Powered By Blogger

Wednesday, 14 November 2012

துடிப்பான புலியாட்டம்!!


ன்னனன்னே தான நன்னே

தான நன்னே நானே
தன தான நன்னே நானே
தன தானானே தானானே
தானனன்ன நானே!!

யிர்கொடுத்த தெய்வமய்யா
ஆறுமுகச் சாமி
எங்க ஆறுமுகச் சாமி!
தெண்டனிட்டு வணங்குகிறோம்
அருள்கொடுப்பாய் சாமி!!ந்திருக்கும் மக்களுக்கு
வணக்கம் பலகோடி
ஆமா வணக்கம் பல கோடி
வந்தவங்க அமர்ந்திருந்து
பார்க்கணும் நான் ஆடி!!

பார்ப்பதற்கு கடுமையாக
இருக்கும் புலியாட்டம்
ஆமா எங்க புலியாட்டம்!
பார்முழுதும் பரந்திருக்கும்
தமிழர் புலியாட்டம்!!
மாதத்திலே நல்லமாதம்
கார்த்திகைத் திருமாதம்
ஆமா
கார்த்திகைத் திருமாதம்
கார்த்திகைப் பரணியிலே
ஆடிவந்தோம் புலிப்பாதம்!!

 

சிலம்பமென்னும் வீரக்கலை
இதுக்கு முன்னாள் ஆடி
அந்த கலைஞரெல்லாம் கூடி
அடவுகட்டி ஆடிவந்தோம்
நல்லபுகழ் தேடி!!
ருதனூரு சந்தையிலே
மல்லுத்துணி எடுத்து
எங்க உடம்பெல்லாம் கட்டி
மேல்தோல மறைச்சி வந்தோம்
புலிவேடம் கட்டி!!ஞ்சளை அறைச்சிவைச்சி
மருதாணி சேர்த்து
நல்லா சாயங்களைப்பூசி
புலிவேடம் போட்டுவந்தோம்
பழையகதை பேசி!!


தேங்காய் நாரெடுத்து
கயிறாக திரிச்சி
நீள வாலாக்கிக் கட்டி
குழுவா ஆடிவந்தோம்
தீமைகளைச் சாடி!!

 

ப்பு மேளம் போடும் 
தாளத்து ஏற்ப 
எங்க அடவுகள போட்டு!
தஞ்சை வீதியிலே 
ஆடினோம் புலிக்கட்டு!!


ரிப்புலி உணர்வுகள
வாஞ்சையோட பார்த்து
எங்க ஆட்டத்தில சேர்த்து!
சமூகக் கொடுமைகள
சாடிவந்தோம் நேத்து!!


ங்கதி பலகோர்த்து
சந்தங்களை போட்டு
எங்க சிந்தனைய சேர்த்து
சங்கிலி புங்கிலி என
ஆடிவந்தோம் ஈர்த்து!!
ளியாட்டம் ஒயிலாட்டம்
கரகாட்டம் எல்லாம்
இங்கே காலம் தள்ளுதய்யா
எங்க கலை மட்டும்
சோரம் போனதய்யா!!


நாடுவிட்டு நாடுபோயி
கலைய விற்க போனோம்
அந்த சேரநாடு போனோம்!
புலியாட்டம் என்ற கலைய
புலிக்களியா மாத்தி!!


மிழனென்னும் பெருமையோடு
தரணி வாழும் தமிழா
இந்தப் புவனம் போற்றும் தமிழா!
உன்புகழ் பாடும் எங்க
புலியாட்டம் எங்கே?!!


ம்மோட வரலாறு
கலைகளில் தான் உண்டு
பொற்கலைகளில் தான் உண்டு!
கலைகள் அழிஞ்சுதுன்னா
நமக்கு வரலாறு இல்லை!!


மிழர் பண்பாட்டை
பொன்னேட்டில் எழுத!
அந்த வரலாற்றில் எழுத
கலைகள் வாழவேண்டும் - வெறும்
சிலையாக அல்ல!!அன்பன்
மகேந்திரன்   

36 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... காணாமல் போன ஆட்டம் தான்... தொடர வேண்டும்... இல்லையெனில் :

/// கலைகள் வாழவேண்டும் - வெறும்
சிலையாக அல்ல!! ///

இராஜராஜேஸ்வரி said...

