Saturday, 17 September 2011

சிவப்புவிளக்கு போடீரோ??


அன்புநிறை பதிவுலக நண்பர்களே,
அணுசக்திக்கு எதிராக நம்மவர்கள் எடுத்திக்கொண்டிருக்கும் முயற்சி விண்ணைமுட்டும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது.


இன்னும் காதில் விழுந்தாலும் விழாதது போலவே நடித்துக் கொண்டிருக்கின்றனர் நம்மை ஆள்பவர்கள்.
ஏனிந்த பாராமுகம்?
என்ன விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள் அவர்கள்?
மண்ணில் மனிதர்கள் யாவும் புதையுண்டு போக வழியினை ஏன் தானாக தேடுகிறார்கள்?

இன்று காலை நம் நண்பர் கூடல்பாலாவிடம் தொடர்பு கொண்டேன், பேச்சில் உணர்ச்சி தெரிந்தாலும் இன்னும் எட்டவேண்டியவர்களுக்கு
எட்டவில்லையே என்ற ஆதங்கம் குரலில் தெரிந்தது. எம்மைப் போல் சாதாரண மனிதற்கே இந்த விஷயங்கள் பாதிப்பை விளைவிக்கும் என்ற
எண்ணம் தோன்றுகையில் ஒரு மாநிலத்தையும் ஒரு தேசியத்தையும் ஆள்பவருக்கு தெரியாமல் போய்விடுமா?

ஏன் அதற்கான ஏற்பாடுகள் செய்யத் தயங்குகிறீர்கள்? உங்களை எது தடுக்கிறது?
ஆலைக்காக நீங்கள் போட்டு வைத்திருக்கும் பணமா?
நீங்கள் கொண்ட கொள்கையில் சற்றும் இறங்கி வரத்தெரியாத உங்கள் வறட்டு கௌரவமா?

மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆயிரம் ஆயிரம் திட்டங்களும் அதை சரியாகப் போய்ச்சேருகிறதா
என்ற அக்கறையும் எண்கள் மனத்தைக் குளிர்விக்கிறது. ஆயினும் சிறு சிறு உதவிகள் செய்துவிட்டு
அடியோடு ஆட்டம் காணவைக்கும் இந்த அணுவுலை அமைப்பதில் ஏன் இந்த அக்கறை காட்டுகிறீர்கள்?

பாதுகாப்பு என்பதென்ன
பாழும்கிணற்றில் வீழ்த்திடவா?
பச்சைமர மனம் கொண்டோரெல்லாம்
காய்ந்த மரமாய் ஆனதென்ன?

ஓர் ஆலையைத் தொடங்கும் முன் அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை, புகைபோக்கிகளில் இருந்து
வெளியேறும் வாயுக்கழிவுகளை பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி
சுற்றுப்புற சுகாதார ஆய்வகத்திடம் இருந்து சான்றிதழ் பெற்ற பின்னரே அந்த ஆலையை அனுமதிக்கின்றனர்.
இந்த செய்முறை கூடங்குளத்தில் நடந்ததா?

ON -SITE EMERGENCY PREPAREDNESS PLAN என்று சொல்லக்கூடிய உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு
செய்முறை விளக்கமும் அதற்கான ஒத்திகையும் (DRILL ) நடைபெற்றதா?
OFF -SITE EMERGENCY PREPAREDNESS PLAN என்று சொல்லக்கூடிய சுற்றி வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பு
செய்முறை விளக்கமும் அதற்கான ஒத்திகையும் (DRILL ) நடைபெற்றதா?

ஏன் அதை செய்யத் தயங்குகிறீர்கள்?
சுற்றி இருக்கும் மக்கள் கிராமத்தான்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளப்பமா?


பொங்கியெழும் காட்டாறு
செய்யும் செயலறியாது!
சொன்னசொல்லை மந்திரமாய்
சிகைகொண்டு முடிக்கும்!

யாமெல்லாம் ஏடெடுத்து
படித்திருந்த போதிலும்
ஆலைக்கான பாதுகாப்பு
தெரியாமல் விழித்திருந்தோம்?

தூத்துக்குடி மாவட்டம்
ஆலைகளுக்கு பெயரேற்றது!
அங்குள்ள மக்களெல்லாம்
ஆலையின் புகைபோக்கி கண்டாலே
இன்னதுன்னு சொன்னரனரே!

