Powered By Blogger

Sunday 11 September 2011

பக்குவமா புரிஞ்சிகோங்க!!


காலையில் எழுந்ததுமே
கஞ்சித்தண்ணி குடிச்சிபுட்டு
கருவேலங்காட்டு வழி
கருத்தாக பயணம் போனேன்!!

கடம்பவனம் தாண்டி
காலாற நடந்து போயி
மானாமதுரையில
வாங்கிவந்தேன் மல்லியப்பூ!!


புன்னைவனம் தாண்டி
பொத்திபொத்தி பொடிநடையா
பிச்சாவரத்தினிலே
வாங்கிவந்தேன் பிச்சிப்பூ!!

ஒத்தமாட்டு வண்டியில
ஓரமாக சாஞ்சிகிட்டு
ஒத்தகடை சந்தையில
மரிக்கொழுந்து வாங்கிவந்தேன்!!



கூட்டுமாட்டு வண்டியில
கூட்டுசேர்ந்து பாடிகிட்டு
கூடலூரு கொல்லையில
சம்பங்கி வாங்கிவந்தேன்!!

வாங்கிவந்த பூவெல்லாம்
வகையுடனே கட்டிவைக்க
வாடிப்பட்டி கோட்டத்தில
வாழைநாரு வாங்கிவந்தேன்!!



தலப்பாக்கட்டு போல
மொந்தையான பந்தாக
பூவெல்லாம் கட்டினதும்
பொசுக்குன்னு எந்திரிச்சு
பொழைப்ப பார்க்க
நடை போட்டேன்!!



ஒருகூடை தலைவைச்சு
மறுகூடை இடுப்பில் வைச்சு
மடமடன்னு நடைபோட்டேன்
சந்தைக்கு போகையில!!

அரியின்னு சொல்லியங்கே
வாழை இலை விரிச்சிபோட்டு
அச்சுதான்னு சொல்லிபுட்டு
பூவெல்லாம் பரத்திவைச்சேன்!!


சிவனேன்னு பேர்சொல்லி
சும்மா இருக்காம
குரல்வளை வெளியவர
கூவிகூவி வித்துவந்தேன்!!

கூடைநிறஞ்ச பூவெல்லாம்
காலியான பின்னால
கட்டுமூட்டை கட்டிக்கிட்டு
வீட்டைபார்த்து நடந்துவந்தேன்!!



வரும்போது இருந்தவழி
வாசமாக இருந்ததப்போ!!
போகையில பார்க்கிறப்போ
போக்கத்து மாறிபோச்சு!!

அதிகாலை நேரத்துல
சுத்தமாக இருந்ததெரு
அந்திசாஞ்சி போனதுமே
சாக்கடையால் நிறைஞ்சிபோச்சி!!



வைகையாறும் பார்த்திருக்கேன்
வக்கனையா கேட்டிருக்கேன்!
பரணியாறும் பார்த்திருக்கேன்
பரவசமா குளிச்சிருக்கேன்!!

பன்னிமேயும் மேயும்
பாழான சாக்கடையோ!
பாதை மாறியிங்கே
தெருவுக்கேன் வந்ததப்பா!!



பாதாள சாக்கடையோ
தெருவோர வாய்க்காலோ
எதுயிங்கே போட்டாலும்
சாக்கடை தண்ணியெல்லாம்
சாகசம் ஏன் காட்டுதப்பா!!

விற்கும்போது வாசமான
நான்வித்த பூவெல்லாம்
கொண்டையிலே ஏறுமுன்னே
வாசமெல்லாம் மாறிபோச்சு
சாத்தான போலவந்த
சாக்கடையின் புண்ணியத்தால்!!



அள்ளிக்கொடுக்க வேண்டாம்
அரண்மனையில் பாகம்வேண்டாம்
போடுற திட்டமெல்லாம்
செம்மையாக போட்டிடுங்க!!

திட்டமெல்லாம் போட்டாலும்
வகையுடனே அமைத்தாலும்
பராமரிப்பு வேணுமைய்யா
பக்குவமா புரிஞ்சிகோங்க!!

அன்புடன்
மகேந்திரன்

58 comments:

rajamelaiyur said...

Tamilmanam connect akamatduthu. . .

சக்தி கல்வி மையம் said...

விற்கும்போது வாசமான
நான்வித்த பூவெல்லாம்
கொண்டையிலே ஏறுமுன்னே
வாசமெல்லாம் மாறிபோச்சு
சாத்தான போலவந்த
சாக்கடையின் புண்ணியத்தால்!!///

அருமையான வரிகள்..
பாராட்டுகள்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அதிகாலையில்.. வாசனையுடன் ஆரம்பித்த பயணம்.. மாலை வீடு திரும்பும்முன் மாறிப்போன கவிதை.. அருமை..!

