வெள்ளப்பட்டு சந்தையிலே
வாங்கிவந்த வெள்ளமாடு!
துள்ளித்துள்ளி ஓடுதையா - காளியப்பா!
நாம போகுமிடம் தூரமில்ல - காளியப்பா!!
அழகான வெள்ளமாடு
அலுங்காம ஓடுதய்யா!
எம்புட்டுக்கு வாங்கிவந்த - மாரியப்பா!
நானும் ஒன்னு வாங்கப்போறேன் - மாரியப்பா!!
பேரையூரில் பொறந்தமாடு
பேச்சியம்மா வளர்த்தமாடு!
பேரம்பேசி வாங்கிவந்தேன் - காளியப்பா!
நான்போய் பத்தரைக்கு ஒட்டியாந்தேன் - காளியப்பா!!
கமலைய இறைச்சு அங்கே
தண்ணிப்பாச்ச பொழுதாச்சு
வேகமாக ஒட்டிடய்யா - மாரியப்பா
அங்கே பண்ணையாரு காத்திருப்பார் - மாரியப்பா!!
சித்தநேரம் பொறுத்துக்கோய்யா
சீக்கிரமா போயிடுவோம்!
சிலுக்குப்பட்டி தாண்டிவிட்டோம் - காளியப்பா
இன்னும் நாளுகல்லு தூரந்தாய்யா - காளியப்பா!!
என்னைய நீ விட்டுபுட்டு சீக்கிரமா போயிடுவோம்!
சிலுக்குப்பட்டி தாண்டிவிட்டோம் - காளியப்பா
இன்னும் நாளுகல்லு தூரந்தாய்யா - காளியப்பா!!
எந்த ஊரு போகப்போற
திரும்பிவரும் நேரத்தில - மாரியப்பா
என்னைய கூட்டிகிட்டு போறியா நீ - மாரியப்பா!!
ஆனைமலை பக்கத்திலே
அயித்த வீடு ஒன்னிருக்கு
அங்கேதான் போகப்போறேன் - காளியப்பா
நானும் வெரசாக வந்துடுறேன் - காளியப்பா!!
வாழைத்தோப்பு பக்கத்துல
வளமான தென்னந்தோப்பு
அங்கே என்ன இறக்கிவிடு - மாரியப்பா!
நீ திரும்பையில இங்கிருப்பேன் - மாரியப்பா!!
=============================================================
அயித்த வீடு ஒன்னிருக்கு
அங்கேதான் போகப்போறேன் - காளியப்பா
நானும் வெரசாக வந்துடுறேன் - காளியப்பா!!
வாழைத்தோப்பு பக்கத்துல
வளமான தென்னந்தோப்பு
அங்கே என்ன இறக்கிவிடு - மாரியப்பா!
நீ திரும்பையில இங்கிருப்பேன் - மாரியப்பா!!
=============================================================
பண்ணையாரு தோட்டத்திலே
தண்ணிபாச்சி முடிச்சிட்டியா
நேரம் கொஞ்சம் கடந்து போச்சி - காளியப்பா
நீயும் ரொம்பநேரம் நிக்கிறியா - காளியப்பா!!
மின்சாரம் இல்லையின்னு
கமலையிறைக்க வந்தேனய்யா
இருநூறு கமலையப்பா - மாரியப்பா
ஏற்றத்தில இறச்சிவந்தேன் - மாரியப்பா!!
தண்ணிபாச்சி முடிச்சிட்டியா
நேரம் கொஞ்சம் கடந்து போச்சி - காளியப்பா
நீயும் ரொம்பநேரம் நிக்கிறியா - காளியப்பா!!
மின்சாரம் இல்லையின்னு
கமலையிறைக்க வந்தேனய்யா
இருநூறு கமலையப்பா - மாரியப்பா
ஏற்றத்தில இறச்சிவந்தேன் - மாரியப்பா!!
