Powered By Blogger

Thursday, 25 August 2011

தொலைந்துபோன நினைவாச்சோ?!!!


ஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் 
நான் அடிச்ச சிங்க ஆக்கர்!!
சின்னதாக வட்டம்போட்டு
நட்டநடு நடுவில
பம்பரத்த கூட்டிவைச்சி
கூரான பம்பரத்தால்
ஆக்கர் அடிச்ச பின்னால
தெறிச்சி போச்சு பம்பரம்!

தெறிச்சி போன பம்பரத்த
தூரதூக்கி போட்டுட்டு
அழுதுகிட்டு நின்றிருந்த
சங்கரன கூட்டிகிட்டு!
தோள்மேல கைபோட்டு
தொலைதூரம் போனபின்னே
குளத்தாங்கரை பக்கமா
கோலிகுண்டு விளையாண்டோம்!!
சின்னா சின்னா ஓடிவாடா
சிணுங்காம ஆடிவாடா!
ஆறுகாலு அளந்துக்கோ
மூணு குழி பார்த்துக்கோ
முழுசா ரெண்டுகுண்டு
குழிக்குள்ள போடலேன்னா
வெள்ளைக்குண்டு எடுத்துவந்து
கோலிக்குண்ட உடைச்சிடுவேன்!
பம்பரமும் கோலிக்குண்டும்
உடைஞ்சுபோன பின்னால
விளையாட பிடிக்கவில்ல!
கூட்டுக்காரன் சேர்த்துவைச்சு
கூடிநின்னு முடிவுசெஞ்சு
ஓடக்கர பக்கம்போயி
ஓணான் பிடிக்கப்போக
வில்லெடுத்து புறப்பட்டோம்!!
ஓணான பிடிச்சு வந்து
உடைமரத்தில தொங்கவிட்டு
பத்துபேரு கூடிநின்னு!
ஈக்குகுச்சி வில்லெடுத்து
முனையில ஊசிகட்டி
ராமனுக்கு தம்பிபோல
குறிபார்த்து அடிச்சாலும்
பத்துதலை ராவணன் போல
கொலைவெறியில நின்னிருந்தோம்!!
ஓணான் செத்துப்போனபின்னே
ஒஞ்சி போக மனசில்லாம!
தெருவோர குழாயில
வயிறுநிறைய தண்ணிய
மடமடன்னு குடிச்சிபுட்டு!
நாமூனா பனிரெண்டா
மூணு குழுவா பிரிச்சிகிட்டோம்
போருக்கு போவதுபோல்!
ஒருகுழு குனிந்துநிற்க
ஒருகுழு தாண்டிவர
மறுகுழு நாட்டாமையா!
ஆவியம் ஆடிவந்தோம்
ஆவியம் ஆவியம்!
ஆவியம் மணியாவியம்!
ஆவியம் வெள்ளாவியம்னு!
ஒவ்வொரு உயரத்தில
ஒருகுழு நின்னிருக்க
மறுகுழுவா தாண்டிவந்தோம்!

 தாண்டிவந்த ஒருகுழுவில்
ஒருத்தனாவது தப்புசெஞ்சா
குனியச்சொல்லி நிக்கவைச்சி
தாண்டும்போது குனிந்திருந்த
பனிரெண்டு பேரும் சேர்ந்து
கூடிநின்னு குழுவாக
குனிந்தவன் முதுகில
சப்பாத்தி போட்டுவந்தோம்!!
நேரத்த பார்த்தபோது
நெஞ்செல்லாம் அடைச்சிபோச்சு
சூரியன் உச்சைத்தாண்டி
கொள்ளநேரம் ஆகிபோச்சி!
விளையாட்ட மூட்டகட்டி
ஓரமா வைச்சிபுட்டு
ஒன் டூ த்ரீ சொல்லிக்கொண்டு
ஓட்டப் பந்தயமா
வீட்டைநோக்கி சென்றிருந்தோம்!!

------------------------------

--------
---------------------

காலம்போன போக்கில
கால்வலித்து நிற்கையில
கடந்தகால வாழ்க்கையெல்லாம்
கானல்நீரா ஆகிபோச்சி!
சின்னஞ்சிறு வயசினிலே
ஆடிய ஆட்டமெல்லாம்
புகைப்படமா தேங்கிப்போச்சி!

