Powered By Blogger

Wednesday 28 September 2011

தொங்கு படிகள்!!






உனக்கென்று ஓர்வார்த்தை
உதட்டோரம் ஒளிஞ்சிருக்கு!
ஒப்புக்கு நீ கூறும்
ஓராயிரம் காரணங்கள்!
இமைப்பொழுதில் ஓடிவந்து
இன்னுயிர் காக்காது!!

கரைமீறத் துடிக்கும்
அலையற்ற குளத்தில்
கெண்டை மீனுக்காய்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
வெள்ளைச் சாமியார்
கொக்கை அறிவேன்!!




ஒருகால் உள்ளிருக்க
மறுகால் காற்றில் அலைபாய!
கொக்கை அடுத்த
ஒற்றைக்கால் பிறவியை!
உருவின் மாற்றத்தால்
உன்னில்தான் கண்டேனே!!

பேருந்து வந்ததும்
பேரின்பம் கொண்டாயே!
போகும் இடத்துக்கு
போய்ச்சேரும் எண்ணத்தால்
பேருந்துள் கால்பதித்தாய்
புறப்பட்ட பின்னரே!!




படிக்கட்டு பக்கத்தில்
பாதங்கள் நெருங்கியதும்
பாழும் மனத்தினிலே
பதமற்ற ஆசைகள்
பாய்ந்தோடி வந்தது
படிக்கட்டில் பயணிக்க!!

பேருந்து வசதியில்
இன்றளவும் எண்ணிக்கையில்
தரம்தாழ்ந்த கிராமத்தில்
வழியேதும் இல்லையே
விரைந்தோடி வருவதற்கு
படிக்கட்டுப் பயணமே!!




வரிசையாய் வாகனங்கள்
சாரையாய் ஊர்வதுபோல்!
நகரத்து சாலைகளில்
பலவாக பேருந்து
பாங்காக வந்தாலும் - அங்கும்
படிக்கட்டுப் பயணமே!!

நாகரீகம் கற்கும் முன்
நினைத்ததைத் தின்று!
உடுக்கும் உடையது
இல்லாது போயிடினும்!
உணவின் நிமித்தமாய்
கிளைகளில் தொங்கினாய்!!




பகுத்தறிவில் கோலேச்சு
கோபுரங்கள் மேலேறி
வெற்றிக்கொடி நாட்டினாலும்!
மரத்திற்கு மரம்
தாவித் திரியும் !
குணமிங்கு போகலியே!!

படிக்கும் பருவத்தில்
பவுசு ஏனிங்கே!
சாகசம் காட்டுவதால் - நீ
கதையின் நாயகனோ?
யாரை வசீகரிக்க - இந்த
பகல்வேடம் உனக்கு!!


மதியெங்கே போயிற்று
அடகு வைத்தாயோ!
நிறைந்து போனதென்று
ஒதுக்கி வைத்தாயோ!
சிரத்தினுள் இருப்பதென்ன
சிந்தித்து பார்த்திவிடு!!

உயிரின் விலையதை
உள்ளூன்றி நோக்கிவிடு!
உறுப்புகள் தொலைந்தால்
வெறுப்புகள் தான் மிஞ்சும்!
முழுதாய் இருந்தால்தான்
எளிதாய் கரையேறலாம்!!

கொஞ்சம் பொறுத்திருந்து
போனால் என்ன - உன்
மதிப்புகள் போய்விடுமா?
வேண்டாத செய்கையால்
வாழ்வை தொலைக்காதே!
வாழ்க்கை வாழ்வதற்கே!!


அன்பன்
மகேந்திரன்

65 comments:

M.R said...

தமிழ் மணம் ஒன்று

M.R said...

உண்மை தான் நண்பரே

பார்க்கும் நமக்கே பயமாக இருக்கும்

எத்தனையோ செய்தி இருந்தும் திருந்தல

ஒன்று மட்டும் உறுதி

படியில் பயணம்
நொடியில் மரணம்

முனைவர் இரா.குணசீலன் said...