ஏற்றமிறச்ச களைப்புனக்கு
ஏகமாக தானிருக்கும்
கொஞ்சநேரம் படுத்துக்கோ நீ - காளியப்பா
கண்ணசர தூக்கம்போடு - காளியப்பா!!
கைகாலு வலிக்குதய்யா
கெண்டக்காலு நோகுதய்யா
வலிபோக மருந்திருக்கு - மாரியப்பா
அதுக்கு கல்லிகுடி போகவேணும் - மாரியப்பா!!
ஏகமாக தானிருக்கும்
கொஞ்சநேரம் படுத்துக்கோ நீ - காளியப்பா
கண்ணசர தூக்கம்போடு - காளியப்பா!!
கைகாலு வலிக்குதய்யா
கெண்டக்காலு நோகுதய்யா
வலிபோக மருந்திருக்கு - மாரியப்பா
அதுக்கு கல்லிகுடி போகவேணும் - மாரியப்பா!!
ஏதேனும் வைத்தியரா
ஆங்கிலத்து மருத்துவரா
கல்லிகுடி ஊரு போனா - காளியப்பா
களைப்பெல்லாம் போய்விடுமா?? - காளியப்பா!!
தொட்டதுமே விறுவிறுக்கும்
குடிச்சதுமே தலைக்கேறும்
அமுதமான கள்ளச்சாராயம் - மாரியப்பா
குடம்குடமா கிடைக்குதய்யா - மாரியப்பா!!
===========================================================
ஆங்கிலத்து மருத்துவரா
கல்லிகுடி ஊரு போனா - காளியப்பா
களைப்பெல்லாம் போய்விடுமா?? - காளியப்பா!!
தொட்டதுமே விறுவிறுக்கும்
குடிச்சதுமே தலைக்கேறும்
அமுதமான கள்ளச்சாராயம் - மாரியப்பா
குடம்குடமா கிடைக்குதய்யா - மாரியப்பா!!
===========================================================
அய்யய்யோ அலங்காரி
பாலமேட்டு மகமாயி
இந்த வார்த்த கேட்டிடவா - காளியப்பா
உன்கூட நானும் வந்தேன் - காளியப்பா!!
என்ன நானும் சொல்லிபுட்டேன்
ஏனிப்போ சிலுத்துக்கிற
உள்ளதத்தான் நானும் சொன்னேன் - மாரியப்பா
கள்ளசரக்கு மனக்குமய்யா - மாரியப்பா!!
பாலமேட்டு மகமாயி
இந்த வார்த்த கேட்டிடவா - காளியப்பா
உன்கூட நானும் வந்தேன் - காளியப்பா!!
என்ன நானும் சொல்லிபுட்டேன்
ஏனிப்போ சிலுத்துக்கிற
உள்ளதத்தான் நானும் சொன்னேன் - மாரியப்பா
கள்ளசரக்கு மனக்குமய்யா - மாரியப்பா!!
நாளெல்லாம் உழைச்சாலும்
நாம்காணும் வெள்ளிப்பணம்
குடிச்சே அழிக்கனுமா - காளியப்பா
குடல்வெந்து போகாதாய்யா - காளியப்பா!!
உன்வீட்ட நல்லாப்பாரு
ஒடுகூட உடைஞ்சிருக்கு
நல்லவீடு கட்டிக்கொள்ளு - காளியப்பா
நாலுபேரு மதிக்க வாழு - காளியப்பா!!
நாம்காணும் வெள்ளிப்பணம்
குடிச்சே அழிக்கனுமா - காளியப்பா
குடல்வெந்து போகாதாய்யா - காளியப்பா!!
உன்வீட்ட நல்லாப்பாரு
ஒடுகூட உடைஞ்சிருக்கு
நல்லவீடு கட்டிக்கொள்ளு - காளியப்பா
நாலுபேரு மதிக்க வாழு - காளியப்பா!!
