Saturday, 18 February 2012

பருவநிலைகள் ஏழு!!!


கன்ற புவியின்
அங்குலம் தோறும்
அவதானிக்கும் மனிதர்களின்!
அடையாளச் சின்னமாய்
அகத்தினை தருவிக்கும்
அழகான மொழியழகே!!!
 
ழலையின் மொழிமுதல்
மங்காத ஒளிவிளக்காய்
மாதாவின் இதழினின்று!
மரிக்கொழுந்து வாசமாய்
மனதினை ஆட்கொண்ட
மதுரத் தமிழழகே!!


கட்டு மொழி பேசாது
பண்பாடு இதுவென
பக்குவ மொழியாலே!
பச்சிளம் பருவத்திலே 
பதியம் போட்டுவைத்த 
பார்போற்றும் தமிழழகே!! 
 
காண்மின்! காண்மின்! என
கலிங்கத்துப் பரணியை
களிப்போடு எனக்குரைத்து!
கலியுலக வேந்தன் நீயென
கவிமகுடம் சூட்டிய
கற்கண்டுத் தமிழழகே!!
 
டைதிறந்த வெள்ளம்போல்
மாமணியே உன்னுள்ளே  
மடங்காய் பெருகிநிற்கும்
மந்தகாச பொருளுணர்வை
மௌனித்து காண்கையிலே
மதகுடைத்த நீரானேன்!!


பெரும்பறை முழக்கி
பெட்டகச் சொற்களால்
பெண்ணின் பருவங்கள் ஏழென!
பெருமையோடு நீ கூறுகையில்
பெண்ணிற்கு மட்டுமா பருவங்கள்? - நீ
பெற்ற ஆணிற்கு இல்லையா - என
பொறையொடு  வினா தொடுத்தேன்!!
 
ருவில் உதித்தவனே - என்
உருவைச் சுமந்தவனே
பொறுமையை சிரம்கொள்!
பருவங்கள்  உனக்குமுண்டு
செருக்கை ஒழித்துவிட்டு
பொருண்மையை விளம்புகிறேன்
அருகிருந்து கேட்டிடுவாய்!!


கைதவழ் பருவந்தொட்டு
ஏழாண்டு தொடும் வரை!
மனம் மயக்கும் மழலை
பருவமதை அழகாய்
பாலன் என விளம்பிடுக!!


செய்யும் செயலுக்கும்
பார்க்கும் பொருளுக்கும்
விளக்கம் கேட்க துடிக்கும்
ஏழாண்டு முதல் பத்தாண்டு வரை
பொருள் தேடும் பருவத்தை
மீளி என சொல்லிடுக!!


நான் என்ன குழந்தையா?
எனக்கேன் இந்த விளக்கமென
அறியாததை அறிந்தது போல்
புறத்தில் அகம்காட்ட மறுக்கும்  
பத்து முதல் பதினான்கு வரை
விகற்ப உணர்வுகள்
மேலோங்கிய பருவத்தை
மறவோன் என இயம்பிடுக!!


ரும்பு மீசை முளைக்க
அலைபாயும் உள்ளமதை
அள்ளித்தெளித்த நட்சத்திரங்களாய்
அங்குமிங்கும் பரவவிடும்
பதினான்கு முதல் பதினாறு வரை
பரியேறி பார்வலம் வந்திடும்
பாங்கான பருவத்தை
திறலோன் என சொல்லிடுக!!


ணின் பருவங்களில்
ஆபத்து நிறைந்த
ஆட்கொல்லிப் பருவமிது!
பதினாறு என்பதில்
பகட்டுத் தோற்றம்
புனையச் சொல்லும்!
பதினாறின் சாகசங்களை
சான்றுகள் இல்லாது
சவமாய் ஆக்கிவிட்டு
சரித்திரம் ஏற வைக்கும்
சாரல்மழைப் பருவமிதை
காளை என பகன்றிடுக!!


யிற்றின் பகுதியில்
ஆறு மடிப்புக்காய்
எத்தனிக்கும் முயற்சி முதல்
வாழ்வின் பொருளுணர்வுகளை
உணரத் துடித்து
பணமும் குணமும்
ஒருசேர வேண்டுமென
முடிவுக்காய் வந்துவிடும்
மூப்பின் ஆரம்பம் முப்பது வரை
விடலை என விளம்பிடுக!!


