Friday, 20 January 2012

வசந்தத்தின் நூறாம் தோரணம்!!!


சந்தத்தின் வாசலிலே
வண்ணமிகு கோலமாம்!
வானவில்லே தோரணமாய்
வந்திறங்கிய காரணமாய்!
நட்சத்திரப் பூக்களெல்லாம்
நாவற் பழம்போல
கூடிவந்து பூத்திருந்த
வசந்த மண்டபமாம்!!

சந்தத்தின் வயதின்று
பத்து திங்கள் ஆனதுவே!
திங்களுக்கு ஒருபத்தாய்
பத்துமுறை ஈன்றெடுத்தேன்!
இன்று நான் ஈனுவதோ
நூறாவது சிசுவென்பேன்!!

ருசுமந்து நான்பெற்ற
சிசுவிங்கே ஒவ்வொன்றும்!
மின்னுகிற பொன்னைப்போல்
தகதகத்து தெரிவதெல்லாம்
ஆழ்ந்து படித்துணர்ந்து
அழகாக கருத்திட்ட
உங்களால் தானன்றோ!!

சிவப்பு கம்பளம் விரித்து
வாசப் பன்னீர் தெளித்து
தாம்பூல சகிதமாய்!
மனம் நிறைந்தோரை
மனமார வரவேற்கிறேன்!
வாருங்கள் வசந்த மண்டபத்திற்கு!
இனி பூக்கும்
வசந்த பூக்களுக்கும்
உங்கள் வாழ்த்துக்களை
அருளுங்கள்!!நேசத்தகு உள்ளங்களே,

திவுலகில் கால்பதித்து பத்து மாதங்கள் ஆன இந்நிலையில்
இதோ நூறாவது பதிவைத் தொட்டிருக்கிறேன். என்னை
கரம்பிடித்து அன்போடு ஆதரவோடு பதிவுலகில் நிலைபெறச்
செய்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும். கருத்திட்டு என்
படைப்புகளை எழுத்துக்களை அழகுறச் செய்த அத்தனை நேச
உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

முதன்முதலாய் முகம் தெரியாது வந்து கருத்திட்டு என்னை வாழ்த்திய
தோழர் ஜானகிராமன், சகோதரி கீதா அவர்களை இந்நேரத்தில்
நினைவு கொள்கிறேன்.

லைச்சரம் என்பது என்றால் என்ன? என்ற நிலையில் இருந்த என்னை
முதன்முதலாய் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி அடையாளம் காட்டிய
அன்பு நண்பர் கவிதைவீதி.சௌந்தர் அவர்களையும் நினைவில் தருவிக்கிறேன்.

திவுலகில் வசந்தமண்டபம் கட்டி ஆறாவது மாதத்தில் வலைச்சரம் தொடுக்க எனை அன்போடு அழைத்து, மாணவனாய் இருக்கும் எனை ஆசிரியராய் பணியாற்ற உன்னால் முடியும் என தட்டிக்கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் பணிவான வணக்கங்களும்.

தொடர்பதிவுகளுக்காக என்னை அழைத்து என் எழுத்துக்களை ரசித்த
தோழர் ஜா.ரா.ரமேஷ்பாபு, சகோதரி சாகம்பரி அவர்களையும் இங்கே
நினைவில் நிறுத்துகிறேன்.

ன் எழுத்துக்களில் நம்பிக்கை வைத்து, அதை ரசித்து விருதளித்து என்னையும் என் எழுத்துக்களையும் பெருமைப் படுத்திய  அன்பு முனைவர்.இரா.குணசீலன், நண்பர் நாஞ்சில் மனோ அவர்களையும் இங்கே நன்றிகளுடன் வணங்குகிறேன்.

ன்னை தன் தளத்தில் அறிமுகப்படுத்தி பதிவுலகில் நான் வளர்ந்திட நீரூற்றி வளர்த்த சகோதரர் நிரூபன், சகோதரர் ரெவெரி, நண்பர் சங்கவி அவர்களுக்கும், முகநூல் மூலம் என்னையும் என் படைப்புகளையும் பெருமைப் படுத்தும் காட்டான் மாமா, ரத்னவேல் ஐயா
அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்.

தினம்தினம் என் தளம் வந்து படித்து கருத்திட்டோருக்கும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்து தெரிவித்தோருக்கும், என்னைப் பின்தொடர்பவர்களுக்கும்,
படைப்புகளில் வரும் பிழைகளை திருத்தி என்னையும் என் எழுத்துக்களையும்
சீர்படுத்தும் தோழமைகளுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் என்
சிரம்தாழ்ந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன்

81 comments:

வே.சுப்ரமணியன். said...

