Powered By Blogger

Friday 9 September 2011

தப்பெடுத்து பாடவந்தேன்!!


ஆடவந்தேன் பாடவந்தேன்
பாட்டுபாடி ஓடிவந்தேன்!
பாட்டிலொரு சேதிசொல்ல
தப்பெடுத்து நாடிவந்தேன்!!

மரக்கட்டை குச்செடுத்து
வட்டமாக தறித்துவந்து!
குத்துப்பாட்டு பாடிடவே
சட்டமொன்னு செஞ்சுவந்தேன்!!


செத்தமாடு தோலெடுத்து
பக்குவமா பதப்படுத்தி
சட்டத்தில இழுத்துமாட்டி
சேதியொன்னு சொல்லவந்தேன்!!

சிம்புகுச்சி மேலிருக்க
அடிக்குச்சி கீழிருக்க!
தாளம்போட்டு ஆடிவந்தேன்
தடம்புரண்ட கதைசொல்ல!!



சத்தமாக பாடிடுவேன்
சாமிகளே கேளுங்கய்யா!
சட்டத்தை புறந்தள்ளும்
சாயம்போன ஆசாமியின்
கதைய நானும் சொல்லவந்தேன்
தப்பெடுத்து ஆடிக்கிட்டு!!

நெஞ்சிலொரு கேள்விவந்து
குடஞ்சிகிட்டே இருக்குதைய்யா!
காவல்துறை என்பதென்ன?
பொன்னுமக்கா சொல்லிடுங்க!!



பச்சைசட்டை போட்டவரே
மைனர்போல நிற்பவரே!
நான் கேட்ட கேள்வி உங்க
காதிலே விழுந்துசாய்யா!!

கடுங்காவல் சட்டமெல்லாம்
காக்கிசட்டை பாக்கெட்டுல
கவுத்தியிங்கே போட்டுபுட்டு
காரோடும் வீதியில
காசுபுடுங்கி திங்கிராய்யா!!

மணல்லாரி ஒன்னுபோனா
மனசுக்குள்ளே சிரிக்கிராய்யா
மாமூல வாங்கிபுட்டு
மரநிழலில் ஒதுங்குராய்யா!!



அடேங்கப்பா கொள்ளையெல்லாம்
அசால்ட்டாக விட்டுபுட்டு!
அரிசிப்பொரி எடுத்தவன
தாவிவந்து பிடிக்கிராய்யா!!

பார்த்து பார்த்து புளிச்சிப் போச்சு
பாவிப்பய செயலையெல்லாம்!
மூணு நாளு முன்னாடி
நடந்த கதை சொல்லிடுறேன்
செல்லமக்கா கேட்டிடுங்க!!

உத்தரம்போல் உள்ளதைய்யா
உத்தரபிரதேச மாநிலமாம்!
உள்ளமெல்லா நடுங்குதைய்யா
சொல்லவந்த சேதிசொல்ல!!



இந்தப்பாதை இன்னோருக்கு
போகாதப்பா வாகனத்தில்
என்றுசொல்லி குறிபோட்டு
அலப்பறையா நின்றிருந்தான்
காவலாளி ஒருவனங்கே!!

இந்தசேதி தெரியாத
வெளியூரு பையனவன்
கூடாத பாதையில
போகையில பிடிச்சிபுட்டான்!!



வெளியூரு காரனின்னு
வெவரமாக தெரிஞ்சிகிட்டு!
இந்தபாத வந்ததால
மன்னிச்சி விட்டுடுறேன்
ஐம்பது ரூபாய
கொடுத்துபுட்டு போயிவிடுன்னு!!

அந்தப்பையன் கொடுக்கவில்லை
அழுதுகிட்டே நின்றிருந்தான்!
கோபப்பட்ட காவல்காரன்
கோவைப்பழம் போன்றவன
கம்பெடுத்து அடிச்சடிச்சே
கொலைசெஞ்சி போட்டுட்டான்!!