பட்டாம்போச்சி போல
பறந்திருந்த காலமது
கண்ணுக்குள்ள நின்னுபோச்சு!!
இன்னைக்கு தெருவில
நடந்து போகையில!
மட்டைப்பந்து தவிர இங்கே
வேறு விளையாட்டு பார்க்கவில்ல!
சிறகடிக்கும் குருவியாய்
உயரப்பறக்கும் பட்டமாய்
நான் நினைத்த
குழந்தைகள் கூட்டமிங்கே
தொலைகாட்சி பெட்டிமுன்னே
காலமே கதியாகி
கம்ப்யூட்டர் காலடியில்
அபயமாகி போயாச்சு!!

நான் ரசித்த விளையாட்டெல்லாம்
தொலைந்துபோன நினைவாச்சோ?!!!

அன்பன்
மகேந்திரன்

61 comments:

Unknown said...

//நான் ரசித்த விளையாட்டெல்லாம்
தொலைந்துபோன நினைவாச்சோ//

நண்பரே!
தங்கள் கவிதை என்
இளமைக் கால வாழ்கையின்
மலரும் நினைவு களாக்கி விட்டன
அன்றும், இன்றும் எவ்வளவு
வேறுபாடு
கருவும் கவிதையின் உருவும்
நன்று!நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

arasan said...

உணர்வுகளின் வலியை, ஏக்கத்தை
அழகிய வரிகளில் அற்புத படைப்பாக
வந்துள்ளது.
இன்றைய சமூகத்தில் இதைவிடவும்
கொடூரம் நடக்குமோ என்ற அச்சம் உள்ளதை
பதற வைக்கின்றது ..

ஓடி ஆடிய பட்டாம் பூச்சிகள் ஒற்றை பெட்டிக்குள்
ஒடுங்கி விட்டன .,..

முனைவர் இரா.குணசீலன் said...

ஆவியம் ஆடிவந்தோம்
ஆவியம் ஆவியம்!
ஆவியம் மணியாவியம்!

மீண்டும் என்னை இளம் பருவத்துக்கு அழைத்து சென்ற இடுகை நண்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

நிழற்படங்கள் எப்போதும்போல பாராட்டுக்குரியன.

பழந்தமிழர் விளையாட்டுகள் குறித்த எனது பதிவைப் பார்த்தீர்களா நண்பா.

http://gunathamizh.blogspot.com/2009/06/36.html

முனைவர் இரா.குணசீலன் said...

சிறகடிக்கும் குருவியாய்
உயரப்பறக்கும் பட்டமாய்
நான் நினைத்த
குழந்தைகள் கூட்டமிங்கே
தொலைகாட்சி பெட்டிமுன்னே
காலமே கதியாகி
கம்ப்யூட்டர் காலடியில்
அபயமாகி போயாச்சு!!


தலைப்புக்கு உயிரூட்டும் வரிகள் இவையன்றோ நண்பா..

அருமை தொடர்க.

இராஜராஜேஸ்வரி said...

பட்டாம்போச்சி போல
பறந்திருந்த காலமது
கண்ணுக்குள்ள நின்னுபோச்சு!!//

வசந்தகால நினைவுகளுக்கு இனிமையாய் அழைத்துச்சென்ற கவிதைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

Chitra said...

நேரத்த பார்த்தபோது
நெஞ்செல்லாம் அடைச்சிபோச்சு
சூரியன் உச்சைத்தாண்டி
கொள்ளநேரம் ஆகிபோச்சி!
விளையாட்ட மூட்டகட்டி
ஓரமா வைச்சிபுட்டு
ஒன் டூ த்ரீ சொல்லிக்கொண்டு
ஓட்டப் பந்தயமா
வீட்டைநோக்கி சென்றிருந்தோம்!!...Priceless precious memories! wow!

rajamelaiyur said...

I remember my childhood days

சக்தி கல்வி மையம் said...

இந்த கவிதையை படிக்கும் பொது என் சிறு வயது ஞாபகங்கள் நினைவில் வருகிறது.
அற்புதம் நண்பா..

கடம்பவன குயில் said...

ஆஹா...அனைவருக்கும் அவரவர் குழந்தைப்பருவ விளையாட்டுக்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் சகோதரரே. ஆடிஓடி விளையாடிய விளையாட்டுக்கள் மறைந்து சிறுவர்கள் இப்போது மதிப்பெண் வங்கியாகவும் கணிணி தம்பியாகவும் தான் ஆகிட்டாங்க.

கடம்பவன குயில் said...

புகைப்படங்கள் தங்கள் கவிதைக்கு மேலும் அழகூட்டுகிறது. அற்புதமான இயல்பான படங்கள்.

Anonymous said...