சிறக்கட்டும் தங்கள் சிந்தனை! எட்டு திக்கும் எட்டட்டும் அதன் வீச்சு! நான் வாழ்த்துவது தாங்கள் நூறாவது பதிவை எட்டியதற்க்காக அல்ல. நூற்றி ஓராவது பதிவை இனிதே தொடங்குவதற்காக! தங்களது தமிழ் சேவை தொடர, அன்பு நண்பனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

ரமேஷ் வெங்கடபதி said...

இன்னும் பல நூறு பதிவுகள் புனைய வாழ்த்துக்கள்!

shanmugavel said...

பல நூறு தோரணம் கட்ட வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் அண்ணா,

ஓர் படைப்பாளியின் ஒவ்வோர் படைப்புக்களும் ஓர் குழந்தையினைப் பிரசவிக்கின்ற நிலைக்கு இணையானது என்று கூறுவார்கள்.

அதற்கு ஏற்றாற் போல உங்கள் படைப்புக்களைப் பற்றிய நினைவு மீட்டற் கவிதையினை முதற் பந்தியில் சுட்டியிருக்கிறீங்க.

பதிவுலகில் உங்களோடு பயணிக்கும் அனைவரையும் நூறாவது பதிவு கண்ட நல் நேரத்தில் நினைவு கூறியிருக்கிறீங்க.

தொடர்ந்தும் பல காத்திரமான கவிதைகளோடும்
எம் கலைகளைப் பற்றிய கவிதைகளோடும் பதிவுலகில் பயணிக்க சக தோழனாய் வாழ்த்துகிறேன்.

guna thamizh said...

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அன்பரே..

தங்கள் எழுத்துக்களுக்குத் தமிழ் வலையுலகில் என்றும் நீங்காத தனித்துவமான இடம் உண்டு..

வளர்க தங்கள் பணி
வாழ்க வளமுடன்.

guna thamizh said...

கடந்த ஆண்டில் எத்தனையோ வலைப்பக்கங்களை நான் பார்வையிட்டிருந்தாலும்..

மனம் கவர்ந்த வலைப்பதிவுகளுள் தங்கள் பதிவு குறிப்பிடத்தக்கது அன்பரே..

மதுமதி said...

மகிழ்ச்சி தோழர்..1000 பதிவுகளை விரைவில் எட்ட வாழ்த்துகள்..
பதிவுலகில் தங்கள் பயணம் தொடர்ந்து சிறக்கட்டும்..

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
அதற்குள் நூறு பதிவுகளா? ஆச்சரியமான மனிதர்தான் நீங்கள்.. இப்படி காலத்தை வென்ற கவிதைகள் தருபவர்கள் பதிவுலகில் விரல்விட்டு எண்ணி விடலாம். அதில் நீங்களும் ஒருவர் என்று நினைக்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி!!

வாழ்த்துக்கள் மாப்பிள!!

Ramani said...

பத்து மாதங்களில் நூறு தரமான பதிவுகள்
என்பது ஒருசாதனைச் சரித்திரமே
சரித்திரம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 9

விக்கியுலகம் said...

வாழ்த்துக்கள் மாப்ள!

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் உங்கள் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் இன்னும் நீங்கள் பலநூறுபதிவுகள் எழுதவேண்டும்

Anonymous said...

மகி அண்ணா,
பத்துத் திங்கள் தவமிருந்து ஒரு மகவைப் பெற்று எடுப்பாள் அன்னை.
நீங்கள் ஒரு திங்களுக்குப் பத்து மகவுப் பாடல்கள் தந்து இருப்பது
மகத்தான விஷயம். மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அண்ணா .
நீங்கள் அனைவரையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து இருப்பது சிறப்பு.
வாழ்க வளமுடன் !

dhanasekaran .S said...

உங்கள் 100 வது பதிவுக்கு என் வாழ்த்துகள்.மென் மேலும் அருமையான கவிதை தர வாழ்த்துகள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்த்துக்கள்.. நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை சார்ந்த ஒரு தளம் வாசகர் மத்தியில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்...

அரசியல், சினிமா அல்லாது தூய்மையான கருத்துக்கள் கொண்ட தங்கள் அத்தனை கவிதைக்கும் நான் ரசிகன்...

தங்களின் கவிதை பாணி, நடை, சொல்லாடல் மற்றும் அதில் அடங்கியிருக்கும் கருப்பொருள் அத்தையும் அற்புதம் என்பதால்தான் தங்களின் கவிதை அனைத்து வாசகராலும் கவரப்பட்டுள்ளது.

தரமான படைப்புகள் என்றும் உயிர்வாழ்ந்துக்கொண்டிருக்கும்...