விழிப்புணர்வு தொடர்ந்திடவே
விளைவுகளை அறிந்தோமே!
பின்னாளில் எம்மவர்கள் - படப்போகும்
துன்பமிங்கு வேணாமே
இப்போதே நிறுத்திடுங்க
எம் சந்ததியை காத்திடுங்க!!

அமுதமென்று சொல்லிட்டோம்
அன்னையின் கொங்கைப்பாலை
அதுவே விஷமென
ஆகிடக் கூடாதைய்யா
ஆவன செய்திடுங்க?

கண்ணைமூடி கொண்டதனால்
பூவுலகு இருண்டிடுமா?
கண்திறந்து பாருங்கப்பா
நிதர்சனம் கேளுங்கப்பா!!

பாதையிலே செல்லும்போது
வாகனங்கள் பாதுகாப்பு
மனததனில் செய்வித்தே
சிவப்பு விளக்கு போட்டு
எம்மின் வேகத்தை நிறுத்துபவரே!
ஊரை கூடி உலையில் போடும்
கூடங்குளம் தன்னிற்கு
சிவப்புவிளக்கு போடீரோ??

அன்பன்
மகேந்திரன்

52 comments:

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அவங்க பார்க்காம இருக்காங்கன்னா நம்மள டெஸ்ட் பண்ணுறாங்கன்னு அர்த்தம் அப்பிடின்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு.. இன்னும் போராட்டம் தீவிரம் ஆனா ஓடி வரும் மத்திய / மாநில அரசுகள்..

மத்திய அரசிடம் ஏதாவது எதிர்பார்த்து மாநில அரசு காத்து இருந்தால் இது போல் நடப்பது சகஜம் இதற்கு முந்தைய அரசு இலங்கை விவகாரத்தில் நடந்தது போல

பார்க்கலாம் இன்னும் எத்தனை நாள் இந்த பாரா முகம்!!

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

நண்பர்களின் போராட்டம் கண்டிப்பா வெற்றியடையணும்! எல்லாமே நன்மையில முடியணும்!

இராஜராஜேஸ்வரி said...

பின்னாளில் எம்மவர்கள் - படப்போகும்
துன்பமிங்கு வேணாமே
இப்போதே நிறுத்திடுங்க
எம் சந்ததியை காத்திடுங்க!!/

எசரிக்கைப் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

கோகுல் said...

ஒரு சின்ன தொழிற்சாலையில் கூட பாதுகாப்பு விழிப்புனர்வாக mock drill எனப்படும் ஒத்திகை நடத்துவார்கள்.
இங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

Anonymous said...

///விழிப்புணர்வு தொடர்ந்திடவே
விளைவுகளை அறிந்தோமே!
பின்னாளில் எம்மவர்கள் - படப்போகும்
துன்பமிங்கு வேணாமே
இப்போதே நிறுத்திடுங்க
எம் சந்ததியை காத்திடுங்க!!/// வருமும் காப்பதே சிறந்தது. வந்தபிறகு பாதிக்கப்படப்போவது இவற்றில் கவனயீனமாக இருக்கும் சம்மந்தப்பட தரப்பும் தானே !!!

RAMVI said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.
நல்லதொரு பதிவு,பகிர்வுக்கு நன்றி.

suryajeeva said...

மின்சார வெட்டு இல்லாத ஆட்சி தருவேன் என்று வீராப்பு பேசி ஆட்சியில் அமர்ந்து விட்டார்கள், இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து தான் இன்றைய தேவையை பூர்த்தி செய்ய முடியும் இவர்களால்.. ஆனால் பத்து ஆண்டுகள் கழித்து அன்றைய தேவை இன்னும் அதிகரித்திருக்கும்.. முறையான திட்டமிடல் இல்லாத அரசு.. ரோடு போட்டு நான்கு மாதம் ஆவதற்குள் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் ஆட்கள் இவர்கள்.. மீண்டும் ரோடு வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ.. அது போல் மக்கள் உயிர் போனால் தான் இவர்கள் திருந்துவார்கள் போலிருக்கிறது... மேலும் வளரட்டும் ஆதரவு கரங்கள்.. படிக்கும் அனைத்து நெஞ்சங்களும் பதிவு போடுங்கள்..

Ramani said...

ஊரை கூடி உலையில் போடும்
கூடங்குளம் தன்னிற்கு
சிவப்புவிளக்கு போடீரோ??