நம்மோட வரலாறு
கலைகளில் தான் உண்டு
பொற்கலைகளில் தான் உண்டு!
கலைகள் அழிஞ்சுதுன்னா
நமக்கு வரலாறு இல்லை!!

தமிழர் பண்பாட்டை
பொன்னேட்டில் எழுத!
அந்த வரலாற்றில் எழுத
கலைகள் வாழவேண்டும் - வெறும்
சிலையாக அல்ல!! //

ஆதங்மாய கருத்தைச்சொல்லும் அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள்..

பால கணேஷ் said...

புலியாட்டம்... இதை சினிமாவுலதான் பார்த்திருக்கேன். நேர்ல பாக்க வாய்ப்புக் கிடைச்சதில்லை மகேன். சரளமான ரசிக்க வைக்கும் அழகுத் தமிழ் வார்த்தைகளால் சொல்லி அசத்திட்டீங்க. இதுபோன்ற பழந்தமிழர் கலைகள் போற்றி வளர்ககப்பட்டால் தான் பண்பாடு நிலைக்கும.

Admin said...

வணக்கம் தோழரே..எப்படியிருக்கீங்க? ரொம்ப நாளாக் காணோம்...காணாமல் போன ஆட்டத்தை பாட்டாகவும் படமாகவும் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்..சிறப்பு.

சசிகலா said...

எங்க ஊர் ஞாபகம் வந்து விட்டது அண்ணா. இன்றும் ஒரு சில கிராமங்களில் வாழும் கலை பெருகட்டும்.

Anonymous said...

சிறு வயதில் பார்த்தது...நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரா...

சில இடங்களில் FONT சிறிதாய் இருப்பதால் என்னைப்போன்ற சில வயதானவர்கள் வாசிக்க சிரமப்படுவார்கள் சகோதரா...-:)

உங்கள் ஆக்கங்களில் ...அழிந்து போனவற்றை...உதாசீனப்படுத்தப்படுபவை மீட்டெடுக்கும் முனைப்பு நிறைய தொடர்ந்து பார்த்து வருகிறேன் சகோதரா..

தொடருங்கள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தமிழனின் புலியாட்டம் போல பல பழங்கலைகள் அழிந்து வருவது வேதனைக்குரியது.
நல்லபதிவு.

தனிமரம் said...

கூத்துக்கலைகளில் ஒன்றான புலியாட்டம் தொலைந்து போகும் நிலையில் கலை வாழவேண்டும் என்று எண்ணும் உங்கள் மனவுணர்வுக்கு என் சிரம்தாழ்ந்த வாழ்த்துக்கள் மகி அண்ணா !
கவிதையில் நாட்டுப்புற கலைகள் மீதான பிடிப்பு இன்னும் உங்களிடம் கான்கின்றேன்!

அம்பலத்தார் said...

எப்பவும்போல இம்முறையும் உம் கவிதை அற்புதம்தான் மகேந்திரன். உங்க கவிதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும்போதும் கவிவரிகளை ரசிப்பதற்குச் சமமாக அதனுடன் இணைந்திருக்கும் படங்களையும் ரசிப்பேன். அவ்வளவு அழகாக இருக்கும்.

ராஜி said...

சின்ன புள்ளையா இருக்கும்போது பார்த்து இருக்கேன். நான் ரசிப்பதை பார்த்து, நீ கைக்குழந்தையா இருக்கும்போது புலியாட்டத்தை பார்த்தா பயந்து அழுவேன்னு அம்மா சொல்வாங்க. இப்போலாம் யாரும் எங்கயும் இதுப்போல வேஷம் கட்டுறாங்களான்னும் தெரியலை அண்ணா!

படங்களும் வழக்கம்போல அருமை. பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

தமிழனின் கிராமிய கலைகளில் ஒன்றே புலியாட்டம் அது பற்றிய விருவாஏ கவிதை மிகும் அருமை! மகி!

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழர் பண்பாட்டை
பொன்னேட்டில் எழுத!
அந்த வரலாற்றில் எழுத
கலைகள் வாழவேண்டும் - வெறும்
சிலையாக அல்ல!!


அழகாகச் சொன்னீர்கள் நண்பரே..

நேரிலே கண்டதுபோல இருந்தது.

தினபதிவு said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

பட்டிகாட்டான் Jey said...