அந்த வகையில் தங்களின் இந்த பதிவையும் சேர்த்து 100 மழலைகளும் நலமுடன்தான் இருக்கிறது.

மேலும் பல புதியப் படைப்புகள் தஙகளிடம் இருந்து மலரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்...


என்றும் ஒத்துழைப்புடன்...
கவிதை வீதி சௌந்தர்...

புலவர் சா இராமாநுசம் said...

நாட்டுப்புற மெட்டெடுத்து
நற்கவிதை மலர்தொடுத்து
பாட்டுக்கொரு புலவனென
பாரதியாய் ஆனீரே!
தீட்டுங்கள் இனும்பல
தீந்தமிழில் வெற்றிக்கொடி
நாட்டுங்கள் மண்டபத்தில்
நலங்காண வலையகத்தில்!

நூறு ஆயிரமாகட்டும்!

புலவர் சா இராமாநுசம்

கோகுல் said...

வணக்கம் நண்பரே,
அழிந்து வரும் பல கலைகளுக்கு உங்கள் கவிதைகள் மூலம் உயிர் கொடுத்துள்ளீர்கள்,
உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துகள்.

ஷைலஜா said...

சதம் அடித்த சகோதரரே
விதம்விதமாய் கவிதை எழுதி
இதமான சொற்களிலே படிப்பவர்
இதயஙகளில் புகுந்துவிட்டீர்!
சதம் மேலும் பெருகி
உதயக்கதிரவனாய் ஒளிவிட
இதயங்கனிந்த வாழ்த்துகள்!

mum said...

நூறாவது படைப்பு என்பதையும் கவிதையில் சொல்லியது சிறப்பு ...

வசந்த மண்டபம் இன்னும் பல நூறு தோரணங்களால் பூத்து குலுங்கி மணம் கமழ வாழ்த்துக்கள் நண்பரே!!!!!!

RAMVI said...

வசந்த மண்டபத்தின் நூறாவது தோரணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மகேந்திரன்.முத்தான பதிவுகள் பல நூறாக பெருகவும் வாழ்த்துக்கள்.

Rathnavel said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

Lakshmi said...

வசந்த மண்டபத்தின் நூறாவது தோரணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மகேந்திரன்.

தமிழ் விரும்பி said...

ஆஹா அற்புதமான கவிதையாலே வசந்த மண்டபத்தை வடித்துக் காண்பித்து... தங்களின் அன்பையே நற்றிஎன்னும் காணிக்கையாக்கி நூறைத் தொட்டாலும் ஆரம்ப நிமிடத்தைகூட ஞாபகத்தில் கொண்டு தங்களின் நன்றி பாராட்டும் உயரியப் பண்பு தமிழன்னை நல்கியது என்பதில் அணுவளவேனும் சந்தேகம் இல்லை என்றாலும்.. அன்னை தமிழ் என்னை வசந்த மண்டபம் அழைத்து வந்து இதோ பாரடா நம் மக்களை... என்று என் சகோதரர்க மக்களோடு இருக்கச் செய்துள்ளாள் என்ற பெருமிதத்தோடு... இன்னும் பலநூறு... பல்லாயிரம் கவிதைகளை வடித்து வசந்த மண்டபத்தை அலங்கரிக்க தங்களை வேண்டியும், எனது... வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

sasikala said...

வசந்த மண்டபத்திற்குள் நுழையும் போதே கிராமிய மணம் நிறைய நீங்கள் தரும் தமிழ் வரிகள் காலத்தால் அழியா சித்திரங்களாய் மனதில் நிற்கின்றன தங்கள் அடுத்தடுத்த பதிவுகளுக்காய் காத்திருக்கிறோம் அருமை அண்ணா நன்றி

kavithai (kovaikkavi) said...

வாரணம்(சங்கு)பல ஊதி வiவேற்பு , தங்கள் 100 பதிவாம் தோரணத்திற்கு. வாழ்த்துகள். மேலும் முன்னேறட்டும்...பயணம்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.இன்னும் சுற்றிலும் நிறைந்த தோரணங்கள் வசந்தமண்டபம் எங்கும் தொங்கும்.உங்கள் எழுத்துக்கள் மனதை நிறைக்கின்றன.தொடருங்கள் !

ராஜி said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ

ராஜி said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ

ராஜி said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ

சென்னை பித்தன் said...

தொடர்ந்து சாதனை படைக்க வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

பத்து மாதங்களில் நூறு பதிவுகள் - வாழ்த்துகள்...

இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி தொடர்ந்து மகிழ்விக்க வாழ்த்துகள்....

கே. பி. ஜனா... said...