வாயை இத்தனை நாள் மூடிக்கொண்டிருந்தவர்கள்
இப்போதுதான் திறந்துள்ளார்கள்
போராட்டம் தொடரத் தொடர அவர்கள் மட மதியும்
நிச்சயம் மாறும்
எழுச்சியூட்டும் கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

வெற்றி விரைவில் நிச்சயம் .இவர்கள் அரசியல் வாதிகளுக்குத்தான் மறுப்பு சொல்ல முடியும் ஆனால் இவர்களை ஆட்சியில் அமர்த்திய மக்களாகிய நமக்கு இல்லை . நம்பிக்கை இழக்காமல் போராடுவோம் . மனிதன் நிலவுக்கு சென்றதே மூன்று தோல்விகளுக்குப் பின்புதானே !

முனைவர்.இரா.குணசீலன் said...

கண்ணைமூடி கொண்டதனால்
பூவுலகு இருண்டிடுமா?

தூங்குவது போல நடிப்பவர்களை
எப்படி எழுப்புவது????????

அடிச்சாலும் வலிக்கவில்லை
என்பவர்களுக்கு
எப்படி வலியை உணர்த்துவது???????

தலையில் தீ மூட்டிக்கொண்டு
காலுக்குத் தண்ணீர் ஊற்றுபவர்களின்
அறியாமையை என்ன சொல்வது?????

முனைவர்.இரா.குணசீலன் said...

அரசின்
கண்ணை எது மறைப்பது எது?

அறியாமையா?
பணமா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நண்பர்களின் போராட்டம் வெற்றிபெரட்டும்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

போராட்டம் வெற்றியே நோக்கி .

M.R said...

நண்பர்கள் போரட்டம் வெற்றி பெரும் நண்பரே

எழுச்சி மிகு பதிவு நண்பரே
பகிர்வுக்கு நன்றி

Nesan said...

வரும் முன் காப்பதே சிறப்பு உள்ளத்தின் வெளிப்பாடு உங்கள் கவிதை!

Rathnavel said...

நல்ல கவிதை.

Rathnavel said...

நல்ல கவிதை.

புலவர் சா இராமாநுசம் said...

முன்னுரையும் கவிதையும்-நல்
பொன்னுரை சகோ
என்னுரை இதுவே-நீர்
எழுதினீர் பதிவே
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ்பாபு
பார்ப்போம் எத்தனை நாள் தான் முகத்தை திருப்பி கொள்கிறார்கள் என்று....

மகேந்திரன் said...

ஆம் நண்பர் கோகுல்,
நமக்கு விளக்க வேண்டுமல்லவா,
மக்களின் மத்தியில் மக்களுக்காக உருவாக்கப்படுவது
என்று சொல்பவர்கள், மக்களின் கேள்விகளுக்கு
பதிலளிக்க வேண்டுமல்லவா?

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஐடியா மணி
தங்களின் எண்ணம் ஈடேற இறைவனை இறைஞ்சுகிறேன்.....

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் பாராட்டுக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் கந்தசாமி அண்ணே ...
பாதிக்கப்படபோவது எல்லோரும் தான்
என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.....

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ராம்வி
இங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
நிச்சயம் பதில் கிடைக்க வண்டும் என்பதே
நம் மக்களின் முழுமுதல் எண்ணம்.
கிடைக்கும் என நம்புவோம்....
தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமணி
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பனித்துளி சங்கர்
தங்களை அன்புடன் வரவேற்கிறேன்,
அழகிய கருத்திட்டமைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
சரியாகச் சொன்னீர்கள்
அவர்கள் பதில்கூறப்பயப்படும்
எவை என்று தெரிந்து அவற்றை அழித்தொழிக்க வேண்டும்.
நல்ல தீர்வு கொடுக்க வேண்டும்.....

மகேந்திரன் said...

வெல்வோம் நண்பர் கருன் ......

மகேந்திரன் said...

வெல்வோம் நண்பர் ராஜசேகர் ......

மகேந்திரன் said...

வெல்வோம் நண்பர் ரமேஷ் ......

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நேசன்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

காட்டான் said...

போராட்டம் வெற்றி பெறவேண்டும்.. கவிதை பகிர்வுக்கு நன்றி..

சென்னை பித்தன் said...

விரைவில் நல்லது நடக்கும்;நம்புவோம்.

இருதயம் said...

