும் அரசியவாதி - தங்கமே கட்டழகி - ஆமா
மூனுபேரும் அரசியவாதி - தங்கமே கட்டழகி!!

ட்டுபோட கையூட்டா 
கொடுத்தபணம் முன்னூறு 
இருநூறு ட்டைநோட்டு - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூனாவது செல்லவேயில்லை - குங்குமப் பொட்டழகி!!

தேர்தலிலே நான்போட்ட 
ஓட்டதுவோ மூனு எண்ணம் 
ரெண்டுவோட்டு கள்ளவோட்டு - தங்கமே கட்டழகி - ஆமா 
மூனாவது குத்தவேயில்லை - தங்கமே கட்டழகி!!
 
 
ள்ளவோட்டு வாங்கிபுட்டு 
சட்டசபை போனவரோ 
சபைக்கு போன நாளோ - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மாதத்துக்கு மூனுநாளு - குங்குமப் பொட்டழகி!!

மாதத்துக்கு மூனுநாளு 
போனவரு திரும்பிவந்தார் 
போன நாளு விடுமுறையாம் - தங்கமே கட்டழகி - ஆமா
போன நாளு விடுமுறையாம் - தங்கமே கட்டழகி!!
ட்டுபோட்ட மக்களுக்கு 
செஞ்சதெல்லாம் மூனுசெயல் 
ரெண்டுசெயல் கிடந்துபோச்சி - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மூனாவது தொடங்கவில்லை - குங்குமப் பொட்டழகி!!

தொடங்காத செயலுக்கு 
முடிவுரைதான் தேடிவந்தேன் 
முழங்கால் வலிக்குதுன்னு - தங்கமே கட்டழகி - ஆமா 
மூச்சடக்கி படுத்துபுட்டேன் - தங்கமே கட்டழகி!!அன்பன் 
மகேந்திரன்