கொஞ்சம் பொறுத்திருந்து
போனால் என்ன - உன்
மதிப்புகள் போய்விடுமா?
வேண்டாத செய்கையால்
வாழ்வை தொலைக்காதே!
வாழ்க்கை வாழ்வதற்கே!!

நல்ல விழிப்புணர்வளிக்கும் பகிர்வு நண்பரே..

மிக அழகாகச் சொன்னீர்கள்..

காட்டான் said...

வண்க்கம் மாப்பிள அழகாய் சமூகத்துக்கு தேவையான கருத்தை மின்வைத்துள்ளீர்கள்.. இதில் அரசின் அசட்டையும் கலந்திருக்கின்றது மக்கள் தொகைக்கு ஏற்ப பேரூந்துகள் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. வாழ்த்துக்கள்.. த.ம4

சென்னை பித்தன் said...

த.ம.6

விவேகமற்ற வீரம்!

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் தேவையான பகிர்வு நண்பரே... இப்பொதெல்லாம் தில்லியில் கதவுகள் மூடியபடி தான் பேருந்துகள் செல்கின்றன. ஒருவிதத்தில் இதுதான் நல்லது.....

காந்தி பனங்கூர் said...

உயிரின் மதிப்பு தெரியாததால் தான் இந்த மாதிரியெல்லாம் போகிறார்கள். இவர்களுக்கென்று மனைவி, குழந்தைகள் என்று வரும்போது கண்டிப்பாக மாறுவார்கள் இல்லை சூழ்நிலை இவர்களை மாற்றிவிடும். விழிப்புனர்வு பதிவுக்கு நன்றி நண்பரே.

Sakunthala said...

!////உயிரின் விலையதை
உள்ளூன்றி நோக்கிவி
உறுப்புகள் தொலைந்தால்
வெறுப்புகள் தான் மிஞ்சும்!///
சிந்தனையை தூண்டும் வரிகள்
விலை மதிக்க முடியாத உயிரை துச்சமாக
நினைப்பவர்கள் கண்டிப்பாக திருந்த வேண்டும்

Anonymous said...

உயிரின் மதிப்பு தெரியாததால் தான் இந்த மாதிரியெல்லாம் போகிறார்கள்...

இருந்தாலும் தொங்குபடி பயணம் சுகம் தான்..

உங்கள் கவிதைகள் போல...

மற்றுமோர் அருமையான படைப்பு சகோதரரே..

SURYAJEEVA said...

எத்தனை பேருந்து வந்தாலும் நிறைந்தே வரும் பொழுது என்னத்தை சொல்ல, மும்பை நகரத்தில் மின்சார ரயில் வண்டி பயணத்துக்கு இது எவ்வளவோ தேவலாம்.... என்ன இது போன்ற பயணத்தில் தூங்க தான் கூடாது?

ராஜா MVS said...

சமுகப் பார்வை மிக்க கவிதை.. நண்பரே...

வாழ்த்துகள்...

கடம்பவன குயில் said...

//கொஞ்சம் பொறுத்திருந்து
போனால் என்ன - உன்
மதிப்புகள் போய்விடுமா?
வேண்டாத செய்கையால்
வாழ்வை தொலைக்காதே!
வாழ்க்கை வாழ்வதற்கே!//

நானும் பள்ளிக்குழந்தைகளே அப்படி போவதைப் பார்த்து நிறைய தடவை நெஞ்சம் பதைபதைத்திருக்கிறேன். என்ன செய்ய ஹீரோயிசம் காட்ட சில சிறுவர்களும் அலுவலக அவசரத்தில் சிலரும் இதை தவிர்க்கமுடியாமல் இருக்கிறார்கள். உயிரின் மதிப்பு தெரிந்தால் இப்படி செய்வார்களா????

நல்ல விழிப்புணர்வு கவிதை நண்பரே. அழகான பகிர்வு.

கோகுல் said...

பேருந்தினுள் இடமிருந்தும் தொங்குபவர் மதி இழந்தொரே!

அம்பாளடியாள் said...

உயிரின் விலையதை
உள்ளூன்றி நோக்கிவிடு!
உறுப்புகள் தொலைந்தால்
வெறுப்புகள் தான் மிஞ்சும்!
முழுதாய் இருந்தால்தான்
எளிதாய் கரையேறலாம்!!

