Powered By Blogger

Sunday 2 October 2011

திறம்பட வாழ்ந்திடு!!


ஆழ்கடல் தேடினும்
காணாத நல்முத்தே!
சுடரொளியாய் என் நெஞ்சில்
கதிர் பாய்ச்சும் பொன்முத்தே!

ஏழிசை இணைந்திடினும்
மீட்டாத இன்னிசையே!
மழலை குரலினின்றும்
இனித்திடும் இன்முத்தே!!

தென்றலை புறந்தள்ளும்
மந்தகாச இன்காற்றே!
அமிழ்தினும் இனிதேற்ற
அழகான தமிழ்முத்தே!!


உன்னருமை பகன்றிடவே
இச்செனமம் போதாதே!
இப்பிறப்பில் புண்ணியமேகினேன்
தமிழனாய் பிறந்ததால்!!

உன்னுடற்கூறு சொல்லிடவே
காவியங்கள் கோடியாம்!
அடியேனின் ஓர் கவியோ
அதிலே ஒன்றாமோ?!!



செந்தமிழே உன்னிடத்தில்
சொல்வளங்கள் கற்பமாம்!
அதிலே ஒன்றேடுத்தேன் - அதுவே
அஃகம் சுருக்கேல்!!

அஃகம் என்னவெனில்
தானியம் என்றறிந்தேன்!
அருஞ்சொல்லிற்கு ஆங்கே
பொருள்கூறிய உன்னிடம்!!

உடலோடு மட்டுமல்ல
உயிர்வளர்க்க வேண்டியே!
தானியங்கள் தரணியில்
விற்பனை ஆனதுவே!!


தானியத்தின் அளவுகளில்
தவறுகள் கூடாதென!
அவனியறியக் கூறியதே
அஃகம் சுருக்கேல்!!

அஃகம் என்பதற்கு
முறைமை என்றொரு
பொருளொன்று உண்டென
அகராதி படைத்தாய்!!

முறைமை என்றால்
தெரியாது விழிக்கையில்!
இதோ நானிருக்கேன் என
தாவியிங்கு வந்தாயே!!


உன்னுள் உறைந்திருக்கும்
திறமையெனும் செல்வத்தை
முறைப்படுத்தல் என்பதே
முறைமை எனச்சொன்னாய்!!

கட்டற்ற திறமையை
முறைப்படுத்து மானிடா!
மெய்க்குள்ளே வலைப்படுத்தி
சுருக்கிக் கொள்ளாதே!!


திறமையை உணர்ந்திரு
தனித்திறமை கண்டிடு!
முறையாக வளர்த்திடு
வளர்த்தபின் வெளிக்கொணர்!!

வெளிக்கொணரும் திறமையை
சகதியில் சிந்தாதே!
சமுதாய சாலையில்
சேறுகள் உண்டெனில்
திறமையால் துடைத்திடு!
திறம்பட வாழ்ந்திடு!!


அன்பன்
மகேந்திரன்

54 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

கட்டற்ற திறமையை
முறைப்படுத்து மானிடா!
மெய்க்குள்ளே வலைப்படுத்தி
சுருக்கிக் கொள்ளாதே!!

அழகாகச் சொன்னீர்கள் நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..

இன்று என் வலையுலக வாழ்வில் 450 இடுகை வெளியிட்ட மகிழ்வான நாள்..

என் மகிழ்வில் பங்குகொள்ளத் தங்களையும் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/10/450.html

Aathira mullai said...

மகேந்திரன் சொன்னது…

மருத்துவத்தில் மாண்போற்றும்
மகத்தான சேவை செய்துவரும்
ஸ்டான்லி மருத்துவமனைக்கு
சிரம் தாழ்ந்த நன்றிகள்....
இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தான்
பொருளுதவி கிடைத்தாலும் அதை ஏப்பமிட்டு செல்பவர்கள்
மத்தியில், இவர்கள் போன்ற சிலரால் தான்
மருத்துவத் துறையே தலைதூக்கி நிற்கிறது....
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
அன்பு மகேந்திரன்,
தாங்கள் என் கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டம் அப்படியே குமுதம் ஹெல்த் இதழில் வெளியாகியுள்ளது. நன்றி.

