ஈருயிர் ஒன்றிணைந்து
ஓருயிர் ஈன்றதம்மா!
கருவினின்று வந்தபின்னே
சருகாகி உதிரும்வரை
பொருள் பல விளங்குதம்மா!!
ஓய்ந்த நிமிடங்களின்
மாய்ந்த பொழுதுகளில்!
தோய்ந்து உறவாடி
சாய்ந்திட எண்ணுகையில்
பாய்ந்து ஓடுதம்மா!!
முளைத்து வளர்ந்து
கிளைத்து ஓங்கியபின்!
விளைந்த உணர்வுகளால்
சளைத்த நெஞ்சமது
களைத்துப் போனதம்மா!!
அகழிகள் பலகடந்து
நிகழின் நிலைதனில்
புகழின் உச்சியிலே
நெகிழ்வாய் இருப்பினும்
மகிழ்விங்கு இல்லையம்மா!!
தரங்களைத் தருவித்து
நிரந்தர நிலைதனை
உரமிட்டு வளர்த்தும்!
சுரமற்று நிற்கும் - நான்
மரப்பாச்சி பொம்மைதானோ?!!
கறைகளாய் நெஞ்சத்துள்
உறைந்து காய்ந்துபோன
குறைகளைக் களைந்தும்
சிறையுண்ட மனம்விடுத்து
நிறைவு காண்பது எப்போது?!!
இப்போது இயற்றும்
தப்பாத செயல்களிலா?
முப்பொழுதும் கொண்ட
ஒப்பில்லா ஒழுக்கத்திலா?
எப்போது உறையும் தன்னிறைவு?!!
பதறாது உதிர்க்கும்
உதறாத சொற்களிலா?
சிதறாது சேர்க்கும்
இதரபிற பொருட்களிலா?
எதனால் கிட்டும் தன்னிறைவு?!!
அங்கத உறவுகளுடன்
சங்கமித்து இருக்கையிலா?
பொங்கிய துயரங்களை
தங்கிடாது அழிக்கையிலா?
எங்கனம் விளையும் தன்னிறைவு?!!
போதுமென்று எண்ணி
சாதுவாகி அமர்கையிலா?
ஏதுசெய்து கிடைத்தாலும்
பொதுவினில் வைக்கையிலா?
எதுவீனும் தன்னிறைவு?!!
கண்ணிமைக்கும் பொழுதினிலே
மண்கூட இடம் மாறும்!
பொன்னான இப்புவியில்
இன்வாழ்வு நிலைத்திட
தன்னிறைவே தகைவாய்!!
அன்பன்
மகேந்திரன்
49 comments:
சிந்திக்க வேண்டிய கேள்விகளை அருமையான வரிகளில் அடுக்கி, முடித்த விதமும் சிறப்பு...
வாழ்த்துக்கள்...
ஆஹா ஆஹா அருமை அருமை ..!
தன்னிறைவு காண தரணி எங்கும் தேடாமல் உன்னுருவில் உள்ளமதில் உள்ளது தான் உற்றுக்கேள் எது வந்தபோதும்
இது போதும் என மகிழ்ந்தால் காணும் தன்னிறைவு.
தெரிந்திருந்தும் எங்கே முடிகிறது. இன்பமும் துன்பமும் சமம் என எண்ணும் போது தானே நிம்மதி பிறக்கும்.
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள் என்னே வரிகள் என்னே கற்பனை அற்புதம்.
நன்றி நன்றி..! வாழ்த்துக்கள்.....!
ஈருயிர் ஒன்றிணைந்து
ஓருயிர் ஈன்றதம்மா!
கருவினின்று வந்தபின்னே
சருகாகி உதிரும்வரை
பொருள் பல விளங்குதம்மா
அருமையான கருத்து மகி!
வணக்கம்
கவிதையின் ஒவ்வொரு வரிகளும் சிந்திக்க வைக்குது... அருமை வாழ்த்துக்கள்
என்பக்கம் பதிவாக-
நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்-உங்களின் நட்பையும்.வாழ்த்துகளையும் தேடி…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிந்திக்க வேண்டிய விசயம் அண்ணா!