ஏற்ற படங்களும் பொருத்தம்!

நன்றி! :)

RAMA RAVI (RAMVI) said...

//அதிகாலை நேரத்துல
சுத்தமாக இருந்ததெரு
அந்திசாஞ்சி போனதுமே
சாக்கடையால் நிறைஞ்சிபோச்சி!!//

ஆம் நாமேதன் நமக்கு எதிரியாக இருந்து சுற்றுபுரத்தை பாழ்பண்ணுகிறோம்.

//திட்டமெல்லாம் போட்டாலும்
வகையுடனே அமைத்தாலும்
பராமரிப்பு வேணுமைய்யா
பக்குவமா புரிஞ்சிகோங்க!!//

அருமையான அறிவுரையை கவிதைநடையில் சொல்லியிருக்கீங்க.நன்றி பகிர்வுக்கு.

Anonymous said...

பராமரிப்பு கவிதை - அதுவும் காலை முதல் மாலை வரை... கலக்கல் மகேந்திரன்....

SURYAJEEVA said...

you see what you want to see..
நீ எதை பார்க்க விரும்புகிறாயோ அதையே தான் பார்க்கிறாய்..
காலையில் மனம் மகிழும் பூக்களை விற்க பிழைப்பை பார்க்க ஓடியதால் நாற்றம் தெரியவில்லை.. வந்த வேலை முடிந்த வுடன் சமுதாயத்தின் நாற்றம் கண்ணில் படுகிறது..

Rathnavel Natarajan said...

திட்டமெல்லாம் போட்டாலும்
வகையுடனே அமைத்தாலும்
பராமரிப்பு வேணுமைய்யா
பக்குவமா புரிஞ்சிகோங்க!!

அருமையான கவிதை.
அடித்து ஆடுகிறீர்கள்.
மிக்க சந்தோசம்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

மாலதி said...

திட்டமெல்லாம் போட்டாலும்
வகையுடனே அமைத்தாலும்
பராமரிப்பு வேணுமைய்யா
பக்குவமா புரிஞ்சிகோங்க!!// சிறப்பு இன்றைய நிலையை அழகாக பதிவு செய்கிறீர் அதாவது நறுமலரில் உங்களின் நறுக்கு தொடங்குகிறது நல்ல மணத்துடன்நிறைவாக உங்கள் நறுக்கு இந்த குமுக அவலங்களை படம் பிடிக்கிறது அதற்கேற்ற படங்களையும் காட்டுகிறீர் பாராட்டுகள் நன்றி.

கதம்ப உணர்வுகள் said...

சமூக உணர்வு ஒரு துளி...

காலை எழுந்து அன்றைய நாளின் வேலைகளை சிரத்தையாக செய்து மாலை வந்தால் தான் வீட்டில் உலை கொதிக்கும் தினப்படி சம்பளக்காரர்களின் நிலை ஒரு துளி....

அரசியல் என்ன தான் செய்யுது ஆட்சி மட்டும் மாறிக்கிட்டு இருக்கு.. ஆனால் மக்களுக்கு நல்லது நடக்குதா?

காலை வீட்டை விட்டு சந்தோஷமா வேலைக்கு கிளம்பி வேலை செய்து களைத்து வீட்டுக்கு வரணும்னு நினைச்சால் ரோடு இப்படி சாக்கடையாக நிறைந்திருக்கிறதே என்ற வேதனையுடன் சொல்லும் சொற்களை....கவிதை வடிவத்தில் வாசனை பூவாக அதுவும் மதுர மல்லி எப்படி மணக்கும் அப்பப்பா அந்த மணத்தையே தூக்கி வீசிடுதே இந்த சாக்கடை அடைப்பும் நீரும்....

எளிய நடை தான்...
சொல்ல வந்த விஷயத்தை கூட சுவாரஸ்யமா சொல்லத்தெரிந்தவர் நீங்க என்பதை இந்த கவிதை வரிகள் சொல்லிவிட்டது மகேந்திரன்...

அன்பு வாழ்த்துகள் கவர்ன்மெண்ட்டை சாடாம சாடிய வரிகள் மணக்கிறது மல்லிகைப்பூவாய் இங்கே அழகாக...

F.NIHAZA said...

அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள்...
அத்துனை...மணமாற்றமா,,,
யதார்த்தமா இருப்பதே
உங்கள் கவிகளின் ப்ளஸ் பொயிண்ட

பெருமாள் பிரபு said...

உங்களின் கவிதையின் அர்த்தமுள்ள முடிவுரை நச்சுனு இருக்கு.தொடரட்டும் உங்கள் சமுக உணர்வு.

