கற்றுக்கொண்டேன் - நான்
எண்ணங்களின் போக்கில் சன்னமாய்
என் மனம் சென்ற போது
கற்றுக்கொண்டேன் - நான்!
சுற்றுப்புற சூனியத்தில்
என் தன்மையை இழக்கவிருந்த நேரத்தில்
கற்றுக்கொண்டேன் - நான்!
விருப்பமில்லா நிகழ்வுகளை வீறுகொண்டு
வினவி வீணாய் போனபோது
கற்றுக்கொண்டேன் - நான்!
வார்த்தைகள் வீரியமேரி - அங்கே
வழக்குகள் கலகமாகும் போது
கற்றுக்கொண்டேன் - நான்!
சம்பவங்களை சாதகமாக்கி உறவுகளின்
உன்னத பிணைப்பை உடைப்பவர்களைக் கண்டபோது
கற்றுக்கொண்டேன் - நான்!
தம்மை உயர்த்த பிறரை வீழ்த்தி - அவர்
சமாதியில் கோபுரம் கட்டுபவர்களைக் கண்டபோது
கற்றுக்கொண்டேன் - நான்!
முகத்தின் முன் துதி பாடி - பின்னால்
அவதூறு பேசுபவரை கண்டபோது
கற்றுக்கொண்டேன் - நான்!
பெண்மையை உயர்த்தி பேசிவிட்டு - பெண்ணை
விளம்பரப் பொருளாக்கியவரை கண்ட போது
கற்றுக்கொண்டேன் - நான்!
வரலாறு படைக்க வந்தவனல்ல நான்
வாழ்க்கையை வாழ வந்தவன்!
சுற்றுப்புற சூனியத்தில் - என்
வாழ்வை தொலைக்க விரும்பவில்லை! - அதனால்
கற்றுக்கொண்டேன் - நான்!
ஆம்! மௌனித்திருக்கக் கற்றுக்கொண்டேன் - நான்
மௌனித்திருக்கக் கற்றுக்கொண்டேன்!!!
அன்பன்
ப.மகேந்திரன்
8 comments:
//வரலாறு படைக்க வந்தவனல்ல நான்
வாழ்க்கையை வாழ வந்தவன்!
சுற்றுப்புற சூனியத்தில் - என்
வாழ்வை தொலைக்க விரும்பவில்லை! - அதனால்
கற்றுக்கொண்டேன் - நான்!//
வணக்கம் மகேந்திரன் யதார்த்தமான உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் ..
நன்றி ..
http://sivaayasivaa.blogspot.com
வணக்கம் மகேந்திரன்,
இந்த Post a Comment ல் கேட்கப்படும் WORD VERIFICATION ஐ எடுத்து விடுங்களேன்.. அது பின் ஊட்டம் இடுபவர்களுக்குச் சிரமமாக இருக்கும்,
நன்றி.
http://sivaayasivaa.blogspot.com
நண்பர் சிவா.சி.மா.ஜானகிராமன் அவர்களே,
தங்களின் இனிய கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நீங்கள் சொன்னது போல Post a Comment ல் கேட்கப்படும் WORD VERIFICATION ஐஎடுத்துவிட்டேன்.
அறிவுரைத்தமைக்கு மிக்க நன்றி.
அன்பன்
ப.மகேந்திரன்
நன்றி மகேந்திரன் அவர்களே..
http://sivaayasivaa.blogspot.com
சம்பவங்களை சாதகமாக்கி உறவுகளின்
உன்னத பிணைப்பை உடைப்பவர்களைக் கண்டபோது
கற்றுக்கொண்டேன் - நான்!”
நிஜம். எத்தனை எத்தனையோ நரிகள் வாழ்வெங்கும்.
உறவுகள் மீதே நம்பிக்கை போய்விட்டது தோழரே !
ஆம் தோழி
நான் கடந்து வந்த பாதையில்
எத்தனையோ உறவுகள்
தங்களின் சுயநலம் ஒன்றை மட்டுமே
தாரக மந்திரமாய் கொண்டு
பிணைப்புகளை உடைத்து எறிந்திருப்பார்கள்
அவர்களை பற்றி பேசுவதை விடவும்
அவர்களை நல்வழிப்படுத்த முயல்வதை விடவும்
மௌனமாக இருப்பதே மேல்.
அன்பன்
மகேந்திரன்
நான் வாழ்க்கையில் பின்பற்றும் ஒரு கவிதை
அன்பு நண்பர் மாய உலகம்
மௌனம் ஒரு அருமையான தாரக மந்திரம்.
நான் கடைபிடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன்.
Post a Comment