உன்னநம்பி பொறந்ததய்யா
உன்குலத்து செல்வமெல்லாம்
கொஞ்சமேனும் சேர்த்துவையு - காளியப்பா
ஓட்டாண்டியா ஆகிடாதே - காளியப்பா!!
தினந்தினம் செய்தியெல்லாம்
கொத்துகொத்தா வருவதை நீ
பார்த்து நீயும் திருந்திவிடு - காளியப்பா
இன்றே பக்குவமா மாறிவிடு - காளியப்பா!!
குடல் அழுகிப் போகுமய்யா
கண்ணும் கெட்டுப் போகுமய்யா
உன் பிள்ளைகளா நினைச்சிப்பாரு - காளியப்பா
உன்குணத்த மாத்திக்கோ நீ - காளியப்பா!!
=======================================================
உன்குலத்து செல்வமெல்லாம்
கொஞ்சமேனும் சேர்த்துவையு - காளியப்பா
ஓட்டாண்டியா ஆகிடாதே - காளியப்பா!!
தினந்தினம் செய்தியெல்லாம்
கொத்துகொத்தா வருவதை நீ
பார்த்து நீயும் திருந்திவிடு - காளியப்பா
இன்றே பக்குவமா மாறிவிடு - காளியப்பா!!
குடல் அழுகிப் போகுமய்யா
கண்ணும் கெட்டுப் போகுமய்யா
உன் பிள்ளைகளா நினைச்சிப்பாரு - காளியப்பா
உன்குணத்த மாத்திக்கோ நீ - காளியப்பா!!
=======================================================
ராசமேளம் கேட்டிருச்சி
கூரைச்சேவல் கூவிருச்சு
என்புத்திய நீயும்தானே - மாரியப்பா
செருப்பால அடிச்சிபுட்ட - மாரியப்பா!!
ராக்காயி கோவிலிலே
கொழுந்துவிட்டு எரியுமந்த
விளக்குமேல சத்தியமா - மாரியப்பா
குடிக்கிறதா நிறுத்திடுறேன் - மாரியப்பா!!
அப்படிச் சொல்லுமய்யா
கேட்கும்போதே இனிக்குதய்யா
உன்கூட குடிச்சவர - காளியப்பா
புத்திசொல்லி திருத்திவிடு - காளியப்பா!!
அன்பன்
மகேந்திரன்
கூரைச்சேவல் கூவிருச்சு
என்புத்திய நீயும்தானே - மாரியப்பா
செருப்பால அடிச்சிபுட்ட - மாரியப்பா!!
ராக்காயி கோவிலிலே
கொழுந்துவிட்டு எரியுமந்த
விளக்குமேல சத்தியமா - மாரியப்பா
குடிக்கிறதா நிறுத்திடுறேன் - மாரியப்பா!!
அப்படிச் சொல்லுமய்யா
கேட்கும்போதே இனிக்குதய்யா
உன்கூட குடிச்சவர - காளியப்பா
புத்திசொல்லி திருத்திவிடு - காளியப்பா!!
அன்பன்
மகேந்திரன்
80 comments:
super.. vaalththukal
வணக்கம் மாப்பிள..!!
அழகான கிராமிய நடையில் மதுவுக்கு எதிராக எழுதி இருக்கிறீங்க.. காலத்தே உணர்ந்த பதிவு..!!
படங்களை எங்கு எடுக்கிறீங்க மாப்பிள கவிதைக்கு ஏற்ற படங்கள் வாழ்த்துக்கள்..!!
கிராமத்து கவிதை என்றாலே எங்க மாமா ஓடி வந்திருவாரே!!! ஹீ ஹீ.......
மது எதிர்ப்பு கவிதை அருமை.
இதை படிக்கும் மது பிரியர்கள் திருந்தினால் சந்தோசம் :(
அழகான வெள்ளமாடு
அலுங்காம ஓடுதய்யா!
எம்புட்டுக்கு வாங்கிவந்த - மாரியப்பா!
