Wednesday, 7 September 2011

செதுக்கியது யாரப்பா??!!


என்ன பாவம் செய்தனையோ?
ஏனிந்த கோலம் கொண்டாய்?
எடுத்தியம்ப வார்த்தையில்லை
என்மனது தவிக்குதையா!!

யார் செய்த சூனியமோ ?
யாருமற்ற இடத்தினிலே
உணர்ச்சியில்லா பிண்டமாய்
உறைந்து நீ போனாயே!!

தூற்றியோர் தூற்றலில்
துவண்டு போனாயோ?
வெறும்பேச்சு மூடரினால்
வெதும்பிப் போனாயோ??
உறவெனும் பெயரால்
உதாசீனம் செய்தனரோ?
நட்பின் நாற்றங்காலை
நாசம் செய்தனரோ??

சொர்க்கமென நினைக்கும்
சொத்தின் பெயரால்!
உடன்பிறப்பு யாரேனும்
உனைப்பிழை செய்தனரோ??

பாதாளம் பாய்ந்துவிட்ட
பணம் ஏதும் செய்ததுவோ?
செய்த தொழிலேதும்
சித்திரம் காட்டியதோ??


காலன் வடிவினிலே
கடன் ஏதும் செய்ததுவோ? -சிலர்
தன்னிலை உயர்த்திக்கொள்ள
உனையாரும் தாழ்த்தினரோ??

இயற்கையேதும் செய்ததுவோ
இயம்பிவிடு நண்பனே!
செயற்கையாய் உனையிங்கே
செதுக்கியது யாரப்பா!!

காலமெலாம் உன்னோடு
கலந்திருப்பேன் என்றெல்லாம்
காதல்மொழி பேசியவர்
கைகழுவி விட்டனரோ??பரந்திருந்த நிலமெலாம்
விளைந்திருந்த விளைச்சளது
பாழும் வெள்ளத்தால்
கருவறுத்து போனதுவோ??

மனசு ஆற்றாமையால்
மாறிமாறி கேட்கின்றேன்?
சுயநினைவில் நீயில்லை
யாரை நான் கேட்பது??

ஏற்றமில்லா உன்வாழ்வு
ஏமாற்றம் அளித்ததுவோ?
என்ன நான் செயவேனைய்யா - நீ
ஏர்வாடி ஏகிய பின்!!!

ஏங்காதே என் நண்பா!
ஏற்றம் வந்து சேருமைய்யா!
உன் இடத்தில் உனையன்றி
உட்கார வேண்டியவர்
கோடியிலும் அதிகமைய்யா!

பொறுமைகொள் மித்திரனே
பொற்காலம் உண்டாகும்!!!

அன்பன்
மகேந்திரன்

48 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
சொர்க்கமென நினைக்கும்
சொத்தின் பெயரால்!
உடன்பிறப்பு யாரேனும்
உனைப்பிழை செய்தனரோ??
//
நல்ல வரிகள்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஏங்காதே என் நண்பா!
ஏற்றம் வந்து சேருமைய்யா!
உன் இடத்தில் உனையன்றி
உட்கார வேண்டியவர்
கோடியிலும் அதிகமைய்யா!//
நன்பேண்டா..
அற்புதமான கவிதை..
பாராட்டுகள்..

மஞ்சுபாஷிணி said...

மனநிலை பிறழ என்னவெல்லாம் காரணமாக இருக்கக்கூடும் என்று ஒரு காரணத்தை கூட விட்டு விடாமல் கவனமாக கையாண்ட விதத்தை வியக்கிறேன் மகேந்திரன்....

வரிகளில் தெறித்த வேதனைத்துளிகள் படிப்போரின் மனதையும் கலங்கவைக்கிறதுப்பா...

இப்புவியில் சந்தோஷமாக வாழ எல்லா உயிருக்குமே உரிமையுண்டு.... ஆனால் தான் சந்தோஷமாக வாழ மற்றவர் சந்தோஷத்தை அழிக்கும் உரிமை ஆண்டவன் யாருக்குமே தரவில்லை...