ந்ததிகளின் வாழ்வொன்றே
சாத்திரம் எனக்கொண்டு
பாத்திரம் நிரப்புவதே
தலையாய கடமையாய்
வாழ்வின் நீரோட்டப் பாதையில்
பயணத்தை ஆரம்பிக்கும்
முப்பதிற்குப் பின்வரும்  
மூப்பிற்காம் ஆரம்ப நிலையை
முதுமகன் என உரைத்திடுக!!


தேனான தீந்தமிழே
பூத்துவந்த பூந்தமிழே!
விளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ
விளம்பிட செவியுற்றேன்!
விரிந்திருக்கும் இப்புவியில்
தமிழே உனை என்
நாவினின்று வெளிப்படுத்த
என்ன புண்ணியம் செய்தேனோ!!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்

79 comments:

Anonymous said...

பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அறிவை , தெரிவை ,
பேரிளம்பெண் .......[ தொடர் சரியோ ?]
என்பதிற்குப் போட்டியாக அழகுத் தமிழில் .....
பாலன் , மீளி , மறவோன் ,திறலோன் , காலை , விடலை , முதுமகன் ,
என்று இருப்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன்.
காளை , விடலை , பாலன் மட்டுமே தெரியும்.
அழகான , அறிவான பகிர்விற்கு நன்றி. பாராட்டுக்கள்.

மதுமதி said...

ஆகா..அற்புதமான விளக்கம் தோழர்..இந்தப் பதிவின் மூலம் தங்களுக்கு தமிழின் மீது எத்தனை ஆர்வம் என்பதை உணர்ந்து கொண்டேன்..நான்கைந்து வாக்குகள் இடலாமென ஆசை ஒன்றுதான் கைவசம் உள்ளது..பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

மாலதி said...

தேனான தீந்தமிழே
பூத்துவந்த பூந்தமிழே!
விளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ
விளம்பிட செவியுற்றேன்!
விரிந்திருக்கும் இப்புவியில்
தமிழே உனை என்
நாவினின்று வெளிப்படுத்த

என்ன புண்ணியம் செய்தேனோ!//

மிகவும் சிறப்பு வாந்த வரிகள் அதுமட்டும் அன்று பெரும்பாலும் பெண்களின் பருவ்ங்கலான அறிவை , தெரிவை என்பதை அறிந்து இருக்கின்றனர் ஆனால் ஆண்களின் ஏழு நிலைகளை அழகான தீந்தமிழில் வழங்கியமை மிகவும் சிறப்பு.

துரைடேனியல் said...

Arumai. Piragu varen.

துரைடேனியல் said...

Tha ma 3.

sasikala said...

அண்ணா உண்மையாக எனக்கும் இந்த பருவங்களைப் பற்றி இப்போதே தெரிந்து கொண்டேன் அருமையான பகிர்வு .

Shakthiprabha said...

aadada! ivLavu vishayam irukka....hmm indru thaan therindhu konden. nandri.

Shakthiprabha said...

aadada! ivLavu vishayam irukka....hmm indru thaan therindhu konden. nandri.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமை .. இதை ஏழு தடைவை சொல்ல தோன்றுகின்றது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று ..

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

கணேஷ் said...

காளைப் பருவம், விடலைப் பருவம் எல்லாம் தெரியும். மற்றவை புதியவை. அழகுத் தமிழ் வார்த்தைகளால் இயம்பிய நண்பருக்கு அழுத்தமான கை குலுக்கல். (நீர் புலவர்.. நீர்? இல்லையில்லை.. நான் புலவனில்லை ஏதோ கொஞ்சம் வசன நடையில் எழுதறேன்னு தருமி மாதிரி சொல்லத் தொணுது...)

mum said...
This comment has been removed by the author.
mum said...

அறியாத ஒரு செய்தியை அறிய வைத்த நண்பருக்கு நன்றிகள் பல...
வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

எல்லாவற்றையும் தாண்டிவிட்டோமோ சகோதரரே...-:)
மற்றுமொரு தரமான படைப்பு...

RAMVI said...

