Powered By Blogger

Monday, 9 May 2011

கருவேலங் காற்று!




கருவேலங் காற்று வந்து
கன்னத்தை வருடுதப்பா!

கத்தாழை வாசத்தை
காதோடு இசைக்குதப்பா!

கம்மாக்கரை மரங்களெல்லாம்
காதில் கதை பேசுதப்பா!

படபடக்கும் பட்டாம்பூச்சி
பவுசு காட்டி சுத்துதப்பா!

வடிவான வரப்பெல்லாம்
வந்து நிற்க சொல்லுதப்பா!

கொய்யாமர தோப்பெல்லாம்
கொஞ்சி கதை பேசுதப்பா!

ஆலமரத்து விழுது கூட
தாலாட்டு பாடுதப்பா!

சுற்றித் தெரியும் இடமெல்லாம்
சூனியமாய் தோணுதப்பா!

கிராமத்து வாழ்க்கையையே
கிறுக்குமனம் நினைக்குதப்பா!



அன்பன்

ப.மகேந்திரன்

11 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//கிராமத்து வாழ்க்கையையே
கிறுக்குமனம் நினைக்குதப்பா!//

இந்தியாவின் முன்னேற்றம் இன்னும் கிராமங்களில் தான் இருக்கிறது என்பதை தங்களது கவிதை நினைவூட்டுகிறது.

நன்றி...

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே,
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கிராமத்து மண்வாசம் கவிதையில் வீசுகிறது....

புரிகிறது தங்கள் ஏக்கம்...

Anonymous said...

நல்ல கிராமிய மனம் வீசும் கவிதை

தொடருங்கள் உங்கள் படைப்பை.


தமிழ்தேவன்

மகேந்திரன் said...

அன்பு நண்பர்கள்
சௌந்தர் மற்றும் தமிழ்தேவன் அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

arasan said...

அழகிய சொல்லாடல் ...
வாழ்த்துக்கள் .///

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அரசன் அவர்களே,
தங்களின் விலைபதிப்பில்லா கருத்துக்கு மிக்க நன்றி.

Sathyaseelan said...

அழகு நண்பா !

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சத்யன் அவர்களே

தங்களின் இனிய கருத்துக்கு

மிக்க நன்றி.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

cheena (சீனா) said...

அன்பின் சொல்லழகு

கவிதை அருமை - கிராமத்து இயற்கைச் சூழ்நிலையின மறக்க இயல வில்லை அல்லவா - சூனியமாய்த் தோணும் இடங்களில் இருக்கும் போது .....

நல்வாழ்த்துகள் சொல்லழகு
நட்புடன் சீனா

மகேந்திரன் said...

நேசத்தின் நட்பு சீனா அவர்களே,
கிராமத்து வாழ்வையும் அதன் அழகையும்
என்றென்றும் மறக்க முடியாது.
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

அன்பன்
மகேந்திரன்

Post a Comment