கவிஞர் அண்ணென், படங்களும், கிராமியப்பாட்டும் அருமை.

எங்கூர் காளியம்மன் பொங்கலின் போது வெலாவிவச்ச ‘மொளபாரி’ யை தினம் தெரிவில வச்சி அதைச் சுத்தி வந்து பாடுற “மொளப்பாரி” பாட்டு சாயல்ல இருக்குது இந்த புலிப்பாட்டு.

:-))))

குறையொன்றுமில்லை. said...

நம்மோட வரலாறு
கலைகளில் தான் உண்டு
பொற்கலைகளில் தான் உண்டு!
கலைகள் அழிஞ்சுதுன்னா
நமக்கு வரலாறு இல்லை!!

தமிழர் பண்பாட்டை
பொன்னேட்டில் எழுத!
அந்த வரலாற்றில் எழுத
கலைகள் வாழவேண்டும் - வெறும்
சிலையாக அல்ல!!

உண்மை தானே

இராஜ முகுந்தன் said...

அருமையான பதிவு. பல நினைவுகளை கிளறி விட்டது என் நெஞ்சில். தொடர்க அண்ணா உங்கள் பணி.

மனோ சாமிநாதன் said...

ஒரு நல்ல, மறந்து போன கிராமீயக்கலைக்கு உங்களின் அருமையான கவிதை ஒரு சிறந்த சமர்ப்பணம்!!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் பால கணேஷ்,
உண்மை உண்மை..
கலைகள் தான் மொழிக்கு அரணாக நிற்பவை.
காக்கப்பட வேண்டும்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தோழர் மதுமதி..
நலமே தோழர்... தங்களிடம் நாடுவதும் அதுவே..
விடுமுறையில் இருந்தேன்...
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை சசிகலா,
கவிதையால் கிராமம் நினைவுக்கு வந்தது
அதன் கலையின் தாக்கத்தாலே..
கலைகள் வாழவேண்டும்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் ரெவெரி ,
எழுத்துருவை சரி செய்துவிட்டேன்..
கலைகள் நம் உயிர் மூச்சு அல்லவா...
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பர் முரளிதரன்,
அழிந்துகொண்டு அழிக்கப்பட்டு வரும்
கலைகள் காக்கப்பட வேண்டும்.....
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்,
புலியாட்டம் அறவே அழிந்துவிட்டது..
இனியிருக்கும் கலைகளையாவது .....
காக்கவேண்டுமே.
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் அம்பலத்தார் ஐயா,
நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும்
மதிப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் தங்கை ராஜி,
நமது காலங்களில் நாம் அதைப் பார்த்து ரசித்தோம்
கலைகளின் ஊடே.
இன்று அப்படி வருவோர்கள் யாசகத்திற்கு
வருகிறார்கள் என்பதே இன்றைய குழந்தைகளின் எண்ணம்....
தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் புலவர் பெருந்தகையே,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் முனைவரே..

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் ஜெயக்குமார் ..
கிராமியக் கலைகள் ஒன்றுக்கொன்று
பின்னப்பட்டவை அல்லவா...
முளைப்பாரி பாடல் ஒரு தனி ரகம்..

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் லக்ஷ்மி அம்மா,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

இனிய வணக்கம் மனோ அம்மா,

தங்களின் மேலான கருத்துக்கு என்
உளம்கனிந்த நன்றிகள்..

வெற்றிவேல் said...

காணாமல் போன கலை அண்ணா...

தங்கள் பாட்டை படிக்கின்ற போது எங்கள் ஊரில் நடைபெற்ற கூத்துப் பாடல்கள் நினைவிற்கு வருகிறது... மிக்க நன்றி அண்ணா...

பாராட்டுகள் அண்ணா. இப்படிப்பட்ட நாட்டுப் புறக் கலைகளை எழுதுவதற்காக...

Rathnavel Natarajan said...

துடிப்பான புலியாட்டம்!!

நண்பர் மகேந்திரனின் அருமையான நாட்டுப்புறப்பாடல்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திரு மகேந்திரன்.

வெற்றிவேல் said...

துடிப்புமிக்க புலியாட்டம்... நீங்க தான் மத்த ஆட்டங்களையும் வெளிக்கொனரனும் அண்ணா...

Post a Comment