Powered By Blogger

Wednesday, 21 December 2011

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-2 )


அன்புநிறை நண்பர்களே,விடுகதைக்கவிதையில்
இது என் இரண்டாம் முயற்சி
கீழே இருக்கும் விடுகதைக்கவிதையை படித்து
அதற்கான சொல் எதுவென்று சொல்லுங்கள்.

இதன் கருத்துக்களின் பொருட்டு இந்த
சொல் விளையாட்டின் தொடர்ச்சி....

இதோ விடுகதை கவிதை....


ஐந்தெழுத்து மந்திரமாம்
ஊக்கம் தரும் சூத்திரமாம்!

முதல் எழுத்தும் கடை எழுத்தும்
கூடி நின்றால் 
இரு பொருள்படும் 
ஒன்றோ
அகத்தின் மகிழ்வை
முகத்தில் காட்டும்!
மற்றொன்றோ
அணிவதால் மகிழ்வைக்
கூட்டும்!!

முதலெழுத்து திரிந்து
"த"கர "உ"கரமாய்
மாறி நின்றால்
விலங்கினம் ஒன்றின்
பலமான உறுப்பொன்றை
உரைத்து நிற்கும்!!

கடையெழுத்து
தனித்து நின்றால்
மனித உறுப்பில்
ஒன்றை
விளம்பி நிற்கும்!! 

முதல் இரண்டும்
தனித்து நின்றால்
பல்வேறு குணமிருப்பினும்
ஒன்றிணைத்து
ஒற்றுமையை உணர்த்தும்!!

முதல் மூன்றும்
தனித்து நின்றால்
ஆண் மகனில்
சிறந்தவன் என
சிறப்பாய் சொல்லும்!!
முதலும் மூன்றும்
தனித்து நின்றால்
மாதமொன்றின்
இறையவனை
இயம்பி நிற்கும்!!

எனதருமை நண்பர்காள்!

இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.

அன்பன்
மகேந்திரன்

60 comments:

இராஜராஜேஸ்வரி said...

புன்னகையுடன் வசந்தமொழிக்கு வாழ்த்துக்கள்..

Anonymous said...

நான் இந்த விளையாட்டிற்கு வரவில்லை .வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

கீதமஞ்சரி said...

கண்டுகொண்ட வார்த்தைதனை
கணநேரத்தில் உரைத்திடவே
துள்ளிவரும் உள்ளமதன்
துடிப்படக்கிக் காத்திருக்கிறேன்.
நம்பிக்கையோடு வருவோரை
நானும் குலைத்தல் முறையாமோ?

காட்டான் said...

வணக்கம் மாப்பிள..!
நானும் இந்த விளையாட்டுக்கு வரல்ல.. இப்போ ஓட்டும் முக நூல் பகிர்வுகளும்தான்யா..!! நாளைக்கு வருவோமெல்லோ பதிலை பார்க்க ஹி ஹி ஹி!!! :-)

சுதா SJ said...

ஆஹா... யோசிச்சு யோசிச்சு மண்டைய போட்டு உடைச்சதுதான் மிச்சம் ஒன்றும் தெரியவில்லையே அண்ணா... :(

சுதா SJ said...

ரெம்ப கஸ்ரமா இருக்கே... ஏதாவது க்ளு தந்து இருக்கலாம் இல்ல.. ஹீ ஹீ

சுதா SJ said...

நானும் காட்டான் மாமா மாதிரி விடையை பார்க்க நாளைக்கு வருவோம் இல்ல... ஹீ ஹீ

Yaathoramani.blogspot.com said...

இந்த விடுகதைதான் கொஞ்சம் யோசித்தால்
சொல்லிவிடலாம் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்திப் போகிறது
அருமையான முயற்சி
தொடர வாழ்த்துக்கள்
த.ம5

Admin said...

நல்ல முயற்சி..நாளை சந்திப்போம்..யோசிக்கனும்..யோசிக்கனும்..யோசிக்கனும்..

இறப்பதை எதிர்பார்க்கிறோம்

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

Unknown said...

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு....
அதனாலே நம்புவோம் அந்த 'நம்பிக்கையில்' நம்பிக்கைக் கொள்வோம்...
நன்றிகள் நண்பரே!

Unknown said...

நம்பிக்கை
நகை
தும்பிக்கை
நம்பி
கை
நம்
நபி

புலவர் சா இராமாநுசம்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முயற்சி நண்பரே...

புலவர் ஐயா சொல்லியது தான் சரியான விடை அல்லவா!

தொடருங்கள்....

RAMA RAVI (RAMVI) said...

யோசித்து யோசித்து,தும்பிக்கை என்று தெரிந்தது.....பிறகு கருத்துப்பெட்டியை பார்த்து, புலவர் கூறியிருப்பது போல நம்பிக்கை என தெளிவு பெற்றேன்.
மிக அருமையான முயற்சி மகேந்திரன்.தொடர்ந்து எழுதுங்கள்.

குடிமகன் said...

துஷ்யந்தனின் வார்த்தை தவறிவிட்டாய் கண்ணமா! தொடர் பதிவில் கண்ட தங்களின் கவிதை என்னை இங்கு அழைத்துவந்தது!


மூன்றின் அகரமும் கடையும் சேர்ந்து
விளையும் சொல் வெறுப்பை உமிழும்!

மூன்றின் உகரமும் கடையும் சேர்ந்து
விளையும் சொல் நெருப்பு உமிழும்!

நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை ஏது?

அருமையான ஆய்வு.. அருமையான முயற்சி மகேந்திரன்!

தொடருங்கள்.. நானும் தொடர்கிறேன் உங்கள் பதிவை..

குறையொன்றுமில்லை. said...

மூளைக்கு வேலை கொடுக்கும் கவிதை.

Unknown said...

மாப்ள கவிதையின் முதல் வரி படிக்கும் போதே நம்பிக்கை என்பது புலப்பட்டு விட்டது நன்றி ஹேஹே!

கோகுல் said...

நல்ல முயற்சி.மூளைக்கு வேலை.தொடருங்கோ.ம்ம்ம்விடை நம்பிக்கை .

அதுக்குள்ளே சொல்லிட்டாங்களே?

மாய உலகம் said...

என்ன மூளைக்கு வேளையா.. ஆஹா அப்பறமா வருவோம்...

அருமையா கேட்டிருக்கீங்க நண்பரே! புலவர் ஐயா சொல்லிருக்கார்... நல்ல வேளை நான் புன்னகை, பொன்னகை என சொல்லிருப்பேன்.... ஹா ஹா... அருமை அன்பரே! விடையை வந்து பார்க்கிறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நாளைக்கு பதிலை பார்த்துட்டு கமெண்டுறேன் ஹி ஹி...!!!

r.v.saravanan said...

அருமையான முயற்சி தொடருங்கள் நண்பரே

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துகள்

shanmugavel said...

எனக்கு முன்னால் விடையை சொல்லி விட்டார்கள்.சுவாரஸ்யமாக இருக்கிறது தொடருங்கள் நண்பரே!

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல முயற்சி நண்பரே..

தொடருங்கள்...

மிகவும் நன்றாகவுள்ளது..

துரைடேனியல் said...

Arumaiyana puthumaiyana muyarchi. Thodaravum.
TM 16.

சென்னை பித்தன் said...

படித்தேன்.நம்பிக்கை எனக்கண்டு பிடித்தேன்.பின்னூட்டம் காணில் முன்பே சிலர் சொல்லக் கண்டேன்.
நன்று.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
புன்னகையுடன் வாழ்த்துரைத்த தங்களின்
மேலான கருத்துக்கு என் அன்பான
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி வேதா.இலங்காதிலகம்,

வாழ்த்துக்கும் கருத்துக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி கீதா,

ஆஹா, பூடகமாய் அழகிய விடையை
எழிலுடன் உரைத்தமை எனக்கு மகிழ்ச்சியை
அளித்தது.
நன்றிகள் பல.

மகேந்திரன் said...

வாங்க காட்டான் மாமா,
வாங்க நாளைக்கு
பதில் விருந்தை கொடுக்கிறேன்.
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரா துஷி,

மாமாவும் மாப்பிளையும் சேர்ந்து
ஒரே முடிவை எடுத்துட்டீங்க..
வாங்க நாளைக்கு
பதில் விருந்து உங்களுக்கும்...

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமணி,
கருத்திலேயே அழகாக பதிலைச்
சொல்லியிருக்கிறீர்கள்.

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மதுமதி,
இதோ பதில் சொல்லும் நேரம் வந்தாச்சு நண்பரே.
தங்களின் மேன்மையான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரத்னவேல் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜசேகர்,
தங்களின் வாழ்த்துக்கு என்
மனம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தமிழ் விரும்பி ஐயா,

அழகான மறைபொருளுடன்
பதிலை எவ்வளவு எழிலாய் சொல்லிவிட்டீர்கள்...

தங்களின் அழகான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்

மகேந்திரன் said...

அன்புநிறை புலவரே,

விடுகதைக்கவிதைக்கான விடையை
அழகாக சொல்லிவிட்டீர்கள்.
நன்றிகள் பல ஐயா.......

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,

ஆம் நண்பரே
புலவர் பெருந்தகை கூறிய பதில்
மிகச் சரியே,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ராம்வி,
தங்களின் மேலான முயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ஆம் சகோதரி புலவர் பெருந்தகை கூறியது
சரியான பதில்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் குடிமகன்,

வாருங்கள் வாருங்கள்,
தங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
தம்பி துஷ்யந்தன் அவர்களின் கதை எனை மிகவும் ஈர்த்தது.
அவரின் தளம் மூலம் எனைக் காண வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

விடுகதைக்கு விடுகதை சொல்லி என்னை மகிழ்ச்சியுறச்
செய்தமைக்கு நன்றிகள் பல.

தொடருங்கள் நண்பரே.. இதோ உங்கள் தளம் தேடி வந்துகொண்டிருக்கிறேன்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா,
தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை விக்கி மாம்ஸ்,

வாங்க வாங்க,
சரியான விடை அழகா சொல்லிட்டீங்க. ....
கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோகுல்.,

வாங்க வாங்க,
சரியான விடை அழகா சொல்லிட்டீங்க. ....
கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ்,

வாங்க வாங்க,
முயற்சி செய்தமைக்கு மிக்க நன்றி.
ஆம் நண்பரே புலவர் பெருந்தகை
சரியான பதிலைக் கொடுத்துள்ளார்.

தங்களின் மேலான கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மனோ,

என்ன ஆச்சு இன்னைக்கு தங்கை ராஜியைக் காணோம்,
தலைப்பை பார்த்து ஓடிட்டாங்க போல....

நீங்களும் வந்ததுமே தலைசுத்தி நிக்குறீங்களே.
முயற்சி செய்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ஆர்.எஸ்.சரவணன்,
தங்களின் கருத்துக்கு என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சி.பி,
தங்களின் வாழ்த்துக்களுக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சண்முகவேல்,
தங்களின் கருத்து என்னை ஊக்கப்படுத்துகிறது.
தங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் துரைடேனியல்,
நிச்சயம் தொடர்கிறேன் நண்பரே,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சென்னை பித்தன் ஐயா,

சரியான பதிலைக் கண்டுபிடித்ததற்கும்,
முயற்சித்தமைக்கும் என்
மனமார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை தோழமைகளே,

தங்கள் அனைவரின் அன்பான கருத்துரை என்னை
மேலும் இதுபோன்ற விடுகதைகளை எழுத தூண்டி இருக்கிறது.
தொடர்கிறேன் தோழமைகளே.

இந்த பகுதி-2 க்கான சரியான விடை::::::


நம்பிக்கை.

கண்டுபித்த அனைவருக்கும், முயற்சித்த அத்தனை பேருக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

ராஜா MVS said...

ரொம்ப தாமதமாக வந்துவிட்டேன்... நண்பரே...

தங்களின் இந்த விடுகதை கவிதை படிக்கும் போது சிறுவயதில் பாட்டு வழியில் என் பாட்டி சொல்லும் விடுகதைகளை ஞாபகபடுத்துகிறது... மிக நல்ல முயற்சி... இப்போதுள்ள குழந்தைகளுக்கு அந்த வாய்ப்புகள் பெருவாரியாக இல்லை. அந்த கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக அமைந்துள்ளது தங்களின் இப்பணி...

வாழ்த்துகள்... நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! (யோசிக்க வைத்ததற்கு)
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

kowsy said...

நான் காலம் தாழ்த்தி விட்டேனா. இருந்தாலும் நல்ல விளையாட்டு. அடுத்ததில் முந்திக் கொள்ளுகின்றேன்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜா MVS,

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகௌரி,

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

நிரூபன் said...

வலையுலகில் நான் முதன் முதலாக உங்கள் பதிவில் தான் கவிதையினூடே விடுகதை படித்தேன்
வாழ்த்துக்கள் அண்ணா!

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் நிரூபன்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

Post a Comment