எதிலும் தன்னிறைவு காண்பவர்களே வாழ்விலும் சிறந்து விளங்கிட
முடியும் என்று மனதிற்கு நிறைவான சேதி சொன்ன எனதன்புச் சகோதரா
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .காலில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்யப்
பட்டுள்ளது இன்றோடு 10 நாட்கள் .வீட்டிற்கு வந்துள்ளேன் திரும்பவும் வைத்திய சாலையில் 3,4 வாரங்கள் தொடர்ந்து இருக்க வேண்டுமாம் .விரைந்து வருவேன் இனிய கவிதை வரிகளை இடைவிடாது தொடர்ந்தும் தாருங்கள் .எல்லோரும் நலம் வாழ வாழ்த்துகின்றேன் .
புலவர் ரொம்பநாள் கழிச்சி வந்து மயில் தோகை விரித்து கேள்வி கேட்கிறார், பதில்தான் இல்லை உலகில்...!
நலமா புலவரே ?
காலில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்யப்
பட்டுள்ளது இன்றோடு 10 நாட்கள் .வீட்டிற்கு வந்துள்ளேன் திரும்பவும் வைத்திய சாலையில் 3,4 வாரங்கள் தொடர்ந்து இருக்க வேண்டுமாம் .விரைந்து வருவேன் இனிய கவிதை வரிகளை இடைவிடாது தொடர்ந்தும் தாருங்கள் .எல்லோரும் நலம் வாழ வாழ்த்துகின்றேன் .//
விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
வணக்கம் அண்ணா,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள புலவர் அவர்களை வருக வருகவென வரவேற்கிறோம்...
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் சகோதரி... வீட்டில் ஓய்வில் இருக்கும் போது பல கவிதைகள் படைத்திடுங்கள்...
புலவர் அவர்கள் அவருடைய ஒவ்வொரு கேள்வியிலும் பதில்களை கூறியல்லவா கேள்வி எழுப்பியுள்ளார் மனோ அண்ணா...
தன்னிறைவு என்பது புறப் பொருள் களில் இல்லை, அது அகம் சம்பந்தப்பட்டது என்பதை கூறும் கருத்துகளும் அதைக் கூறிய விதமும் சிறப்பு அண்ணா...
தன்னிறைவு என்பது ஒழுக்கம், பேசும் சொல், தவறில்லாத செயல், ஈட்டிய பொருள், உற்ற உறவுகளின் அன்பு, துயரங்கள் அழிந்த மகிழ்ச்சியான நிலை, சாதுவான நிலை, சுயநலமில்லாத பொது வாழ்விலா என்று பலவாறு கேள்விகளை எழுப்பி, இந்தக் கேள்வியிலே பதிலையும் கூறி இவற்றின் மன நிறைவுதான் தன்னிறைவு என்று பாங்குற கூறிய விதம் சிறப்பு அண்ணா...
இப்படி தன்னிறைவு பற்றி பலமா விவாதித்துவிட்டு கடைசியாக தன்னிறைவான வாழ்வே மகிழ்ச்சியானது என்று கூறியது பாராட்டுதலுக்கு உரியது அண்ணா...
ஒவ்வொரு பாவிலும் அமைந்துள்ள அடி எதுகையும், எட்டு சீரும் கவிதைக்கு சிறப்பு சேர்க்கிறது... மரபுக் கவிதை இலக்கணத்தோடு அமைந்துள்ள புதுக் கவிதை எளிதில் புரியும் படி இயற்றியுள்ளதும், சேர்த்துள்ள படங்களும் பொருத்தமாக உள்ளது புலவரே... வாழ்த்துக்கள்...
ஒரு அன்பு வேண்டுகோள். இனி இவ்வளவு இடைவெளி விழாமல் ஒரு பட்சத்திற்கு ஒரு பதிவாவவது வெளியிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...
அருமையாகச் சொன்னீர்கள்
நிச்சயமாக தன்னிறைவுதான் தகைமை
சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தரங்களைத் தருவித்து
நிரந்தர நிலைதனை
உரமிட்டு வளர்த்தும்!
சுரமற்று நிற்கும் - நான்
மரப்பாச்சி பொம்மைதானோ?!!
படங்களும் தன்னிறைவு தேடும் வரிகளும் ரசிக்கவைத்தன. சிந்திக்கவும் வைக்கின்றன. பாராட்டுக்கள்..!
இடைவேளையின் பின் இனித்திடும் கவிப்பா மகியிடம் இருந்து. மரப்பாச்சி பொம்மைதானோ ரசித்த வரிகள் கேள்விக்கனையில்! தன்னிறைவு சிந்திக்கத்தூண்டும் கவி !
கண்ணிமைக்கும் பொழுதினிலே
மண்கூட இடம் மாறும்!
