Powered By Blogger

Saturday 10 November 2012

பட்டாசு பகாசுரன்!!






ண்டுக்கு ஒருமுறை
மீண்டும் மீண்டும் வந்து
தொன்றுதொட்டு எமை
தீண்டுமின்பம் திளைக்கச்செய்யும்
வான்புகழ் தீபாவளி!!

தேனினிக்கும்  பலகாரம்
நாவினிக்கச் செய்தாலும்
தீப்பொறி சிதறடிக்கும்
மத்தாப்பூ வண்ணம் காணத்தான்
மனமது துடிக்கிறது!!


லகலவென குலைவையிடும்
மத்தாப்பூ வண்ணங்களும்
படபடவென மேளம்கொட்டும்
வெடிகளின் சத்தங்களும்
நெஞ்சுக்குள்ளே பந்தாடுது!!

ட்டாசுத் தயாரிப்பில்
பலகுடும்பம் வாழ்ந்தாலும்
சொற்ப வருமானத்திற்காய்
தொழிற்சாலை வெடிவிபத்தில்
இன்னுயிர் மாண்டனரே
மத்தாப்பூ புன்னகையை
எமக்காக ஈந்தோரே!!




மக்கான இன்பத்தை
இயைபாய்க்  கொடுத்த அந்த
சுமைதாங்கி யாரென்று
நானங்கே தேடுகையில்!
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் கோடியென்ற
கசப்பான உண்மையது
அலர்ந்த என் முகத்தை
அடர்ந்தவனம் ஆக்கியது!!




ன்றெனக்கு மகிழ்ச்சியதை
இயல்பாய் ஆக்கிடவே
தன்னுயிர் ஈந்து
தரணியில் அரூபமாகிப்போன
மறைபொருள் உயிர்களை
எண்ணியெண்ணி ஏங்கி
மனம் கொந்தளிக்கிறது!!

னிந்த விபரீதம்? - உண்மையிலேயே
எமக்கான மகிழ்ச்சிக்குத்தானா
இந்த உயிரிழப்புகள்?!!
இல்லையில்லை நிச்சயமாய்
பணவெறி கொண்ட
படலேறு மந்திகளின்
பிணவேட்டைகள்தான் இதுவென்று
உண்மை அறிந்தபோது
மனம் சுருங்கிப்போனேன்!!




ராயிரம் களையழித்தால்
சிலபயிர் வாழுமென்று
சிறுமதி கொண்டிருந்தேன்!
ஓராயிரம் பயிரழித்து
சில களைகளும் வாழலாம் - என
சிற்றுளி கொண்டு நிதர்சனத்தை
சிறுமூளை உணர்த்தினரே!!




ட்டங்களை புறக்கணித்து
சாகசங்கள் இங்கு ஏன்?!
தரம்பார்க்க வந்தோரை
சிரமறுக்கும் புத்தி ஏன்?!
தரமில்லை உனக்கென
தள்ளியுனை வைத்தாலும்
சட்டத்திற்கு புறம்பாய்
கையூட்டுக் காவலனுடன்
கட்டம்கட்டி வாழ்வது ஏன்?!!

ளவறிந்து வாழ்ந்தாலும்
அதீத பணத்திற்காய்
ஆட்டமிங்கே போட்டாலும்
நீ குழிசென்று சேர்கையிலே
உனக்கென்று ஓரடி
அதிகமில்லை உணர்ந்துகொள்!!



அன்பன்
மகேந்திரன் 

41 comments:

ஆத்மா said...

பட்டாசு பற்ற வைக்க
பாமரன் கூட தயாராகியிருக்கும்
இந்தத் தருனத்தில்...

சிறுசுகள் பெரிசுகள் என அனைவரின் சந்தோசத்துக்காகவும் தங்கள் உயிரினை தாரைவார்த்த அந்த உள்ங்கள் ஆதமா சாந்தியடைய வேண்டும்.

இந்த நேரத்தில் அவர்களை நினைவு கூர்ந்தது மிக நன்று சார்

ரசித்தேன்

Seeni said...

sonthame...

suttathu -
nenjai!

ungal kavithai...

திண்டுக்கல் தனபாலன் said...

