Powered By Blogger

Sunday 4 September 2011

உற்சாகம் இழப்பதில்லை!!


உறுப்பொன்று குறைந்தால்
வெறுப்பேதும்  இல்லை!
கருப்பொருளாய் ஆவதற்கு - நான்
மறுப்பேதும் சொல்வதில்லை!!

சிறகொடிந்து போனாலும்
மனதொடிந்து போகவில்லை
இவ்வாழ்வில் எந்நாளும்
என்னிலை நினைத்ததில்லை!!


உடலுறுப்பில்தானே குறை
உள்ளத்தில் அல்லவே?!!
உயரத்தில் ஏறும்வரை - நான்
உற்சாகம் இழப்பதில்லை!!

ஆதாரம் சிறிதின்றி
ஊசலாடும் இப்புவியே
ஒருகணம் நில்லாது
தன்னையும் சுற்றி
தன்குழுத் தலைவனாம்
ஆதவனையும் சுற்றுவதில்லையா??!!


இலை உதிர்ந்துபோனாலும்
கிளையொடிந்து போனாலும்!
வேருக்கு நீரற்று
தன்னிலை சாய்ந்தாலும்
ஓங்கிவளர்ந்த மரமென்றும்
கனியீன மறந்ததில்லை!!

விண்வெளி ஓடையில்
விண்மீன்கள் சூழ்ந்திருக்க!
வெள்ளியுருக்கி வார்த்ததுபோல்
உருண்டுவரும் நிலவதுவோ!
தன்னுடல் தேய்ந்தபோதிலும்
ஒளிபாய்ச்ச மறுப்பதில்லையே!!



ஓராயிரம் அடிகொண்ட பாக்கள்
ஏற்றிருக்கும் காவியம்கூட
இன்று பேசப்படுவதில்லை!
அளவிற் சிறியதாம்
ஒன்றேமுக்கால் அடி கொண்ட
திருமறைத் திருக்குறளோ
குன்றேறி நிற்கிறதே!!

கழியூன்றி நடந்தாலும்
பிழையின்றி வாழ்ந்திடுவேன்!!
குள்ளமாக இருந்தாலும்
வாழ்க்கைப் பள்ளம்
பார்த்துப் போயிடுவேன்!!
கரமொன்று போனாலும்
சிரம் இழக்கவில்லையே!
சிறப்புற வாழ்ந்திடுவேன்!!



சாதியென்னும் புரையோடி
மனக்காயம் கொண்டவரே!
மதமெனும் வாள்பட்டு
இதயத்தை இழந்தவரே!
உன்னிலை பார்க்கையிலே
என்னிலை பெரிதாக
ஏகாந்தம் கொண்டிருப்பேன்!!

அணு உலைகள் வேண்டாமென்று
அலறியிங்கே கத்தினாலும்
செவியேற்க மறுத்திடும்
செவிடர்கள் நிறைந்திருக்கும்
ஊனமான  அரசைவிட
நானிருக்கும் நிலையதுவோ
நயமாக உள்ளதுவே!!



எனக்கென்று வேலையுண்டு
அதற்கான கூலியுண்டு!
ஒருத்திறன் போனாலும்
மறுத்திறன் வளர்த்திடுவேன்!
ஊனம் என்ற சொல்லையே
அகராதி பக்கத்தில்
இல்லாமல் செய்திடுவேன்!!!

அன்பன்
மகேந்திரன்

55 comments:

கூடல் பாலா said...

அருமை ...அருமை ...மிக மிக அருமை !

Unknown said...

தன்னம்பிக்கை எனும் தும்பிக்கை இருக்க பயமேன் என்று சொல்லி இருக்கீங்க மாப்ள அருமை!

முனைவர் இரா.குணசீலன் said...

மிக அழகான,தெளிவான,தேவையான பதிவு நண்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

ஓராயிரம் அடிகொண்ட பாக்கள்
ஏற்றிருக்கும் காவியம்கூட
இன்று பேசப்படுவதில்லை!
அளவிற் சிறியதாம்
ஒன்றேமுக்கால் அடி கொண்ட
திருமறைத் திருக்குறளோ
குன்றேறி நிற்கிறதே!!


மிக அழகாச் சொல்லிட்டீங்க நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் நண்பரே தமிழ்மணத்தில் சிலகாலமாகவே இடுகைகளை சமர்பிப்பதில் சிக்கல் உள்ளது..