Aathira mullai said...

இப்போது உங்கள் கவிதைகள் பற்றி,


வெளிக்கொணரும் திறமையை
சகதியில் சிந்தாதே!
சமுதாய சாலையில்
சேறுகள் உண்டெனில்
திறமையால் துடைத்திடு!
திறம்பட வாழ்ந்திடு!!

நல்ல சமுதாயச் சிந்தனை வரிகள். எழுச்சியூட்டிடும் கவிக்கு வாழ்த்துகள், நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு
பயனுள்ளவைகளை மட்டுமே கொடுப்பது என்கிற
தங்கள் எண்ணம் சிறப்பிற்குரியது
தொடர வாழ்த்துக்கள் த.ம 2

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இதோ உங்கள் தளத்துக்கு ஓடோடி வருகிறேன்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ஆதிரா
தங்களுடைய பதிவுக்கான என்னுடைய பின்னூட்டம் முமுதம் ஹெல்த் பத்திரிகையில் வந்தது மிகுந்த சந்தோசம்.

இங்கே இன்றைய பதிவுக்காய் தங்களின் இனிய கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி
இங்கே என் எண்ணங்களை வண்ணங்களாய்
பிரதிபளித்தமைக்கும் அழகிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

SURYAJEEVA said...

தனித் திறமை உண்டென முதலில் நம்ப வேண்டும்... தன்னம்பிக்கை ஒன்றே தனி தன்மை வளர வழி

மாய உலகம் said...

வெளிக்கொணரும் திறமையை
சகதியில் சிந்தாதே!//

சிந்திக்க வைக்கும் கவிதை நண்பா

கோகுல் said...

உடலோடு மட்டுமல்ல
உயிர்வளர்க்க வேண்டியே!
தானியங்கள் தரணியில்
விற்பனை ஆனதுவே!!//

இது நிச்சயம்
நிகழவேண்டும்!

கோகுல் said...

வெளிக்கொணரும் திறமையை
சகதியில் சிந்தாதே!
சமுதாய சாலையில்
சேறுகள் உண்டெனில்
திறமையால் துடைத்திடு!
திறம்பட வாழ்ந்திடு!!
//

நிறைவாக சொன்னாலும் ''நிறைவாய்''
சொன்னீர்கள்!நன்றி!

Unknown said...

சூப்பர் கவிதை நண்பா

Sakunthala said...

ஔவையார் அருளிய ஆத்திசூடியின்
ஒரு கூற்றை அழகுத் தமிழில்
கவியாக்கியமைக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

எதையும் ஆழமாக ஆயும் தங்கள்
சிந்தனையின் வேளிப்பாடு
கவிதையில் தெரிகிறது நன்று!


புலவர் சா இராமாநுசம்

சுதா SJ said...

கவிதை அருமை பாஸ்..... நல்ல கவிதையும் வருது உங்களுக்கு

ராஜா MVS said...

~*~திறமையை உணர்ந்திரு
தனித்திறமை கண்டிடு!
முறையாக வளர்த்திடு
வளர்த்தபின் வெளிக்கொணர்!!~*~

நல்ல ஒரு ஆழ்சிந்தனை...

கவிதை மிக அருமை..நண்பரே...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வைரை சதிஷ்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழி சகுந்தலா
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துஷ்யந்தன்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

Anonymous said...

வெளிக்கொணரும் திறமையை
சகதியில் சிந்தாதே!
சமுதாய சாலையில்
சேறுகள் உண்டெனில்
திறமையால் துடைத்திடு!
திறம்பட வாழ்ந்திடு!!
....
முத்தாய்ப்பு...சகோதரரே...
அருமையான கவிதை...தொடர்ந்து சமூக சிந்தனையோடு எழுதுங்கள்..வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை நண்பரே... உங்களின் கவிதைகளில் தெரியும் சிந்தனைகள் அபாரம்...