அருமையான அறிவுரை கூறும்
கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
சகோ வாருங்கள் என் தளத்திற்கும் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .

Rathnavel Natarajan said...

அருமையான படிப்பினையூட்டும் கவிதை.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

வேண்டாத செய்கையால்
வாழ்வை தொலைக்காதே!
வாழ்க்கை வாழ்வதற்கே!!


அழகான விழிப்புணர்வுப் பகிர்வு. புரிய வேண்டியவர்களுக்கு காலம் தாழ்த்தாது புரிந்தால் சரிதான்.

Anonymous said...

""பகுத்தறிவில் கோலேச்சு
கோபுரங்கள் மேலேறி
வெற்றிக்கொடி நாட்டினாலும்!
மரத்திற்கு மரம்
தாவித் திரியும் !
குணமிங்கு போகலியே!!""
- படித்ததும் புன்னகை வந்தது... ( காமடியாக அல்ல)

கொஞ்சம் பொறுத்திருந்து
போனால் என்ன - உன்
மதிப்புகள் போய்விடுமா?
வேண்டாத செய்கையால்
வாழ்வை தொலைக்காதே!
வாழ்க்கை வாழ்வதற்கே!!
- நல்ல அறிவுரை.....
நன்றி சகோ...

rajamelaiyur said...

//
கரைமீறத் துடிக்கும்
அலையற்ற குளத்தில்
கெண்டை மீனுக்காய்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
வெள்ளைச் சாமியார்
கொக்கை அறிவேன்!!

//
அருமையான வரிகள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு சமூக பிரச்சனை அழகிய கவிதையில்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை வரிகள் அத்தனையும் வசிகரீக்கிறது...

arasan said...

உயிரின் விலையதை
உள்ளூன்றி நோக்கிவிடு!
உறுப்புகள் தொலைந்தால்
வெறுப்புகள் தான் மிஞ்சும்!
முழுதாய் இருந்தால்தான்
எளிதாய் கரையேறலாம்!!
//

உண்மையான வரிகள்

அம்பலத்தார் said...

சமுதாய விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமேஷ்
சரியாகச் சொன்னீர்கள்.
கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே
தங்களின் அழகிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு காட்டான் மாமா
நீங்கள் சொல்வதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன்,
இருக்கும் வசதியை கொஞ்சம் உயிர்பயத்துடன்
பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலேயே எழுதினேன்.
தங்களின் அழகிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

சரியா சொன்னீங்க சென்னைப்பித்தன் ஐயா ..

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,

உயிரின் விலையினை உணாரதவர்களாகவும்,
நெரிசல் மிகுந்த தருணத்திலும் தாம் பயணம் செய்ய வேண்டும் எனும் நோக்கம் கொண்டவர்களாகவும் தொங்கு படிகளில் பயணிப்போருக்கு விழிப்புணர்வினையும்,
கரணம் தப்பின் மரணம் எனும் உண்மையினையும் கவிதை மூலம் சொல்லியிருக்கிறீங்க.
காலத்திற்கேற்ற கவிதை.

மகேந்திரன் said...

இதுபோல ஏதாவது செய்யவேண்டும் இங்கேயும்
அதுதான் நம் எண்ணமும்
கருத்துக்கு மிக்க நன்றி நண்பர் வெங்கட் நாகராஜ் ..

மகேந்திரன் said...

அந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கு முன்னரே போய்விடக்கூடாதே...
உயிர் பயம் முதலில் வேண்டும்...
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பர் காந்தி....