ஆண்களுக்கான பருவப்பெயர்களை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.
மிகவும் சிறப்பாக இருக்கு பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

தேனான தீந்தமிழே
பூத்துவந்த பூந்தமிழே!
விளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ
விளம்பிட செவியுற்றேன்!
விரிந்திருக்கும் இப்புவியில்
தமிழே உனை என்
நாவினின்று வெளிப்படுத்த
என்ன புண்ணியம் செய்தேனோ!!!

சிந்தை மயக்கும் விந்தை வரிகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

kupps said...

Tamilal thangalukku perumai.
Thangal kavithayaal tamilukku perumai.Veru enna solla.Arumayana kavithai.Vaalthukkal.

ரமேஷ் வெங்கடபதி said...

muththiraik kavithai! mikawanRu!

Mahan.Thamesh said...

ஆகா அற்புதமான கவிதை

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
வாழ்த்துகள்.

கலையரசி said...

அழகு கவிதை மூலம் ஆணின் பருவ நிலை பெயர்களை முழுமையாக இன்று தான் தெரிந்து கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி.

Lakshmi said...

தேனான தீந்தமிழே
பூத்துவந்த பூந்தமிழே!
விளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ
விளம்பிட செவியுற்றேன்!
விரிந்திருக்கும் இப்புவியில்
தமிழே உனை என்
நாவினின்று வெளிப்படுத்த
என்ன புண்ணியம் செய்தேனோ!!!


மிக மிக அழகான கவிதை வாழ்த்துகள்.

ஹேமா said...

உண்மையில் இன்றுதான் ஆண்களுக்கும் பருவப் பெயர்கள் இருக்கென்று அறிந்தேன் மகி.மிக்க மகிழ்ச்சி !

koodal bala said...

அருமையிலும் அருமை!

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
அழகுத் தமிழில் மனிதப் பருவ நிலைகள் பத்தி அருமையாக சொல்லும் கவிதை கொடுத்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

கவிதையின் ஒவ்வோர் வரிகளும் ஒவ்வோர் எழுத்தின் கீழ் சரிவரப் பொருந்தி வருமாறு எழுதியிருக்கும் பாங்கு கவிக்குச் சிறப்பினைக் குடுக்கிறது.

வாழ்த்துக்கள்.

யுவராணி தமிழரசன் said...

தேனான தீந்தமிழே
பூத்துவந்த பூந்தமிழே!
விளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ
விளம்பிட செவியுற்றேன்!
விரிந்திருக்கும் இப்புவியில்
தமிழே உனை என்
நாவினின்று வெளிப்படுத்த
என்ன புண்ணியம் செய்தேனோ!!!
///
அழகான, வரிகள் சார்!
தமிழின் மீதான தங்களது பற்று
மிக தெளிவாக தெரிகிறது சார்!

தனிமரம் said...

வாழ்வின் ஆண்கள் வயதும் அதன் பருவ நிலையையும் பண்போடு ஒப்பும் கவிதை ரசித்தேன்.

கீதமஞ்சரி said...

மலரின் மதுவை தம் சுரப்பிகள் மூலம் தேனாய் மாற்றித் தேன்கூடு நிறைக்கும் தேனீ போல் தமிழின் சிறப்புகளைத் தம் கவித்திறனால் அழகிய கவிதைகளாக்கி வசந்தமண்டபம் கொண்டுவந்து நிறைத்து நாங்கள் பயனுற வழியமைக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன். தொடரட்டும் தங்கள் இனிய தமிழ்ச்சேவை.

Anonymous said...

vanakkam thiru magendhiran avargale
arumaiyana padhivu enge thamizh mella sagum enkkanden illai thamizh ini mella valarum
nandrikalandha vaazhththukkal
surendran

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

///தேனான தீந்தமிழே
பூத்துவந்த பூந்தமிழே!
விளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ
விளம்பிட செவியுற்றேன்!
விரிந்திருக்கும் இப்புவியில்
தமிழே உனை என்
நாவினின்று வெளிப்படுத்த
என்ன புண்ணியம் செய்தேனோ!!!///

அற்புதமான கவிதை...
சிந்தை சிலிர்க்கச் செய்தே
சிரத்தையோடு முடிகிறது
பகிர்வுக்கு நன்றிகள் கவிஞரே!

Anonymous said...

இந்த பருவங்களைப் பற்றி இப்போதே தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி. பாராட்டுகள் மகேந்திரன். Kvithai sirappu.
vaazhththukkal!
Vetha. Elangathilakam.