நானும் ஒன்னு வாங்கப்போறேன் - மாரியப்பா!!<<<<<<<<<<<<<<<<
நான் வன்னியில் இருக்கும் போது... எங்கள் வீட்டிலையும் இப்படி ஒரு மாடு இருந்தாதே...... :)
ஒரு நாள் நான் அதுக்கு பக்கத்தில் போக, அது எனக்கு காலால் அடிச்சுட்டுது என்று அப்பா அதை வித்துட்டார் ;(
மாட்டு வண்டியில நான் போயிருக்கன். நல்ல கவிதைகள்..
குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பார்கள். இங்கே குடிக்குமுன் புத்தி தெளிந்திருக்கிறான். தெளிந்த புத்தியை இன்னுமொருவன் குழப்பாதிருக்க வேண்டும். தானே உணர்ந்து திருந்தினால் தக்க பயன் உண்டு. நல்லதொரு கருவைத் தாங்கிய நாட்டுப்புறக் கவி வரிகள் மாட்டுவண்டியில் பயணித்துக் கொண்டே பாட்டுப்பாடி ரசிக்கும் உணர்வைத் தந்தன. பாராட்டுகள் மகேந்திரன்.
கள்ள சாராயத்தால் கொத்து கொதாக்க ஆட்கள் மடியும் தருணத்தில் நல்லதொரு விழிப்புணர்வு கிராமியப்பாடல்!
கள்ளசாராயத்த சாப்பிட்டா குடல் வெந்துடும்னு அக்கறையில தான் இங்கு அரசாங்கமே கரும்பு சாராயத்தில் கலர் தண்ணி கலந்து வகை வகையா விக்கிறாங்க!
மாட்டு வண்டியில நானும் அவங்க பாட்றதைக் கேட்டுக்கிட்டு கூடவே போன எஃபெக்ட் இருந்தது. எளிமையான கிராமத்தார்களின் வார்த்தைகளில் அழகான சந்த நடையில் கவி புனைந்திருக்கிறீர்கள் மகேன். அதிலும் இறுதியில் உன்னோட குடிச்சவங்களை நீ திருத்திடு காளியப்பா என்று முடித்தது எக்ஸலண்ட்! வாழ்த்துக்கள்.
இனிய காலை வணக்கம் அண்ணா,
அண்ணே முதலில் ஆரம்ப பந்திகளை ஒரே சந்தத்தில்
தந்தனத்தோம், தந்தனத்தோம் தானானே...எழுதியமைக்கு சிறியேனின் பாராட்டுக்கள்! இனி கவிதைக்குள் நுழைவோம்.
ஏனைய பந்திகள் ஆரம்ப சந்தத்திலிருந்து விலகி இருந்தாலும் அழகிய சொல்லாடல்கள் அப்படியே கிராமத்து மாட்டு வண்டிப் பயணத்திற்கு என்னை அழைத்துச் செல்கிறது.
கள்ளச் சாராயம் அருந்தும் இடத்திலே அருமையாகப் புத்தி சொல்லி திருத்தும் ஓர் நண்பணைக் காட்சிப்படுத்த், குடி போதையின் விளைவுகளைச் சொல்லி ஓர் விழிப்புணர்வு கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
நல்லதோர் கவிதை அண்ணா.
அழகான கவிதை ! குடி குடியை அழிக்கும் என்பதை கவிதையின் முடிவில் அழகாக சொல்லி உள்ளீர்கள்! திருந்துவார்களா? த.ம.8 நன்றி!
தினந்தினம் செய்தியெல்லாம்
கொத்துகொத்தா வருவதை நீ
பார்த்து நீயும் திருந்திவிடு - காளியப்பா
இன்றே பக்குவமா மாறிவிடு - காளியப்பா!!
மிகவும் அருமை அண்ணா .
//பேரையூரில் பொறந்தமாடு
பேச்சியம்மா வளர்த்தமாடு!