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் தோழி சகுந்தலா
திருந்த வேண்டும்
அதுதான் நோக்கம்...
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி,
அந்த சுகமே துக்கமாய் மாறிவிடக்கூடாதே ...
தங்களின் அழகிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பர் சூர்யஜீவா,
தூங்கிவிட்டால் அவ்வளவுதான்,\
மின்சார இரயில் பயணம் போல இல்லை எனினும்
ராமநாதபுரம் மாவட்டம் போல பேருந்தின் மேற்கூரையில்
உட்கார்ந்து பயணம் செய்யும் பயணிகளும் இன்னும் இருக்கிறார்கள்.
அவர்களும் தங்கள் உயிரின் மதிப்பை தெரிந்து கொள்ளவேண்டும்..
தங்களின் அழகிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி நண்பர் ராஜா.MVS

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கடம்பவனக் குயில்
சரியா சொன்னீங்க,
கதாநாயகத்தனம் செய்ய இது என்ன கனவுலகமா?
நனவுலகத்தில் கனவுகள் வேண்டாமே..
உயிரின் மதிப்பை புரிந்துகொள்ளட்டும் என்ற உங்கள்
கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

ஆம் நண்பர் கோகுல்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
வந்தேன் சகோதரி உங்கள் மகளையும் கண்டேன்...

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சின்ன தூறல்
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி நண்பர் ராஜா

மகேந்திரன் said...

தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி நண்பர் சௌந்தர்

மகேந்திரன் said...

தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி நண்பர் அரசன்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அம்பலத்தார்
தங்களை இங்கே வரவேற்பதில் பெருமகிழ்ச்சி,
இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

ம.தி.சுதா said...

இந்த அருமையான வரிகளுக்கு மினக்கட்டதை விட படங்களுக்கு ரொம்பவே மினக்கட்டுருப்பிங்க பேகால

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

ம.தி.சுதா said...

நாங்களும் பழிக்குப் பழி வாங்கிட்டோமுல்ல (குத்து குத்து)

மாய உலகம் said...

முழுதாய் இருந்தால்தான்
எளிதாய் கரையேறலாம்!!//

இதை உணர்ந்தால் பேருந்தில் பயணத்தில் மட்டுமல்ல... வாழ்க்கை பயணத்தில் கூட எச்சரிக்கை உணர்வுடன் பயணங்கள் மேற்கொள்ளலாம்... அருமையான் எச்சரிக்கை பகிர்வு நண்பா.. நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பதிவு
படங்களுடன் சொல்லிப் போகும் விதம்
வித்தியாசமானதாகவும் சுருக்கென
தைக்கும் விதமாகவும் இருந்தது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சாகம்பரி said...

மதியெங்கே போயிற்று
அடகு வைத்தாயோ!
நிறைந்து போனதென்று
ஒதுக்கி வைத்தாயோ!
சிரத்தினுள் இருப்பதென்ன
சிந்தித்து பார்த்திவிடு!!//மூடரே, என் சொல் மறவீர். என்ற பாரதியின் கோபம் வருகிறது. ஆனால் அந்த இடத்தில் நின்று சொன்னபோது ஒரு அலட்சியமான புன்னகைதான் பதிலாக வருகிறது.

சுதா SJ said...

நியாயமான ஆதங்கம்... நல்ல பதிவு.

இவர்கள் தொங்குவதை பார்த்தால் நமக்குத்தான் பக்கு பக்கு என்று இருக்கு... அவ்வ

கதம்ப உணர்வுகள் said...

அருமையான ஒரு படிப்பினை பகிர்வுப்பா...

எனக்கு மிகவும் பிடித்த பகிர்வு கூட....

சின்னவயதில் பலமுறை என் தம்பிக்கு சொல்லி சொல்லி நான் அலுத்த வரிகள்....

தினம் தினம் என் தம்பி ஸ்கூல் போய் வரும்வரை எனக்கு நிம்மதி தொலைந்த நாட்கள் நினைவுக்கு கொண்டு வரவைத்த வரிகள்...

இன்று அவன் நல்ல பதவியில் நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் மனைவி குழந்தையுடன் பொறுப்பான அப்பாவாக இருக்கிறான்....

உங்க வரிகளில் ஆதங்கம் மிகுந்திருப்பதை காண்கிறேன் மகேந்திரன்.....

இந்த காலத்து பிள்ளைகள் மட்டுமில்லை அந்த காலத்து பிள்ளைகளும் தான் தம்பியை மனதில் நினைவு வைத்து தான் சொல்கிறேன்..