Anonymous said...

கவிதை மணம் மணக்கிறது!

பூக்களின் இயற்கை மணம் மாறாமல் இருக்க தெருவோரங்கள் சுத்தமாக மாறட்டும்...

Anonymous said...

கவிதை மணம் மணக்கிறது!

பூக்களின் இயற்கை மணம் மாறாமல் இருக்க தெருவோரங்கள் சுத்தமாக மாறட்டும்...

Aathira mullai said...

//அள்ளிக்கொடுக்க வேண்டாம்
அரண்மனையில் பாகம்வேண்டாம்
போடுற திட்டமெல்லாம்
செம்மையாக போட்டிடுங்க!!

முதல் முறையே மல்லிகை வாசத்திலும் மூச்சை அடைக்கும் சாக்கடையில் வாசத்திலும் எமை மயங்க வைத்து விட்டீர்கள்..

எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கீங்க.. எங்கோ தொடங்கி எங்கோ நச் என்று முடித்து இருக்கிறீர்கள்.

நாட்டுப்புற கவிதைகள் (பாடல்கள்) எழுத்க் கற்றுக்கொள்ள எண்ணுவர்கள் உங்கள் கவிதைகளைப் படித்தால் போதுமானது. அழகான வரிகள்.. காட்சிகளும்.. நன்றி..

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜபாட்டை ராஜா
தமிழ்மண இணைப்பு எப்பவுமே இப்படித்தான்
கொஞ்சம் விளையாட்டு காட்டுகிறது.
தங்களின் வருகைக்கு நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் பாடல்....

எந்த ஒரு விஷயமும் பராமரிப்பு இல்லாவிட்டால் பாழாய் போய்விடும் என்பதை அழகாய்ச் சொல்லியிருக்கிறது உங்கள் கவிதை.

பூமணத்துடன் ஆரம்பித்த கவிதை வேறு வாசத்துடன் முடிந்தது......

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஆனந்தி
தங்களை வசந்தமண்டபம்
தென்றல் துணையுடன் வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ராம்வி
தங்களின் அழகிய கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

இனிய நண்பர் ரெவேரி

தங்களின் பொன்னான கருத்துக்கு
சிரம்தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
தங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
எதுவுமே பார்வையில் தான் இருக்கிறது...
மனம் வேறுநிலையில் இருக்கையில்
அடுத்த நிலை தெரிவதில்லை என்பது உண்மையே..
இங்கு நான் சொல்லவந்த கருத்தை ஏற்றிக்கூறி இருக்கலாம்..
எனக்கு இங்கு முக்கியமாக பட்டது
சொல்ல வந்த கருத்தே.....

தங்களின் மேலான கருத்துக்கு என்
சிரம்தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மாலதி
தங்களின் பாராட்டுக்கும் விரிவான கருத்துக்கும்
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மஞ்சுபாஷினி
தங்களின் விரிவான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி நிகாசா
தங்களின் அன்பு கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தம்பி பெருமாள்
உங்களை இங்கே வசந்தமண்டபத்தில் காண்பதிலும்
வரவேற்பதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
அழகான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து வருக...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஷீ-நிஷி.

தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி பேராசிரியை.ஆதிரா
அதோ...
என்மனவானில் சந்தோசம்..
வசந்தமண்டபம் இன்று மனம் மகிழ்கிறது
தங்களின் வரவை வானவெடியுடன் கொண்டாடுகிறது.
சகோதரி,என்னுடைய நாட்டுப்புற கவிதைகள் பற்றிய
தங்களின் கருத்து எனக்கு கிடைத்த மாபெரும் பரிசு.
மறவேன் மறவேன் என்றென்றும்.

தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் வெங்கட் நாகராஜ்

தங்களின் விரிவான அழகான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

அழகழகாய் சொல்லிவந்து முடிவில் அவலத்தைச் சொல்லயிலே
நிலைமை அழகா புரியுது.என்ன செய்யனும்னும் தெரியுது
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள் த.ம 6

M.R said...

விதவிதமான பூக்களையும் ,

பூ வியாபாரம் செய்வதில் இருக்கும் கஷ்டமும்,

நாட்டின் அரசியலின் மேம்போக்கான செயலும்

நல்லா அழகாக சொல்கிறது தங்கள் கவிதை

பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R said...

தமிழ் மணம் ஏழு

கார்த்தி said...

சுற்றுச்சுழல் விழிப்புணர்வுக்கான அருமையான அழகான கருத்துக்கள். பாராட்டுகள்..

கார்த்தி said...