பேரம்பேசி வாங்கிவந்தேன் - காளியப்பா!
நான்போய் பத்தரைக்கு ஒட்டியாந்தேன் - காளியப்பா!!
கமலைய இறைச்சு அங்கே
தண்ணிப்பாச்ச பொழுதாச்சு
வேகமாக ஒட்டிடய்யா - மாரியப்பா
அங்கே பண்ணையாரு காத்திருப்பார் - மாரியப்பா!!
//
அருமையான வரிகள்
அருமையான செய்தி...
அதனை சொல்லும் சந்தங்கள்
மாடுகளுடன் தாளத்தோட
பயணிக்குது....
நல்ல திறமை உங்களுக்கு.
படித்த எங்களுக்கு மனம் நிறைவு.
அருமையான கவிதை. தாளக்கட்டு சீர் தழும்பியது போல உள்ளது. வார்த்தைக் கட்டு நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
கிராமிய நடையில் எழுதி இருக்கும் கவிதையும் படங்களும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
முத்தாய்ப்பான இயல்பு நடை, சந்த நடை கொண்ட
ஒரு அழகான நாட்டுப்புற பாடல்.
துவங்கிய விதமும் , கருவைக் கொண்டு சென்ற கவனமும் ,
மங்களகரமாய் முடித்த பாங்கும் சுருதி சேர்க்கிறது.
யதார்த்தம் மனதை அள்ளிச் செல்கிறது. உங்கள் புகழ்
ஏட்டில் இன்னுமோர் அழகான பக்கம்.
மாப்ள கவிதை அப்படியே கிராமப்புர நடயில் விஷிப்புணர்ச்சியோடு இருக்குய்யா..நன்றி!
குடித்தவனை மட்டுமா எரிக்கும்!
குடும்பத் தோடல்லவா எரிக்கும் !!
நெருப்பில்லாமல் எரியும் சாராயம் !!!
நச்சென்றக் கவிதை!
ம்ம்ம்... சங்கை ஊதிவைப்பது நம் கடமை....
செவிடர்களாக நடிப்பவர்களுக்கு ஒருபோதும் கேட்காது?!
நன்றி கவிஞரே...
அப்படிச் சொல்லுமய்யா
கேட்கும்போதே இனிக்குதய்யா
உன்கூட குடிச்சவர - காளியப்பா
புத்திசொல்லி திருத்திவிடு - காளியப்பா!!
விழிப்புணர்வுப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நாளெல்லாம் உழைச்சாலும்
நாம்காணும் வெள்ளிப்பணம்
குடிச்சே அழிக்கனுமா - காளியப்பா
குடல்வெந்து போகாதாய்யா - காளியப்பா!!
உன்வீட்ட நல்லாப்பாரு
ஒடுகூட உடைஞ்சிருக்கு
நல்லவீடு கட்டிக்கொள்ளு - காளியப்பா
நாலுபேரு மதிக்க வாழு - காளியப்பா!!
ராசமேளம் கேட்டிருச்சி
கூரைச்சேவல் கூவிருச்சு
என்புத்திய நீயும்தானே - மாரியப்பா
செருப்பால அடிச்சிபுட்ட - மாரியப்பா!!
ராக்காயி கோவிலிலே
கொழுந்துவிட்டு எரியுமந்த
விளக்குமேல சத்தியமா - மாரியப்பா
குடிக்கிறதா நிறுத்திடுறேன் - மாரியப்பா!!
அழகிய கிராமிய நடையில் நல்லதொரு அறிவுரை மது அருந்துபவர்களுக்கு சொல்லக் கேட்டதுபோல் மிகவும் அருமையாக
இருந்தது சகோ .வாழ்த்துக்கள் மிக்க நன்றி பைக்ர்வுக்கு .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
அழகாக புத்தி சொல்லி போகும் பாடல் வரிகள், சுருக்கென்று குத்தவும் தவறவில்லை, அட்டகாசம்....!!!