Anonymous said...

தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் கவிதைகள். வாழ்த்துக்கள் நண்பரே!

M.R said...

அழகான அர்த்தமுள்ள கவிதை நண்பரே
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை வரிகள் அழகு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய கவிதை வரிகள்...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,

மனித உலகில் நாம் வாழும் காலத்தில் எம் காலத்தினைப் பயனுள்ளதாக்கித் திறம்பட எம் திறமைகளை, எம்முள் ஒளிந்திருக்கும் நல்ல விடயங்களை வெளிக் கொணர்ந்து வாழ வேண்டும் எனும் கருத்துக்களை அழகிய தெள்ளு தமிழில் உங்கள் கவிதை சொல்லி நிற்கிறது.

கதம்ப உணர்வுகள் said...

குழந்தைகளை நல்வழியில் கொணர தந்த சிறப்பான வரிகள் மகேந்திரன்....

பாசத்துடன் கல்வியுடன் ஒழுக்கத்துடன் தைரியமும் நல்ல நல்ல கருத்துகளும் சேர்த்து பிள்ளைகளுக்கு கொடுக்கும்போது அவர்கள் எதிர்க்காலம் சிறப்பது உறுதி என்பது இங்கே அறியமுடிகிறதுப்பா உங்கள் வரிகளால்....

அன்பு வாழ்த்துகள் மகேந்திரன்...

சென்னை பித்தன் said...

அருமையான சிந்தனையை உள்ளடக்கிய அழகிய பதிவு.

Riyas said...

கவிதை நல்ல கருத்துக்களை கொண்டிருக்கிறது,, வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

திறமையை உணர்ந்திரு
தனித்திறமை கண்டிடு!
முறையாக வளர்த்திடு
வளர்த்தபின் வெளிக்கொணர்!!

வெளிக்கொணரும் திறமையை
சகதியில் சிந்தாதே!
சமுதாய சாலையில்
சேறுகள் உண்டெனில்
திறமையால் துடைத்திடு!
திறம்பட வாழ்ந்திடு!!

தங்கள் கவிதையில் அழகிய வாழ்க்கைத் தத்துவமும் எதார்த்தமாக வர்ணிக்கப்படுவது மேலும் சிறப்பினைக் கொடுக்கின்றது ஆக்கத்திற்கு.மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ..............

குறையொன்றுமில்லை. said...

வெளிக்கொணரும் திறமையை
சகதியில் சிந்தாதே!
சமுதாய சாலையில்
சேறுகள் உண்டெனில்
திறமையால் துடைத்திடு!
திறம்பட வாழ்ந்திடு!!



நான் மிகவும் ரசித்த வரிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிரூபன்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னை பித்தன் ஐயா
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரியாஸ்
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாலதி said...

இன்றுள்ள நிலையில் மனிதர் களுக்கு தன்னம்பிக்கை மிகவும் தேவையாகிறது இதனை மிக்கவும் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் உலம்நிரந்தபரட்டுகள்

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மாலதி
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

vetha (kovaikkavi) said...

''...வெளிக்கொணரும் திறமையை
சகதியில் சிந்தாதே!
சமுதாய சாலையில்
சேறுகள் உண்டெனில்
திறமையால் துடைத்திடு!
திறம்பட வாழ்ந்திடு!!...'''
மிக நல்ல கவிதை வாழ்த்துகள் வளர்க புகழ்!
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

காட்டான் said...

வணக்கம் மாப்பிள உங்கள் கவிதைகள் என்றுமே சமுதாய சிந்தனைகளை நோக்கியே நிற்கின்றவை அருமையான கவிதை பகிர்விற்கு வாழ்த்துக்கள்..

Post a Comment