ஐயா... நான் கேள்வி பட்டதை சொல்லி விடுகிறேன். MOCK UP drill பற்றி நீங்கள் சொன்ன கருத்துகளை நான் வரவேற்கிறேன் . ஆனால் ஒரு பெரிய உண்மையை போராட்டத்தை நடத்தும் தலைவர்கள் மறைத்து விட்டார்கள் என்பது தான் உண்மை. அப்படிப்பட்ட விழிப்புணர்வை அணு நிர்வாகம் மக்களுக்கு கொடுக்கும் காலத்தில் தான் , மக்களுடைய உணர்வுகள் சில அரசியல் தந்திரங்களால் களவாடப்பட்டுள்ளது.

நான் சொல்லுவது ஒரு பக்கம் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். அணு உலை வேண்டாம் என்று இப்போது உண்ணா விரதம் இருக்கும் அனைவரும் அதனால் பலன் அடைந்தவர்கள். அது மாத்திரமல்ல வரப்போகிற தேர்தலுக்கு தங்களை முன்னிருத்துவதர்க்காக இப்படி அப்பாவி மக்களை தூண்டி விடுகிறதாக கேள்விப்படுகிறோம் .

ஒரே ஒரு கேள்வி ... நீங்கள் அப்படி ஒன்றும் இல்லை என்பீர்களானால் 15 வருடங்களாக MLA ஆக இருந்த திரு அப்பாவு அவர்கள் இப்போது அணு உலையை எதிர்ப்பது வேடிக்கை தானே. யாராவது இது வரை கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை எங்களுக்கு விவரித்து சொல்லுங்கள் என்று கேட்கிறார்களா...?

உங்கள் நண்பர் பாலா எப்படி பட்டவர் என்பது எனக்கு தெரியாது .. ஒரே ஒரு கேள்வியை அவரிடம் கேளுங்கள் .... அவரோடு இப்போது இருக்கும் யாரவது வரப்போகிற தேர்தலுக்கு சீட் கேட்கீறார்களா..? என்று. தலைவர்கள் என்று எண்ணுபவர்கள் எல்லாம் எம் குல அப்பாவி ஜனங்களை பலி கடா ஆக்குவது மனித இனத்தின் சாபமே அன்றி வேறென்ன ...?

மகேந்திரன் said...

போராடுவோம்
வெற்றிபெறுவோம் காட்டான் மாம்ஸ்.....

மகேந்திரன் said...

போராடுவோம் ....வெற்றிபெறுவோம் சென்னைப்பித்தன் ஐயா

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் இருதயம்
தங்களை முதலில் அன்புடன் வரவேற்கிறேன்,
உங்களின் கேள்விகளில் இருக்கும் ஆதங்கம் புரிகிறது எனக்கு
நான் மனதில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளை தான் நீங்களும் இங்கே
கேட்டு இருக்கிறீர்கள்.
பதினைந்து வருடங்களாக சட்டசபைக்கு சென்றவர் இன்று கூட்டத்தோடு கும்மி அடிக்கிறார்,, இதுதான் நிதர்சனம். ஏற்றுக்கொள்கிறேன். இருக்கலாம் நீங்கள் சொல்வதுபோல, அரசியல் ஆதாயங்களுக்காக கூடங்குலத்தை ஒரு பகடைக்காயாக்கி அதில் குளிர் காய நினைப்பவர்கள் நிறைய இருக்கலாம்....
1985 முதல் நான் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே கூடங்குளத்துக்கு
எதிர்ப்புகள் கிளம்பியும் பின்னர் அது அணைக்கப்பட்டும்.. இப்படியே தொடர்ந்தது...
நான் கல்லூரி படிப்பு முடியும் வரை மாணவர்கள் சார்பில் மூன்று முறை தொடர் சங்கிலி போராட்டம் நடத்தி இருக்கிறோம்...
இன்றும் முடிந்த பாடில்லை...
எண்கள் நண்பர் கூடல் பாலா ஒரு வலைப்பதிவர், அவர் அரசியல்வாதி அல்ல. சுற்றுப்புற சூழல் பற்றி விழிப்புணர்வு பதிவுகள் கொடுத்து அதன் பின்னர் அகில இந்திய வானொலியில் சுற்றுப்புற சூழல் பற்றிய தொடர் தொகுப்பினை கொடுத்தவர்...
பதிவுலகத்தில் இருந்து ஒன்றுபட்டு நிற்கிறோம்...
நீங்கள் அப்பாவி மக்கா என்று குறிப்பிடுபவர்களுக்காக தான் நான் எழுதியுள்ளேன் நண்பரே...
ஏனெனில் அந்த அப்பாவி மக்களில் நானும் ஒருவன் இல்லையா ???
எனக்கு இந்த அரசியல்வாதிகள் பற்றி கவலை இல்லை...
அரசியல் பிழைப்பிற்காக அவர்கள் நடத்தும் நாடகம் ஒருபுறம் நடக்கட்டும்.
எம்மை போன்ற அடிமட்ட மக்களின் போராட்டம் ஒருபக்கம் நடக்கட்டும்...