...αηαη∂.... said...

சூப்பரா எழுதி இருக்கிங்க...

ராஜி said...

ஆண்கள் பருவநிலைக்கும் பேர் உண்டென்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன் தங்கள் கவிதை வாயிலாக. அறிய வைத்ததற்கு நன்றி சகோ

அரசன் சே said...

நிலைகளை உருவகபடுத்தி உன்னத கவி படைத்த உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் அண்ணே

guna thamizh said...

தமிழமுதம் பருகினேன் நண்பா..

Ramani said...

இதுவரை அறியாதவைகள்
அழகு தமிழில் அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 14

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
தங்களின் வரிசைப்படுத்தல் மிகச் சரியே..
அழகான ஊக்கப்படுத்தும் கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
தமிழே வந்து எனை வாழ்த்தியது போல
ஒரு உணர்வு..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
தங்கள் வரவு நல்வரவாகுக.

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் சகோதரி சக்திபிரபா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் நண்பர் ராஜபாட்டை ராஜா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
உங்கள் அன்பு கைகுலுக்கலில் என் மனம்
மிகுந்த உற்சாகமானது.
தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,
தங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,

ஆமாம் சகோதரா, நாம் எல்லாவற்றையும் தாண்டி
முதுமகன் பருவத்துக்கு வந்துவிட்டோம்..
இனி நம் பிள்ளைகளின் சுழற்சி ஆரம்பம்..

மகேந்திரன் said...

அன்புத் சகோதரி ராம்வி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி,
தங்கள் கருத்துரையால் உள்ளம் சார்ந்த
புகழ்ச்சி உரையால் என் மீதான என் எழுத்து மீதான
கூரிய ஆழ்ந்த ஈடுபாடு வேண்டும் என்று
உணர்த்திவிட்டீர்கள்.
நன்றிகள் பல.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மகான்.தமேஷ்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கலையரசி,

தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து

வரவேற்கிறது.

தங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
இன்றுதான் நானும் ஆண்களுக்கும் பருவப் பெயர்கள் இருக்கென்று தெரிந்து கொண்டேன்..நன்றி !!

சம்பத்குமார் said...

அன்பின் நண்பரே..உங்களது இடுகை ஒன்றினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
வலைச்சரத்தில் கவிதை சரம்

DhanaSekaran .S said...

மிக நீண்ட அழகான தமிழ் பதம் நிறைந்த கவிதை அருமை.

சத்ரியன் said...

அழகு!

மிக அழகு!

மிகமிக ரசித்தேன் மகாந்திரன்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா,
தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நிரூபன்,
தங்களின் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி யுவராணி தமிழரசன்,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர்
தெளித்து வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நேசன்,
தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,
தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துரை என் எழுத்துக்கள்
மீதான பார்வையை இன்னும் ஊன்றிப் பார்க்கச் சொல்கிறது.
இனிவரும் படைப்புகளில் எனக்கிருக்கும் கவனத்தை இன்னும்
அதிகப்படுத்துகிறது.
தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் தங்கள்
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சுரேந்திரன்,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர்
தெளித்து வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஆலாசியம் ஐயா,
தமிழே வந்து எனை வாழ்த்தியது போல
ஒரு உணர்வு..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஆனந்த்,
தங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர்
தெளித்து வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,

தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் அரசன்.சே,

தங்களின் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,

தமிழே வந்து எனை வாழ்த்தியது போல
ஒரு உணர்வு..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,

தங்களின் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,

தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சம்பத்குமார்,

தேன் சொரியும் பூக்களால் தொடுக்கப்படும்
வலைச்சரம் வந்தேன் அங்கே என் வசந்தமண்டப மலரும்
பூத்திருந்தமை எனக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனசேகரன்,

தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சத்ரியன்,

தங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்
உளம் கனிந்த நன்றிகள்.

நம்பிக்கைபாண்டியன் said...

தமிழின் சிறப்பு கவிதைகளாக!அறியாத அரிய தகவல்கள் சிறந்த கவிதை நயத்துடன்!

Headquarters said...

எல்லாவற்றையும் தாண்டிவிட்டோமோ சகோதரரே...-:) மற்றுமொரு தரமான படைப்பு...

Post a Comment