குடிப்பழக்கம் தவறுன்னு
நல்ல நல்ல கவிதை ஒன்னு
சொல்லித்தான் போனாரய்யா மகி அண்ணே - அட
சொல்லித்தான் போனரையா நம்ம மகி அண்ணே.
அழகு கவிதை. கிராமத்து மெட்டு. கலக்கிட்டிங்க சகோ.
த ஓ 11.
மிகவும் ரசித்தேன், நல்ல கிராமத்து சந்தமுள்ள பாடல்.
காளியப்பனுக்கு,மாரியப்பனின் அறிவுரை அருமை.
கவிதை அருமை.வாழ்த்துகள்.
குடிப்பது உடல்நலக்கேடு என்பதைப்பற்றிய அழகான விழிப்புணர்வு பாடல்.அருமையாக இருக்கு.
அண்ணே வணக்கம் ...
சுழன்று அடிக்கும் சூறாவளியா கவிதை கூறும் கருத்து
சுழன்று சுழன்று அடிக்குது ...
நல்ல வரிகளில் நல வாழ்வுக்கு திரும்ப நச்சென்று கூறும் கவிதைக்கு வாழ்த்துக்கள் அண்ணே
கிராமத்து நினைவுகளை கிளறி விடுகிறது மகேந்திரன்.எளிய வார்த்தைகளில் மனம் கவர்ந்த கவிதை.
அழகிய நடையில் நல்லதோர் விழிப்புணர்வு கவிதை....
நல்லா இருக்கு நண்பரே... கவிதையின் பாத்திரம் போல எல்லோரும் திருந்தினால் நன்றாகத் தான் இருக்கும்.....
மாட்டுவண்டிலின் மணியோசையோடு மெல்லிய மங்கல் மாலையில் ஒரு பெண்ணின் குரலில் இந்தப்பாடல் மனதுக்குள் இசைக்கிறது.அருமை !
அன்புநிறை நண்பர் மதுரை சரவணன்,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை காட்டான் மாமா,
இப்போது தொடர்ந்து கள்ளச்சாராயத்தால்
சாவுகள் பெருகிக்கொண்டிருக்கின்றன
அதன் விளைவே இந்தக் கவிதை.
படங்கள் கூகிள் ஆண்டவர் தான் கொடுக்கிறார்.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புத்தம்பி துஷி,
மாமா, நான் எல்லாம் கிராமத்தான்கள் தம்பி
அதான் கிராமியப்பாடல் கேட்டவுடன் ஓடிவந்திருவோம்.
சிலராவது திருந்தினாலே இந்தக் கவிதைக்கு வெற்றி தான்.
அடடா,
பார்த்தீங்களா எவ்வளவு பாசமான அப்பா.
புள்ளைய மிதிச்சதுன்னு மாட்டியே வித்துட்டாங்க.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வரோதயன்,
மாட்டுவண்டிப் பயணம் ஒரு தனி சுகம் நண்பரே.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி கீதா,
வருமுன் காத்திடல் வேண்டும்
என்பதே கவிதையின் சாரம்.
தங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும் இனிய
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமேஷ் வேங்கடபதி,
அதைச் சொல்லுங்க நண்பரே,
அரசாங்கமே உரிமையோட விற்கும் போது
நாம என்ன சொன்னாலும் இவங்க காதில ஏறப் போறதில்ல .
ஆனாலும் நாம சொல்ல வந்தத சொல்லிருவோம்...
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் கணேஷ்,
சிறுவயதில் மாட்டுவண்டிப்பயணம்
செய்த போது வண்டிக்காரங்க பாடியதெல்லாம்
மனசுல வைச்சு தான் இதை எழுதினேன்..
அதுவும் மதுரையிலிருந்து மேலூர் வரைக்கும்
இருக்கும் கிராமங்களில் இதுபோல
வண்டிக்காரர்கள் பாடிக்கொண்டு போவது வழக்கம் அப்போது....