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.

இராஜராஜேஸ்வரி said...

பொங்கியெழும் காட்டாறு
செய்யும் செயலறியாது!
சொன்னசொல்லை மந்திரமாய்
சிகைகொண்டு முடிக்கும்!

வெல்லும் சொல்லுக்கு வாழ்த்துக்கள்..

மாலதி said...

பாதையிலே செல்லும்போது
வாகனங்கள் பாதுகாப்பு
மனததனில் செய்வித்தே
சிவப்பு விளக்கு போட்டு
எம்மின் வேகத்தை நிறுத்துபவரே!
ஊரை கூடி உலையில் போடும்
கூடங்குளம் தன்னிற்கு
சிவப்புவிளக்கு போடீரோ??//
மிக சிறந்த ஆக்கம் சப்பானில் பட்ட அடி இன்னும் வெளி உலகத்திற்கு வரவில்லையா என்ன இது சராரிகளை சென்று அடையாமல் இருக்கலாம் கற்றவர்களுக்கு புரியாமல் இல்லை எல்லோருக்கும் சென்று அடிய வேண்டும் என சிந்தித்து பதிவிட்டமை உங்களின் சிறப்பு உளம் நிறைந்த பாராட்டுகள் . இந்த அணுமின் நிலையங்களினால் உண்டாகும் பதிப்புகள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறது சிறப்பான ஆக்கம் நன்றி.

F.NIHAZA said...

கண்ணைமூடி கொண்டதனால்
பூவுலகு இருண்டிடுமா?
கண்திறந்து பாருங்கப்பா
நிதர்சனம் கேளுங்கப்பா!!

இயலுமானவர்கள் போராடுங்கள்...
முடியவில்லையா...
கையேந்திப் பிரார்த்தியுங்கள்...
நல்லதே நடக்கும்...

மஞ்சுபாஷிணி said...

மனித உயிர்களின் மதிப்பை அறியாதவர்கள் :(

அருமையான வரிகளால் கெஞ்சலும் சாடலும் அற்புதமாக இருக்கிறது மகேந்திரன்.....

ஒன்று நூறாகி நூறு ஆயிரமாகி லட்சங்கள் ஆனாலும் அவர்கள் கவனம் இதன்மேல் திரும்புமா?

அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

kunthavai said...

மிகவும் தேவையான நேரத்தில் மிக தேவையான ஒரு பதிவு.
மிக மிக மகிழ்ச்சி மகேன் !

ஏழை மனித உயிர்களுக்கு விலையில்லை இப்போது.
அவர்களின் உயிருக்கே இந்த நிலை என்கையில், அவர்களின் கண்ணீரையும், வியர்வையையும் யார் உணரப்போகிறார் ?

தங்களது நாட்டுப்புறக் கலைகளின் வளர்ச்சித் தவிப்போடு இத்தகைய சமூக தாகங்கள் குறித்த கட்டுரைகளும் அதிகம் எதிர்பார்க்கும்,

தோழி,

அனு ..

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் பாராட்டுக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மாலதி
தங்களின் பாராட்டுக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு தோழி அனு
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

நிச்சயம் நற்சிந்தனை சமூக கருத்துக்களை
படைக்கிறேன் தோழி.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்!

நிரூபன் said...

மக்களின் போராட்டங்களைக் கண்டும்,
பாராமுகமாய் இருக்கும் அரசின் மீதான கோபத்தினையும்,
அரசாங்கம் சூழலுக்குத் தீமையளிக்கும் அணு உலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் எனும் உறுதியான கொள்கையினையும் இக் கவிதை தாங்கி வந்துள்ளது.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிரூபன்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

Post a Comment