இதென்ன கொடுமையப்பா
சொல்லிடுங்க தங்கமக்கா!
கேட்குறதுக்கு ஆளில்லையா
கோமாளிப் பயலுகள!!

ஐந்தாயிரம் நான் தாரேன்
உன்னுயிர விட்டுபுடு!
அடுத்தவன் உயிரென்ன
அவ்வளவு இளப்பமாய்யா!!



காவலுக்கு கெட்டிக்காரன்
கருப்பசாமி போலிங்கே!
ஆயிரம் பேர் இருக்காங்க
நேர்மையான குணத்தோட!!

இதுபோல சின்னசின்ன
சில்லரைப் பயலுகள
சிக்கெடுத்து சீவிடுங்க
மிடுக்கான காவல்துறை
முதுகெலும்பு ஓடிஞ்சிபோயி
சீக்குவந்து சேர்வதற்குள்!!

செய்தி இணைப்பு
http://haryanahighway.blogspot.com/2011/09/up-policeman-kills-man-for-rs-50-bribe.html
http://in.news.yahoo.com/policeman-kills-man-rs-50-054849742.html
http://www.youtube.com/watch?v=UvMKIIWLVnw
http://www.newkerala.com/news/2011/worldnews-61676.html

அன்பன்
மகேந்திரன்

60 comments:

Unknown said...

முதல் ஓட்டு
முத்தான பாட்டு
சந்தமுடன் பாட
தந்தனத்தோம் ஆட
வந்ததய்யா கவிதை
வாழ்த்துகின்றேன் இதை

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

தமிழ் மணம் 2

மாய உலகம் said...

தப்பெடுத்து ஆடுவதில் வலது இடது பக்கமாக ஆடி சென்று வருவது கண்கொள்ளாகாட்சியாக ரசிக்கும்படியாக இருக்கும்

மாய உலகம் said...

தப்பு பாட்டு பட்டைய கிளப்பிடுச்சுங்க நண்பரே

மாய உலகம் said...

காவல்காரன் வசூல் செய்யும் மோசடியும், உத்திரபிரதேசத்தில் வக்கிரமாக வசூல் செய்து கொன்ற கொடூர காவலரை உக்கிரமாக பாடலில் சாடியது...சாட்டையடி நண்பரே....

மாய உலகம் said...

சில்லரை வசூல் செய்யும் சில்லரைத்தனமான காவல்துறையினருக்கிடையில் நல்ல காவலதுறையினரையும் குறிப்பிட்ட கவிதை பாராட்டுக்குறியது நண்பரே... வாழ்த்துக்கள்

F.NIHAZA said...

உங்கள் வரிகளில் யதார்த்தத்தை அள்ளித்தெளிக்கிறீர்....
அருமை....

rajamelaiyur said...

//சிம்புகுச்சி மேலிருக்க
அடிக்குச்சி கீழிருக்க!
தாளம்போட்டு ஆடிவந்தேன்
தடம்புரண்ட கதைசொல்ல!!//


அழகான வரிகள்

rajamelaiyur said...

என்று என் வலையில்

ஒவ்வொரு பதிவிலும் 50, 100 கமெண்ட் பெறுவது எப்படி ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தப்பில்லாமல் அல்ல சரியாக அடிக்கப்படுவது தப்பு...

அதற்க்கு தங்களில் வரிகள் சூப்பர்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தப்பு சத்தம் கேட்டுவிட்டால் நாடி நரம்புகள் தண்ணாலே ஆட்டம் பேர்டும்...

Anonymous said...

மிக மிக நீண்ட கவிதை.
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

சக்தி கல்வி மையம் said...

பச்சைசட்டை போட்டவரே
மைனர்போல நிற்பவரே!
நான் கேட்ட கேள்வி உங்க
காதிலே விழுந்துசாய்யா!!//

நல்ல வரிகள்//

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,
தப்பெடுத்துப் பாடுதலைப் பற்றிக் கூறும் தித்திக்கும் தமிழில் கலந்து வரும் கிராமிய மணம் வீசும் கவிதை..