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
http://kbjana.blogspot.com/2012/01/blog-post_18.html

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வே.சுப்பிரமணியன்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்,
என் மீதான நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கும்
அழகான கருத்துக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
என் மீதான நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கும்
அழகான கருத்துக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
என் மீதான நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கும்
அழகான கருத்துக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜ்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
என் மீதான நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கும்
அழகான கருத்துக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் தனசேகரன்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
என் மீதான நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கும்
அழகான கருத்துக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் பெருந்தகையே,
அருமையான கவியால் எமக்கு வாழ்த்துரைத்த
தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஷைலஜா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி மும்தாஜ்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தமிழ்விரும்பி ஆலாசியம் ஐயா,
என் மீதான நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கும்
அழகான கருத்துக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தங்கை சசிகலா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராஜி,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னைபித்தன் ஐயா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கே. பி. ஜனா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

பி.அமல்ராஜ் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா,

நூறாவது தோரணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகளை அதிகம் ரசிப்பவர்களில் அடியேனும் ஒருவன். தொடர்ந்தும் பல கவித் தோரணைகளைத் தர வாழ்த்துக்கின்றேன்.

சந்திரகௌரி said...

100 பதிவுகளை பொறுப்புடன் தந்து அவ்வப்போது எங்கள் மூளைக்கும் வேலை கொடுத்து நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் பலரைக் கவர்ந்திழுக்கும் வசந்த மண்டபம் ஆல்போல் வேரூன்றி அருகு போல் தளைத்து பெரும் புகழும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

அம்பலத்தார் said...

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வலைப்பூக்களில் என் நெஞ்சை தொட்ட பூக்களில் வசந்த மண்டபமும் மறக்கமுடியாத ஒன்று. நீங்கள் இன்னும் பல இனிய படைப்புக்களை பிரசவிக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.

அன்புடன் மலிக்கா said...

வசந்த மண்டபம்
வாசனை வீசுகிறது
வாசலெங்கும்
வண்ணமிகு கவித்தோரணங்களால்
மண்டபெங்கும் கவிப்பூக்கள்
நிறைந்து வழியட்டும்
மனமெங்கும் மணம் கமழட்டும்

இன்னும் பல நூறு பதிவுகள் பதிய
இந்த அன்புச்சகோதரியின்
இதயமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

சதம் அடித்துள்ளீர்கள் சகோதரரே...மனமார வாழ்த்துகிறேன்...

தைரியமாக என் மகளிடம் காட்டும் வெகு சில வலைப்பூக்களில் முதன்மை உங்களது...

இந்த வெற்றியை கொண்டாடுங்கள் இரு செல்வங்களுடன்...

சற்றே இளைப்பாறி மறுபடியும் அதே வீரியத்துடன் வந்து மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்....

நம்பிக்கைபாண்டியன் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
தொடரட்டும் உங்கள் சீர் மிகு கவிதைகள்!

Shakthiprabha said...

வாழ்த்துக்கள் சகோ!
உங்கள் postive vibes, சிறந்த தமிழ் சுவைக்க சுவைக்க.... எங்களுக்கெல்லாம் வசந்த விழா தருகிறீர்கள் என்றால் மிகை அல்ல.

தனிமரம் said...

தொலைந்து போகும் அடையாளச் சின்னங்களை ஞாபகம் ஊட்டிப் பலகவிதை தந்த உங்களின் பதிவுலகப் பயணத்தில் 100 வது பதிவுகள் இன்னும் பல ஆயிரம் பதிவைக் கான வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் அண்ணா.
(சிறிய இடைவெளி பதிவுலகில் என்பதால் உடன் இணைய முடியவில்லை மன்னிக்கவும்) இனித் தொடர்ந்து பயணிப்போம் .

கீதா said...

அன்பு மகேந்திரன், தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும், மனமார்ந்த நன்றியும்.

முதலில் வந்து கருத்திட்டு வாழ்த்தியதாய் என்னை நினைவில் கொண்டு நன்றி தெரிவித்துள்ள தங்களது நூறாவது பதிவினைப் பாராட்டி வாழ்த்த கடைசியாக வந்ததை எண்ணி வருந்துகிறேன். எல்லாம் கணினி செய்த சதி. வேறென்ன சொல்லம?

மண் மணம் மாறாத, தமிழர் பாரம்பரியம் மறவாத தங்கள் வசந்தமண்டபத்தில் இளைப்பாற இன்னும் வருவேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் பி.அமல்ராஜ்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகௌரி,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை அம்பலத்தார் அவர்களே,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மலிக்கா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நம்பிக்கைபாண்டியன்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சக்திபிரபா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் நேசன்,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

Post a Comment