எனது இடுகையைக் கூட இரண்டு மூன்று உலவிகளைத் திறந்தே இன்று சமர்ப்பித்தேன்.

இன்று தங்கள் இடுகையை தாங்க சமர்பிப்பதில் என்னைப் போல தங்களுக்கும் சிக்கல் இருந்திருக்கும் என்று கருதி நானே தமிழ்மணத்தில் சமர்பித்துவிட்டேன் நண்பா.

M.R said...

thamil manam 2

M.R said...

நல்லதொரு தன்னம்பிக்கையை ஊட்டும் கவிதை.

உடல் ஊனம் பெரிதல்ல
மன ஊனமே பெரிது

என சொல்லும் கவிதை
பகிர்வுக்கு நன்றி நண்பா

kupps said...

மிகவும் அருமையான தன்னம்பிக்கை கவிதை கூடவே நம் சமூக அவலங்களையும் தோலுரித்து காட்டுகிறது.வாழ்த்துக்கள் .

Anonymous said...

''....இலை உதிர்ந்துபோனாலும்
கிளையொடிந்து போனாலும்!
வேருக்கு நீரற்று
தன்னிலை சாய்ந்தாலும்
ஓங்கிவளர்ந்த மரமென்றும்
கனியீன மறந்ததில்லை!!...''
மிக அருமையான வரிகள் அனைத்தும். வளர்க!......வாழ்த்துகள் சகோதரா!
வேதா. இலங்காதிலகம்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
படங்கள் உணர்த்துகின்றன செய்திகளை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

ராஜா MVS said...

~*~ஊனம் என்ற சொல்லையே
அகராதி பக்கத்தில்
இல்லாமல் செய்திடுவேன்!!!~*~

அருமையான வரிகள் நண்பரே..
வாழ்த்துகள்..

MANO நாஞ்சில் மனோ said...

அற்புதமா சொல்லி இருக்கீங்க மக்கா......மனதில் உறுதி உள்ளவர்கள் அவர்கள்தான் இல்லையா....

மாலதி said...

அணு உலைகள் வேண்டாமென்று
அலறியிங்கே கத்தினாலும்
செவியேற்க மறுத்திடும்
செவிடர்கள் நிறைந்திருக்கும்
ஊனமான அரசைவிட
நானிருக்கும் நிலையதுவோ
நயமாக உள்ளதுவே!!
உண்மையில் நல்ல ஆக்கம் பாராட்டுகள் உடல் உறுப்புதான் ஊனம் உள்ளத்தில் அல்ல என்ற நேரிய வரிகள் பரட்டதக்கான இந்த சிந்தனைதான் இந்த குமுகத்திற்கு தேவை இந்த பதிவு பாராட்டப்பட வேண்டியவை .

சென்னை பித்தன் said...

த.ம.7

சென்னை பித்தன் said...

மாற்றுத்திறனாளிகள் பற்றி ஒரு நல்ல
பதிவு!

Nirosh said...

அருமை அருமை... வாழ்த்துக்கள்..!

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் நண்பரே..

வேர்களைத்தேடி வந்து இடுகைகளைப் படித்து சிந்தனைகளை உள்வாங்கி,

தங்கள் சிந்தனைகளையும் முன்வைத்துச் சென்றமையால்

உங்களுக்கு

சிந்தனைச் சிற்பி என்னும் விருதளித்து மகிழ்கிறேன்

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html
நன்றி

Unknown said...

கல்லில் வடித்த சிலைபோல
கருத்தில் வரிகள் நிலைசால
சொல்லில் வடித்தே தகைசால
சொக்கத் தங்க நகைபோல
வில்லில் தொடுத்த கணையாக
விரைந்து வருதற் கிணையாக
மல்லி மலரென மணக்கின்றீர்
மகேந்திர கவிதை உரைக்கின்றீர்

புலவர் சா இராமாநுசம்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் பாலா
தங்களின் மேலான
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்
அழகாக கருத்தமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நிறை முனைவரே
தங்களின் விரிவான ஆழ்ந்த கருத்துரைக்கும்
தங்கள் வலைப்பூவான வேர்களை தரிசிக்கவந்த
விழுதான எனக்கு 'சிந்தனைச் சிற்பி' விருது
அளித்தமைக்கும்
பணிவன்புடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ரமேஸ்
தங்களின் அழகான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி
தங்களின் வாழ்த்துக்கும்
மேன்மையான கருத்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்
தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நிறை ரத்னவேல் ஐயா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜா
தங்களின் மேலான
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ
தங்களை வசந்தமண்டப வாசல்
சாமரம் வீசி வரவேற்கிறது.
அருமையாக கருத்துரைத்தமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள் மக்களே.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மாலதி
தங்களின் பாராட்டுக்கும் மேலான கருத்துக்கும்
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நிறை சென்னை பித்தன் ஐயா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரோஷ்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா
தங்களின் கருத்துக் கவிதையை பார்க்கையில்
உள்ளம் பூரிக்கிறது ஐயா.
யான் செய்த தவமும் இதுவே.