நடந்த சம்பவத்தை நினைக்கும் போது பட்டாசு வாங்க எப்படி மனது வரும்...? அதுவும் வீட்டில் உள்ள குழந்தைகளே வேண்டாம் என்று சொல்லும் போது...? அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் மனம், அமைதி அடைய வேண்டுகிறேன்...

பால கணேஷ் said...

நான் கல்லூரிப் பருவம் எட்டிய காலத்திலிருந்தே பட்டாசு வெடிப்பதை நிறுததி விட்டேன். எத்தனை பேரின் வேதனைகளும். எத்தனை குடும்பங்களின் கண்ணீரும் கலந்திருக்கின்றன? உங்களின் கவிதை பளிச்சென்று முகத்திலறைந்தால்போல் உண்மை நிலையை உரக்க உரைக்கிறது, மனம் வலிக்கிறது.

Anonymous said...

தீபாவளி அன்று மட்டும் அல்ல என்றுமே
ஏழை பாழைகளின் நிலைமை சோகம் தான் .
மோசம் தான். அவர்களின் பரிதாப நிலையை
அழகாகப் படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள்
தங்கள் கவிதை மூலமாக .

kowsy said...

மனசுக்குள் ஒரு நெருடலுடன் படித்தேன். பலரின் மகிழ்வுக்குத் தம்மை தாரை வார்த்த ஜீவன்களை நினைத்து நெகிழ்ந்து போனேன் . பட்டாசுக்குக் கவிதைக்குள் ஒரு மகிழும் நகிழ்வும் வாழ்த்துகள்

ராஜி said...

படங்களை பார்த்த பின் வெடி வெடிக்கும் ஆசையே போய் விட்டது அண்ணா!. கவிதை மந்தை நெகிழ வைத்துவிட்டது.

இராஜ முகுந்தன் said...

வெடி கேட்டு இங்கே
மகிழ்கின்றவர் மனதினில்
உண்மை நிலை உணர்த்தினீர்
காலமது உணர்ந்து
பிறந்த வெடிதான்
இந்த கவிதை வெடி.

அம்பலத்தார் said...

கவிவரிகள் அற்புதமாக இருந்தாலும் கவிப்பொருள் அதைவிட வீரியமாய் என் நெஞ்சில் தைத்துவிட்டது. வாழ்த்துக்கள் மகேந்திரன்

உணவு உலகம் said...

தீபாவளித்திருநாளில் நாமெல்லாம் சந்தோஷத்தில் திளைத்திருக்க தம்முயிர் பணயம் வைத்திடும் மக்களை எண்ணினால் பட்டாசை பற்ற வைக்க மனம் பதறிடும். சிந்திக்க வேண்டிய கருத்து.

Anonymous said...

பட்டசு என்ன! தீபாவளியே தேவையில்லை என்ற மனஓட்டம் எனக்கு.
ஒப்புக்குத் தான் தீபாவளி வாழ்த்து என்கிறேன்.
மிக நெருடலான கவிதை.
எல்லோரையும் பகுத்தறிவும், இறைவனும் காக்க வேண்டும்
நல்வாழ்த்து மகேந்திரன்.
வேதா. இலங்காதிலகம்.

vimalanperali said...

இல்லாதவர்கள் பொல்லாதவர்களாகித்
தெரிகிறார்கள் இச்சமூகத்தின்
பார்வையில்/
அவர்களின் உழைப்பும்,
உயிருமே இச்சமூகத்தின் அச்சாயும்,ஆணி வேராயும்/

Aathira mullai said...

மனத்தை அழுத்துகின்ற சம்பவம். மனத்தை அழ வைக்கின்ற கவிதை. நேற்றும் தொடர்ந்தது. வடநாட்டில் என்றாலும் எல்லாம் உயிர்கள்தானே. நல்ல வேளை.

Aathira mullai said...

என் இல்லம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி மகேந்திரன். தங்கள் இல்லத்திலும் உள்ள்த்திலும் மகிழ்ச்சி ஒளி சூழ தங்களுக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!

இருள் நாளை(மின்வெட்டால்) தீபத்தால் ஒளியாக்கி மகிழ்வோம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//அளவறிந்து வாழ்ந்தாலும்
அதீத பணத்திற்காய்
ஆட்டமிங்கே போட்டாலும்
நீ குழிசென்று சேர்கையிலே
உனக்கென்று ஓரடி
அதிகமில்லை உணர்ந்துகொள்!!//
இதனை எத்தனை முறை சொன்னாலும் உணர மறுக்கிறார்களே!
கவிதை நெஞ்சைத் தொடுகிறது.