அருமை...மகேந்திரன்...நாம் தொலைத்த இளமைப்பருவம் என்ற தலைப்பில் நான் எழுதி முடிக்கப்போகும்
பதிவின் கவிதை வடிவம்...ஒரு வாரமாய் எனக்கு இந்த மலரும் நினைவுகள் தான்..இன்று கவிதை வடிவில்..
அருமை... நான் குழி தோண்டி கோலி விளையாடிய தெரு இப்போது விரைவுப் பேரூந்து செல்லும் காமராஜர் சாலை...
நம் பிள்ளைகள் இழக்கும் வாழ்க்கை இது போன்ற கவிதைகளில் நினைவாய்...வாழ்த்துக்கள்...

Rathnavel Natarajan said...

அருமை. அருமை.
இப்போது உள்ள பிள்ளைகள் இந்த விளையாட்டுகளை பார்த்திருக்குமோ?
வாழ்த்துக்கள்.

M.R said...

தமிழ் மணம் எட்டு

சின்ன வயசில விலையாண்ட விலையாட்டை நினைவு படுத்திய தங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே

கோகுல் said...

விடலைப்பருவத்த திரும்பிப்பாக்க வச்சுட்டீங்க!
tm 9

Anonymous said...

''..பட்டாம்போச்சி போல
பறந்திருந்த காலமது
கண்ணுக்குள்ள நின்னுபோச்சு..''
அருமையான அந்தக்கால நினைவு. ரசிக்க முடிகிறது. அருமை சகோதரா!
வேதா.இலங்காதிலகம்.

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க சரியா சொன்னீங்க. இந்த விளையாட்டெல்லாம் இப்ப தொலைந்து தான் போச்சு.

kupps said...

கடந்த கால விளையாட்டுகளை பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்த நம்மை போன்றவர்களுக்குஅதன் அழிவினால் ஏற்படும் வருத்தம் வருங்கால சந்ததிக்கு இருக்கபோவதில்லை.தற்கால குழந்தைகளுக்கு எதுவும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை.நம்முடைய இளமைக்காலங்களை நினைவூட்டும் அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

மதுரை சரவணன் said...

asaipoda vaikkum kavithai... vaalththukkal

மாய உலகம் said...

தமிழ் மணம் 11

மகேந்திரன் said...

அன்புநிறை புலவர் ஐயா
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாய உலகம் said...

பம்பரம் , கோழிக்குண்டு, ஆவியம் இதையெல்லாம் மறக்க முடியுமா.... சின்ன வயதில நம்முடன் ஒட்டி பிறந்த விளையாட்டுக்கள் அல்லவா...படங்களும் வரிகளும் விளையாட்டை மட்டும் ஞாபகப்படுத்தவில்லை கூடவிளையாடிய நண்பர்களையும் ஞாபகபடுத்தியது... ம்ம் அந்த ஓணானை பார்க்கும்போது தான் எத்தனை ஓணான்களை சிண்டு வில்லால அடித்து கொண்ணிருக்கிறேன்... அந்த பாவத்தை எல்லாம் எங்கே போய் முறையிடுவது அய்யோ அதையும் சேர்த்து ஞாபகபடுத்திட்டீங்களே... இதில் கண்ணாம்பூச்சி விளையாட்டு மிஸ்ஸிங் .... கிரிக்கெட்டும் , கம்ப்யூட்டர் கேமும் இன்றைய விளையாட்டாகியது உண்மை தான்... அருமையான பதிவு நண்பா

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பர் அரசன்
இன்றிருக்கும் சூழல் நாளை இல்லை...
தினம்தினம் விநாடிகளைப் போல
பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன.
நம்மால் இயன்றவரை பழைய கலாச்சாரங்களையும்
பழக்கங்களையும் எடுத்துரைப்போம்.
தங்களின் வரவுக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

மகேந்திரன் said...

அன்புநிறை முனைவரே
ஞாபகங்கள் அழியக்கூடாது என்பதே நிதர்சனம்....
இதை படிக்கையில் நெஞ்சின் ஒரு மூலையில்
ஒரு சிறிய நினைவாவது வந்தாள் போதும் என்பதுதான்
என் நோக்கம்.
தங்களின் கருத்துக்கள் எனை மேலும் பட்டை தீட்டுகின்றன
உங்களின் பழந்தமிழர் விளையாட்டு பற்றிய கட்டுரையை
படிக்கிறேன் முனைவரே.
மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

vidivelli said...

நேரத்த பார்த்தபோது
நெஞ்செல்லாம் அடைச்சிபோச்சு
சூரியன் உச்சைத்தாண்டி
கொள்ளநேரம் ஆகிபோச்சி!/

காலம்போன போக்கில
கால்வலித்து நிற்கையில
கடந்தகால வாழ்க்கையெல்லாம்
கானல்நீரா ஆகிபோச்சி!/

அருமை அருமை..
நல்லா வந்திருக்கு வரிகள்..
பிடிச்சிருக்கு.....
அன்புடன் பாராட்டுக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும்
இனிய கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சித்ரா

தங்களின் இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜபாட்டை ராஜா
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கருன்
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கடம்பவன குயில்
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
உங்களின் படைப்பை எதிர்பார்த்திருக்கேன்...
பிள்ளைப்பிராய விளையாட்டுக்கள் அத்தனையும் சொல்ல முடியவில்லை
என்னால் இங்கே...
இன்றும் என் குழந்தைகளுக்கு நான் அறிமுகப் படுத்தி வைக்கிறேன் அந்த
விளையாட்டுக்களை..
விளையாண்ட தெருக்கள் விரிவாகி நெடுஞ்சாலை ஆனதெல்லாம் காலத்தின் கோலங்கள்.
தங்களின் அன்பு கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ஐயா ரத்னவேல்
தங்களின் வாழ்த்துக்கும் இனிய
கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஸ்

தங்களின் மேலான கருத்துக்கு
என் மனம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்

தங்களின் மேலான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்
தங்களின்
இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை அம்மா லக்ஷ்மி

தங்களின் பொற்பாதத்தை இங்கே வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கும் மேன்மையான கருத்திட்டமைக்கும்
என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுரை சரவணன்

நீண்ட நாட்கள் உங்களை பார்க்கமுடியவில்லையே நண்பரே.
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குப்புசாமி

சரியாச் சொன்னீங்க
நாம சொல்லாம இன்று குழந்தைகளுக்கு அந்த
விளையாட்டுக்கள் தெரிய வாய்ப்பே இல்லை.
தெரிந்துகொள்ள வைப்[போம்........

தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மாய உலக ராஜேஷ்

ஓணான் பிடித்து அது இறந்த சோகம் இன்னும் மனதில் நிழலாடுகிறது
நண்பரே.. என்ன செய்ய அது அந்த நேரத்தில் நமக்கு தெரியவில்லையே.....

எல்லா விளையாட்டையும் என்னால் இங்கே சொல்ல முடியவில்லை நண்பரே....
இன்னும் அடுத்த பதிவுகளில் வேறொரு கோணத்தில் தர முயற்சிக்கிறேன்.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி விடிவெள்ளி செம்பகம்
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நிகழ்வுகள் said...

கவிதை எழுதும் போது நீங்களும் குழந்தையாக மாறிவிட்டீர்கள் போல )

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிகழ்வுகள் கந்தசாமி

எழுத ஆரம்பிக்கும் போது குழந்தையாக மாறிய நான்
எழுதி முடிக்கையில் விளையாடி முடித்த இன்பம் நண்பரே.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

சாகம்பரி said...

எங்களுக்கும் இதுபோல் ஞாபக விளையாட்டு இருந்தன பல்லாங்குழி, கல்லா மண்ணா, தாயம் .... எல்லாம் மறைந்துவிட்டனவே. அருமையான நினைவு கூறல்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அனைத்து கவிதைகளும் அருமை...

Riyas said...

//கம்ப்யூட்டர் காலடியில்
அபயமாகி போயாச்சு!//

மத்திய கிழக்கு வாழ்க்கையே இப்படித்தான்,,

நினைவுக்கவிதை அருமை

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சாகம்பரி
தங்களின் இனிய கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி பிராஷா

தங்களின் பொற்பாதத்தை இங்கே வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கும் இனிய கருத்திட்டமைக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரியாஸ்
தங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி.

அம்பாளடியாள் said...

சிறகடிக்கும் குருவியாய்
உயரப்பறக்கும் பட்டமாய்
நான் நினைத்த
குழந்தைகள் கூட்டமிங்கே
தொலைகாட்சி பெட்டிமுன்னே
காலமே கதியாகி
கம்ப்யூட்டர் காலடியில்
அபயமாகி போயாச்சு!!

காலம் அறிந்து எழுதப்பட்ட உண்மையின் தரிசனம் அருமை .....நன்றி சகோ பகிர்வுக்கு
ஓட்டுப் போட்டாச்சு ....

