நிகழ்கால நிகழ்வுகளால்
நிஜம் தேடும் என் மனம்
கொதிக்கின்ற உலை நீரென
கொந்தளித்து நிற்கையில்
சில்லென்ற குளிர்காற்றால்
கம்பி வேலிகளைத் தாண்டி
என் அகம் வருடும்
சாளரக் காற்று!!
சுற்றளவற்ற ஆகாயத்தை
சுருக்கி சிறைபிடித்து
கொள்ளளவில்லா காற்றை
தவணை முறையில்
அனுமதி செய்யும்
சாகசச் சாளரம்!!
தம் வெம்பசி தீர்க்க
ஒரு பொட்டு இரைக்காய்
வெகுதூரம் பறக்கும்
சின்னஞ்சிறு பறவைகளின்
சிறுகதை பேசும்
நம்பிக்கை சாளரம்!
காற்றின் இசைக்கேற்ப
மரக்கிளைகள் ஜதிபோட
இலைகள் இன்னிசைபாட
நடன அரங்கேற்றத்தை
இலவசமாய் காட்டும்
மோகனச் சாளரம்!!
சில்வண்டாய் பறந்த
சின்னஞ்சிறு வயதில்
எழுநிலை மாடங்களில் - எமை
மந்தி போல் தொங்கச் செய்து
தொலைக்காட்சி காட்டிய
மாயச் சாளரம்!!
வெம்புகின்ற மனநிலையில்
மௌனமான வேளையில்
முகப்பில் முகவாய் வைத்தால்
கொளுத்தும் வெயிலிலும்
நிறைவாய் நிறைமதி காட்டும்
நேசச் சாளரம்!!
இரணங்களின் வலியில்
நான் தவிக்கும் போதெல்லாம்
தாய்மடி கொடுத்து
மயிற்பீலி சாமரத்தால்
என் மனம் உறங்கச் செய்த
மந்திரச் சாளரம்!!
ஏ! நட்புச் சாளரமே!
எனக்கு பன்முகம் காட்டிய நீ
இனிவரும் சந்ததிக்கு
என்ன காட்ட போகிறாய்!
ஏற்றுக்கொள்வாயா??!!
என் சின்னஞ்சிறு கோரிக்கையை!!
காலங்களின் கோலத்தை
கண்ணாடியாய் பிரதிபலிக்கும் நீ
எம் வருங்கால சந்ததிக்கு
நம்பிக்கையை வளர்த்திடு!!
தன்னம்பிக்கையை வளர்த்திடு!!
அன்பன்
மகேந்திரன்
நான் தவிக்கும் போதெல்லாம்
தாய்மடி கொடுத்து
மயிற்பீலி சாமரத்தால்
என் மனம் உறங்கச் செய்த
மந்திரச் சாளரம்!!
ஏ! நட்புச் சாளரமே!
எனக்கு பன்முகம் காட்டிய நீ
இனிவரும் சந்ததிக்கு
என்ன காட்ட போகிறாய்!
ஏற்றுக்கொள்வாயா??!!
என் சின்னஞ்சிறு கோரிக்கையை!!
காலங்களின் கோலத்தை
கண்ணாடியாய் பிரதிபலிக்கும் நீ
எம் வருங்கால சந்ததிக்கு
நம்பிக்கையை வளர்த்திடு!!
தன்னம்பிக்கையை வளர்த்திடு!!
அன்பன்
மகேந்திரன்
10 comments:
இயல்பான நினைவுகள்
சாளரம் வழியாக
இனிமையாகின்றது
அழகு
தமிழ்தேவன்
அழகான
சாளர நினைவுகள்
கவிதை அருமை
அகிலன்
இன்னல்களை நீக்கும
ஜன்னல்கள் வாழ்க..
இக் கவிதையை படித்துவிட்டு நானும்
எங்கள் வீட்டின் சாளரத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அற்புதம்.. வாழ்த்துக்கள் மகேந்திரன்..
அன்பு நண்பர் தமிழ்தேவன் அவர்களே
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்பு நண்பர் அகிலன் அவர்களே
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே
////இன்னல்களை நீக்கும
ஜன்னல்கள் வாழ்க.////
அழகாகச் சொன்னீர்கள்
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.
கவிதை வரிகளும் கருத்துக்களும் அருமை
சாளரத்தின் சாட்சி இது சாமனியனின் சாட்சி சந்ததிகளின் வருகையாய் தென்றலாய் வருகின்ற கவிக்கு வாழ்த்துக்கள்
நேசமாய்........
கிருபா................
அன்பு நண்பர் பிரபாஷ்கரன்
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.
நேச நண்பர் கிருபா
தங்களின் வாழ்த்துக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி
Post a Comment