Anonymous said...

மனத்தை அழுத்துகின்ற சம்பவம். மனத்தை அழ வைக்கின்ற கவிதை. நேற்றும் தொடர்ந்தது. வடநாட்டில் என்றாலும் எல்லாம் உயிர்கள்தானே. நல்ல வேளை.
surendran

ஹேமா said...

தீபாவளிக்கு பட்டாசு வாங்க நினைத்தாலும் இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் நிச்சயம் வாங்கமாட்டர்கள் மகி.

என் அன்பான தீப ஒளி வாழ்த்துகள் உங்க்ளுக்கும் குடும்பத்தினருக்கும் !

காட்டான் said...

வணக்கம் மாப்ள நலமா?
பட்டாசை பற்றி சிறப்பான கவிதை தந்துள்ளீர்கள்.. இந்த கவிதையை வாசிப்பவர்கள் பட்டாசை வாங்க ஒரு கணம் யோசிப்பார்கள்..!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் மூஸா
தங்களின் முதல் வருகைக்கும் அழகிய
கருத்துக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் ...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சீனி,
தங்களின் மேன்மையான
கருத்துக்கு என் மனம் கனிந்த நன்றிகள் ...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அற்புதமான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
ஆம் நண்பரே.. மனம் வலிக்கும் செய்திதான் ...
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அருமையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஸ்ரவாணி,
தங்களின் ஆழமான கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தங்களின் வாழ்த்துக்கும் நெகிழ்ச்சியான கருத்துக்கும் என்
அன்பார்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

நன்றிகள் பல சகோ சரண் சக்தி.....

மகேந்திரன் said...

அன்புத் தங்கை ராஜி
தங்களின் நெகிழ்ச்சியான கருத்துக்கு
என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் முகுந்தன்...
அழகான கவி வடிவால் கருத்திட்ட
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை அம்பலத்தார் ஐயா,
தங்களின் வாழ்த்துக்கும் நெகிழ்ச்சியான கருத்துக்கும் என்
சிரம் தாழ்ந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

அன்புநிறை சங்கரலிங்கம் அண்ணே,
தங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகான கருத்துக்கு
என் அன்பார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை வேதாம்மா,
தங்களின் வாழ்த்துக்கும் நெகிழ்ச்சியான கருத்துக்கும் என்
மனம் கனிந்த நன்றிகள்....

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் விமலன்
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஆதிரா,
தங்களின் நெகிழ்வான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...
தங்களுக்கும் இனிய தீவாவளி வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் முரளிதரன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சுரேந்திரன்,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி ஹேமா,
தங்களின் நெகிழ்வான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...
தங்களுக்கும் இனிய தீவாவளி வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
நல்ல சுகம்
தங்களிடம் என் நாடலும் அதுவே....
தங்களின் நெகிழ்வான கருத்துக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்...
தங்களுக்கும் இனிய தீவாவளி வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

//அளவறிந்து வாழ்ந்தாலும்
அதீத பணத்திற்காய்
ஆட்டமிங்கே போட்டாலும்
நீ குழிசென்று சேர்கையிலே
உனக்கென்று ஓரடி
அதிகமில்லை உணர்ந்துகொள்!!//

சிறப்பான பார்வை. புரிந்து கொள்ளத்தான் மறுக்கிறார்கள்...

Rajeshbabu said...

ஓராயிரம் களையழித்தால்
சிலபயிர் வாழுமென்று
சிறுமதி கொண்டிருந்தேன்!
ஓராயிரம் பயிரழித்து
சில களைகளும் வாழலாம் - என
சிற்றுளி கொண்டு நிதர்சனத்தை
சிறுமூளை உணர்த்தினரே

Ethu than nitharsanam

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,
தங்களின் மேலான கருத்துக்கு என்
உள்ளார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ராஜேஷ் பாபு,
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

kupps said...

"பண வெறி மனிதனின் அறிவை,கருணையை மழுங்க செயததன் விளைவுகளையே நாம் இச்சமூகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்" .சாட்டையடி கவிதை.நன்றிகள் பல.திருந்துவார்களா பண வெறியர்கள் ?????

Post a Comment