Powered By Blogger

Saturday 17 November 2012

தலைகீழ் விகிதங்கள்!!






னக்குள்ளே
வேர்விட்டு வளர்ந்த!
எனக்குள்ளே
வியாக்கியானம் செய்த!
எனக்குள்ளே
எனக்குத் தெரியாமலேயே
என்னை எடைபோட்டு
என் மதிப்பெண்ணை
உணர்த்திட்ட விகிதங்கள்!!





வியாக்கியானத்தின்
விவரிப்பு விளிம்பில்
நினைத்ததை தவிர்த்திட்டு!
எதையிங்கே செய்வித்தால்
நிழல்கூட தொடருமோ
அதையே செய்வித்தேன்!
கட்டவிழ்ந்து வந்த
காட்டாற்று உணர்வுகளை
மீண்டும் மீண்டும்
கட்டிப்போட்டு வைத்து!!





ன் உள் குணங்கள்
தடை நீக்கிடத் துடிக்க!
வீழ்ச்சி இல்லாத
வாழ்வின் நிகழ்விற்காய்!
விளக்கி வைத்த உணர்வுகளை
மேல்பரணில் போட்டு
மூட்டைகட்டிய பின்
என் ஆழமனது
மீறிடத் துடித்த
உணர்ச்சி அலைகளே!
இங்கே
தலைகீழ் விகிதங்களாய்!!


நிதர்சனத்தின்

நீட்சிப் போக்கில்
நாவறண்டு போனாலும்!
உள்ளோடிய உணர்வுகளை
எழுதிவைத்த காகிதங்கள்
நமத்துப் போனாலும்!
உணர்சிகளின்
பிம்பங்கள் இங்கே
நிதர்சனத்தினும் அழகாக!!


 


அன்பன்
மகேந்திரன் 


35 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உணர்வுகள் உண்மையாய் ஆராய்வதற்கும் மனம் வேண்டும்... அருமை...
tm2

ராஜி said...

மகி அண்ணா! இந்த கவிதையை ஏற்கனவே நீங்க பதிவிட்ட மாதிரி ஒரு நினைவு...., அதுவும் சமீபத்தில்தான்னும் நினைக்குறேன். என்னாச்சு கூளம்மா எதாவது சதி செஞ்சுட்டாங்களான்னு பாருங்க?!

Yaathoramani.blogspot.com said...

விளக்கி வைத்த உணர்வுகளை
மேல்பரணில் போட்டு
மூட்டைகட்டிய பின்
என் ஆழமனது
மீறிடத் துடித்த
உணர்ச்சி அலைகளே!
இங்கே
தலைகீழ் விகிதங்களாய்!!//

மனம் கவர்ந்த வரிகள்
தலைப்பும் அதற்கான கவிதையும் அருமை
ரசித்து மகிழ்ந்தேன்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 4

இராஜ முகுந்தன் said...

நல்ல ஒரு கவிதை.

குறையொன்றுமில்லை. said...

நிதர்சனத்தின்
நீட்சிப் போக்கில்
நாவறண்டு போனாலும்!
உள்ளோடிய உணர்வுகளை
எழுதிவைத்த காகிதங்கள்
நமத்துப் போனாலும்!
உணர்சிகளின்
பிம்பங்கள் இங்கே
நிதர்சனத்தினும் அழகாக!!

அழகான கவிதை வாழ்த்துகள்

Admin said...

தலைகீழ் விகிதங்கள் பிடித்தது தோழரே..

Easy (EZ) Editorial Calendar said...

கவிதை மிகவும் அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

கவிதை எனக்கக் கொஞ்சம் தலைகீழ் விகிதமாகத்தான் உள்ளது.
வாழ்த்து மகேந்திரா!
வேதா. இலங்காதிலகம்.

ஹேமா said...

எமக்கு நாமோ....அல்லது எமக்கு வேறொருவரோ வியாக்கினம் செய்வது நல்லது.எம்மை நாமே புரிந்துகொள்ளவும் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் !

தனிமரம் said...

வியாக்கியாணம் நல்லது மனதுக்கு கவிதையும் சிந்திக்க வைக்கின்றது அருமை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மையான வார்த்தைகள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிந்தனையைத் தூண்டும் கவிதை.

முனைவர் இரா.குணசீலன் said...

படங்களும் கவிதையும் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

மிக மிக அழகான கவிதை.

அருணா செல்வம் said...

நண்பரே... உங்களின் தலைகீழ் விகிதத்தை நானும் தலை கீழாகப் படித்தப்பிறகு தான் எனக்குப் புரிந்தது.

அருமை! அருமை!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அழகான கவிதை , அழகழகான படங்கள் !!

எம்.ஞானசேகரன் said...

நல்ல கவிதை!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்
முதல் வருகைக்கும் இனிய கருத்துக்கும்
மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை ராஜி,
இரண்டு நாட்கள் முன்பு முகநூளில்
இக்கவிதையை வெளியிட்டிருந்தேன்
அதே கவிதையைத் தான் இங்கேயும் பிரசுரித்தேன்...
தங்களின் கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் ரமணி அய்யா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்,
தங்களின் கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் லக்ஷ்மி அம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தோழர் மதுமதி,
பிடித்துப் படித்து
கருத்திட்டமைக்கு நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் வேதாம்மா...
நாம் இருக்கும் ஒவ்வொரு நிலையுமே
நாம் நினைத்த நிலையிலிருந்து
பிறழ்ந்தே இருக்கின்றன...
இருக்கின்ற நிலையையும்
இருக்க நினைத்த நிலையையுமே
இங்கே தழைகீழ் விகிதமாக வடித்தேன்...
தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஹேமா...
வியாக்கியானம் செய்தவற்றை
சரியாக நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும்....
இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்....
வியாக்கியானம் செய்தவற்றை
சரியாக நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும்....
இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் சௌந்தர்,
தங்களின் கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் முரளிதரன்,
தங்களின் கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் முனைவரே,
தங்களின் கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் அமைதிச்சாரல்,
தங்களின் கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் அருணா செல்வம்,
சரியாகப் படித்திருக்கிறீர்கள்....
தங்களின் கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ரூபினா ராஜ்குமார்,

தங்களின் இனிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் கவிப்ரியன்,

தங்களின் இனிய கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

Seeni said...

unmai!

arumai!

Post a Comment