ரசித்தேன்.

கூடல் பாலா said...

எழுந்து நின்று ஆடவேண்டும் போலிருக்கிறது .....பாடலின் வார்த்தைகளும் கருத்துக்களும் நச் !

RAMA RAVI (RAMVI) said...

பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே தவறு செய்வதை அழகான பாடலில் சுட்டிக்காட்டி இருக்கீங்க.அருமையாக இருக்கு.

அம்பாளடியாள் said...

அருமை ...அருமை ....அருமை....வாழ்த்துகள் சகோ .......
தமிழ்மணம் 8 எலா ஓட்டும் போட்டாச்சு .

Anonymous said...

அருமை, கிராமிய பாடல் போல சந்தம் தப்பாமல் ....

குறையொன்றுமில்லை. said...

தப்பாட்டமும் பாட்டு வரிகளும் அருமையா இருக்கு.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே
ஓடோடி வந்து முதல்
கருத்தை பதிவு செய்தமைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

M.R said...

தங்களின் பாடல் வரிகள் படிக்கும் பொழுது எனது காதில் அதற்கான மேல சத்தமும் தாள நயத்தோடு ஒலித்தது போல் இருந்தது .அருமை நண்பரே .

ஐம்பது ரூபாய்க்காக என்றில்லை ஒரு உயிரை கொள்ள அவனுக்கு என்ன உரிமை இருக்கு ,அவனுக்கு குறைந்தபட்சம் அடித்த அந்தகைகள் இரண்டையுமாவது வெட்டி விடவேண்டும். காலத்துக்கும் அதைப்பார்த்து பார்த்து அழவேண்டும்.
புத்திகெட்டு செய்து விட்டோமே என்று
சாகும் வரை வேதனை பட வைக்கணும்.அதை பார்த்து யாரும் அந்த மாதிரி செய்ய மாட்டாங்களே

மகேந்திரன் said...

என்னருமை மாய உலக நண்பர் ராஜேஷ்
மிகவும் ஆழ்ந்துணர்ந்து விரிவான கருத்திட்டமைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

M.R said...

தமிழ் மணம் 12

மகேந்திரன் said...

அன்புநிறை நட்பே நிஹசா

தங்களின் பொன்போன்ற கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜபாட்டை ராஜ
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனம்நிறைந்த நன்றிகள்.
உங்கள் தளம் வந்தேன் கருத்தளித்தேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்
தங்களின் இனிய கருத்துக்கு
மனமுவந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய நண்பர் சௌந்தர்
சரியான விளக்கம் கொடுத்தீர்கள்.
தப்பில்லாமல் அடித்து ஆடுவதே தப்பாட்டம்.

இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.
வேறு வழி தெரியவில்லை சகோதரி,
தப்பாட்டத்தின் மூலம் சொல்ல வந்த கருத்தை
ஏற்றுவதற்கு இவ்வளவு எழுத வேண்டியதாயிற்று

தங்களின் தொடர் ஆதரவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

என் இனிய சகோ நிரூபன்,
ரசித்து கருத்தளித்தமைக்கு
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் பாலா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ராம்வி
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கந்தசாமி
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனம்நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

என் அருமை நண்பர் எம்.ரமேஷ்
சரியாகச் சொன்னீர்கள்,
கரங்களை துண்டித்திருக்க வேண்டும்.
இனி இது போன்ற காரியங்களை
செய்பவர்கள் சற்று யோசிக்க வைக்க வேண்டும்.
விளக்க கருத்துக்கும் ஓட்டளிப்புக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

RaThi Mullai said...

அருமை .

சென்னை பித்தன் said...

தப்பைத் தப்பென்று சொல்லும் தப்பாட்டம்!

தினேஷ்குமார் said...

அருமையான பாடல் எனக்கு படிக்கத் தோன்றவில்லை வரிகளை கண்டதும் தானாக கைத் தாளம் போட பாடிவிட்டேன் ....

முனைவர் இரா.குணசீலன் said...

மண்வாசனையோடு தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

தென்றல் படத்தில் வரும் பறை பறை பறை என்னும் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நண்பா..

நீங்க பார்திருக்கீங்களா..?

Anonymous said...

தப்பு ஆட்டம் பற்றிய கவிதை/பாடல் நல்லாயிருந்தது நண்பரே...

மகேந்திரன் said...

அன்புநிறை ரதி முல்லை
தங்களை வசந்தமண்டப்பதிற்கு
பன்னீர் தெளித்து வரவேற்கிறேன்.


தங்களின் பொன்போன்ற கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சென்னை பித்தன் ஐயா
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தினேஷ்குமார்
தங்களின் இனிய கருத்துக்கு
என் மனம்நிறைந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
தென்றல் படத்தில் வரும் பறைப் பாடல்
என் நெஞ்சை உலுக்கிய பாடல்...
தீர்வாளர் புஷ்பவனம் குப்புசாமி
அழகுபட தன் குரலை பாடியிருப்பார்.....
பறை பறை என எஸ்.பி.பாலு குரல் கொடுக்க
எழுந்து ஆட்டம்போடவைத்து
பின்னர் கருத்தால் அழவைத்த பாடல்.

மகேந்திரன் said...

அன்பு ரத்னவேல் ஐயா
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரெவெரி
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

அம்பாளடியாள் said...

இன்று என் தளத்திற்கு உங்கள் வருகையை எதிர்பார்க்கின்றேன்
சகோ .மறக்காமல் உங்கள் ஓட்டுகளையும் வழங்குங்கள் .நன்றி
சகோ .

சி.பி.செந்தில்குமார் said...

அபாரம், கிராமத்து தெம்மாங்கு , அழகிய நடை

இராஜராஜேஸ்வரி said...

தப்பெடுத்து தப்புகளைத்
தட்டிக்கேட்க்கும்
தப்பாட்டப் பாடல் வரிகளுக்குத்
தப்பாத பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி.செந்தில்குமார்
தங்களை வசந்தமண்டப்பதிற்கு
பன்னீர் தெளித்து வரவேற்கிறேன்.


தங்களின் பொன்போன்ற கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்
தங்கள் தளம் வந்தேன்
கருத்தும் ஓட்டும் அளித்தேன்.

சத்ரியன் said...

அடடா! இத்தனை நாள் இப்பக்கம் வராம போனேனே!

செய்தியை பாடலாக்கி, அதிலே “களவாணி” காவல்காரனை - காலைவாரி.... அருமை! அருமை!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சத்ரியன்
தங்களை வசந்தமண்டப்பதிற்கு
பன்னீர் தெளித்து வரவேற்கிறேன்.


தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

கதம்ப உணர்வுகள் said...

தப்பெடுத்து பாட வந்து....

ஊழலும் லஞ்சமும் எப்படி எல்லாம் சீர்குலைக்கிறது நாட்டை என்று சொல்லி சென்றது கவிதை வரிகள்....

ஆளாளுக்கு தன் வரை எத்தனை கஜானா நிரப்ப முடியும் என்பதில் மட்டும் தான் கவனமே...

இதை போட்டு உடைத்தாரே தப்பெடுத்து பாடியே....

சந்தத்தோடு இழைந்த பாடல் வரிகள்..நாட்டுப்புறபாடலை நினைவுப்படுத்துகிறது... சமுதாய சாடல் வரிகள் மிக மிக அருமை மகேந்திரன்.....

அன்பு வாழ்த்துகள்பா....

சாகம்பரி said...

தப்பாட்டமே தப்பில்லாத ஆட்டம். அது பற்றிய கவிதையும் மிகச்சரியாக இருக்கிறது.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
தங்களின் அழகிய கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சாகம்பரி
தங்களின் அழகிய கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

Post a Comment