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோ நிரூபன்,
மெட்டமைத்து பாடியதற்கு ஒரு சிறப்பான நன்றி உங்களுக்கு...
ஆரம்பத்தில் உரையாடல்கள் வருகையில் தாலம் தப்பாமல் தான் வந்தது..
அடுத்து கருத்துக்களை உள்நுழைக்கையில் கொஞ்சம் மாறிவிட்டது
சகோ..
தங்களை மேலான கருத்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை தங்கை சசிகலா,
தங்களின் கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா,
தங்களின் கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சக்திபிரபா,
என் மீதான தங்களின் நம்பிக்கைக்கும் மேலான கருத்துக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
கவிதையை எழுதிய பொழுதை விட தங்களின் அழகான
ஊக்கமளிக்கும் கருத்தைக்கண்டு மகிழ்ந்தது பொழுதுதான் தான் சிறப்பு.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை விக்கி மாம்ஸ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை தமிழ்விரும்பி ஐயா,
சரியாக கருத்துரைத்தீர்கள்.
நாம நம்ம சொல்ல வேண்டியதை சொல்லிருவோம்.
கேட்டு திருந்த வேண்டியவங்க திருந்தட்டும்.
திருந்தினால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது.
அழகான கவிதைக்கருத்து அழித்தமைக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் மனோ,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
அடுத்த சந்தமொன்று போட்டு என்னை வாழ்த்தியதற்கு
என் நன்றிகள் பல நண்பரே.
தங்களின் ஆழ்ந்துணர்ந்த மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ராதாகிருஷ்ணன்.,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்,,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் அரசன்,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் சண்முகவேல்,,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன் நண்பரே..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி ஹேமா,
பாட்டை வைச்சு ஒரு கதையே சொன்னதுபோல இருந்தது
தங்களின் கருத்து.
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
கிராமிய வாசம் மனதை கொள்ளை கொள்ளுது சகோ. உங்களின் கவிநடையே தனிதான் வாழ்த்துகள்..
மீண்டும் ஒரு கிராமிய மணம் கமலும் அழகிய கவிதை நம் சமூகத்தின் 'குடி' காரர்களை இடித்துரைக்கிறது.வாழ்த்துக்கள்.
நகரத்தில் பிறந்த நான்
இந்த கைவ்தையில் ஒரு அழகிய
கிராமத்தை காண்கிறேன் ,,,
பகிர்விற்கு நன்றி
அன்புநிறை சகோதரி மலிக்கா,
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் குப்புசாமி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ஜெயராம் தினகரபாண்டியன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
குடி குடியை கெடுக்கும் என்பதை கிராமத்து பாடலின் மூலம் எடுத்து சொல்லிய விதம் அருமை. வழமை போலவே படங்களும் வெகு பொருத்தம் சகோ
மாட்டை வாகா அணைச்சு ஓட்டு ஊர் வந்து சேர்க்கிறமாதிரி
மிக அழகாக கருத்தைக் கொண்டுவந்து சேர்த்த விதம்
மிக மிக அழகு
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அழகான தாளக்கட்டுடன் அற்புதமாக அமைந்த நாட்டுப் புறப்பாடல். தாளலயம் கூட்டிப் பாடிக்கொண்டே கவிதையை வாசித்து முடித்து விடலாம். உங்கள் படைப்புக்களுக்குள் இதுவும் ஒரு அழகு படைப்பு
உங்களின் படைப்புகளும் அதற்கேற்ற சிறப்பான படங்களும் அருமை எல்லாவற்றையும் விட அதில் பொதிந்துள்ள கருத்துகள் மிகவும் சிறப்பு குடியை நிறுத்த கூறிய விதை சிறப்போ சிறப்பு ...
அன்புநிறை சகோதரி ராஜி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை நண்பர் ரமணி,
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி சந்திரகௌரி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புநிறை சகோதரி மாலதி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
Post a Comment