Sakthi said...

antha naal gabagam nenjile vanthate nanbane nanbane...!

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் இனிய கருத்துக்கும் ஓட்டளிப்புக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சக்தி
தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில் பதித்தமைக்கும்
இனிய கருத்திட்டமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாலதி said...

சிறகடிக்கும் குருவியாய்
உயரப்பறக்கும் பட்டமாய்
நான் நினைத்த
குழந்தைகள் கூட்டமிங்கே
தொலைகாட்சி பெட்டிமுன்னே
காலமே கதியாகி
கம்ப்யூட்டர் காலடியில்
அபயமாகி போயாச்சு!!//
சின்ன அகவையினர் முன்னர் விளையாடியதாக பெரிசுகள் கூற கேட்டு இருக்கிறேன் நல்ல நினைவுகள் பாராட்டுகளுக்கு உரியன இந்த வேகமான உலகம் எல்லா மரபு விளையாட்டுகளையும் விழிங்கி விட்டது .

Anonymous said...

''..ஆவியம் ஆவியம்!
ஆவியம் மணியாவியம்!
ஆவியம் வெள்ளாவியம்னு!..''
எனக்கு ஆவியம் என்றால் புரியவே இல்லை. அகராதியும் பார்த்தேன் ஆவியர் இருக்கிறது. ஆவியம் இல்லை.
வேதா. இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

காலம்போன போக்கில
கால்வலித்து நிற்கையில
கடந்தகால வாழ்க்கையெல்லாம்
கானல்நீரா ஆகிபோச்சி!
சின்னஞ்சிறு வயசினிலே
ஆடிய ஆட்டமெல்லாம்
புகைப்படமா தேங்கிப்போச்சி!

பட்டாம்போச்சி போல
பறந்திருந்த காலமது
கண்ணுக்குள்ள நின்னுபோச்சு!!
இன்னைக்கு தெருவில
நடந்து போகையில!
மட்டைப்பந்து தவிர இங்கே
வேறு விளையாட்டு பார்க்கவில்ல

கடந்தகால நினைவெல்லாம்
அண்ணனுக்குக் கவிதையானதோ
அடர்ந்தகாடு மனதில்வந்து
ஆட்டிவிக்குதோ சிறந்தகவிதை
வாழ்த்துச் சொல்லி ஓட்டுப்போடவோ
நானும் சின்னப்பிள்ளை போலவந்து
பாட்டுப்பாடவா?????..........................
நன்றி சகோ பகிர்வுக்கு .

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் தோழி மாலதி

இன்று வேகமான வாழ்க்கை சுழலில்
பழைய செய்திகளை நாம் மறந்துதான் போய்விட்டோம்.
தங்களின் அழகான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்

உங்களுக்கு தெரியாததா சகோதரி.
ஆவியம் என்பது விளையாட்டிற்காக உதித்த
வழக்கொழிந்த வார்த்தையே, நாட்டுப்புறங்களில்
பேச்சு வழக்கிலேயே பயன்படுத்தப் பட்டு வந்து
இப்போது முற்றிலும் அழிந்து போன ஒரு வார்த்தை.
பச்சைக்குதிரை தாண்டி விளையாடும் போது
பாடப்படும் பாடலில் உபயோகப்படுத்தக்கூடிய வார்த்தையே
ஆவியம்.
தங்களின் மேலான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்

ஆமாம் சகோதரி
நினைவுகளில் நாம் என்றும் சின்னப் பிள்ளைகள் தானே....
அதுவும் இப்படிப்பட்ட நினைவுகளில் லயிக்கும் போது
மனம் பட்டாம்பூச்சியாய் பறக்கிறது.....

நிரூபன் said...

வணக்கம், அண்ணாச்சி,
சிறு வயது ஞாபகங்களை மீட்டிப் பார்க்கும் ஒரு கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
இக் காலச் சின்னஞ் சிறுகளுக்கும் பொருத்தமான கவிதை அண்ணா.

Samantha Vasquez said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள் ஆமாம் சகோதரி நினைவுகளில் நாம் என்றும் சின்னப் பிள்ளைகள் தானே.... அதுவும் இப்படிப்பட்ட நினைவுகளில் லயிக்கும் போது மனம் பட்டாம்பூச்சியாய் பறக்கிறது.....

Suresh said...

அத்தமக பூமயிலே ஆசை கிளி எங்க போர கொத்துவான தூக்கி கிட்டு கொன்டுபோற என் மனச. தன்னேனன்னே நானம் ஓரு தானனேன்ன நானம்

Post a Comment