அப்படி யாரேனும் இவருடைய சந்தோஷ உலகில் கொடுமைகள் செய்து இவரை உலகையும் தன்னையும் மறக்க செய்துவிட்டனரோ என்று நீங்கள் மனம் வருந்தி வரைந்த கவிதை அத்தனை சிறப்பு மகேந்திரன்....

மனதை தாக்கும் வரிகளுடன் கூடிய இந்த அருமையான கவிதை தந்தமைக்கு என் அன்பு வாழ்த்துகள்பா..

Lakshmi said...

பொறுமைகொள் மித்திரனே
பொற்காலம் உண்டாகும்
உருக்கமான கவிதை வரிகள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

பாதாளம் பாய்ந்துவிட்ட
பணம் ஏதும் செய்ததுவோ?

ஆழ்ந்த நோக்குடைய சிந்தனை.

முனைவர்.இரா.குணசீலன் said...

மனம் = கண்ணாடி!!!!!!!!

M.R said...
This comment has been removed by the author.
M.R said...

M.R said...
தமிழ் மணம் முன்று

படங்களை பார்க்கும்போழுதே மனம் வேதனை அடைகிறது நண்பரே

அதற்கான தங்கள் கவிதை நடை கேள்விகள் என் மனதிலும் ..

பகிர்வுக்கு நன்றி

7 September 2011 10

M.R said...

உலவு ஆறு

தமிழ் 10 5

ராஜா MVS said...

நினைவுத் தவறியவர்கள் குறித்த தங்களின் படைப்பு அருமை..நண்பரே..

நீங்கள் பயன்படுத்தும் படங்களே கவிதையை ப்ரதிபலிக்கிறது..

koodal bala said...

கண் கலங்க வைக்கிறது ...இவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற இயன்றதை செய்வோம் ....

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்
தங்களின் பாராட்டுக்கும்
இனிய கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி மஞ்சுபாஷினி
தங்களின் ஆழ்ந்த
படித்து கருவை உணர்ந்த இனிய கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் இனிய விளக்கக் கருத்துரைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் எம்.ரமேஷ்
தங்கள் மனதிலும் இவ்வெண்ணம் ஓடுவது இயற்கையே.
மனிதத்தின் உணர்வில் இது வேண்டும்.
இனிய கருத்துரைத்தமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜா MVS
தங்களின் அழகிய புரிந்துணர்ந்த
கருத்துக்கு என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா
தங்களின் உணர்வுமிக்க கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

MANO நாஞ்சில் மனோ said...

நெஞ்சை கதற வைத்து விட்டீர்களே மக்கா...

Rathnavel said...

அருமையான கவிதை.
வீதிகளில், கோவில்களில், பேருந்து நிலையங்களில் மன நிலை பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது மனசு வேதனைப்படும்.
உங்கள் கவிதை மனசை கலங்கடிக்கிறது.

RAMVI said...

வணக்கம் மகேந்திரன். என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதர்க்கு மிக்க நன்றி.

அருமையான கவிதை.

//மனசு ஆற்றாமையால்
மாறிமாறி கேட்கின்றேன்?
சுயநினைவில் நீயில்லை
யாரை நான் கேட்பது??//

ஆம் யாரை கேட்பது?

சந்திரகௌரி said...

உண்மையில் உங்கள் நண்பனே இக்கோலத்தில் உள்ளாரா? கவிவரிகளைப் படிக்கையில் கண்ணீர் மல்குகின்றது. விதியென்று விட்டுவிட முடியுமா? சதியென்று சாடிவிட முடியுமா? அருகிருந்து ஆறுதல்மொழி பேசி, அடிக்கடி உரசல் அன்பைப் பகிர்ந்து கொண்டு, தயவுடன் மாறிவிட்ட மூளைக்கு பரிகாரம் பண்ணுங்கள். பலன் கிடைக்கும். அழகான வரிகள் மகேந்திரன். உள்ளத்தினுள் நுழைந்துவிட்டது.