படிகளில் தொங்கிக்கொண்டே வருவது ஸ்டைலாகவும் பெண்களை கவர செய்யும் சாகசமாகவும் நினைத்து இப்படி தொங்கிக்கொண்டு வருவதால் உயிர் விடும்படியோ அல்லது கால் போகும் நிலையோ கூட ஏற்பட்டுவிடுகிறது...

பெற்றோர் பிள்ளைகளை நம்பி வெளியே அனுப்பும்போது பிள்ளைகள் விளையாட்டு சிந்தனையுடன் இப்படி செய்வதால் எத்தனை பேரிழப்பு என்பதை அறிவதில்லைன்னு மிக அழகான வரிகளால் சொல்லி உணர்த்திருக்கீங்கப்பா...

அதென்ன கவிதை வரிகளில் சாடுவது கூட மல்லிகைப்பூவால் தானா?? மென்மையான வரிகளால் நீங்கள் சொல்ல நினைத்த கருத்தை அழுத்தமாக ஆணித்தரமாக சொல்வதை வியந்து போகிறேன்..

எளிய வரிகளில் ஒரு அருமையான படிப்பினை கவிதை மகேந்திரன்.. அன்பு வாழ்த்துகள்பா....

குறையொன்றுமில்லை. said...

கொஞ்சம் பொறுத்திருந்து
போனால் என்ன - உன்
மதிப்புகள் போய்விடுமா?
வேண்டாத செய்கையால்
வாழ்வை தொலைக்காதே!
வாழ்க்கை வாழ்வதற்கே!!


வாழ்க்கை வாழ்வதற்கே.

rajeshbabu said...

ethey neali nedethal ella mosamum oru puthagam podanum pola irrukkey

shanmugavel said...

மனம் கவர்ந்த கவிதை நண்பரே வாழ்த்துக்கள்.

vidivelli said...

படங்கள் எல்லாம் தேடி அதற்கேற்ற இடத்தில் அமைத்து அற்புதமான கவிதையை தந்திருக்கிறீங்கள்..
அதற்கு முதற் பாராட்டுக்கள்..

இப்படி தொங்கிப்போக பொலிஸ் அனுமதிக்குமா?
நல்ல விழிப்பூட்டல் பதிவு..நீங்களாவது கவனிக்கிறீங்க மக்களை..பொதுநலனுக்கு வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ம.தி.சுதா
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜேஷ்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமணி
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி

அறிவுள்ளவர்களே மூடராய் போகையில் நாமும் பாரதியை மாறி விட வேண்டியதுதான். நீங்கள் சொல்வதுபோல நின்று பேசிய இடத்தில் காதில் ஏற்றுக்கொள்பவர்கள் யாரும் இல்லை என்பது சரியே..
ஆயினும் சொல்வது நம் கடமை...
கடமையைச் செய்வோம்.
தங்களின் அழகிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

வருக நண்பர் துஷ்யந்தன்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
நீங்கள் கூறியதுபோல எக்காலத்திலும் இது தொடர்ந்துகொண்டே
போகிறது என்பது மிகச் சரியே.
ஆனால் பட்டம் விடுவது, பம்பரம் ஆடுவது போன்றவைகள் எல்லாம் காலத்தால் மாறிவிட்டன ஆனால் பாருங்கள் இது போன்ற செய்கைகள் மட்டும் இன்னும் தழைத்தோங்கி வளர்ந்துகொண்டே போகிறது.

தங்களின் அழகான விரிவான கருத்திற்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்பாபு
தங்களின் வாக்குகள் பொன்னாக மாறட்டும்,
மனம் சொல்லும் சொற்களை கூட்டு சேர்த்து
இங்கே படைத்திருக்கும் கூட்டாஞ்சோற்றை
பரிமாறும் நாள் பார்த்து இருக்கிறேன்.,
விரைவில் புத்தகம் போடுவோம்...
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சண்முகவேல்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி விடிவெள்ளி செம்பகம்,
நீங்கள் சொன்னதுபோல காவல்துறையும் இதை கண்டித்து பார்க்கிறார்கள். ஆனாலும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
நாம் தான் மாறவேண்டும், நமக்கு இழப்பு என்றால் நமக்கு தானே துயரம்.
மாறும் காலம் வரும்.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment