Powered By Blogger

Thursday 22 November 2012

சிற்றிறகு விரித்துவிடு !!


சிற்றலைகள் சிரித்திருக்கும்
சிற்றாற்றின் கரைதனிலே!
சிறப்பாக நடைபோடும்
சின்னஞ்சிறு பறவையே!!
 
 
ங்கே என்ன தேடுகிறாய்?
அலகினில் ஏந்திவந்த
இரை ஏதும் வீழ்ந்ததுவா?!
சிறுகூட்டின் சிற்றடுக்கிற்காய்
வெகுதூரம் தூக்கிவந்த
சிறுகுச்சி வீழ்ந்ததுவா?!!


தொலைத்த பொருளதை
தீர்க்கமாய் தேடுகிறாயோ? 
கொளுத்த மீன்கள் வருமென்று
கொடிநடை போடுகிறாயோ?!!


தேடல்கள் ஒருபோதும்
தேங்கி நிற்காது!
தொலைந்தது
தொலையட்டும்!
சிற்றிறகு விரித்துவிடு
சிட்டாகப் பறந்துவிடு!
அடுத்த நொடியின்
நம்பிக்கையை தேடிடு!!



அன்பன்
மகேந்திரன்

19 comments:

Seeni said...

வார்த்தைகளின் சிற்பி-
நீங்கள்!

அருமை!

Yaathoramani.blogspot.com said...

கவிதை அருமை
இறுதி வரிகள் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

ஆத்மா said...

மனம் கவர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள்
ரசித்தேன்

சசிகலா said...

அடுத்த நொடி தேடல் நம்பிக்கையில் அற்புதம் அண்ணா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எளிமையும் இனிமையும் இணைந்த அழகான கருத்துள்ள கவிதை.

arasan said...

அண்ணே வணக்கம் ...
மிக இயல்பான தமிழில் இனிமையான கவிதை ...
அனைவருக்கும் பொருந்தும்

குறையொன்றுமில்லை. said...

ஒரு புறாவைப்பார்த்ததும் எவ்வளவு அழகான கவிதை ஊற்றெடுக்கிரது. நல்லா இருக்கு வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

தேடல் தானே வாழ்க்கை என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...
tm7

ஹேமா said...

தொலைத்தல் இயல்பானாலும் விடாதே தேடியெடு என்பதே வாழ்வில் உறுதி,நம்பிக்கை...மகி...வாழ்த்துகள் !

Unknown said...



// தேடல்கள் ஒருபோதும்
தேங்கி நிற்காது!
தொலைந்தது
தொலையட்டும்!
சிற்றிறகு விரித்துவிடு
சிட்டாகப் பறந்துவிடு!
அடுத்த நொடியின்
நம்பிக்கையை தேடிடு!//

அருமை! மகி! நீங்கள் சிந்தனைச் சிற்பிதான்! ஐயமில்லை! வாழ்த்துக்கள்!

Admin said...

தேடல்கள் ஒருபோதும்
தேங்கி நிற்காது!

அழகாகச் சொன்னீர்கள் தோழரே..

Thozhirkalam Channel said...

நம்பிக்கை தான் வாழ்வின் முதல் படி உங்கள் வரிகள் நெஞ்சை தொடுகின்றன படம் மிக அழகாக உள்ளது

சென்னை பித்தன் said...

//தொலைந்தது
தொலையட்டும்!
சிற்றிறகு விரித்துவிடு
சிட்டாகப் பறந்துவிடு!
அடுத்த நொடியின்
நம்பிக்கையை தேடிடு!!//
அருமை

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

தேடல்கள் ஒருபோதும்
தேங்கி நிற்காது!
தொலைந்தது
தொலையட்டும்!
சிற்றிறகு விரித்துவிடு
சிட்டாகப் பறந்துவிடு!
அடுத்த நொடியின்
நம்பிக்கையை தேடிடு!!

நம்பிக்கை தரும் அரிய வரிகள்.. பாராட்டுக்கள்..

முத்தரசு said...

வரிகள் ஒவ்வொன்றும் அழகான சிற்பம் போல் செதுக்கி......கவிதை ரசித்தேன் - பாராட்டுக்கள்

kowsy said...

நம்பிக்கை ஊட்டும் வரிகள். சின்னப் பறவை சிறப்பான ஒன்றை நினைத்துக் காவல் இருப்பதாகத் தோன்றுகின்றது

இமா க்றிஸ் said...

கவிதை ஆரம்பம் முதலே அருமை. முடிவு... //தொலைந்தது
தொலையட்டும்!
சிற்றிறகு விரித்துவிடு// மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்.

Post a Comment