சுற்றுச்சுழல் விழிப்புணர்வுக்கான அருமையான அழகான கருத்துக்கள். பாராட்டுகள்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றிங்க!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,


பக்குவமா புரிஞ்சிகோங்க!!//

காலையில் அழகாக இருந்த தெரு, மாலையில் சாக்கடையால் மாசுபட்டு விட்டது என்பதனையும்,
இத்தகைய அவலச் சூழலிலிருந்து மக்களைக் காக்க அரசு செயற்பட்டுச் சுற்றுச் சூழல் சுகாதாரத்தினையும்,
பாதுகாப்பான போக்கு வரத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என்பதனையும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

SURYAJEEVA said...

அது ஒரு சாதாரண கருத்து பிழை புலவரே.. சொல்லாடல் அருமை, மறுக்கவில்லை...
காலையில் சுத்தமாக இருந்த தெரு, அந்தி சாய்ந்த பிறகு சாக்கடையால் நிறையாது என்பதே உண்மை, அதை தான் என் பின்னூட்டத்தில் வெளியிட்டேன்...

சி.பி.செந்தில்குமார் said...

உங்க சொல்லாடல் அழகு

முனைவர் இரா.குணசீலன் said...

அள்ளிக்கொடுக்க வேண்டாம்
அரண்மனையில் பாகம்வேண்டாம்
போடுற திட்டமெல்லாம்
செம்மையாக போட்டிடுங்க!!

திட்டமெல்லாம் போட்டாலும்
வகையுடனே அமைத்தாலும்
பராமரிப்பு வேணுமைய்யா
பக்குவமா புரிஞ்சிகோங்க!!


நல்லாச் சொன்னீங்க நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

ஒரு அரசியல்வாதி

பெருங்கூட்டத்தில் பேசினாராம்

என் உடல் பொருள் ஆவி எல்லாம் என் மக்களுக்காக மக்களுக்காக மக்களுக்காக என்று...

மக்களும் கை தட்டினார்களாம்.

ஏமாந்த பின்னர் தான் தெரிந்ததாம்..

அரசியல்வாதி மக்கள் மக்கள் என்று சொன்னது அவருக்குப் பிறந்த மக்களை என்று.????????

முனைவர் இரா.குணசீலன் said...

ஒரு அரசியல்வாதி

பெருங்கூட்டத்தில் பேசினாராம்

என் உடல் பொருள் ஆவி எல்லாம் என் மக்களுக்காக மக்களுக்காக மக்களுக்காக என்று...

மக்களும் கை தட்டினார்களாம்.

ஏமாந்த பின்னர் தான் தெரிந்ததாம்..

அரசியல்வாதி மக்கள் மக்கள் என்று சொன்னது அவருக்குப் பிறந்த மக்களை என்று.????????

Unknown said...

திட்டமெல்லாம் போட்டாலும்
வகையுடனே அமைத்தாலும்
பராமரிப்பு வேணுமைய்யா
பக்குவமா புரிஞ்சிகோங்க

முடிவான இவ் வரிகள்
முத்தான சத்தான வரிகள்
அருமை அன்பரே!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

அற்புதமான வரிகள்
அழகான கவிதை
மிக்க மகிழ்ச்சி அன்பரே

Sulaxy said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள் http://illamai.blogspot.com

சாகம்பரி said...

அழகாக கிராமத்து இசைக்கு ஏற்ற பாடல். நாட்டுப்புறப்பாடல் ஒரு இலக்கியமாகிறது.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி
தங்களை வசந்தமண்டபம்
தென்றல் துணையுடன் வரவேற்கிறது.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமேஷ்

தங்களின் விரிவான அழகான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கார்த்தி
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி ஆனந்தி
தங்கள் வரவு இனிய வரவாகுக.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்

தங்களின் விரிவான அழகான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சூர்யஜீவா
தங்களின் பின்னூட்டத்திற்கு
மதிப்பளிக்கிறேன்.
இதுபோன்ற கருத்துக்களையே
நானும் எதிர்பார்க்கிறேன்
என்னை பட்டை தீட்டிக்கொள்ள
நன்றிகள் உரித்தாகுக.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சி.பி.

தங்களின் விரிவான அழகான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு முனைவரே

தங்களின் விரிவான அழகான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு புலவரே
தங்களின் விரிவான ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் புங்கையூர் பூவதி

தங்களின் அழகான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு இளமை வலைத்தள நண்பரே
உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி.

தங்களின் அழகான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சாகம்பரி
தங்களின் அழகிய கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

திட்டமெல்லாம் போட்டாலும்
வகையுடனே அமைத்தாலும்
பராமரிப்பு வேணுமைய்யா
பக்குவமா புரிஞ்சிகோங்க!!



அருமையான வார்த்தை பிரயோகம்
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

Post a Comment