Anonymous said...

அற்புதமான கவிதை...சகோதரா...
நேற்றே வாசித்தேன்...மறுமொழி இடவில்லை...மறுபடி வாசிக்கலாம் அல்லவா..?

சென்னை பித்தன் said...

//பொறுமைகொள் மித்திரனே
பொற்காலம் உண்டாகும்!!!//


நம்பிக்கை ஊட்டும் வரிகள்!

KANA VARO said...

நல்ல கவி வரிகள்

புலவர் சா இராமாநுசம் said...

சோகத்தின் தாக்கம்
சொற்களின் ஆக்கம்
கவிதையின் வரிகளில்
விரவிக் கிடக்கின்றன
புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

பொறுமைகொள் மித்திரனே
பொற்காலம் உண்டாகும்!!!
நம்பிக்கை ஊட்டும் வரிகள்!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ
தங்களின் உணர்வுமிக்க கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் உணர்வுமிக்க கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி
தங்களை வசந்தமண்டப வாசல் சாமரம் வீசி
வரவேற்கிறது.
இனிய கருத்துரைத்தமைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி

தங்களின் ஆழ்ந்த விரிவான கருத்துக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இங்கு நான் குறிப்பிட்டு எழுதி இருப்பது
பொதுவான செய்தியே, என் நண்பர்கள் யாரையும்
குறிப்பிடவில்லை.
மனநலம் குன்றியவர்களை என் நண்பனாக பாவித்து
எழுதியே படைப்பே.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரேவேரி
ஓ... வாசிக்கலாமே
தொடர்ந்து படைப்புகளை படித்து
அருமையான கருத்துக்கள்
கொடுப்பதற்கு
என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னை பித்தன் ஐயா
தங்களின் உணர்வுமிக்க கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வரோதயன்
தங்களை வசந்தமண்டப வாசல்
பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
அழகுற கருத்திட்டமைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
கவனிப்பாரற்று, வாழ்வில் கைவிடப் பட்டோராய்,
தெருவோரந் தன்னில் வாழ்க்கையினைக் கழிக்கும் உள்ளங்களைப் பற்றிய உணர்வு பூர்வமான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

♔ம.தி.சுதா♔ said...

படங்களே வரிகளின் வலிகளை சொல்கிறது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

சாகம்பரி said...

கடவுள் மனிதனின் மனிதத்துவத்தை சோதனை செய்ய இது போன்ற சூழல்களை உருவாக்கிவிட்டானோ என்று நினைப்பேன். ஆழ்ந்த வரிகள் சகோ.

கார்த்தி said...

கவிதை வரிகள் மற்றும் படமும் நெஞ்சை உருகவைத்து விட்டது.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிரூபன்
தங்களின் உணர்வுமிக்க கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நிறை நண்பர் ம.தி.சுதா.

உள்ளப்பூரிப்புடன் வசந்தமண்டப வாசல் உங்களை
சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறது.

அழகிய கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்
நன்றிகளும்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சாகம்பரி,
தங்களின் ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கார்த்தி

மனமகிழ்வுடன் வசந்தமண்டப வாசல் உங்களை
மங்கள வரவேற்பு கொடுக்கிறது.
இனிய கருத்துரைத்தமைக்கு
என் மனம்கனிந்த நன்றிகள்.

அம்பாளடியாள் said...

உறவெனும் பெயரால்
உதாசீனம் செய்தனரோ?
நட்பின் நாற்றங்காலை
நாசம் செய்தனரோ??

சொர்க்கமென நினைக்கும்
சொத்தின் பெயரால்!
உடன்பிறப்பு யாரேனும்
உனைப்பிழை செய்தனரோ??

பாதாளம் பாய்ந்துவிட்ட
பணம் ஏதும் செய்ததுவோ?
செய்த தொழிலேதும்
சித்திரம் காட்டியதோ??

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோ ........

அம்பாளடியாள் said...

எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ .......

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

Post a Comment