பொன்னான இப்புவியில்
இன்வாழ்வு நிலைத்திட
தன்னிறைவே தகைவாய்!!
அசத்தலான வரிகள் !
இன்று இந்த சிந்தனை இல்லாமல் தானே
உலகம் அலட்டிகொண்டிருக்கிறது!
இனிய மண நாள் நல்வாழ்த்துக்கள்
மகேந்திரன்
பூமி தன்னில் பிறந்து விட்டால் தன்னிறைவு பூமி விட்டு போகும் வரை காண்பதில்லை . வரிக்கு வரி தேடிய தன்னிறைவு வாழும்போதே கிடைக்க வாழ்த்துகிறேன் .
தன்னிறைவு பற்றி சிந்திக வேண்டிய வரிகள். சிறப்பான கவிதை கவிதை
இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் சகோதரி இனியா...
மிகச்சரியாகச் சொன்னீர்கள்...
மனிதனாய் உருக்கொண்ட தருணம் முதல்
சருகாகி உதிரும் வரை தன்னிறைவு
இயலாத காரணியே..
இருப்பினும் .முயற்சி செய்வோம்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் புலவர் பெருந்தகையே..
தங்களின் இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் நண்பர் ரூபன்,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
இதோ உங்கள் தளம் தேடி வருகிறேன்....
இனிய வணக்கம் தங்கை ராஜி..
தங்களின் இனிய கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்..
இப்போது உடல்நலம் எப்படி உள்ளது சகோதரி...
விரைவில் குணமடைய இறைவனிடம் என் பிரார்த்தனைகள்.
இந்நிலையிலும் என் தளம் தேடிவந்து கருத்தளித்தமைக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
இனிய வணக்கம் நண்பர் மனோ...
நலம் நலமே நண்பரே...
தங்களிடம் நாடுவதும் அதுவே...
கேள்விகள் கேட்பது எளிது..பதில்கள் கிடைப்பது மிகவும் சிரமம்
என்பது மிகச்சரி நண்பரே..
தங்களின் இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே...
இனிய வணக்கம் தம்பி வெற்றி...
கவிதையினை ஆழ்ந்து வாசித்து அதன் கருப்பொருளை
நன்கு உள்வாங்கி கருத்து கொடுத்தமைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
நிச்சயமாக தொடர்ந்து எழுதுகிறேன் தம்பி.
இனிய வணக்கம் ரமணி ஐயா...
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
மணநாள் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா..
இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி..
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் சகோதரி மைதிலி..
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் சகோதரி சந்திரகௌரி...
தங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.
இனிய வணக்கம் நண்பர் முரளிதரன்..
தங்களின் இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஒவ்வொரு வரியும் அருமையான கருத்துக்களை சொல்கின்றன. வாழ்த்துக்கள்.
சிந்திக்க வைத்த கவிதை..... பாராட்டுகள் மகேந்திரன்.
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4-part2.html?showComment=1391731226087#c3254533073173604043
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரர்
வாழ்க்கையின் எதார்த்தங்களைத் தங்கள் கவியால் கண்முன்னே கொண்டு வந்தக் காட்சி வியக்க வைக்கிறது. அழகான கவிதை. ரசித்தேன். நன்றி சகோதரரே..
ஒவ்வொருவரும் உள்ளத்துள் ஊன்றிவைத்து உணரவேண்டிய சிந்தனைப் பதியன்கள். பைந்தமிழோடு விளையாடியபடி பிறப்பின் தன்னிறைவைத் தேடும் சீரிய வரிகள் மனம் நிறைக்கின்றன. பாராட்டுகள் மகேந்திரன்.
அருமையான கவிதை...!!!
கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அருமை...!!!
வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : இவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது!!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்
வலைச்சர தள இணைப்பு : வியாழனின் விழுதுகள்
அருமையான வரிகள்
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_18.html?showComment=1400457681427#c72669377640408477
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
''..ஏதுசெய்து கிடைத்தாலும்
பொதுவினில் வைக்கையிலா?
எதுவீனும் தன்னிறைவு?!!..''
Eniya vaalththu.
Vetha.Elanagthilakam.
ஓ! வந்தேன் அதே தன்னிறைவு.
மௌனமாகிய அமைதி தான் தன்னிறைவின் பதிலோ!...
இப்படி ஒரு நினைவு இப்பொது வந்தது.
வேதா. இலங்காதிலகம்.15-9-2014
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது என் மனம் என்ன ஒரு அற்புதமான கற்பனை கலைஞரே.
Post a Comment