Powered By Blogger

Sunday, 25 September 2011

மாடவிளக்குகளின் வெளிச்சம்!!





அன்புநிறை தோழமைகளே,

கடந்த ஒரு வார தினங்கள் வலைச்சரத்தில் பணியாற்றி மனநிறைவுடன் அங்கிருந்து விடைபெற்று வசந்தமண்டபம் இன்று வந்து சேர்ந்திருக்கிறேன். வலைச்சரப் பணி நெஞ்சில் இருந்த மன உறுதியை பன்மடங்கு பெருக்கியிருக்கிறது.
எழுத்துக்களில் நேர்த்தியையும் பல வலைப்பூக்களை சென்று பார்வையிட்டு தமிழ் இணைய தளங்கள் பற்றிய ஒரு ஆழ்ந்த கண்ணோட்டத்தையும் என்னுள் விதைத்துள்ளது.
பலவிதமான எழுத்தாளர்களை சந்தித்து ஒரு புதுமுகமாக புத்துணர்ச்சியுடன் வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

எனக்கு முன்னாள் பணியாற்றிய வலைச்சர ஆசிரியர்களுக்கும் என்னை அங்கேயும் தொடர்ந்து வந்து அழகிய கருத்திட்டு ஊக்கப்படுத்தி என் பணிசிறக்க வைத்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என்றென்றும் அன்புடன் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

முத்தாய்ப்பாக உன்னால் பணி செய்ய முடியுமென ஆராய்ந்து, இப்பணி செய் என பணிவித்து பதிவுலகில் சின்னஞ்சிறு சிறுவனாம் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்த வலைச்சர பொறுப்பாசிரியர் ஐயா சீனா அவர்களை என் உயிருள்ளவரை மறவேன். 




வசந்தம் வந்து தாலாட்டும்
மண்டபம் தருவித்து - ஆங்கே
தென்றல் தரும் சுகத்தினில்
தேனின்பம் பருகி
பொன்னூஞ்சல் ஆடிவந்தேன்!!

மனதினில் ஊறியதை
விரல்வழி வெளியேற்றி - ஆங்கே
எண்ணங்களை உருமாற்றி
எழுத்துக்களாய் உருவேற்றி
ஏகாந்தம் கொண்டிருந்தேன்!!

வலைச்சரம் ஒன்றுண்டு
வந்திங்கே பாரடா!
சிலைபோல நிற்காது
வலையொன்று பின்னிவந்து
வாய்ப்பாட்டு பாடடா!!

தென்மதுரைச் சாரலின்
செந்தமிழ்த் தூதுவராய்!
செம்மைமிகு சீனா
மாண்போடு அழைக்க
பண்போடு ஏற்றேன்!!





முதல்நிலை மாடமாய்
முன்னுரை தான் வழங்கி
இரண்டாம்நிலை மாடமாய்
உறவுகளின் பெருமை சொல்லி
சரமங்கே தொடுத்தேன்!!

மூன்றாம்நிலை மாடமாய்
ஊர்வலம் சுற்றி வந்தேன்!
நான்காம்நிலை மாடமாய்
சமுதாயம் சாடிநின்று
சதிராட்டம் போட்டுவந்தேன்!!

ஐந்தாம்நிலை மாடத்தில்
நகைப்பின் சுவைசொல்லி
ஆறாம்நிலை மாடத்தில்
கதைகள் பல பேசிக்கொண்டு
கதம்பசரம் தொடுத்திருந்தேன்!!

என்னுயிர்த் தமிழின்
வளமையின் பெருமைபேசி
எழுநிலை மாடம்கட்டி
ஏற்றத்துடன் முடித்துவந்தேன்!!

வலைச்சர லோகத்தில்
பதிவர்கள் போற்றிடும்
நான்முகன் போலிருந்தேன்
ஏழு தினங்களாக!
நன்முகனாய் திரும்பிவந்தேன்
நாளும் வசந்தம் தேடி!!



அன்பன்
மகேந்திரன்

46 comments:

மாய உலகம் said...

வாழ்த்துக்கள் அன்பரே!.. தங்களது பணி வலைச்சரத்தில் சிறப்பாக இருந்தது... கிராமிய மணம் வீச.. அழகு கவிதைகளாக தொகுத்து வலைச்சரத்துக்கு மேலும் மெருகூட்டியுள்ளீர்கள்.... பட்டைய கிளப்பியமைக்கு நல்வாழ்த்துக்கள் நண்பா...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்
தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.
வலைச்சரப் பணி நிறைய கற்றுக் கொடுத்திருக்கு நண்பரே.
உங்கள் பதிவுகள் எனக்கு பெரிதும் உதவின.
நன்றிகள் பல.

Anonymous said...

அழகான கவிதை.. இயல்பாகவே உங்களுக்கு கவிதை அழகாக வருகிறது பாஸ் ....

Yaathoramani.blogspot.com said...

தங்கள் ஆசிரியர் பணி மிகச் சிறப்பாக இருந்தது
வாழ்த்துக்கள்
தொடர்ந்து சந்திப்போம்

முனைவர் இரா.குணசீலன் said...

மன நிறைவுடன் பணியாற்றி வந்திருக்கும் அன்பு நண்பருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..


இருள்நிறைந்த காட்டில் விளக்கின் ஒளி காடுமுழுமைக்கும் வழிகாட்டாது..

ஆயினும் அடுத்த அடி வைப்பதற்கான போதுமான தன்னம்பிக்கை ஒளியை அவ்விளக்கொளி தரும்..

அதுபோல...
சராசரி வலைப்பதிவர்களுக்கிடையே தங்கள் பணி போற்றுதலுக்குரியது..

என்றும் அன்புடன்..

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,

மீண்டும் இச் சிறியேனின் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறப்பாகச் செய்திருந்தீங்க வலைச் சரப் பணியினை.
அத்தோடு பல புதிய உள்ளங்களின் பதிவுகளையும் தொகுத்திருந்தீங்க.

மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பாஸ்.!

கோகுல் said...

ஒரு வாரமும் அழகுத்தமிழில் அனைவரையும் அறிமுகம் செய்தீர்கள்!
சிறப்பான பணி!
வாசிக்க தவறியவர்களுக்காக இங்கே சரத்தினை தொகுத்துள்ளீர்கள் நன்றி!

M.R said...

தங்களது ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக இருந்தது நண்பரே ,அழகான தொகுப்புகள் ,அதற்கான அழகான விளக்கங்கள் அருமை .எதிலும் சிறக்க முடியும் என்பதை அழகாக காண்பித்து விட்டீர்கள் ,நன்றி நண்பரே

SURYAJEEVA said...

கலக்கல்

மகேந்திரன் said...

அன்புநிறை கந்தசாமி அண்ணன்
என் மீதான தங்களின் நம்பிக்கைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமணி
தங்களின் இனிய வாழ்த்துக்கும்
தொடரும் தொடர்பிற்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே,
சிக்கிமுக்கி கல்லாய் இருந்த என்னை
சிறு தீப்பொறி ஆக்கியது வலைச்சரம்.

உங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோ நிரூபன்

கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்த வேண்டுமே என்ற
எண்ணம் என் மனதில் வாரம் முழுவதும் கிளறிக்கொண்டு இருந்தது.
உங்களைப் போன்றவர்கள் நன்றாய் படித்தேன் என்று சொல்கையில்
மனம் குளிர்கிறது.
தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

இதற்குத் தான் பேறுபெற்றேன் நண்பர் ரமேஷ்,
தாங்கள் என் மீது கொண்ட நம்பிக்கைக்கும்
தொடர்ந்து வரும் தொடர்பிற்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சூர்யஜீவா
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

கதம்ப உணர்வுகள் said...

ஓய்வு எடுத்துக்கலையாப்பா?
வலைச்சரத்தில் ஒரு வாரப்பணி சிறப்பாக செய்து முடித்த சந்தோஷ அலுப்பில் உறங்கிடாம அப்படியே அந்த தாக்கத்துடன் இங்க வசந்த மண்டபம் ஓடிவந்து.....

தன் அனுபவங்களை மிக அழகிய சரமாய் எங்களுடன் பகிர்ந்து....

எத்தனை கடினமான வேலை கொடுத்தாலும் அதை புன்சிரிப்புடன் அயற்சி முகத்தில் காட்டாது செய்து முடித்த பாங்கு மிக மிக அருமை மகேந்திரன்....

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம்....எத்தனையோ தளங்கள் சென்று வந்து அறிந்த விஷயங்கள் ஏராளம்... அதை அங்கயே மறந்து போகாம இதோ இங்கயும் வந்து எத்தனை அழகு எத்தனை அழகு எல்லோருக்கும் நன்றி சொல்லி கருத்திட்டவர் வலைப்பூவை அறிமுகப்படுத்த வாய்ப்பு கொடுத்தவர் ஆசிரியப்பணி கொடுத்தவர் என்று ஒருவரைக்கூட விடாம அத்தனை பேரையும் நினைவில் வைத்திருந்து இங்கு வந்து நன்றி கூறிய விதம் மிக மிக மிக சிறப்புப்பா...

தாய்தந்தை வளர்ப்பு இந்த பிள்ளையை எப்படி வைத்திருக்கு பார்த்தியா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை...

உங்கள் தாய் தந்தையிடம் கற்ற பண்பும் அன்பும் அடக்கமும் எளிமையும் இதோ உங்களில் காண்கிறேன்...

இறையின் அருளால் என்றும் நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் இருக்க என் அன்பு வாழ்த்துகளுடனான ஆசிகள் மகேந்திரன்....

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி

வழக்கம் போல இரவு விழித்திருந்து
நேற்றும் உறக்கம் வரவில்லை. அதுவுமில்லாமல்
கடந்த ஒருவாரம் வசந்தமண்டபம் வராமல் இருந்தது
நெஞ்சை பிசைந்துகொண்டே இருந்தது.
வலைச்சரப் பணிக்கு பின் முதலில் வருகிறேன்.
வலைச்சரத்துக்கு நன்றி சொல்வோம் என்ற எண்ணத்திற்கு முதல் வித்திட்டவர் நண்பர் மாய உலகம் ராஜேஷ்.
செய்தேன்.
அன்பு சகோதரி
என் உளம் குளிர்விக்கும் கருத்தளித்து அன்போடு
சகோதரம் பேசும் நீங்கள்
வாழ்வில் பல்லாண்டு இல்லறம் போற்றி நல்லறம் காண்பீராக!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வெற்றிகரமாய் முடித்து திரும்பியதற்க்கு வாழ்த்துக்கள்...


தங்களின் மாட தீபம் வலைச்சரத்தில் என்றும் ஒளிரும்...

RAMA RAVI (RAMVI) said...

வெற்றிகரமான வலைச்சர பணிக்கு வாழ்த்துக்கள்.

காட்டான் said...

வாழ்த்துக்கள் மாப்பிள இப்ப வீட்டுக்கு வந்திட்டீங்க அடுத்து உங்கள் வீட்டையும் உங்கள் பாணியிலேயே கலகலப்பாக்குங்கோ.. தொடர்கிறேன் உங்களை...

காட்டான் குழ போட்டான்....,

Unknown said...

ஓயாது பணியாற்றி-சற்று
ஓய்வாக மண்டபத்தில்
சாயாது வந்தீரோ-நல்
சதிராட மண்டபத்தில்
தாயாக பலவலையை-தட்டி
தாலாட்டி வளர்த்தீரே
சேயாக இருந்தோரும்-மிக
சிற்பாக வளர்ந்தாரே!

புலவர் சா இராமாநுசம்

ராஜா MVS said...

தங்களின் மாட தீபங்கள் வலைச்சரத்திற்க்கு வருகைத்தரும் அனைவரின் மனக்கோட்டையிலும் சுடர்விட்டு பிரகாசிக்கும் வண்ணம் ஏற்றிச் சிறப்பித்துள்ளீர்கள்... நண்பரே...

உங்களின் பணி தொடர வாழ்த்துகள்....

குறையொன்றுமில்லை. said...

தங்களின் வலைச்சரப்பணியைச்சிறப்பாக செய்துமுடித்துவிட்டு இப்ப உங்கபக்கமும் அருமையா கவிதை சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

ரைட்டர் நட்சத்திரா said...

உங்கள் பணி தொடரட்டும்

சென்னை பித்தன் said...

சென்ற வாரத்துக்கான சிறப்பான முடிவுரை!

Anonymous said...

உங்கள் வசந்த மண்டபத்துக்கு மறுபடி வந்ததில் மகிழ்ச்சி...
Welcome back சகோதரா...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அருமையான தொகுப்பிற்கு நன்றிகள்!

Unknown said...

வாழ்த்துக்கள்!

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

Anonymous said...

மனதினில் ஊறியதை
விரல்வழி வெளியேற்றி - ஆங்கே
எண்ணங்களை உருமாற்றி
எழுத்துக்களாய் உருவேற்றி
ஏகாந்தம் கொண்டிருந்தேன்....
மனதினை தொட்ட வரிகள்...

வாழ்த்துக்கள் சகோ...

shanmugavel said...

தங்கள் பணி சிறப்பாக இருந்தது.நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே,
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் காத்திகேயணி
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஐயா சென்னைப்பித்தன்
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரேவேரி
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஆனந்தி
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனுவாசன்.கு
தங்களை வசந்தமண்டபத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி.
நிச்சயம் உங்கள் தளம் வருகிறேன்
உறவுகள் வளர்ப்போம்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சின்னதூரல்
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் இனிய கருத்துக்கும் எங்கும்
தொடரும் தொடர்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

வெற்றிவேல் said...

அண்ணா, தாங்கள் வலைச்சர ஆசிரியராக பணியாற்றியது தற்போது தான் அறிகிறேன், மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா....

Post a Comment