என் சிரம் தாழ்ந்த நன்றிகள் புலவரே.

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
உடலில் குறை இருப்பினும் உள்ளத்தில் நம்பிக்கை குறைவடையவில்லை எனும் உத்வேக வரிகளைக் கவிதையின் முதற்பாதியில் தந்திருக்கிறீங்க.

இறுதி வரிகளில் உடல் ஊனமுற்றோரை ஏறெடுத்துப் பார்க்காத சமூகத்தின் மீதான கவிஞனின் கோபத்தினையும் உங்களின் கவிதை விளம்பி நிற்கிறது.

நிரூபன் said...

மனசைக் கனக்கச் செய்யும் கவி வரிகள்.

இறைவன் அருளால் உள்ளத்தில் நம்பிக்கையோடு வாழும் இவர்களுக்கு நல் வாழ்வு கிடைக்க வேண்டும்.

மாய உலகம் said...

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை படிக்கும்போதே உரமேறுகிறது குருதியில் ...ஊனம் என்ற சொல்லே உங்களது அகராதியில் இருந்து எடுத்திடுவேன் உங்களது நியாமான அவேசத்திற்கு தலை வணங்குகிறேன்...வாழ்த்துக்கள் நண்பா

மாய உலகம் said...

தமிழ் மணம் 2

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்
தங்களின் உணர்வுமிக்க கருத்துக்கு
என் மனம் மகிழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்
தங்களின் மேன்மையான கருத்துக்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Anonymous said...

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை...
ஊருக்கு போறீங்கன்னு கேள்விப்பட்டேன்...பொறாமையாக இருக்கு...:)

குறையொன்றுமில்லை. said...

உடலுறுப்பில்தானே குறை
உள்ளத்தில் அல்லவே?!!
உயரத்தில் ஏறும்வரை - நான்
உற்சாகம் இழப்பதில்லை!!



மிகவும் அருமையான வரிகள்.

இராஜராஜேஸ்வரி said...

உடலுறுப்பில்தானே குறை
உள்ளத்தில் அல்லவே?!!

மாற்றுத்திறனாளியின் மனம் தளராத ஊக்கப் பகிர்வு. பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

தன்னம்பிக்கை தரும் விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஆசிரியர் தின விழா வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி

ஆமாங்கோ இன்னும் எட்டு நாட்களில் ஊருக்கு போறேங்கோ

பொறாமை எல்லாம் படக்கூடாது ஆமா சொல்லிபுட்டேன்...

மகேந்திரன் said...

அன்பு நிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நிறை சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தாம் கொண்ட தன்னம்பிக்கையில் தான் இருக்கிறது வாழ்க்கை...

சாகம்பரி said...

மாற்றுத்திறனாளிகளை பாராட்டும் தன்னம்பிக்கை போற்றும் அருமையான கவிதை.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கால்கள் ஊனமென்றால் என்ன நான் உழைப்பால் உயர்ந்து நிற்கையில் உலகமே என் காலடியில் தான் - மகேஷ்........
இது போன்ற நல்ல தொகுப்பிலும் கவிதை எழுதலாம் என்று எனக்கு எடுத்துக்காட்டி விட்டீர்கள் நண்பரே. எழுதுகிறேன் வந்து என் வலைக்கு தரிசனம் தாருங்கள் ...

மகேஷ் கவிதை

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் அழகான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நிறை சகோதரி சாகம்பரி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மகேஸ்வரன்
தங்களை வசந்தமண்டப வாசல்
சாமரம் வீசி வரவேற்கிறது.
அருமையாக கருத்துரைத்தமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே

rajamelaiyur said...

அருமை

மகேந்திரன் said...

அன்பு நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா
தங்களின் மேலான
கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Weilereroe said...

தன்னம்பிக்கை தரும் விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Post a Comment