சிரமங்கள் ஆயிரமேனும்
நிந்தனை மறந்துவிடு!
சிந்தித்திரு எப்போதும்
சிகரங்கள் உனைத் தொடரும்!
சோதனைகளை கண்டு
சோர்வு ஏன்? - அதை
சோதனைக்கூடமாக்கு
சாதனைகள் உனைத் தொடரும்!
கொளுத்த மீன் வருமென்று
காத்திருக்க நீ - கொக்கல்ல!
இன்றைய பொழுதை உனதாக்கு
இமயம் கூட உனைத் தொடரும்!
காத்திருந்தவர் எடுத்துச் செல்ல
நீ குளக்கரை நீரல்ல - கண்ணில்
கபடுகாட்டும் கானல் நீரல்ல - நீ
கரை மீறும் கங்கை நீரன்றோ!
கூன்போட்டு வாழாதே - இங்கு
தானாக எதுவும் நடக்காது!
தரணியில் நீ நிலைக்க - உன்
தகுதியை வளர்த்துக்கொள்!
கனவு மந்தைக்குள் காணாமல்
தொலைந்து போகாதே
நிதானத்தின் வெளிச்சத்தில் - உன்
வெற்றியைத் தேடிக்கொள்!
அலட்சியத்துடன் வாழாதே - உன்
இலட்சியத்தை இலக்காக்கு
செவ்வான வீதியில் - கொய்யாத
வெற்றிக்கனிகளை பறித்துக்கொள்!
சின்னஞ்சிறிய விதைக்குள்ளேதான்
விருட்சம் ஒளிந்திருக்கும்!
உன்னை நீ அறிந்து கொண்டால்
எதுவும் இங்கே சாத்தியமே!!
அன்பன்
மகேந்திரன்
12 comments:
ரொம்ப கரெக்ட்...
அன்புத் தோழர் குணசேகரன் அவர்களே
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி
நிறைவான வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய நல்ல கவிதை
வாழ்த்துக்கள்.............
அம்பாளடியாள் அவர்களே,
தங்களின் நிறைவான கருத்துக்கும்
தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
வணக்கம் மகேந்திரன்,
/சின்னஞ்சிறிய வவிதைக்குள்ளேதான்
விருட்சம் ஒளிந்திருக்கும்!
உன்னை நீ அறிந்து கொண்டால்
எதுவும் இங்கே சாத்தியமே!!//
அற்புதமாக தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.
நன்றி..
அன்புத் தோழர் ஜானகிராமன் அவர்களே
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி
அருமை! அருமை!
உங்கள் சிந்தனைகள் அருமை
சத்தியமான உண்மை
எதுவும் இங்கே சாத்தியம்தான்
தமிழ்தேவன்.
அன்பு நண்பர் தமிழ்தேவன்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.
நண்பரே உங்களின் சிந்தனை வரிகளை போலவே சிகரமாய் உள்ளது ...
வாழ்த்துக்கள் ///
அன்பு நண்பர் அரசன் அவர்களே
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.
////சின்னஞ்சிறிய விதைக்குள்ளேதான்
விருட்சம் ஒளிந்திருக்கும்!
உன்னை நீ அறிந்து கொண்டால்
எதுவும் இங்கே சாத்தியமே!!/////
சத்தியமான வார்த்தைகள்
அழகிய நம்பிக்கை கவிதை
நன்று.
அன்பு நண்பர் அகிலன் அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
Post a Comment